ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

சுவை, மணம், குணம்.. காஃபி, டீ.. கலக்கலாம் வாங்க !

தேநீர் (அ ) காஃபி

இதுதான் இம்மாத ‘தமிழில் புகைப்படக் கலை’ அறிவித்திருக்கும் போட்டி. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1


 “நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போல் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.”  என்கிறார் நடுவர் நவ்ஃபல்.

#2
சுவரில் தெரியும் எழுத்துக்களை வைத்து இவரை எங்கே படமாக்கியிருப்பேன் என்று உங்களால் எளிதாகக் கணிக்க முடியும் என நம்புகிறேன் :)!

#3
க்ரீன் டீ = ஆரோக்கியம்


கடந்த மூன்று மாதப் போட்டிகளில் முறையே 60, 80, 40 பேர்கள் என்ற எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்த இடத்தில்..
வெகுசிலரே இந்த முறை கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் சிறந்த படங்கள் சில வந்துள்ளன. அவற்றைக் காண  ‘இங்கே’ செல்லலாம். தலைப்பு சுலபமானதாக அல்லது ஏற்கனவே எடுத்த படங்கள் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கும் போது எண்ணிக்கை உயருகிறது. வெளியில் கடைகளில் சென்று எடுங்கள் என நடுவர் சொல்லியிருப்பது ஒரு ஆலோசனையே. அவ்வாறு செல்ல முடியாதவர்கள் தங்கள் ரசனைக்கேற்ப வீட்டிலேயே எடுக்கலாம். இன்று மாலை உங்களது தேநீர் நேரத்தைப் படமாக்கி அனுப்பலாம்.

#4


#5
கோப்பைகளாய் எடுத்து அனுப்புவதை விட வேறு உயிரோட்டமான காட்சிகளைப் படமாக்கப் பாருங்கள் என்கிறார் நடுவர். அப்படி இருக்கையில் இப்படியான காலிக் கோப்பையை மறந்தும் அனுப்பிட வேண்டாம்:).


#6
சுக்குக் காஃபியும் சுண்டலும்.

ஐந்து வருடங்களுக்கு முன் ‘கருங்குளத்தில்’ எடுத்த படம்.

#7
சுவை, மணம், குணத்தில் கரைகிறதோ மனம்..


போட்டி அறிவிப்பு ‘இங்கே’. விதிமுறைகள் ‘இங்கே’. படங்களை அனுப்ப இன்றே கடைசித் தேதி.
***


7 கருத்துகள்:

  1. கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துகள். வெறும் கோப்பையை எடுப்பதைவிட, மனிதர்களோடு எடுத்தால் ரசிக்கத்தக்கதாய் இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அதையேதான் சொல்லியிருக்கிறார் நடுவர். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமையான படங்கள்...... டீக்கடைகள் பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் இடங்களுமாய்.... தில்லியில் நான் இழந்த ஒரு விஷயம் இக்கடைகள்......

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin