வெள்ளி, 12 அக்டோபர், 2012

கைவிடப்பட்டவை / Abandoned - அக்டோபர் PiT போட்டி

#1
கைவிடப்பட்டவை / Abandoned

இதுதான் அக்டோபர் மாதத் போட்டித் தலைப்பு. மாதிரிக்கு சில படங்களைப் பார்ப்போம்.

இந்நேரத்தில் ‘காலத்தால் காணாமல் போனவை (மறந்து போனவை)’ என முன்பொரு தலைப்புக் கொடுக்கப்பட்டது சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்தத் போட்டிக்குக் காலம் அடித்துச் சென்றதாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை. உபயோகத்தில் இல்லாதவையாக.. ஒதுக்கப்பட்டவையாக.. புறக்கணிக்கப்பட்டவையாகக் காட்சிதர வேண்டும்.

#2


புழக்கத்தில் இல்லாத பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும். அப்படியில்லாமல் Abandoned / கைவிடப்பட்டது என்கிற உணர்வு படத்தைப் பார்க்கும் போது ஏற்பட வேண்டும். 

#3

#4

பாழடைந்த கட்டிடங்கள், பராமரிக்கப்படாத கோவில்கள் போன்றனவும் இந்த வகையின் கீழ் வரும். முதல் படமும் கீழ் வருகிற இரண்டும் தலைப்புக்காகவே சென்ற ஞாயிறு காரில் சுற்றித் திரிந்து, தேடிப் படமாக்கியவை:)! இந்த வார இறுதியில்  நீங்களும் கேமராவைத் தூக்கிடுவீர்கள்தானே?

 #5
உறைந்திருக்கும் 
பேரமைதிக்குள்
ஓராயிரம் வலிகள்!

#6

சூழ்ந்திருப்பவை புதர்களா?
வாழ்ந்து வெளியேறிவர்களின் 
வருத்தங்களா:(?

போட்டி அறிவிப்பு இங்கே. போட்டி விதிமுறைகள் இங்கே.

போட்டிப் படங்களின் ஆல்பம் இங்கே.

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2012.


*** 

31 கருத்துகள்:

  1. எங்கிருந்து தான் தலைப்பு பிடிக்கிறாங்களோ ? செம

    உங்கள் படங்கள் நிஜமா மிரட்டுது. இந்த முறை உங்களுக்கு பரிசு உண்டு

    பதிலளிநீக்கு
  2. @மோகன் குமார்,

    ரசித்தமைக்கு நன்றி மோகன் குமார்.

    உறுப்பினர் குழுவில் இருப்பதால் நான் போட்டியில் கலந்து கொள்ள முடியாது:)! இது நண்பர்களுக்கு நினைவூட்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  3. அட ... ரொம்ப ஈசியாச்சே ..!

    பேசாம ஒரு self-portrait அனுப்பி வச்சிடலாமே!

    பரிசும் கட்டாயம் கிடச்சுடும்!

    பதிலளிநீக்கு
  4. இந்த முறையும் ஒன்று அனுப்பினால் போச்சு!

    பதிலளிநீக்கு
  5. இந்த முறையும் ஒன்று அனுப்பினால் போச்சு! // ஸ்ரீராம். என்ன அனுப்பப் போகிறீர்கள்:)நல்ல தலைப்பு.
    ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. வல்லிம்மா.... ஹி ...ஹி .... (இதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு)
    ஃபோட்டோதான் :))))

    பதிலளிநீக்கு
  7. நல்ல தலைப்பு தான்... என்னிடம் இருக்கும் புகைப்படங்களில் தேடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  8. நல்ல தலைப்பு.
    கலை இலக்கிய சினிமா, நாடகம் புகைப்படக்கலை போன்ற விடயங்களில் மறந்து போகக் கூடாது என நான் கருதியவற்றை, நான் முன்பு 'மறந்து போகாத சில' என்ற கட்டுரைத் தொகுப்பாக வெளியிட்டதும் அதே தலைப்பில் எனது புளக்கில் எழுதுவதும் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
  9. @வல்லிசிம்ஹன்,

    இப்போதுதான் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் ஸ்ரீராம். வரவேற்போம் PiT குடும்பத்தில் இணைந்திட:)! உங்கள் படத்தையும் காணக் காத்திருக்கிறேன். நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  10. @Muruganandan M.K.,

    நன்றி டாக்டர். மறந்து போகாதவற்றுக்கென தாங்கள் தனிப் பக்கமே வைத்திருப்பதைக் கவனித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    கவனிக்க படாமல் கை விட்டவைகளை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. @கோமதி அரசு,

    உண்மைதான். ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் எத்தனை நினைவுகள்.. நாம் அறியாத கதைகள் இருக்கக் கூடும்?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  13. படங்கள் பல நினைவலைகளை எழுப்பித் தருகின்றன. படம் பிடிக்கணுமெனும் ஆர்வம் உந்தித்தள்ளுகிறது.

    நன்றி ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  14. @மதுமிதா,

    மகிழ்ச்சி:)! சீக்கிரமாக எடுத்து அனுப்பிடுங்கள் மதுமிதா. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @Tamilan,

    Nikon D5000.

    [படங்கள் 3,4 Sony W80-ல் எடுக்கப்பட்டவை.]

    பதிலளிநீக்கு
  16. ஆஹா, அருமையான படங்கள்.
    நினைவே இல்லை.நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    //படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    கவனிக்க படாமல் கை விட்டவைகளை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கும்.//

    இதை என் பதிவில் குறிப்பிட்டு இருக்கலாம் நினைவு இருந்தால் இப்போது குறிப்பிடுகிறேன். அடுத்து படிப்பவர்கள் படிப்பார்கள் அல்லவா?

    என் பின்னூட்டம் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  17. @கோமதி அரசு,

    நல்லது கோமதிம்மா. அன்றைக்கே இணைப்பைத் தர விரும்பி, வேலைகளுக்கு நடுவே மறந்து போனேன்:).

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin