ஞாயிறு, 6 மார்ச், 2016

அன்பெனப்படுவது

#1
'பருவங்களின் உதவியை நாடியிராது வளருகின்ற மலருகின்ற ஒரே பூ, அன்பு.’ _ Kahlil Gibran

#2
முயன்றிட வேண்டும் என்கிற முடிவில் ஆரம்பமாகிறது ஒவ்வொரு சாதனையும். _ Gail Devers


#3
எவ்வளவு மெதுவாகச் செல்கிறாய் என்பது ஒரு பொருட்டேயில்லை நின்று விடாத வரையில். - Confucius


#4
‘உங்கள் கனவுகளைச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். நிறைவேற்றிக் காட்டுங்கள்.’

#5
‘நம்பிக்கைகள் பூர்த்தியாகும் திடமாக நம்பினால்.'

#6
‘இடைவெளியின்றி எங்கும் நிறைந்திருக்கிறது அன்பு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதைத் தடுக்காமலிருப்பதே.’

#7
‘ஒரு மலர் தன் அருகே இருக்கும் மலரை வெல்ல வேண்டுமென ஒருபோதும் நினைப்பதில்லை. மலர்தலில் மட்டுமே அதன் கவனம்.’_ Zen Shin

#8
“அன்பெனப்படுவது ஒருவரையொருவர் பார்த்து நிற்பதன்று, ஒரே திசையில் நோக்குவது” _ _ Antoine de Saint-Exupery


#9
அச்சுறுத்தும் தடங்கல்கள் யாவும் இலக்கிலிருந்து உங்கள் கண்களை அகற்றும் போதே தென்படுகின்றன. - Henry Ford

#10
‘சொர்க்கத்திற்கான பாதை ஒன்றே ஒன்றுதான். பூமியில் அதை அன்பு என்கிறோம்’


***

14 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனைகள்.... அதற்கேற்ற அழகான படங்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் சிந்தனைகளும் நன்று!

    பதிலளிநீக்கு
  3. இதே தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் ஆனால் நீங்களோ அன்பு மலர்களைப் போல் மென்மையானது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமை
    படங்களைப் பார்க்கையில் மனம் மகிழ்கிறது

    பதிலளிநீக்கு
  5. கடைசிப்படம் குமரகமா?.. பார்க்கும்போதே குளுகுளுன்னு இருக்கு :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளம்தான். ஆனால் பேகல். சென்ற ஆண்டு சென்றிருந்த போது எடுத்த படம். நன்றி சாந்தி.

      நீக்கு
  6. மிக அழகு. வார்த்தைகளும்.படங்களூம். ராமலக்ஷ்மி.என் அன்பும் உங்களுக்கு,.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin