தனித்த முதுமையொன்று
நிறைந்த வாழ்வு தந்து
பிரிந்த துணையை நினைந்து
நடுங்கும் விரல்களால்
காலச் சங்கலியின்
ஒவ்வொரு கணுவினையும்
கவனமாக எண்ணியபடிப்
பின்னோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்தது.
அண்டவெளியில் அழுத்தத்துடன்
மையம் கொண்ட புயலும்
ஆர்ப்பரிக்க எத்தனித்த
ஆழிப் பேரலையும்
கனிவுடன் காத்தன மெளனம்
தம்மால் அறுந்து விடக் கூடாது
சங்கலியின் இழை என்று.
ஒவ்வொரு கணுவின் ஸ்பரிசமும்
தந்த நினைவுகளால்
தழும்பிய விழிகளில்
ஒளிர்ந்த பேரன்பு கண்டு..
ஓர் கணம்
நின்று
சுழன்றன கோள்கள்.
***
18 ஆகஸ்ட் 2012, மலைகளின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்!
படம் நன்றி: இணையம்
அருமை கவிதாயினி
பதிலளிநீக்குஅசத்தல் கவிதை..
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமுதுமையின் தனிமையின் துயரதை
அழுத்தமாய் சொல்லிப்போன கவிதை
மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மிக அருமை. தனிமையின் நிலையை உணர வைக்கும் வலிகளின் வரிகள்.
பதிலளிநீக்குதனிமை முதுமை கொடுமை.
பதிலளிநீக்குகையில் இருக்கும் மணிமாலை நினைவுகளாக உருட்டும்
கைகள் .அதைப் பற்றிக் கொண்டு வருந்தாதே தாயே என்று சொல்லவைக்கிறது உங்கள் கவிதை.அற்புதம் ராமலக்ஷ்மி.
வீரியமான வரிகள். மனதில் பதிந்த மிக அருமையான கவிதை.
பதிலளிநீக்கு@செய்தாலி,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
@Lakshmi,
பதிலளிநீக்குநன்றி லஷ்மிம்மா.
@Ramani,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குஅழகாய் சொல்லியுள்ளீர்கள். நன்றி வல்லிம்மா.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குமிக்க நன்றி கணேஷ்.
ஒவ்வொரு வரியும் ஒரு வித தனிமையை உணர்த்தியது.
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் மிகவும் அருமை... நன்றி...
பதிலளிநீக்கு@Sasi Kala,
பதிலளிநீக்குநன்றி சசிகலா.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
ஒவ்வொரு கணுவின் ஸ்பரிசமும்
பதிலளிநீக்குதந்த நினைவுகளால்
தழும்பிய விழிகளில்
ஒளிர்ந்த பேரன்பு கண்டு..
ஓர் கணம்
நின்று
சுழன்றன கோள்கள்.//
கண்ணில் நீர் முத்துக்களை துளிர்க்க செய்தன.
ராமலக்ஷ்மி அருமையான கவிதை.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி கோமதிம்மா.