வெள்ளி, 27 ஜனவரி, 2012

2012 குடியரசு தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - மகாபாரத மணல் சிற்பம், பூ அருவி, புத்தர் ஸ்தூபி.. ( Bangalore Lalbagh Flower Show )

#1. மகாபாராதக் காட்சி மணல் சிற்பமாக..
# 2.மாலை வெயிலில்.. பாயும் குதிரை(கள்)

# 3. பொங்கி வரும் பூ அருவி

# 4. ஜோடி மயில்

# 5. தென் கொரியாவின் புத்தர் கோவில்: ‘அமைதி ஸ்தூபி’ (Buddha Peace Stupa)

கடந்த ஒருவாரமாக நடந்து கொண்டிருக்கும் லால்பாக் மலர்கண்காட்சி வரும் ஞாயிறு அன்று நிறைவடைகிறது. மேற்கண்டவையே இந்த வருடக் காட்சியில் மக்களைக் கவரும் முக்கிய அம்சங்களாக முன்னிறுத்தப்பட்டிருந்தன.

தவிரவும் ஒவ்வொரு இந்திய மாநிலத்தின் பாரம்பரிய நடனத்தாலும் வணக்கம் சொல்லும் ‘நிருத்யாஞ்சலி’ பழங்கள் மலர்கள் கொண்டுத் தனித்தனியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. நேரமின்மையால் அதைப் பாகம் இரண்டாகப் பிறிதொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.

தோட்டக்கலைக்குத் தேவையான அனைத்து சாமான்களும் கிடைக்கும் வகையில் கடைகளும், எட்டு தனியார் நர்சரிகள் விதைகளுடன் செடிகளையும், காய்கறிகளை அவற்றின் செடியோடு காட்சிக்கும் வைத்திருந்தனர்.

நேற்று குடியரசு தினத்தில் மட்டும் இரண்டரை இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது கண்காட்சி. இதுவரையிலும் 134 பள்ளிகள் தங்கள் மாணவர்களை அழைத்து வந்திருக்கின்றனர். வாரயிறுதிலும் இரண்டு முதல் இரண்டரை இலட்சம் பேர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

# 6. கண்ணாடி மாளிகை
அதிக கூட்டத்தைத் தவிர்க்க எண்ணியே 25ஆம்தேதி மாலை நேரமாக நான் சென்றிருந்தாலும் க்ளாஸ் ஹவுஸ் உள்ளே எப்போதும் போலக் கட்டுக்கடங்கா கூட்டமே. நமக்கு விருப்பமான கோணங்களில் தள்ளி நின்றெல்லாம் எடுக்கிற வாய்ப்பு குறைவே. இருப்பினும் கண்ட காட்சிகளை ஒரே கோணத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பல கோணங்களில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் நீங்களும் முழுமையாக ரசித்திட.

மணல் சிற்பம் முதன் முறையாகப் பார்க்கிறேன். பொதுவாகக் கடற்கரை ஊர்களில் அடிக்கடி காட்சிப் படுத்துவார்கள். இந்த முறை போக வேண்டுமா என ரொம்ப யோசித்தபோது ஈர்த்த விடயங்களில் முக்கியமாக இதுவே இருந்தது.

# 7. பார்த்திபனுக்கு ரதம் செலுத்தும் பரமாத்மா (பக்கவாட்டுத் தோற்றம்)
# 8. பிரதானக் கட்டமைப்புஅமைதி நாடும் புத்தர் ஸ்தூபி சுமார் 34 அடி சுற்றளவில், 30 அடி உயரத்தில், 9 அடி பீடத்தின் மேல் அமையுமாறு ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டான் வான் ஜார்ஸ்வெல்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

உபயோகிக்கப்பட்ட நான்கு லட்சம் மலர்களில் 1 1/2 இலட்சம் ரோஜாக்கள்; 1 1/2 இலட்சம் இளஞ்சிகப்பு நந்தியாவட்டைகள்; 25 ஆயிரம் ஆர்ச்சிட் எனப்படும் வண்ணக் கொத்து மலரகம், மற்றும் 7500 சதவலி படர்கொடி, ட்ரசேரா, வாடாமல்லிகள்.

புத்தர் பீடம் 75 ஆயிரம் ரோஜாக்கள், வாடாமல்லிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
***

மயில்களை ஏதோ கல்யாண ரிசப்ஷன் போல் பந்தல் போட்டு நிறுத்தி வைத்திருந்தது வேடிக்கையாக இருந்தது.


# 9. தோகை விரித்து மாப்பிள்ளை


# 10. நாணிக் குனிந்து மணமகள்

# 11. ஜோடி நெம்பர் ஒன்

# 12. பாய்கிறது சிற்றாறு 34 வகை மலர்களோடு..

# 13. வளைந்து நெளிந்து விரிந்து பரந்து..

# 14. கரையோரப் பூக்கள்

# 15. கம்பளம்

# 16. நூறு வயது கீதம்தேசியக் கொடியை அரிசி மணிகளாலும் தேசிய கீதத்தை கடுகுகளைக் கொண்டு எழுதியும் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

ரவீந்திர நாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டு, 27 டிசம்பர் 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாகப் பாடப்பட்ட நம் தேசிய கீதத்துக்கு வயது நூறு நிறைவுறுகிறது. பின்னர் 24 ஜனவரி 1950-ல், இப்பாடலின் ஹிந்தி மொழியாக்கத்தினை இந்திய அரசு முறைப்படி நம் நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்திருக்கிறது.

# 17. வண்ணக் கனவுகள்

ஏந்திநிற்கும் பலூன்களைப் போல
எண்ணத்தில் வளர்த்திருக்கும்
ஒளிமயமான எதிர்காலம் குறித்த
இவளது
வண்ணக் கனவுகள் யாவும்
மெய்ப்படட்டும்!

நர்சரிகள் இருந்த பகுதியைத் நான் தவறவிட்டதில் வருத்தம். மணல் சிற்பத்துடன் அதையும் எதிர்ப்பார்த்தே சென்றிருந்தேன் தனி மலர்களைப் படமாக்கும் ஆர்வத்தில். தவறு விட்டதை உணர்ந்து தேடி அடைந்தபோது இருட்டத் தொடங்கி விட்டிருந்தது. இருப்பினும் படமாக்கிய இரண்டே இரண்டு ஒன்றை மலர்கள் பார்வைக்கு:

# 18. அகிலமெங்கும் அன்பு நிலவ..
ரோஜா

# 19. அமைதியும் சமாதானமும் பரவ..
வெள்ளையில் டாலியா
**********



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..

2. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)

3. சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2)

4. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்

5. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010

6. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..


மற்றும்

7. இப்பதிவின் பாகம் இரண்டு: .‘நிருத்யாஞ்சலி’ இந்தியப் பாரம்பரிய நடனங்கள்

65 கருத்துகள்:

  1. மணலில் சிற்பம் செதுக்கிய சிற்பியின் கைகளுக்கு முத்தம் கொடுக்கலாம்.அத்தனை அற்புதம்.
    கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பூக்களை அப்படியே வாரிக்கொட்டி விட்டிருக்கிறார்கள்.உங்களுக்கும் பாராட்டுக்கள் முத்தக்கா!

    பதிலளிநீக்கு
  2. எப்பவும் போல க்ளிக்ஸ் மிக அருமை....

    பதிலளிநீக்கு
  3. அந்த ரோஜாப்பூ... என் கைலயே விழுந்துடுமோன்னு ஆசைப்படற அளவு அவ்வளவு தத்ரூபம். மற்ற எல்லாப் படங்களுமே மிகமிக ரசிக்க வைத்தன. நேரில் பார்க்கலையேங்கற குறையே தோணாத அளவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன உங்களின் படங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ராமலக்‌ஷ்மி - அழகான தலைப்புகளுடன் அருமையான படங்கள் - கண்ணுக்குக் குளிர்ச்சியாய் - பலூன் வைத்திருக்கும் பெண் அழகு - கவிதை அருமை - ததாஸ்து - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. மணல் சிற்பம், பூ அருவி படம், ஒற்றை ரோஜா படம், எல்லாமே அருமை. கரையோர மலர்களும் அருமை. இவற்றைத் தயார் செய்ய எவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  6. அருமையான புகைப் படத் தொகுப்புகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  7. அத்தனை படங்களும் அருமை
    நேரிலே பார்த்ததுப் போன்ற ஒரு பிரமை
    வாழ்த்துகள்
    என்றும் அன்புடன்
    சா.கி.நடராஜன்.
    கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.com/
    குழுமம் : தமிழ் சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal

    பதிலளிநீக்கு
  8. கண்களும் கருத்துக்களும் கொள்ளை கொண்ட பகிர்வு.. ரசிக்கவைத்து.

    பதிலளிநீக்கு
  9. எண்ணத்தில் வளர்த்திருக்கும்
    ஒளிமயமான எதிர்காலம் குறித்த

    வண்ணக் கனவுகள் யாவும்
    மெய்ப்படட்டும்!

    பதிலளிநீக்கு
  10. ஹைய்யோ!!!!!!!

    என்ன இருந்தாலும் எங்க ஊருக்கு அக்காவாச்சே உங்க ஊர்!!!!!

    அழகு அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது.

    (பாருங்க இதுக்குத்தான் நல்ல கேமெரா வேணுங்கறது! - நைஸா கோபாலுக்கு ஒரு இடி )

    கீதோபதேசமும் மயிலும் அடடடடடா!!!!!

    பதிலளிநீக்கு
  11. wow!!! how beautiful!!.paddam pidditha kaikalluku ouru shottu..super.andha iddathai vittu varravae mannam irrunthirukathae??

    பதிலளிநீக்கு
  12. wow!!super ella photosum arrumai.antha iddathai vittu varravae manam irrunthirukathae??ungalluku ouru shottu...vazthugkal.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  14. அற்புதம்...ஆஹா ..பேஷ் பேஷ்

    பதிலளிநீக்கு
  15. குடியரசு தின பரிசாக வைத்து கொள்கிறோம் - இந்த புகைப்படங்களை.

    பதிலளிநீக்கு
  16. அருமை. மிகுந்த சிரத்தை எடுத்து படங்களை எடுத்துள்ளீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  17. அருமையான கிளிக்.... பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  18. //(பாருங்க இதுக்குத்தான் நல்ல கேமெரா வேணுங்கறது! -//

    அதெல்லாம் இருந்தும் சிலதுக ஒண்ணுக்கும் லாயக்கில்லைங்க ...

    பதிலளிநீக்கு
  19. பாய்கிறது சிற்றாறு 34 வகை மலர்களோடு..//

    நிஜமாய் பாய்கிறது. கற்பனை செய்து வடிவமைத்த கலைஞருக்கு வாழ்த்துக்கள்!
    ராமலக்ஷ்மி, நீங்கள் பகிர்ந்து கொண்டு உள்ள எல்லா படங்களும் அழகு.

    மணல் சிற்பம் அற்புதம்.
    போன வருடம் போல் இந்த வருடமும் குடியரசு தினக் கண்காட்சியை பார்த்து விட்டோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இதையெல்லாம் design செய்தவர்கள் லால்பாகில் வேலை செய்பவர்களா?

    பதிலளிநீக்கு
  21. மேடம் இன்னிக்கு சித்திரசந்தை...வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நானும் இன்று அங்கு ஒரு ஸ்டால் போட்டுள்ளேன்...
    நன்றி
    http://chitrasanthe.com/

    பதிலளிநீக்கு
  22. அருமை ராமலஷ்மி இந்தவருஷமும் நான் போகவில்லை லால்பாக்கிற்கு உங்க படத்திலாவது பர்த்து மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  23. கண்களுக்கு தொடர்ந்து விருந்து அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அருமை! தாமதமான குடியரசு தின வாழ்த்துகள்! மணல் சிற்பம் ரொம்பப் பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  24. அய்யோ, அய்யோ, ஒரே பொறாமையா இருக்குதே

    எங்களை மாதிரி நேரில் பார்க்க கொடுத்து வைக்காதவர்களுக்கு, அழகிய புகைப்படங்கள் மூலம், பார்த்த அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. புகைப்படங்கள் மிகவும் அருமை..பகிர்ந்து கொண்டு எங்களைப் போன்றவர்களை மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  26. MangaiMano said...
    //Jodi no 1,flower falls arumai!
    Thanks for sharing********!//

    நன்றி மங்கை:)!

    பதிலளிநீக்கு
  27. ஹேமா said...
    //மணலில் சிற்பம் செதுக்கிய சிற்பியின் கைகளுக்கு முத்தம் கொடுக்கலாம்.அத்தனை அற்புதம்.
    கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பூக்களை அப்படியே வாரிக்கொட்டி விட்டிருக்கிறார்கள்.உங்களுக்கும் பாராட்டுக்கள் முத்தக்கா!//

    நன்றி மேனகா. அந்த இடத்தை விசாரித்து அடையும் போது சூரியன் இறங்கி விட்டது. வெளிச்சக் குறைவானாலும் சிற்பியின் திறமை வெளிப்படுமாறு காட்சிப்படுத்த முடிந்ததாகவே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. சசிகுமார் said...
    //எப்பவும் போல க்ளிக்ஸ் மிக அருமை....//

    மிக்க நன்றி சசி குமார்.

    பதிலளிநீக்கு
  29. கணேஷ் said...
    //அந்த ரோஜாப்பூ... என் கைலயே விழுந்துடுமோன்னு ஆசைப்படற அளவு அவ்வளவு தத்ரூபம். மற்ற எல்லாப் படங்களுமே மிகமிக ரசிக்க வைத்தன. நேரில் பார்க்கலையேங்கற குறையே தோணாத அளவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன உங்களின் படங்கள்! நன்றி!//

    மிக்க நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  30. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்‌ஷ்மி - அழகான தலைப்புகளுடன் அருமையான படங்கள் - கண்ணுக்குக் குளிர்ச்சியாய் - பலூன் வைத்திருக்கும் பெண் அழகு - கவிதை அருமை - ததாஸ்து - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் -//

    மகிழ்ச்சியும் நன்றியும் சீனா சார்.

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம். said...
    //மணல் சிற்பம், பூ அருவி படம், ஒற்றை ரோஜா படம், எல்லாமே அருமை. கரையோர மலர்களும் அருமை. இவற்றைத் தயார் செய்ய எவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அருமையான பகிர்வு.//

    பாகம் இரண்டாகப் பகிர உள்ள நாட்டிய அலங்காரங்கள் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என ஆதங்கமாகதான் இருந்தது. ஆயினும் தயார் செய்த கலைஞர்களின் உழைப்பு அதை மறக்க வைத்து விட்டது. கரையோர மலர்களே எனை மிகவும் கவர்ந்தவை:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  32. Rathnavel said...
    //அருமையான புகைப் படத் தொகுப்புகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் அம்மா.//

    மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  33. சா.கி.நடராஜன். said...
    //அத்தனை படங்களும் அருமை
    நேரிலே பார்த்ததுப் போன்ற ஒரு பிரமை
    வாழ்த்துகள்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. eraeravi said...
    //mika nandru//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. இராஜராஜேஸ்வரி said...
    //கண்களும் கருத்துக்களும் கொள்ளை கொண்ட பகிர்வு.. ரசிக்கவைத்து.//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  36. துளசி கோபால் said...
    //ஹைய்யோ!!!!!!!

    என்ன இருந்தாலும் எங்க ஊருக்கு அக்காவாச்சே உங்க ஊர்!!!!!

    அழகு அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது.

    (பாருங்க இதுக்குத்தான் நல்ல கேமெரா வேணுங்கறது! - நைஸா கோபாலுக்கு ஒரு இடி )

    கீதோபதேசமும் மயிலும் அடடடடடா!!!!!//

    மிக்க நன்றி மேடம்:)! சீக்கிரமா SLR-க்குத் தாவிடுங்க. பயணங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  37. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    //சூப்பர் :))/

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  38. kalps said...
    //wow!!! how beautiful!!.paddam pidditha kaikalluku ouru shottu..super.andha iddathai vittu varravae mannam irrunthirukathae??//

    மிக்க நன்றி. கூட்டம் உங்களை போதுமடா சாமின்னு நகர வைத்து விடும் ஒரு கட்டத்தில்:)!

    பதிலளிநீக்கு
  39. Mangayar Ulagam said...
    //மிகவும் அருமை//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. goma said...
    //அற்புதம்...ஆஹா ..பேஷ் பேஷ்//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  41. தமிழ் உதயம் said...
    //குடியரசு தின பரிசாக வைத்து கொள்கிறோம் - இந்த புகைப்படங்களை.//

    மகிழ்ச்சியும் நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  42. மோகன் குமார் said...
    //அருமை. மிகுந்த சிரத்தை எடுத்து படங்களை எடுத்துள்ளீர்கள் நன்றி//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  43. அமைதிச்சாரல் said...
    //தத்ரூபமான படங்கள்.. ஜூப்பர் :-)//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  44. ஆ.ஞானசேகரன் said...
    //அருமையான கிளிக்.... பாராட்டுகள்//

    நன்றி ஞானசேகரன். நலமா?

    பதிலளிநீக்கு
  45. தருமி said...
    *** / //(பாருங்க இதுக்குத்தான் நல்ல கேமெரா வேணுங்கறது! -//

    அதெல்லாம் இருந்தும் சிலதுக ஒண்ணுக்கும் லாயக்கில்லைங்க ...//

    சார்:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. கோமதி அரசு said...
    ****/ பாய்கிறது சிற்றாறு 34 வகை மலர்களோடு..//

    நிஜமாய் பாய்கிறது. கற்பனை செய்து வடிவமைத்த கலைஞருக்கு வாழ்த்துக்கள்!
    ராமலக்ஷ்மி, நீங்கள் பகிர்ந்து கொண்டு உள்ள எல்லா படங்களும் அழகு.

    மணல் சிற்பம் அற்புதம்.
    போன வருடம் போல் இந்த வருடமும் குடியரசு தினக் கண்காட்சியை பார்த்து விட்டோம்.
    நன்றி./****

    மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  47. அப்பாதுரை said...
    //இதையெல்லாம் design செய்தவர்கள் லால்பாகில் வேலை செய்பவர்களா?//

    அரசுத் தோட்டக்கலை இலாகா, நிபுணர்களை வரவழைத்து ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  48. thamizhparavai said...
    //மேடம் இன்னிக்கு சித்திரசந்தை...வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நானும் இன்று அங்கு ஒரு ஸ்டால் போட்டுள்ளேன்...
    நன்றி http://chitrasanthe.com///

    வந்திருந்தேன். 2000 ஸ்டால்களில் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே:(. அடுத்த வருடமும் கலந்து கொள்வீர்கள்தானே?

    பதிலளிநீக்கு
  49. ஷைலஜா said...
    //அருமை ராமலஷ்மி இந்தவருஷமும் நான் போகவில்லை லால்பாக்கிற்கு உங்க படத்திலாவது பர்த்து மகிழ்ந்தேன்//

    ஒரு முறையேனும் சேர்ந்து செல்லத் திட்டமிடலாம் நாம். நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  50. கவிநயா said...
    //கண்களுக்கு தொடர்ந்து விருந்து அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அருமை! தாமதமான குடியரசு தின வாழ்த்துகள்! மணல் சிற்பம் ரொம்பப் பிடிச்சிருக்கு.//

    மிக்க நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  51. Vetrimagal said...

    //அய்யோ, அய்யோ, ஒரே பொறாமையா இருக்குதே

    எங்களை மாதிரி நேரில் பார்க்க கொடுத்து வைக்காதவர்களுக்கு, அழகிய புகைப்படங்கள் மூலம், பார்த்த அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி.//

    மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்!

    பதிலளிநீக்கு
  52. பாச மலர் / Paasa Malar said...

    //புகைப்படங்கள் மிகவும் அருமை..பகிர்ந்து கொண்டு எங்களைப் போன்றவர்களை மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி...//

    மிக்க நன்றி மலர்!

    பதிலளிநீக்கு
  53. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. அனைத்துப் படங்களும் நன்று. குறிப்பாக மணல் சிற்பம் மற்றும் பொங்கி வரும் பூ அருவி இரண்டும் மிகவும் நன்று.

    பதிலளிநீக்கு
  55. எல்லாமே சூப்பர்ங்க....
    பூ அருவி, மயில்களில் மணமகள், மகாபாரதம், மலர்கள் என அத்தனையுமே அழகு.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  56. அமைதி அப்பா said...
    //அனைத்துப் படங்களும் நன்று. குறிப்பாக மணல் சிற்பம் மற்றும் பொங்கி வரும் பூ அருவி இரண்டும் மிகவும் நன்று.//

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  57. கோவை2தில்லி said...
    //எல்லாமே சூப்பர்ங்க....
    பூ அருவி, மயில்களில் மணமகள், மகாபாரதம், மலர்கள் என அத்தனையுமே அழகு.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  58. மணலும், மலர்களும் சிறப்பு. பார்வைக்குத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  59. @ ஸாதிகா,

    மகிழ்ச்சியும் நன்றியும் ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  60. ஸ்ரீ.... said...
    /மணலும், மலர்களும் சிறப்பு. பார்வைக்குத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி./

    நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin