சனி, 14 ஜனவரி, 2012

இன்றைய கல்கியில்.. . ‘உறங்காது காத்திருக்கும் ஊஞ்சல்!’


காத்திருப்பு

ஆடும் ஊஞ்சல் முன்
அலைபாய்ந்த கண்களோடு
தன் முறைக்காக
நெடுநேரம் காத்திருந்தாள் சிறுமி.


சிகப்பு கவுன் அக்கா ஆடியதும்
கண்ணாடி போட்ட அண்ணா
ஏறிக் கொண்டான்.

குதித்து இறங்குகையில்
புதிதாய் வந்தவர்களைப் பார்த்து
சிநேகமாகப் புன்னகைத்து
‘இவனும் அவனும் ஆடிய
பிறகே உனக்கு’
கட்டளையிட்டுச் சென்றான்.

அவனும் இவனும்
எம்பி எம்பி எவ்வளவு நேரம்
ஆடுவார்கள் என்பதைச்
சொல்லாததாலும்
வேறு விளையாட்டுக்குப் போனால்
வரிசை தப்பி விடுமென்றும்
ஏற்கனவே தப்பியிருந்த
வரிசையில் ஏக்கத்தோடு
நின்றிருந்தாள்.

இருட்டத் தொடங்கியதும்
காவலாளி விரட்டத் தொடங்க
வருத்தமாக வீடு வந்தாள்.

அன்றைய
அவள் கனவில் இடம் பெறப்
போட்டி போட்டப் பொம்மைகள்
வாசித்த காமிக்ஸின்
கதாபாத்திரங்கள்
இவற்றோடு..

வரிசையின் கடைசியில்
கயிறு வலிக்க
தன் முறைக்காக
உறங்காமல் காத்திருந்தது
ஊஞ்சல்.
***


22 ஜனவரி 2012 தேதியிட்ட
இன்றைய கல்கியின்..

கவிதை கஃபேயில்..
நன்றி கல்கி!
***

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

66 கருத்துகள்:

  1. கல்கியில் வந்த கவிதைக்கு முதல் வாழ்த்து...
    பின்...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    TVR_- Kanchana

    பதிலளிநீக்கு
  2. ஏக்கம் - தூக்கத்திலும் கனவாக தொடருகிறது. வாழ்த்துகள் கல்கியில் மலர்ந்ததற்கு.

    பதிலளிநீக்கு
  3. கல்கியில் வெளியான கவிதை சிந்திக்க வைத்தது.தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. குழந்தையின் மெல்லிய உணர்வினை
    அழகிய கவியாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நிச்சயம் ஊஞ்சல் ஏக்கத்துடன் சென்ற
    குழந்தையைத் தான் நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும்

    தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. காத்திருப்பு அருமை.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிமையான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. முத்தக்கா காத்திருப்பு கலக்கல்.அருமை.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்தும்கூட !

    பதிலளிநீக்கு
  7. கவிதை சிறப்பு.

    தங்களுக்கு குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கல்கியோடு கவிதையாய் வந்தது இந்தக் கனிவான பொங்கல்.
    வாழ்த்துக்களுடன்
    குமரி எஸ். நீலகண்டன்

    பதிலளிநீக்கு
  9. கல்கி எனக்கு இன்று தான் 15/01/2012 கிடைதது. பார்த்தேன். படித்தேன். மகிழ்ந்தேன். பாராட்ட வந்தேன்.

    அடடா! அதற்குள் இங்கேயே வெளியிடப்பட்டுள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி தான். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அருமையான கவிதை. காத்திருப்பது ஊஞ்சல் என்ற விஷயம் கடைசி வரிகளிலே மட்டுமே உணர்ந்து ரசிக்க முடிந்தது. ;))))

    பதிலளிநீக்கு
  10. தமிழ்மணம்: 6

    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். vgk

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை படித்ததில் மகிழ்வு. உங்களுக்கு என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கல்கியில் வந்த கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. காத்திருப்பு

    கல்கியில் வெளிவந்த கவிதை அருமை.
    சிறுமியின் ஏக்கம் சின்ன சின்ன வார்த்தைகளில் அவர்கள் உலகத்துக்கே இட்டுச்சென்றது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  15. அவனும் இவனும்
    எம்பி எம்பி எவ்வளவு நேரம்
    ஆடுவார்கள் என்பதைச்
    சொல்லாததாலும்
    வேறு விளையாட்டுக்குப் போனால்
    வரிசை தப்பி விடுமென்றும்
    ஏற்கனவே தப்பியிருந்த
    வரிசையில் ஏக்கத்தோடு
    நின்றிருந்தாள்.//

    குழந்தையின் ஏக்கத்தை அழகாய் சொல்லும் கவிதை.
    கல்கியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஊஞ்சல் கண்டால் அமர்ந்து ஆடத்தான் தோன்றும் எனக்கு இப்படி சிந்தித்து அழகாய் ஒரு கவிதை எழுத உங்களூக்கே முடியும் ராமலஷ்மி. வாழ்த்துகள். கல்கியில் வந்ததில் மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு
  17. கல்கியில் வந்த கவிதைக்கு முதல் வாழ்த்து...
    .இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. காத்திருப்பு
    கனவிலும் ‘உறங்காது காத்திருக்கும் ஊஞ்சல்!’" க்னமாய் ஆடும் கவித்தைக்கு இனிய பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  19. கல்கியில் வந்த கவிதைக்கு வாழ்த்து...

    .இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. "தன் முறைக்காக காத்திருந்த குழந்தையின் ஏக்கத்தை தொடர்ந்து அழகாய்உறங்காமல் காத்திருந்தது
    ஊஞ்சல்."பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. அருமையான கவிதை! இது கல்கியில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  22. குழந்தைக்கு மட்டுமல்ல ஊஞ்சலுக்கும் ஏக்கம் உண்டுங்கறதை சொல்லிச் சென்ற கவிதை அழகாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  23. ஊஞ்சல் என்றால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான். அத்தகு ஊஞ்சலில் ஆடி மகிழ முடியாத ஏக்கத்தைக் கனவிலும் தொடரும் குழந்தைக்கு, கனவில் வரக் காத்திருக்கும் ஊஞ்சலின் ஏக்கம் அழகோ அழகு. குழந்தையின் மனம் மட்டுமல்ல, அதன் கனவுக்குள்ளும் செல்லும் வழியறிந்த கவிதைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  24. மனதைத் தொட்டது கவிதை. சிறு வயதில் இதே மாதிரி பலகீனனாக இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன!

    பதிலளிநீக்கு
  25. கடைசி வரி அசல் கவிதை. பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  26. கல்கியில் வெளியானதற்கு வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  27. குழந்தைகளின் மனநிலையை அற்புதமாக சித்தரித்துள்ளீர்கள்.

    கல்கியில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. ஒரு குழந்தையின் ஏக்கத்தை அழகாக கவிதையாக கொடுத்திருக்கீங்க.
    கல்கியில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. குழந்தையின் ஏக்கம் கனவில்.....

    ஊஞ்சல் உறங்காது காத்திருக்கின்றது குழந்தைக்காக.... அருமை.

    பதிலளிநீக்கு
  30. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //கல்கியில் வந்த கவிதைக்கு முதல் வாழ்த்து...
    பின்...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    TVR_- Kanchana//

    இருவருக்கும் என் நன்றியும் வாழ்துகளும்.

    பதிலளிநீக்கு
  31. மோகன் குமார் said...
    //:(((//

    உங்களைப் போலவே ஊஞ்சலுக்கும் வருத்தம்:)! நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  32. தமிழ் உதயம் said...
    /ஏக்கம் - தூக்கத்திலும் கனவாக தொடருகிறது. வாழ்த்துகள் கல்கியில் மலர்ந்ததற்கு.//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  33. Asiya Omar said...
    //கல்கியில் வெளியான கவிதை சிந்திக்க வைத்தது.தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  34. கே. பி. ஜனா... said...
    /இனிய பொங்கல் வாழ்த்துகள்!/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. Ramani said...
    /குழந்தையின் மெல்லிய உணர்வினை
    அழகிய கவியாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நிச்சயம் ஊஞ்சல் ஏக்கத்துடன் சென்ற
    குழந்தையைத் தான் நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும்/

    கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. விச்சு said...
    /காத்திருப்பு அருமை.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிமையான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. ஹேமா said...
    //முத்தக்கா காத்திருப்பு கலக்கல்.அருமை.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்தும்கூட !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  38. சி.கருணாகரசு said...
    //கவிதை சிறப்பு.

    தங்களுக்கு குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. Vasudevan Tirumurti said...
    //:-))//

    நன்றி திவா சார்:)!

    பதிலளிநீக்கு
  40. குமரி எஸ். நீலகண்டன் said...
    //கல்கியோடு கவிதையாய் வந்தது இந்தக் கனிவான பொங்கல்.
    வாழ்த்துக்களுடன்//

    ஆம், மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  41. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கல்கி எனக்கு இன்று தான் 15/01/2012 கிடைதது. பார்த்தேன். படித்தேன். மகிழ்ந்தேன். பாராட்ட வந்தேன். ...

    அருமையான கவிதை. காத்திருப்பது ஊஞ்சல் என்ற விஷயம் கடைசி வரிகளிலே மட்டுமே உணர்ந்து ரசிக்க முடிந்தது. ;))))//

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  42. கணேஷ் said...
    //அருமையான கவிதை படித்ததில் மகிழ்வு. உங்களுக்கு என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. சசிகுமார் said...
    //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  44. அம்பிகா said...
    //இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கல்கியில் வந்த கவிதைக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  45. சரண் said...
    //காத்திருப்பு

    கல்கியில் வெளிவந்த கவிதை அருமை.
    சிறுமியின் ஏக்கம் சின்ன சின்ன வார்த்தைகளில் அவர்கள் உலகத்துக்கே இட்டுச்சென்றது போல் இருந்தது.//

    மிக்க நன்றி சரண்.

    பதிலளிநீக்கு
  46. கோமதி அரசு said...
    //குழந்தையின் ஏக்கத்தை அழகாய் சொல்லும் கவிதை.
    கல்கியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  47. ஷைலஜா said...
    /ஊஞ்சல் கண்டால் அமர்ந்து ஆடத்தான் தோன்றும் எனக்கு இப்படி சிந்தித்து அழகாய் ஒரு கவிதை எழுத உங்களூக்கே முடியும் ராமலஷ்மி. வாழ்த்துகள். கல்கியில் வந்ததில் மகிழ்ச்சி ./

    நன்றி ஷைலஜா:)!

    பதிலளிநீக்கு
  48. Lakshmi said...
    //கல்கியில் வந்த கவிதைக்கு முதல் வாழ்த்து...
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  49. இராஜராஜேஸ்வரி said...
    //கல்கியில் வந்த கவிதைக்கு வாழ்த்து...

    .இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்//

    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  50. வியபதி said...
    //"தன் முறைக்காக காத்திருந்த குழந்தையின் ஏக்கத்தை தொடர்ந்து அழகாய்உறங்காமல் காத்திருந்தது
    ஊஞ்சல்."பொங்கல் வாழ்த்துக்கள்.//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. மனோ சாமிநாதன் said...
    //அருமையான கவிதை! இது கல்கியில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!!//

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  52. அமைதிச்சாரல் said...
    //குழந்தைக்கு மட்டுமல்ல ஊஞ்சலுக்கும் ஏக்கம் உண்டுங்கறதை சொல்லிச் சென்ற கவிதை அழகாயிருக்கு.//

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  53. கீதா said...
    //ஊஞ்சல் என்றால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான். அத்தகு ஊஞ்சலில் ஆடி மகிழ முடியாத ஏக்கத்தைக் கனவிலும் தொடரும் குழந்தைக்கு, கனவில் வரக் காத்திருக்கும் ஊஞ்சலின் ஏக்கம் அழகோ அழகு. குழந்தையின் மனம் மட்டுமல்ல, அதன் கனவுக்குள்ளும் செல்லும் வழியறிந்த கவிதைக்குப் பாராட்டுகள்.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  54. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //:) சரிதான் ..//

    சரிதானே:)? நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  55. ஸ்ரீராம். said...
    /மனதைத் தொட்டது கவிதை. சிறு வயதில் இதே மாதிரி பலகீனனாக இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன!/

    மிக்க நன்றி ஸ்ரீராம். எல்லா இடங்களிலும் இக்காட்சியைக் காண இயலும்.

    பதிலளிநீக்கு
  56. அப்பாதுரை said...
    /கடைசி வரி அசல் கவிதை. பிரமாதம்./

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  57. கோவை2தில்லி said...
    /கல்கியில் வெளியானதற்கு வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகளும்..../

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  58. அமைதி அப்பா said...
    /குழந்தைகளின் மனநிலையை அற்புதமாக சித்தரித்துள்ளீர்கள்.

    கல்கியில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்!/

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  59. RAMVI said...
    /ஒரு குழந்தையின் ஏக்கத்தை அழகாக கவிதையாக கொடுத்திருக்கீங்க.
    கல்கியில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்./

    மிக்க நன்றி ராம்வி.

    பதிலளிநீக்கு
  60. மாதேவி said...
    /குழந்தையின் ஏக்கம் கனவில்.....

    ஊஞ்சல் உறங்காது காத்திருக்கின்றது குழந்தைக்காக.... அருமை./

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  61. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  62. அன்பின் ராமல்கஷ்மி - அருமை அருமை கவிதை அருமை - கல்க்யில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் = ஏக்கத்துடன் உறங்கச் சென்ற குழந்தையின் கனவில் முதலில் ஊஞ்சல் தான் வரும். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin