அவசரத்தேவை
வேறு வழியேயில்லை.
தேடிச் சென்ற நண்பன்
நாசூக்காய் கைவிரிக்க..
உறவுகள்
உதட்டைப் பிதுக்க..
பழகிய சில இடங்களில்
'பழைய பாக்கியே இன்னும்..'
என இழுக்க..
ஏதோ ஒரு பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது டிக்கெட்டுக்கு.
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்'
எனத் தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே மனசு..
கைமாத்தாகக் கவிதையாவது
கிடைத்ததே என்று.
***
- படம் நன்றி: கீற்று
- 10 ஜனவரி 2010 கீற்று இணைய இதழில்...
- 25 பிப்ரவரி 2010 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்..
- 5 மார்ச் 2010 திண்ணை இணைய இதழிலும்..
கீற்றில் பார்த்தபோதே வியந்த கவிதை.
பதிலளிநீக்குவார்த்தைகள் வலியை அப்பட்டமாய் விவரிக்கின்றன. அருமை அக்கா.
இதையும் வார்த்தைகள்ள சொல்லிட்டிங்களா.?? அருமைங்க.
பதிலளிநீக்குகவிதை சூப்பர்.. வலிக்கவும் செய்யுது...
பதிலளிநீக்குஅக்கா, ஏதாவது கைமாத்து வேணும்ன்னா என்கிட்ட கேளுங்க.. ;-))
கவிதை பாருங்க எப்படியெல்லாம் பயன்படுது...
பதிலளிநீக்குநுட்பமான மனதின் வலி....
நல்லா இருக்கு..
நல்லாயிருக்குங்க கவிதை.
பதிலளிநீக்குஅநியாயத்துக்கு வரிக்கு வரி ஒடைச்சு போட்டுட்டீட்ங்க,
// அவசரத்தேவை
வேறு வழியேயில்லை.
தேடிச் சென்ற நண்பன்
நாசூக்காய் கைவிரிக்க
உறவுகள்
உதட்டைப்பிதுக்க
பழகிய சில இடங்களில்
'பழைய பாக்கியே இன்னும்..'
என இழுக்க
ஏதோ ஒரு பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்
நல்லவேளையாய்
காசு இருந்ததுடிக்கெட்டுக்கு
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்'
எனத் தலைப்பிட்டேன்
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே மனசு
கைமாத்தாகக் கவிதையாவது
கிடைத்ததே என்று//
இப்படி இருந்திருக்கலாம்.
உதவிகள் வேண்டி நிற்கும் எல்லா நேரங்களிலும் மனம் வலித்து பின் வலிமையடைய சில விசயங்கள் தேவைப்படுகின்றன அல்லது வெளிப்படுத்தப்படுகின்றன - உரையாடல்கள்,கவிதைகள் & பாடல்கள் -
பதிலளிநீக்குகவிதை மனதோரம் சுழன்று செல்கிறது!
//தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்குஅக்கா, ஏதாவது கைமாத்து வேணும்ன்னா என்கிட்ட கேளுங்க.. ;-))///
நான் கேக்குறேன் கேக்குறேன்!
இப்ப நான் டிரை செஞ்சுக்கிட்டிருக்கேன் முதல்ல போனை எடுய்யா! :)
நல்லா வந்திருக்கு ராமலஷ்மி
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
Nice
பதிலளிநீக்கு//அக்கா, ஏதாவது கைமாத்து வேணும்ன்னா என்கிட்ட கேளுங்க.. ;-))/
hahaha
/*கைமாத்தாகக்
பதிலளிநீக்குகவிதையாவது
கிடைத்ததே என்று*/
அருமை. பல வேளைகளில் ஆறுதல் நமக்குள்ளேயே தேட வேண்டி இருக்கிறது
கவிதை மிகக் கனமாய்
பதிலளிநீக்குதேடிச் சென்ற
பதிலளிநீக்குநண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..
.........நண்பர்களுக்குள் இந்த நிலைமை வர கூடாது என்று நான் எப்போதும் நினைப்பேன். கேட்கும் நண்பனின் மன போராட்டங்களும், கை விரிக்கும் நண்பனின் மன போராட்டங்களும், அவர்களுக்கு மௌன சாட்டை அடிகளின் வலிகளை தரும்.
கைமாத்தா கவிதை கொடுங்க மேடம்..
பதிலளிநீக்குஅருமை,,,
எழுத்தாளர்களின் நிலைமையாவது பரவாயில்லை. பெரும்பாலும் எழுத்தை மட்டும் நம்பி அவர்கள் இருப்பதில்லை. நாட்டுப்புறக்கலைகள் அழிந்து வருவதைப்பார்த்தால் இந்த கவிதை அவர்களுக்கேஅதிகம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசிறுசேமிப்பின் அவசியம்.
பதிலளிநீக்குகைமாத்து கிடைச்சு இருந்தா...! கவிதை கிடைக்காம போயிருக்கும்..!
பதிலளிநீக்குஅதுவும் நல்லதுக்குதான்...!
impressive
பதிலளிநீக்கு//கைமாத்தாகக்
பதிலளிநீக்குகவிதையாவது
கிடைத்ததேஎன்று//
கிடைத்தது நல்ல கவிதை.
”கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பது போல் அல்லாமல் கவிதை எழுதி தன்னை ஆற்று படுத்திக் கொண்டதற்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.
அருமை!!
பதிலளிநீக்குவலி் தோய்ந்த கவிதை..
கைமாத்துக் கவிதை ...
பதிலளிநீக்குபணம் தான் கைக்கு வரலை,கவிதையாவது கை வந்ததே, ஆறுதலான விஷயம்.
நல்லா இருக்குங்க ராமலக்ஷ்மி .
நிஜமான கவிதை
பதிலளிநீக்குஏற்கனவே கீற்றில் படித்து வியப்படைந்த கவிதை. திரும்பவும் ரசித்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது தோழி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகைமாத்து கவிதை!
பதிலளிநீக்குநல்லாருக்கு.
அண்ணாமலையான் has left a new comment on your post "கைமாத்து":
பதிலளிநீக்குநல்லா அழகா வந்துருக்கு (பணமா முக்யம்?)
Posted by அண்ணாமலையான் to முத்துச்சரம் at February 11, 2010 2:14 PM
வாழ்வியல் மொழிபெயர்ந்துள்ளது கவிதையாய்...
பதிலளிநீக்குசகாதேவன் has left a new comment on your post "கைமாத்து":
பதிலளிநீக்குநல்ல வேளை பஸ் டிக்கட் பின்னால் எழுதினீர்கள். முழு தாளில் எழுதி இருந்தால் எல்லோரையும் அழ வைத்திருப்பீர்கள்.
Posted by சகாதேவன் to முத்துச்சரம் at February 11, 2010 2:21 PM
அமிர்தவர்ஷினி அம்மா has left a new comment on your post "கைமாத்து":
பதிலளிநீக்குநல்லா இருக்கு கவிதை.
ஜீவன் சொன்னதை வழிமொழிகிறேன்.
Posted by அமிர்தவர்ஷினி அம்மா to முத்துச்சரம் at February 11, 2010 2:22 PM
T.V.ராதாகிருஷ்ணன் has left a new comment on your post "கைமாத்து":
பதிலளிநீக்குஅருமை
Posted by T.V.ராதாகிருஷ்ணன் to முத்துச்சரம் at February 11, 2010 2:28 PM
துபாய் ராஜா has left a new comment on your post "கைமாத்து":
பதிலளிநீக்குகைமாற்றாய் கவிதை.
வித்தியாசமான கற்பனை அருமை.
Posted by துபாய் ராஜா to முத்துச்சரம் at February 11, 2010 2:32 PM
க.பாலாசி has left a new comment on your post "கைமாத்து":
பதிலளிநீக்குகைமாத்து (இந்த வார்த்தையை கேட்டு ரொம்ப நாளாகுதுங்க)
அருமையென்று சொல்லி முடிக்க விரும்பமில்லை... ஆயினும்...
Posted by க.பாலாசி to முத்துச்சரம் at February 11, 2010 2:37 PM
மின்மடல் வழியே..
பதிலளிநீக்கு//Hi Ramalakshmi,
Congrats!
Your story titled 'கைமாத்து' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th February 2010 07:56:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/184027
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளில் வாக்களித்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்!
சுந்தரா said...
பதிலளிநீக்கு//கீற்றில் பார்த்தபோதே வியந்த கவிதை.
வார்த்தைகள் வலியை அப்பட்டமாய் விவரிக்கின்றன. அருமை அக்கா.//
முன்னரே நீங்கள் பாராட்டியும் விட்டிருந்தீர்கள். நன்றி சுந்தரா!
ஷங்கர்.. said...
பதிலளிநீக்கு//இதையும் வார்த்தைகள்ள சொல்லிட்டிங்களா.?? அருமைங்க.//
அதற்காகத்தானே வார்த்தைகள்:)?
நன்றி ஷங்கர்!
தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//கவிதை சூப்பர்.. வலிக்கவும் செய்யுது...
அக்கா, ஏதாவது கைமாத்து வேணும்ன்னா என்கிட்ட கேளுங்க..;-))//
ஆகா:), அன்புக்கு நன்றி!
கண்ணகி said...
பதிலளிநீக்கு//கவிதை பாருங்க எப்படியெல்லாம் பயன்படுது...//
உண்மைதான், மனதை ஆற்றும் மருந்து.
//நுட்பமான மனதின் வலி....
நல்லா இருக்கு..//
நன்றி கண்ணகி!
அகநாழிகை said...
பதிலளிநீக்கு//நல்லாயிருக்குங்க கவிதை.
அநியாயத்துக்கு வரிக்கு வரி ஒடைச்சு போட்டுட்டீட்ங்க//
பாராட்டுக்கு நன்றி. ஹி பஸ் டிக்கெட்டுக்கு பின்னே நுணுக்கி எழுதியதல்லவா? அதான் ஒடைஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்:))!
//இப்படி இருந்திருக்கலாம்.//
உங்க format அருமை. இனி கவனம் எடுக்கிறேன். நன்றி அகநாழிகை.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//உதவிகள் வேண்டி நிற்கும் எல்லா நேரங்களிலும் மனம் வலித்து பின் வலிமையடைய சில விசயங்கள் தேவைப்படுகின்றன அல்லது வெளிப்படுத்தப்படுகின்றன - உரையாடல்கள்,கவிதைகள் & பாடல்கள் -
கவிதை மனதோரம் சுழன்று செல்கிறது!//
‘வெளிப்படுத்தப் படுகின்றன’ உண்மை. அழகாய் சொல்லியிருக்கும் கருத்துக்கு நன்றி ஆயில்யன்.
//நான் கேக்குறேன் கேக்குறேன்!
இப்ப நான் டிரை செஞ்சுக்கிட்டிருக்கேன் முதல்ல போனை எடுய்யா! :)//
விடாதீர்கள் தமிழ் பிரியனை:)!!
புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்கு//நல்லா வந்திருக்கு ராமலஷ்மி
பாராட்டுக்கள்//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தென்றல்.
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு//Nice//
நன்றி அம்மிணி!
//hahaha//
தமிழ் பிரியனுக்குதான் எத்தனை தாராள மனசு பாருங்க அம்மிணி:)!
அமுதா said...
பதிலளிநீக்கு***/ /*கைமாத்தாகக்
கவிதையாவது
கிடைத்ததே என்று*/
அருமை. பல வேளைகளில் ஆறுதல் நமக்குள்ளேயே தேட வேண்டி இருக்கிறது/***
அதேதான் அமுதா. கருத்துக்கு மிக்க நன்றி!
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//கவிதை மிகக் கனமாய்//
கருத்துக்கு மிக்க நன்றி கதிர்!
Chitra said...
பதிலளிநீக்கு// தேடிச் சென்ற
நண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..
.........நண்பர்களுக்குள் இந்த நிலைமை வர கூடாது என்று நான் எப்போதும் நினைப்பேன். கேட்கும் நண்பனின் மன போராட்டங்களும், கை விரிக்கும் நண்பனின் மன போராட்டங்களும், அவர்களுக்கு மௌன சாட்டை அடிகளின் வலிகளை தரும்.//
இதுதான் உண்மை சித்ரா. அங்கு நட்பும் மெல்ல மெல்ல விரிசலாகும். கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு//கைமாத்தா கவிதை கொடுங்க மேடம்..
அருமை,,,//
நண்பர் ஒருவர் வேடிக்கையாய் இப்படிக் கேட்டதில் பிறந்த கவிதைதான் இது வசந்த்! யாரெனக் கேட்கிறீர்களா? நான் சொல்ல மாட்டேன்! அவராக இங்கு சொன்னால்தான் உண்டு:)!
திருவாரூரிலிருந்து சரவணன் said...
பதிலளிநீக்கு//எழுத்தாளர்களின் நிலைமையாவது பரவாயில்லை. பெரும்பாலும் எழுத்தை மட்டும் நம்பி அவர்கள் இருப்பதில்லை. நாட்டுப்புறக்கலைகள் அழிந்து வருவதைப்பார்த்தால் இந்த கவிதை அவர்களுக்கேஅதிகம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.//
இன்னாருக்குதான் என்றில்லை. இது போன்ற வலிகள் எவருக்கும் வரலாம்தான். அந்த அனுபவமே அவர்களைக் கவிஞராக்கலாம்.
கருத்துக்கு நன்றி சரவணன்!
ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//சிறுசேமிப்பின் அவசியம்.//
அதுவும் ஒருபக்கம். வாழ்வின் வசந்தங்களை விட வருத்தங்கள் உடனடியாக வரிகளில் வடிவதும் ஆறுதல் அடைவதும் இன்னொரு பக்கம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுசைனம்மா!
ஜீவன் said...
பதிலளிநீக்கு//கைமாத்து கிடைச்சு இருந்தா...! கவிதை கிடைக்காம போயிருக்கும்..!
அதுவும் நல்லதுக்குதான்...!//
எல்லாத் துன்பத்திலும் ஏதோ நல்லதும் இருக்கும் என்பதே வாழ்வியல் தத்துவம். நன்றி ஜீவன்!
Dr.Rudhran said...
பதிலளிநீக்கு//impressive//
மிக்க நன்றி டாக்டர்!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//கிடைத்தது நல்ல கவிதை.
”கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பது போல் அல்லாமல் கவிதை எழுதி தன்னை ஆற்று படுத்திக் கொண்டதற்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.//
நன்றி கோமதிம்மா! உண்மைதான். அமுதா சொன்ன மாதிரி ஆறுதலை நமக்குள்ளேதான் தேடிக் கொள்ள வேண்டும்.
முனைவர்.இரா.குணசீலன் said...
பதிலளிநீக்கு//அருமை!!
வலி் தோய்ந்த கவிதை..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன்!
arthigaVasudevan said...
பதிலளிநீக்கு// கைமாத்துக் கவிதை ...
பணம் தான் கைக்கு வரலை,கவிதையாவது கை வந்ததே, ஆறுதலான விஷயம்.//
அதைச் சொல்லுங்க.
//நல்லா இருக்குங்க ராமலக்ஷ்மி .//
நன்றி கார்த்திகா!
கண்மணி/kanmani said...
பதிலளிநீக்கு//நிஜமான கவிதை//
மிக்க நன்றி கண்மணி!
ஜெஸ்வந்தி said...
பதிலளிநீக்கு//ஏற்கனவே கீற்றில் படித்து வியப்படைந்த கவிதை. திரும்பவும் ரசித்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது தோழி. வாழ்த்துகள்.//
ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி!
ஆடுமாடு said...
பதிலளிநீக்கு//கைமாத்து கவிதை!
நல்லாருக்கு.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆடுமாடு!
எனக்கு ஒரு கவிதை கைமாத்தா வேணும் :-))
பதிலளிநீக்கு@ அண்ணாமலையான்,
பதிலளிநீக்கு//நல்லா அழகா வந்துருக்கு (பணமா முக்யம்?)//
அதுதானே:)? நன்றி அண்ணாமலையான்!
கனமான கவிதை...
பதிலளிநீக்குதமிழரசி said...
பதிலளிநீக்கு// வாழ்வியல் மொழிபெயர்ந்துள்ளது கவிதையாய்...//
அழகான பாராட்டுக்கு நன்றி தமிழரசி!
@ சகாதேவன்,
பதிலளிநீக்கு//நல்ல வேளை பஸ் டிக்கட் பின்னால் எழுதினீர்கள். முழு தாளில் எழுதி இருந்தால் எல்லோரையும் அழ வைத்திருப்பீர்கள்.//
வலிகள் என்பதே எல்லோருக்கும் பொதுவானவைதானே.
பாராட்டைச் சொல்லியிருக்கும் விதத்தை மிகவும் ரசித்தேன்.
நன்றி சகாதேவன்:)!
@ அமித்து அம்மா,
பதிலளிநீக்கு//நல்லா இருக்கு கவிதை.//
நன்றி அமித்து அம்மா.
//ஜீவன் சொன்னதை வழிமொழிகிறேன்.//
ஆம். எதிலும் இருக்கும் ஒரு நன்மை!
@ T.V.ராதாகிருஷ்ணன்,
பதிலளிநீக்கு//அருமை//
நன்றி டி வி ஆர் சார்!
@ துபாய் ராஜா,
பதிலளிநீக்கு//கைமாற்றாய் கவிதை.
வித்தியாசமான கற்பனை அருமை.//
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி துபாய் ராஜா!
@ க.பாலாசி,
பதிலளிநீக்கு//கைமாத்து (இந்த வார்த்தையை கேட்டு ரொம்ப நாளாகுதுங்க)//
வழக்குத் தமிழ். ‘மாற்று’ என்பதை விட இதுவே மனதுக்கு நெருக்கமாய். இல்லையா?
//அருமையென்று சொல்லி முடிக்க விரும்பமில்லை... ஆயினும்...//
நன்றி பாலாசி.
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//எனக்கு ஒரு கவிதை கைமாத்தா வேணும் :-))//
எத்தனை தடவைதான், மன்னிக்கணும் மன்னிக்கணும், எத்தனை பேர்தான் கேட்பீர்கள்:))?
பேநா மூடி said...
பதிலளிநீக்கு//கனமான கவிதை...//
கருத்துக்கு நன்றி பேநாமூடி!
ஒரே ஒரு வார்த்தை ...
பதிலளிநீக்குஓஹோன்னு எழுதிட்டீங்க
@ கோமா,
பதிலளிநீக்குஒரு வார்த்தைக்கு அன்புடன் ஒரு வார்த்தை.. நன்றி!
http://pudugaithendral.blogspot.com/2010/02/4.html
பதிலளிநீக்குதொடர் பதிவுல மாட்டிவிட்டுட்டேன்
Ramalakshmi
பதிலளிநீக்குReminds me of famous quote, I used to have in my Bangalore Office Table.
"Money can't solve lot of problems, but no-money can cause lot of problems"
@ புதுகைத் தென்றல்,
பதிலளிநீக்கு//தொடர் பதிவுல மாட்டிவிட்டுட்டேன்//
அழைத்த அன்புக்கு நன்றி! ஆனாலும் இப்படியெல்லாம் ‘மாட்டி’ விடலாமா:)?
சாய்ராம் கோபாலன் said...
பதிலளிநீக்கு// Ramalakshmi
Reminds me of famous quote, I used to have in my Bangalore Office Table.
"Money can't solve lot of problems, but no-money can cause lot of problems"//
உண்மைதான் சாய்ராம். நல்ல பகிர்வுக்கு நன்றி!
@ திகழ்,
பதிலளிநீக்குநன்றி!
கைவிரித்தவர்களுக்கு நன்றி சொல்லுமளவுக்கு அருமையாக வந்துள்ளது இந்த "அவமானம்" இல்லை, "கைமாத்து"!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!
@ வருண்,
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டமே ஒரு கவிதையாய் அமைந்து விட்டிருக்கிறது.
மிக்க நன்றி வருண்!
கவிதை மிக அருமை அக்கா!!
பதிலளிநீக்கு@ Mrs.Menagasathia,
பதிலளிநீக்குமிக்க நன்றி மேனகசத்யா!
கீற்றை போன்றே கவிதையையும் அழகாக முடைந்துள்ளீர்.
பதிலளிநீக்குwww.kavithaiveethi.blogspot.com
-தோழன் மபா
@ தமிழன் வீதி,
பதிலளிநீக்குஉங்கள் கருத்தில் புன்னகை அரும்பியது கீற்றாக:)! முதல் வருகைக்கும் நன்றி!
அருமை அக்கா..
பதிலளிநீக்குவலியோட படிச்சிட்டு வந்தா அப்பாடான்னு முடிச்சிருக்கீங்க.
பாராட்டுக்கள்.
@ சுசி,
பதிலளிநீக்குஆக முடிவு உங்கள் மனதுக்கும் ஆறுதல்ன்னு சொல்லுங்க:)! பாராட்டுக்களுக்கு நன்றி சுசி!
அருமையா வந்து இருக்கு ராமலெஷ்மி
பதிலளிநீக்குthenammailakshmanan said...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை!
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு-Toto
Roughnot.blogspot.com
//ஏதோ ஒரு
பதிலளிநீக்குபேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.//
செம டச்.. வாழ்த்துKKஆள்
Toto said...
பதிலளிநீக்கு//ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.//
நன்றி Toto, தங்கள் முதல் வருகைக்கும்.
க.இராமசாமி said...
பதிலளிநீக்கு// நல்ல கவிதை//
கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி இராமசாமி!
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்கு**/ //ஏதோ ஒரு
பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.//
செம டச்.. வாழ்த்துKKஆள்/**
வாழ்த்து‘க்’களுக்கு மிக்க நன்றி புலிகேசி:)!
ஒரே ஒரு வார்த்தை என்றது உங்கள் கவிதையில் வரும் ‘அவமானம்’என்ற வார்த்தை
பதிலளிநீக்குஓஹோன்னு வாழ்த்தைக் குவித்து விட்டது....
@ கோமா,
பதிலளிநீக்குஓஹோ, அப்படிச் சொன்னீர்களா:)? இப்போது புரிந்து விட்டது. மிக்க நன்றி.
கைமாத்தா ரெண்டு கவிதை அனுப்பி வைக்கறீங்களா :)
பதிலளிநீக்கு@ முத்துலெட்சுமி,
பதிலளிநீக்குஉங்களுக்கு இல்லாததா:)?
ஆஹா..
பதிலளிநீக்குவலியும் வார்த்தைகளில்
கவிதையாய்.
பிரமாதம், ராமலக்ஷ்மி.
//நல்லவேளையாய்
பதிலளிநீக்குகாசு இருந்தது
டிக்கெட்டுக்கு
உருக்கமான வரிகள் நல்ல கவிதை.
கைமாத்து
பதிலளிநீக்குஅம்பிகா said...
பதிலளிநீக்கு//ஆஹா..
வலியும் வார்த்தைகளில்
கவிதையாய்.
பிரமாதம், ராமலக்ஷ்மி.//
கருத்துக்கு நன்றி அம்பிகா!
senthil said...
பதிலளிநீக்கு***/ //நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு
உருக்கமான வரிகள் நல்ல கவிதை.//***
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி செந்தில்!
நட்புடன் ஜமால் said...
பதிலளிநீக்கு//கைமாத்து//
வருகைக்கு நன்றி ஜமால்! எந்த அர்த்தத்தில் சொல்லியுள்ளீர்கள் எனத் தெரியவில்லை. கவிதை உங்களை ‘கை..து’ செய்து விட்டதாக எடுத்துக் கொள்ளட்டுமா:)?
அருமையாக வந்திருக்கிறது கவிதை. இதை முன்பே படித்து விட்டேன். எங்கேயோ படித்த நினைவாய் உள்ளதே என்று யோசித்து கொண்டே முடிக்கும் தருவாயில் நீங்களே நினைவு படுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குநான் எதோ கைமாத்தா கிடைக்கும் ன்னு வந்தேன்
பதிலளிநீக்குநல்லவேளை...டிக்கெட்டின் பின்னால் எழுத பேனா கைமாத்தாக் கேக்கலை, பேங்கில் சிலர் கேட்பதைப் போல், இல்லைன்னா பெருத்த ’அவமானமாய்’ போயிருக்கும்.
பதிலளிநீக்குவலியில் விளைந்த,
நொந்த மனம் தந்த,
இயலாமை எழுதிய கவிதை!!
’கைமாத்து வேணுமின்னா என்னிடம் வாங்க!’ நல்ல அழைப்புத்தான். ஆனா போய் பாத்தாத்தானே தெரியும்?!
பதிலளிநீக்குகாவிரிக்கரையோன் MJV said...
பதிலளிநீக்கு//அருமையாக வந்திருக்கிறது கவிதை.//
நன்றி காவிரிக்கரையோன்!
//இதை முன்பே படித்து விட்டேன். எங்கேயோ படித்த நினைவாய் உள்ளதே என்று யோசித்து கொண்டே முடிக்கும் தருவாயில் நீங்களே நினைவு படுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.....//
உங்கள் படைப்புகளையும் தொடர்ந்து இணைய இதழ்களில் கவனித்து வருகிறேன். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நசரேயன் said...
பதிலளிநீக்கு//நான் எதோ கைமாத்தா கிடைக்கும் ன்னு வந்தேன்//
சரிதான்:))!
வருகைக்கு நன்றி நசரேயன்!
நானானி said...
பதிலளிநீக்கு//பின்னால் எழுத பேனா கைமாத்தாக் கேக்கலை,//
அட ஆமாங்க, அடிக்கடி ‘கைமாத்த’ப்படும் பொருள்!
//வலியில் விளைந்த,
நொந்த மனம் தந்த,
இயலாமை எழுதிய கவிதை!!//
வலியில் வடியும் வரிகளுக்கு என்றுமே வலிமை அதிகம் என்பதையும்தான் சொல்ல வருகிறது கவிதை. கருத்துக்கு நன்றி நானானி!
நானானி said...
பதிலளிநீக்கு//’கைமாத்து வேணுமின்னா என்னிடம் வாங்க!’ நல்ல அழைப்புத்தான். ஆனா போய் பாத்தாத்தானே தெரியும்?!//
அந்த நிலை வந்ததிலை என்றாலும் கூட
சொல்லுவதற்கு ஒரு மனம் வேண்டுமே.
அந்த அன்பைப் பாராட்டுவோம்:)!
அட... ஆமாம்... இப்படி கூட எழுதலாமோ??
பதிலளிநீக்குரொம்ப நன்னா இருந்தது ராமலஷ்மி மேடம்.... கலக்கிட்டேள் போங்கோ..
ஆனாலும் படித்து முடித்ததும் வந்த அந்த வலி இன்னும் நெஞ்சிலேயே இருக்கிறது...
இப்போ கூட லேசா சுருக் சுருக்...
@ கோபி,
பதிலளிநீக்குஎழுதலாம்தான்! உங்கள் ‘சுருக்’ பறந்து விடும்:)!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி!
மிக நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
பதிலளிநீக்குகீற்றில் தோன்றிய மின்னல்.
பதிலளிநீக்குநல்ல உணர்வு வரிகள்.
மிக நுட்பம்.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//கீற்றில் தோன்றிய மின்னல்.//
ரசித்தேன்.
//நல்ல உணர்வு வரிகள்.
மிக நுட்பம்.//
நன்றி ஸ்ரீராம்.
கமலேஷ் said...
பதிலளிநீக்கு//மிக நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள் தொடருங்கள்...//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கமலேஷ்!
வித்தியாசமாய் இருக்குங்க.... பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு//வித்தியாசமாய் இருக்குங்க.... பாராட்டுக்கள்.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் கருணாகரசு!
வலிகளின் உரசல்
பதிலளிநீக்குஅதனால்
ஏற்படும் விரிசல்
இதைத்
தெளிவாய்
உணர்த்தும்
கைமாத்து
மனதைத்
தைக்கிறது.
[என்னால முடிஞ்ச கவிதை (மாதிரி !) :)]
அழகான ஆழமான வரிகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பயணசீட்டு ஒரு வரி கவிதையாய் பிரசவித்த தாய்க்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி
(இப்படியெல்லாம் நமக்கு கவிதை வரமாட்டேங்குதே?)
விஜய்
மிக அருமையன வரிகள் வலிகளோடு
பதிலளிநீக்குஅருமை மேடம்..
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//வலிகளின் உரசல்
அதனால்
ஏற்படும் விரிசல்
இதைத்
தெளிவாய்
உணர்த்தும்
கைமாத்து
மனதைத்
தைக்கிறது.
[என்னால முடிஞ்ச கவிதை (மாதிரி !) :)]//
கருத்தைச் சொல்லும் கவிதை நன்று:)! மிக்க நன்றி சதங்கா!
நினைவுகளுடன் -நிகே- said...
பதிலளிநீக்கு//அழகான ஆழமான வரிகள்
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிகே!
விஜய் said...
பதிலளிநீக்கு//பயணசீட்டு ஒரு வரி கவிதையாய் பிரசவித்த தாய்க்கு நன்றி
வாழ்த்துக்கள் சகோதரி
(இப்படியெல்லாம் நமக்கு கவிதை வரமாட்டேங்குதே?)//
அன்பினால் சற்று அதிகமாய் சொல்கிறீர்களே விஜய். இருந்தாலும் மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறேன் நன்றி:)!
அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு//மிக அருமையன வரிகள் வலிகளோடு
அருமை மேடம்..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மலிக்கா!
யதார்த்தமான வரிகள்.. சூப்பர்க்கா..
பதிலளிநீக்குSanjaiGandhi™ said...
பதிலளிநீக்கு// யதார்த்தமான வரிகள்.. சூப்பர்க்கா..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சஞ்சய்.
அருமையான கவிதை அக்கா....
பதிலளிநீக்குஅவமானத்தின் வடிகால் ஒரு சிறு காகிதத் துண்டு..
உபயோகமானது தான்..
அப்புறம் தமிழ்பிரியன் அண்ணா.. எனக்கு கைமாத்தா கொஞ்சம் பணம் வேணும்.. ஆனா கையில மாத்தரதுக்கு ஒண்ணும் இல்லை.. ஹி. ஹி...
அழகா இருக்கு கைமாத்து :)
பதிலளிநீக்கு