Monday, October 1, 2012

தூறல்: 9 - திருவாரூர் கல்லூரியில் ‘முத்துச்சரம்’; ஈரோடு ‘சுப்ரீம்’ இதழ்; புகைப்பட பிரியன் ‘தீம் கிங்’

பிப்ரவரி மாதம் உங்களுடன் பகிர்ந்து கொண்டது:

இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு

2011, மார்ச் மாதத்தில் முனைவர் இளங்கோவன் அவர்கள் தனது நண்பர் பேராசிரியர் பட்டாபிராமனுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு என்னைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுவதாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். தொடர்ந்து பேராசிரியர் பட்டாபிராமன் கேட்டுக் கொண்ட விவரங்களை அனுப்பி வைத்திருந்தேன். தென்காசியைச் சேர்ந்த இவர் புளியங்குடியில் இருக்கும் மனோ கல்லூரியில் பணியாற்றி வருகிறார். 

நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் “இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு” என்பது குறித்தத் தன் ஆய்வின் ஒரு பாகமாக எனது படைப்புகள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்ததுடன், ஆய்வு அறிக்கையில் என் புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு மற்றும் வலைப்பூ குறித்த விவரங்களைச் சமர்ப்பித்திருந்ததையும், இந்த ஜனவரி ஐந்தாம் தேதி முனைவர் பட்டம் பெற்று விட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். முனைவர் பட்டாபிராமன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். என் பெயரைப் பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றி.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது பகிர்ந்திட விரும்புவது:

திருவாரூர் கல்லூரியில் முத்துச்சரம்

21 செப்டம்பர் 2012 அன்று அழைப்பின் பேரில் திருவாரூர் ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரிக்குச் சென்று இணையமும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றியிருக்கிறார் முனைவர். பட்டாபிராமன். வலைப்பூ தொடங்குவது, பதிவிடுவது, திரட்டிகளில் இணைப்பது போன்றனவற்றின் அறிமுகமாகவும் அமைந்த இரண்டரை மணி நேர  உரையில், இணையத்தில் பெண்களின் செயல்பாடு என்பதன் கீழ் உதாரணத்துக்கு ‘முத்துச்சரம்’ வலைப்பூவை எடுத்துக் கொண்டு எனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், இணைய இதழ்களில் என் படைப்புகளின் பங்களிப்பு ஆகியன குறித்து விளக்கியதாகக் குறிப்பிட்டார். எப்படி அவற்றைத் தொகுத்து வலைப்பூவை நிர்வகிக்கிறேன் என்பதைக் காட்டித் தந்ததாகவும் சொன்னார்.

மாணவியர் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர் என்றும் எனது புகைப்படத் தொகுப்புகளை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர் என்றும் தெரிவித்தார். இலக்கிய ஆர்வத்துக்கும் பிற திறமைகளுக்கும் இணையத்தில் இருக்கும் வழிமுறைகள் அவர்களுக்குப் புதிதாக இருந்ததாகவும், அவர்களில் ஒரு சிலருக்கு இன்னும் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்றும் ஆச்சரியமாகக் குறிப்பிட்டார். கல்லூரி செய்த ஏற்பாட்டின் மூலமாக விவரங்களை அறிய வந்திருக்கும் இவர்களில் பலர் இணையத்தில் எழுத வருவார்களேயானால் மகிழ்ச்சி.

முனைவர். பட்டாபி ராமன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றி.
***


னது “சீற்றம்” கவிதையை வெளியிட்டிருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் “சுப்ரீம்” இதழுக்கு நன்றி!


சீற்றம்

ஆறுவதுசினம்
ரெளத்திரம் பழகு

முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
தேவைகள் சந்திக்கும்
கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
அடங்கிய ரகசியமாய்
சீற்றத்தின் சூத்திரம்

சரியான நபரிடத்தில்
சரியான காரணத்துக்கு
சரியான நேரத்தில்
சரியான கோணத்தில்
சரியான அளவிலும்
வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

புரிந்தால்
வாழ்வோடு வசப்படும் வானமும்.
 ***


ன்றைய நிலவரப்படி 2127 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஃபேஸ் புக் புகைப்பட பிரியன் குழுமம் 54 வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரு தீமை அறிவிக்கிறது இங்கே: மன்டே டு சன்டே தீம்ஸ்  .

தீமுக்கு தகுந்தததாக தினம் ஒன்றென வாரம் ஏழுபடங்கள் குறிப்பிட்ட ஆல்பத்தில் பகிர்ந்து வரலாம் உறுப்பினர்கள். உற்சாகமாக அதில் கலந்து கொண்டு வந்தவர்களை மேலும் ஊக்கப் படுத்த கடந்த நான்கு வாரங்களாக பகிரப்பட்டப் படங்களிலிருந்து  “முத்துக்கள் பத்து” தேர்வாகி அறிவிக்கப்படுவதுடன், அதிக உறுப்பினர்களால் விரும்பப்படுகிற படம் ‘தீம் கிங்’ ஆகக் கெளரவிக்கப்படுகிறது.  ‘அலைகள்’ தீமுக்கு நடுவராக செயலாற்றியது சுவாரஸ்யமான அனுபவம். மற்ற சில வாரங்களின் முத்துக்கள் பத்தில் இடம் பெற்ற எனது படங்கள்:


ஊதா theme_ல்:

வட்டம்  theme_ல்:

துளித்துளி மழைத்துளி
துள்ளும் ஒரு துளி


பாலம்  theme_ல்:

உறுதியான பாலம்:)!


இந்த வாரம் என்ன தீம்:)?
 ரோஜா(க்கள்)!

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறது புகைப்பட பிரியன். இந்த (அக்டோபர்) மாதம் முதல் அனைத்து தீம்களிலும் மொத்தமாக அதிக உறுப்பினர்களால் விரும்பப்படுகிற ஒரு படம் (அதாவது தீம் கிங்ஸில் சிறந்த கிங்) “பெஸ்ட் போட்டோக்ராபி டுடே” இதழில் நவம்பர் மாதம் முதல் வெளி வர இருக்கிறது! ஆர்வத்துடன் உறுப்பினர்கள் படம் எடுக்கவும் தீம் போட்டிகளில் கலந்து கொள்ளபவர்களுக்கு ஊக்கம் தரவும் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது புகைப்பட பிரியன்.

இதற்காக  Best Photographytoday  பத்திரிகை குழுமத்திற்கு புகைப்பட பிரியன் சார்பில் நன்றி தெரிவித்திருக்கிறார் மெர்வின் ஆன்டோ. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று உங்கள் திறமைகளைப் பலரறியச் செய்திடுங்கள்!
***


படத்துளி:
அலையில் ஆடும் விருட்சங்கள்

 ***


40 comments:

 1. அனைத்திற்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. திருவாரூர் கல்லூரி செய்தி நிரம்பவே மகிழ்ச்சி தந்தது.

  அப்ப ஒரு பெரிய வி. ஐ பி தான் நமக்கு பிரண்டா? இது தெரியாம தான் இம்புட்டு நாளும் இருக்கோமா? ரைட்டு :)

  ReplyDelete
 3. எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள்.

  திருவாரூர்க்காரன் என்ற முறையில் கூடுதல் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள் மேடம்

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 6. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் மேடம்..

  ஜேசுதாசன்
  திருவாரூர்..

  ReplyDelete
 7. திருவாரூர்க் கல்லூரி மாணவிகள் இடையே உங்கள் பெயரைச் சொல்லி திரு பட்டாபிராமன் பேசியது மகிழ்வு தரும் நிகழ்வு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  சீற்றம் கவிதை-அருமை.

  புகைப்படப்பிரியன் பகுதியில் தீம் கிங் அதிக லைக் வாங்கும் படம் கவுரவிக்கப் படுவது பற்றியும் படித்தேன். கூம்பு ஸ்பீக்கர் போல காணப் படும் அந்தப் பூ படம் அழகு. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள். படங்கள் கொள்ளை அழகு.

  ReplyDelete
 9. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்கள் திறமைகள் இன்னும் மேம்படட்டும்.
  அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இயங்கும் உங்கள் வாழ்வு வளம் பெறட்டும்.

  ReplyDelete
 10. தங்களின் திறமைகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்.வழக்கம் போல் படங்கள் மிக அழகு.

  ReplyDelete
 12. மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி - வனிலா

  ReplyDelete
 13. மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.திருவாரூர் செய்தி இரட்டிப்பு...(பின்னே ,பிறந்த ஊராச்சே)

  ReplyDelete
 14. மனமார்ந்த வாழ்த்துக்கள்....இராமலஷ்மி :)

  ReplyDelete
 15. சந்தோஷமாயிருக்கு அக்கா உங்களுக்கு என் வாழ்த்துகளும் !

  ReplyDelete
 16. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ராமலக்ஷமி. பன்முக திறமைகளுக்கு கிடைத்த பரிசுகள் இவையெல்லாம்.

  வாழ்வில் மேலும், மேலும் உங்கள் திறமைகள் எல்லோருக்கும் பயன்படட்டும்.
  உங்களை பார்த்து நிறைய பேர் பதிவுலகத்திற்கு வந்து நல்லவைகளை தரட்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. மிக்க மகிழ்ச்சி.
  அனைத்துக்கும் வாழ்த்துகள் மேடம்!

  ReplyDelete
 19. congrats Ramalakshmi you deserve it!

  ReplyDelete
 20. பெண்கள் கல்லூரியில், பெண் பதிவர்களின் உதாரணமாக உங்களைப் பற்றிக் கூறியது சாலச் சிறந்தது. வாழ்த்துகள், பாராட்டுகள் அக்கா.

  படங்கள் அழகு - வழக்கம்போல.

  ReplyDelete
 21. @Vanila,

  நன்றி வனிலா, தங்கள் முதல் வருகைக்கும்:)!

  ReplyDelete
 22. @சக்தி,

  பிறந்த ஊரா:)? மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 23. @mervin anto,

  நன்றி மெர்வின். புகைப்பட பிரியனுக்காக நீங்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகளும்:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin