ஞாயிறு, 20 மார்ச், 2016

ஞானத்தின் ஆரம்பம் - சாக்ரடீஸ் பொன் மொழிகள் 10

#1
அறிவாளிகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சராசரியானவர்கள் ஊர் உலக நடப்புகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்கள் அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

#2
மெய்யறிவு எதுவெனில், உனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதே.

#3
மாற்றத்திற்கான இரகசியம், உங்கள் சக்தி அனைத்தையும் குவித்துப் பழையவற்றோடு போராடிக் கொண்டிருப்பதில் இல்லை, புதியவற்றைக் கட்டமைப்பதில் இருக்கிறது.


#4
உன்னை அறிந்து கொள்
#5
சுயபரிசோதனை செய்யாத வாழ்வு வீணானது.


#6
உலகம் மாற வேண்டும் என நினைப்பவன் முதலில் தான் மாறட்டும்.

#7
கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்வதே பாதி பதில்.

#8
ஆச்சரியத்தால் செலுத்தப்படுகையில் ஆரம்பமாகிறது ஞானம்.

#9
எப்படிக் காணப்பட விரும்புகிறாயோ, அப்படி இரு.

#10
மற்றவர்களை நசுக்குவதல்ல, உன்னை மேம்படுத்திக் கொள்வதே எளிய, நேர்மையான வழி.
- சாக்ரடீஸ்

***




8 கருத்துகள்:

  1. உண்மைதான் ராமலக்ஷ்மி. நன்றி மா.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான படங்களுடன்
    பயனுள்ள மொழிகள் படிக்க அருமை.
    தொடர்ந்தால் மகிழ்வோம்
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  3. அருமை தங்களின் பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அனைத்துமே அருமை. படங்கள் ஒவ்வொன்றும் பேசுகின்றன.....

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்களோடு நிறைவான வாசகங்களும் மனம் ஈர்த்தன. அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. சிறந்த படங்களையும் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் தேர்ந்தெடுத்து பகிர்ந்துள்ளீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin