வியாழன், 24 மார்ச், 2016

குரூப்புல டூப்பு

#1

#2

குரூப்புல டூப்பு யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்கதானே? எதற்காக இப்போ டூப்பை ஓரம் கட்டணும்னு கேள்வி வரலாம்.
இதுதான் இந்த மார்ச் PiT போட்டியின் தலைப்பு.


Odd one out!

இதை எப்படித் தமிழில் சொல்லலாமென நடுவர் நவ்ஃபல் நண்பர்களை ஜிப்ளஸில் கேட்க, சந்தோஷ் தந்த ஜோரான தலைப்புதான்... குரூப்புல டூப்பு...பொருந்தாத ஒன்று..! இன்னும் சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#3
#4

ஆல்பத்துக்கு லாபம்:

அவரவருக்குப் பிடித்த படங்களைத் தரலாம் என்றோ, அல்லது மிக எளிமையான தலைப்பாக இருந்தாலோ பங்கேற்பவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சற்றே சவலான தலைப்பு, தலைப்புக்காகவே படம் எடுத்தாக வேண்டும் என்றால் பின் வாங்கி விடுவதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு போட்டியும் நமக்கான பயிற்சி என்றெண்ணிச் செயல்பட்டால் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி லாபமாகக் கிடைக்கும்  நம் ஆல்பத்துக்கு, திட்டமிடாமலே மேலும் பல காட்சிகள்.

இன்றைய தினத்தையே எடுத்துக் கொள்ளலாம். பிட் போட்டிக்கென முன் போல பதிவு இடுவது குறைந்து விட்டது. இந்த மாதமும் இதற்கெனப் பதிவிடும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் காலை நடைப் பயிற்சிக்காக வளாகத்தைச் சுற்றிய போது இத் தலைப்புக்குப் பொருத்தமாகக் கண்ணில் பட்டன சில காட்சிகள். வீட்டுக்குத் திரும்பப் போய் கேமராவை எடுத்துச் சென்று கீழ்வரும் படங்களை எடுத்தேன். கூடவே சிறைப்பிடித்தேன் காலை இளம்வெயிலில் காற்றில் ஆடிக் கொண்டிருந்த பல வண்ண மலர்களையும். மற்றொரு நாளில் அதே மலர்கள் கிடைக்க வாய்ப்பில்லைதானே:)?

அடுத்த வீட்டுக்குப் போய் அளவளாவி நலம் விசாரிக்கும் செம்பருத்திகளும், பொருந்தாமல் பூத்து நிற்கும் மலர்களுமாக..

#5
#6
 #7
 #8
 #9

போட்டி அறிவிப்பு இங்கே. இதுவரை வந்த படங்கள் இங்கே. கடைசித் தேதி 25 மார்ச் 2016.
***

11 கருத்துகள்:

  1. இயற்கை தருகிறது ஆயிரம் எண்ணங்களை, ஐடியாக்களை! நல்ல படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அட....
    குரூப்புல டூப்பு அழகான படங்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  3. தலைப்பு அருமை.. ஸ்ரீதர் படக் காட்சிகளில் இப்படி குரூப்புல டூப் அடிக்கடி வரும். காய்ந்து போன மரங்களின் நடுவே சம்பந்தமேயில்லாமல் ஒரு வெள்ளைப்பூ தலை நீட்டும்.. சுவாரசியமான அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ அப்பாதுரை, நன்றி. நலம்தானே?
      @ ஸ்ரீராம், கூடவே செல்கிறீர்கள் நீங்கள் :)!

      நீக்கு
  4. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin