புதன், 9 மார்ச், 2011

நம்பிக்கை நூற்று நனவை நெய்வோம்..- மகளிர் சிறப்புச்சரத்தில்..

  • மாற்றி நடப்பட்டாலும் முன்னேறிக் காட்டலாம் என்கிறார் பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் விருதுகள் தரும் ஊக்கத்தால் நிகழும் அற்புதத்துக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

  • ஒருசில துளிகளில் முடிந்து விடும் இவரது பதிவுகளில் நமக்கான அன்றைய தியானம்.

  • இடைவெளி விடாமல் வருடக் கணக்காய் எழுதி வரும் இவரது உத்வேகம் நமக்கொரு பாடம்.

  • நம்பிக்கை நூற்று நனவை நெய்வதாலேயே இவர் வானில் அத்தனை நட்சத்திரங்கள் பிரகாசம்.


யார் யார் இவர்கள்?

அறிய வாருங்கள்!

கனவே நனவாக..-மகளிர் சிறப்புச்சரம்-புதன்
***



பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



அமைதிச்சாரல்:
பயணக்கட்டுரை, சமையல் குறிப்புகள், கவிதைகள், புகைப்படங்கள் என எல்லாவற்றிலும் கலக்கி வரும் பதிவுலக நம்பிக்கை நட்சத்திரம். இயல்பான நகைச்சுவை இவர் கட்டுரைகளெங்கும் இழையோடும். சமீபமாக அருமையான சிறுகதைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். அவற்றில் ஒன்று,‘பொங்கல் மகிழ்ச்சி’[லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை].கவிதை நேரமிது வலைப்பூவில் ‘முன்னேற்றம்’ பற்றி சொல்லியிருப்பதில் எனக்குப் பிடித்தமான சிலவரிகள்:
ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.


‘சமைத்து அசத்தலாம்’ ஆசியா ஓமர்
பதிவுலகில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் விருதுகளின் ஊக்கத்தால் நிகழும் அற்புதத்துக்கு இவர் சிறந்த உதாரணம். நண்பர் அஹமது இர்ஷாத் கொடுத்த 'சிறந்த எழுத்தாளர்' விருதே தன்னைச் சிறுகதை முயற்சியில் இறங்க வைத்ததாகக் குறிப்பிடுகிறார். அப்படியாக இவர் எழுதிய முதல் சிறுகதை தமிழ்மணம் விருது 2010 மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ஜொலிக்கிறது.
எம்மா: “அப்பப்ப கண்ணை திறந்து, எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்திட்டு கண்ணை மூடிக்கொள்ளுவார், இப்படியாய் ஒரு நாள் முழுவதும் கழிந்தது, சொந்தக்காரங்க எல்லாம் இந்த கிழவனுக்கு வேலை இல்லை,நல்ல திடமாக இருந்திட்டு எல்லாரையும் எங்கேயும் அசைய விடமாட்டேங்கிறார் பாரேன்னு ஒவ்வொருவராக அவரவர் வீடு செல்ல ஆரம்பித்து விட்டனர்..

தமிழ்மணம் விருது தந்திருக்கும் ஊக்கத்தால் மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துவோம்.
***
சமையல் செய்முறைகளை ஒவ்வொரு பருவத்திலும் படமெடுத்து வழங்குவது இவரது தனிச் சிறப்பு. சமீபத்தில் தன் வலைப்பூவின் ‘ஒரு வருட நிறைவு’க்காக வழங்கிய இனிப்பு இங்கே.
***
மனநலம் உடல்நலம் குறைந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் இருந்த அனுபவங்களை மூன்று பாகங்களாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் ‘சின்னஞ் சிறிய உலகம்’.
***
‘நினைவின் விளிம்பில்’ கவிநயா:
‘திண்ணை’, மற்றும் மாலனின் ‘திசைகள்’ இணைய இதழ்களில் எழுதி வந்தவர், இணையக் குழுமங்களில் தொடர்ந்து பின்னர் நம் ‘நினைவின் விளிம்பில்’ என்றும் நிற்கக் கூடிய படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் வாசிக்கக் கிடைக்கும் இவரது பதிவுகள் எனக்கு. ஒருசில துளிகளே அப்பதிவினில் கழித்திருந்தாலும், அன்றைக்கான தியானத்தை முடித்த நிறைவைத் தரும் பல படைப்புகள்.

ஜலதோஷமும் சந்தோஷமும்
:. “பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

உங்களுக்கு எத்தனை அம்மா?
: “அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும்.

மறக்கத் தெரியுமா?:“நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!

கவிதைகள்: நம்பிக்கை, அமைதி, சரணாகதி.

சிறுகதைகள்: ரயில் பயணம், யாருக்குத் தெரியும்?

‘எண்ணிய முடிதல் வேண்டும்’ ஷைலஜா:
தேர்ந்த எழுத்தாளர். 230-கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்களைப் படைத்த இவர் சிறந்த கட்டுரையாளரும். வானொலி மற்றும் (ராஜ்) தொலைக் காட்சிக்காக நாடகங்களும் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். விளம்பரங்களுக்குக் குரல் கொடுக்கிறார். சிறந்த இல்லத்தரசியாய் பரிமளித்தபடி பல ஆண்டுகளாக இடைவெளி விடாமல் எழுதி வருவது போற்றவும் நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டிய ஒன்று. பிற எழுத்தாளர்களின் படைப்புகளுடன் இரண்டு தொகுப்புகள் வந்திருப்பினும், சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘அவனும் இவனும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

இவரது நகைச்சுவை உணர்வுக்குச் சிறந்த சான்றாக சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!
***
அணை திறந்த வெள்ளமென இவர் பிறந்த ஸ்ரீரங்கத்துக் காவேரி துள்ளி வரும் அழகில் வார்த்தைகள் பெருக்கெடுத்து ஓட, சொல்லியிருக்கிறார் உருக்கமாய் இக்கவிதையிலே பெண்படும் பாட்டினை.., ஆத்தா ஒன் சீலதான்:“ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.
.......................
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி..

***

தசரா யானைகளின் அவஸ்தைகள் : “காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும்.” தாய்மையின் கருணையுடன் இதற்கான தீர்வையும் கோரிக்கையாய் வைத்துள்ளார் பதிவின் முடிவிலே பாருங்கள்.
***
‘என் வானம்’ அமுதா:
‘என் வானம்’ வந்த கதையை இவரே சொல்லியிருக்கிறார் இங்கு.

குழலினிது யாழினிது எனும் இழையில் தன் மகள்கள் நந்தினி, யாழினியுடனான தருணங்களைத் தாய்மையின் பூரிப்புடன் பகிர்ந்து வருகிறார். அவர்களில் தன்னையே கண்டெடுக்கும் சந்தோஷத்தை உணர்த்துகிறார் நமக்கும் அற்புதமாய் இங்கே, குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்: “கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

சமீபத்தில் குழந்தைகளுடன் இவர் ஆமை நடை சென்ற அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.ஆமை நடை செல்ல ஆசையா?, சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்.

நூற்று நாற்பது எழுத்து நவீன இலக்கியம் ட்வீட்ஸிலும் அசத்துகிறார் பாருங்களேன்இங்கே.

வாழ்க்கையின் வலிகளை, மனிதரின் மறுபக்கங்களை எளிய வரிகளில் சொல்லிக் கடந்து விடுகிற இவர் கவிதைகள் வாசிப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.

உறுத்தல், கேள்விகள், ஊரில் வீடு, மனம், பாடம் என இவர் வானத்தில் மிளிரும் கவி நட்சத்திரங்கள் அத்தனையும் பிரகாசம்! நம்பிக்கை நூற்று நம் காயங்கள் அனைத்தையும் வருடி, மருந்தாகி, மறக்கவும் வைக்கும் இவரது அழகிய வரிகளுடனேயே இந்த மகளிர் சிறப்புச்சரத்தை நிறைவு செய்கிறேன்:

“அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

***

22 கருத்துகள்:

  1. வலைச்சரம் ஆசிரியர் என்பதை இப்போதுதான் பார்த்தேன். அசத்தலான அறிமுகங்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வலைச்சரத் தொடுப்பிற்கு ஒரு முன்னோட்டம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  3. வாசித்தேன்.அற்புதமான அறிமுகங்கள் சாம்பிள்கள் படிக்கவே நெகிழ்ச்சியா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை.மிக்க நன்றி,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. முதலில் அங்கே பார்த்துவிட்டதால்
    விடைகள் தெரிஞ்சிடுச்சு அக்கா :)

    பதிலளிநீக்கு
  6. அறிமுகங்கள் நன்று. சிலர், எனக்குப் புதியவர்களே. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அறிமுகங்களுக்கு முத்துச்சரத்தில் தரும் அறிமுகங்கள் இன்னும் சூப்பர்! :) அந்த வரிசையில் என்னையும் சேர்த்துக் கொண்ட அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள், ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் மேடம். வலைச்சரத்தில் முத்துச்சரம்... என்றும் ஜொலிக்கும் சரமாக.... மிக்க மகிழ்ச்சி. அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. திருவாரூர் சரவணன் said...
    //வலைச்சரம் ஆசிரியர் என்பதை இப்போதுதான் பார்த்தேன். அசத்தலான அறிமுகங்கள் தொடரட்டும்.//

    நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  11. goma said...
    //வலைச்சரத் தொடுப்பிற்கு ஒரு முன்னோட்டம் சூப்பர்//

    நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  12. மோகன் குமார் said...
    //வாசித்தேன்.அற்புதமான அறிமுகங்கள் சாம்பிள்கள் படிக்கவே நெகிழ்ச்சியா இருக்கு//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  13. asiya omar said...
    //அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை.மிக்க நன்றி,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி ஆசியா:)!

    பதிலளிநீக்கு
  14. சசிகுமார் said...
    //இதோ உடனே வந்துடறேன்.//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  15. சுந்தரா said...
    //முதலில் அங்கே பார்த்துவிட்டதால்
    விடைகள் தெரிஞ்சிடுச்சு அக்கா :)//

    நல்லது சுந்தரா:)!

    பதிலளிநீக்கு
  16. அமைதி அப்பா said...
    //அறிமுகங்கள் நன்று. சிலர், எனக்குப் புதியவர்களே. நன்றி.//

    மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  17. க்ஷ்
    கவிநயா said...
    //அறிமுகங்களுக்கு முத்துச்சரத்தில் தரும் அறிமுகங்கள் இன்னும் சூப்பர்! :) அந்த வரிசையில் என்னையும் சேர்த்துக் கொண்ட அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள், ராமலக்ஷ்மி!//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  18. Sriakila said...
    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

    நன்றி ஸ்ரீஅகிலா.

    பதிலளிநீக்கு
  19. அமைதிச்சாரல் said...
    //அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க..//

    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  20. அமுதா said...
    //வாழ்த்துக்கள் மேடம். வலைச்சரத்தில் முத்துச்சரம்... என்றும் ஜொலிக்கும் சரமாக.... மிக்க மகிழ்ச்சி. அறிமுகத்திற்கு நன்றி//

    நன்றி அமுதா:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin