சனி, 2 ஜூன், 2018

இனிப்பு என்பது யாதெனில்.. - சுவைக்கலாம் வாங்க.. (2)

#1
சாக்லேட் கேக்
“எதையும் எதிர் கொள்வோம். ஒரு அருமையான க்ரீமியான சாக்லேட் கேக் பலருக்கும் பலவற்றையும் செய்துள்ளது. எனக்கும் செய்துள்ளது.”
_Audrey Hepburn


#2
மைசூர் பாகு
வாயில் வைத்ததும் கரையும் மைசூர் பாகுக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம் சுவாரஸ்யம். ... ...

நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் மைசூர் மாநகரின் மன்னராக இருந்தபோது
அரண்மனையின் சமையல்காரராக இருந்த கக்கசுரா மாடப்பா கடலைமாவு, நெய் மற்றும் சர்க்கரையைக் கொண்டு செய்த இந்த இனிப்பு அனைவருக்கும் பிடித்துப் போக இதன் பெயர் என்னவெனக் கேட்டிருக்கிறார்கள். என்ன சொல்வதெனத் தெரியாத நிலையில் சட்டென மனதில் தோன்றியிருக்கிறது ‘மைசூர் பாகா’ எனும் பெயர்.  கன்னடத்தில் ‘பாகா’ என்றால் இனிப்பு என்று பொருள்.

#3
வானவில் கேக்
“கேக் ஒருபோதும் மடத்தனமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. அதற்கு எல்லாம் புரியும்.”
எச்சரிக்கை:
டேபிள் டாப் ஃபோட்டோகிராஃபி முயற்சியில்
வண்ண மயமான படங்களுக்காக
ஒவ்வொரு வகையிலும் ஒன்றாக வாங்கப்பட்டவை இவை:). 

இது போன்ற அதிக வண்ணங்கள் சேர்க்கப்பட்ட கேக் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

#4
“எங்கே கேக் இருக்கிறதோ.. அங்கே நம்பிக்கை இருக்கிறது. மேலும் எப்போதும் இருக்கிறது நமக்காக கேக்”
_Dean Koontz 

#5
“கேள்வி எதுவானாலும் இருக்கட்டும். இனிப்பு மட்டுமே அதற்கான பதில்!”

#6
“இனிப்பு என்பது மனதுக்குப் பிடித்தப் பாடலைப் போன்றது. 
அதிலும் பிரமாதமான இனிப்பென்பது நம்மை ஆட வைப்பது!”


#7
தயிர் வடை
(எடுத்துக்கலாம் இரண்டு..)

#8
செடியிலிருந்து.. மேசைக்கு..
ஜாம் செய்யலாமா? கிச்சடி செய்யலாமா?



#9
ஜில்லென்று...
(செதுக்கப்பட்ட தர்பூசணி)

#10
“சாலட் என்பது சாப்பாடு மட்டுமல்ல. அழகிய பாங்கும்..”

***

18 கருத்துகள்:

  1. இனிப்பு பிடிக்கும் சாக்கலேட் என் மனைவியும் செய்வாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் செய்பவற்றின் சுவையே தனிதான்.

      நன்றி GMB sir.

      நீக்கு
  2. அழகான படங்கள். பார்க்கும்போதே உண்ணத் தோன்றுகிறதே!

    பதிலளிநீக்கு
  3. படங்களும் கருத்துக்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள் (எப்போதும்போல்).

    அதிலும், தயிர்வடை, சாலட் முதலிரண்டு இடத்தைப் பிடிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. ம்ஹூம். ராமலக்ஷ்மி. படத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
    அடுத்த பதிவு முறுக்கு சீடை,தட்டை,காரா சேவு என்று போடவும். ஆனாலும் சொல்லி இருக்கும் விதம் வெகு அழகு.அன்புடன் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  6. படங்களையும் தகவல்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin