ஞாயிறு, 17 ஜூன், 2018

மன்னவன் என்பவன்..

# 1
‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே அன்றி ஆள்பவர்களுக்காக அன்று.’
_ Thomas Jefferson



# 2
'விவேகமான மனிதன் அண்டத்தின் சேவல் போன்றவன். 
உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்பவன்.’
_Mehmet Murat ildan

#3
‘ஆட்டு மந்தைகளை அரசாள ஓநாய்தான் கிடைக்கும்.’
_Edward R. Murrow


#4
ஆங்கிலத்தில் மிகவும் திகிலடையச் செய்யும் வார்த்தைகள் யாதெனில்: ‘நான் அரசாங்கத்திடமிருந்து வருகிறேன். உங்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறேன்.’
 _ Ronald Reagan

#
"உன்னைப் பற்றி மிகவும் கர்வம் கொள்ளாதே. நீ எல்லோரையும் விட மேலானவன் எனும் மமதை கொள்ளாதே. உன் செருக்கு சீர்குலைய அதிக நேரம் பிடிக்காது. எல்லா சிறந்தவையும் இன்றோ நாளையோ வீழ்ந்தே தீரும்."
_ Tanushree Das


***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் .. தொகுப்பது தொடருகிறது..

10 கருத்துகள்:

  1. அழகான படங்கள். படங்களுக்குப் பொருத்தமான பொன்மொழிகள்.....

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல மேய்ப்பர்கள் இல்லாததால் ஆடுகள் ஓநாய்களால் சிதறடிக்கப்பட்டு கிடக்கின்றன.

    அழகிய செம்பருத்திப் பூவை அந்தப் பொன்மொழியுடன் பொருத்திப் பார்க்கவே மனதுக்கு பிடிக்கவில்லை. மனதை கவரும் அழகிய படம். பூக்கள் சருகானாலும் அழகு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. விரைவில் முடியும் பூவின் வாழ்வோடு ஒப்பிடவே அந்தப் படம். ஆனாலும் அழகிய பூ, அதென்ன செய்தது? சரிதான்:).

      நீக்கு
  3. அழகான படங்கள்.
    சேவல் மிக கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்... அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin