நீண்ட இடைவெளிக்குப் பின்.. 25_வது தூறல்:
முத்துச்சரம் வலைப்பூவை ஆன்ட்ராய்டில் எளிதாகத் திறந்து வாசித்திட என் தங்கை உருவாக்கியிருக்கும் செயலி(app):
கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘muthucharam' எனத் தேடினாலும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வசதிக்காக எனக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. செயல்பாட்டின் சோதனைக்குப் பிறகு சில வாரங்களுக்கு முன்னர்தான் சைட் பாரில் அறிவிப்பாக சேர்த்திருக்கிறேன். எத்தனை பேர் கண்ணில் பட்டதெனத் தெரியாது:). விருப்பமானவர்கள் நிறுவிக் கொள்ளலாம். இதுவரையில் 10-50 வரையிலான எண்ணிக்கையில் உள்ளது. அங்கே உங்கள் (review) கருத்துகளையும் பதியலாம்.
நவீன விருட்சம் தளத்தில் வெளியான எனது தனித்துவங்கள், தப்பித்தல் கவிதைகள் மற்றும் தமிழாக்கக் கவிதையான என் பூனைகள் ஆகியவை அதன் அச்சு இதழ் 99_லும் வெளியாகியுள்ளது. சேமிப்புக்காக இங்கு:
#
#
#
‘வளரி’ இதழில் ‘பன்மொழிக் கவிதைகள் நம் மொழி தமிழில்..’ எனத் தொடராக வெளியாகும் எனது தமிழாக்கப் படைப்புகளின் வரிசையில்.. ‘மழையின் குரல்’..
#
வல்லமை:
ஃப்ளிக்கர் தளத்தில் வல்லமை குழுமத்தில் பகிர்ந்திருந்த இப்படம் 48_வது படக் கவிதைப் போட்டிக்கு தேர்வாகியிருந்தது. நன்றி வல்லமை! போட்டி முடிவு இங்கே . வல்லமைக்கும், படத்தைத் தேர்வு செய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும், கவிதை படைத்தவர்களுக்கும், ஆராய்ந்து சிறந்த கவிதையைத் தேர்வு செய்த திருமதி. மேகலா இராமமூர்த்திக்கும் என் நன்றி. வெற்றி பெற்ற கவிஞருக்கு என் வாழ்த்துகள்!
இதற்கு முன்னர் ஏழாவது படக் கவிதைப் போட்டிக்குத் தேர்வான என் படம்:
போட்டி முடிவு இங்கே.
ஆல்பம்:
பதிவுலகம் மற்றும் ஃப்ளிக்கர் மூலமாக அறிமுகமாகிய நட்புகளுடன் நடந்த சந்திப்புகளைப் பற்றி அவ்வப்போது தூறல் பதிவுகளில் பகிர்ந்து வந்திருக்கிறேன். வலை உலகம் வந்த புதிது. ப்ரொஃபைல் படங்களைப் பகிரவே அனைவரும் தயங்கிய காலம். அப்போது பகிராமல் விட்டுப் போன சந்திப்புகளின் படங்களை இந்த ஆல்பம் பகுதியில் இனி பகிர்ந்திட உள்ளேன். மூன்று வருடங்களுக்கொரு முறை கணினி மாற்றுவது என்றாகி விட்ட நிலையில் படங்கள் எங்கேனும் மாட்டிக் கொண்டு விடுகின்றன. சில படங்கள் தேடியும் கிடைக்கவில்லை. எனவே இருப்பவற்றையேனும் இங்கே சேமித்து வைப்பது நல்லதென... இதோ..
#2008
பதிவுலகம் வந்ததிலிருந்து சரியாக ஆறாவது மாதம். எழுதுவதோடு நிறுத்தி விட வேண்டும். வெளியே முகம் காட்ட வேண்டாமென இருந்த எனது இறுக்கத்தை இந்த முதல் சந்திப்பு தளர்த்தியது என்றே சொல்ல வேண்டும்:)! "எண்ணிய முடிதல் வேண்டும்" ஷைலஜா, ""திருமால், "பாலைத் திணை" காயத்ரி சித்தார்த் மற்றும் குடும்பத்துடன் "எண்ணங்கள் இனியவை - PiT" ஜீவ்ஸ் (ஐயப்பன் கிருஷ்ணன்). Photos credit: Jeeves
# ஷைலஜாவுடன்..
பல்வேறு சமயங்களில் எடுக்கப்பட்ட படங்கள். முதல் படத்தில் ஜீவ்ஸ் மகளுடன். நடுவில் இருக்கும் படத்தில் காலம் சென்ற விசாலம் அம்மாவுடன் நாங்கள்.
படத்துளி:
பாடல்: எழுத்தாளர் பாவண்ணன்
“யானை சவாரி” சிறுவர் பாடல்கள் தொகுப்பிலிருந்து..
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவில் 2014 – 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான விருதைப் பெற்ற நூல். வழங்கியவர்கள்: தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம். 64 அருமையான பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலுக்கும் ஓவியர் ராமமூர்த்தி அழகான கோட்டோவியத்தை வரைந்து அளித்திருக்கிறார். குழந்தைகளுக்குப் பாடிக் காட்டவும், சிறுவர்களுக்குப் பரிசளிக்கவும் ஏற்றதொரு நூல்.
நான் எடுக்கும் குழந்தைகள் படங்களை ஃப்ளிக்கரில் பதியும் போது, பொருத்தமான பாடல் வரிகள் இருப்பின் தொடர்ந்து பயன்படுத்திட உள்ளேன்.
நூல் கிடைக்குமிடம்:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
விலை. ரூ.40
இணையத்தில் வாங்கிட: http://discoverybookpalace.com/
***

நன்றி நவீன விருட்சம்!
‘வளரி’ இதழில் ‘பன்மொழிக் கவிதைகள் நம் மொழி தமிழில்..’ எனத் தொடராக வெளியாகும் எனது தமிழாக்கப் படைப்புகளின் வரிசையில்.. ‘மழையின் குரல்’..
#
நன்றி வளரி!
ஃப்ளிக்கர் தளத்தில் வல்லமை குழுமத்தில் பகிர்ந்திருந்த இப்படம் 48_வது படக் கவிதைப் போட்டிக்கு தேர்வாகியிருந்தது. நன்றி வல்லமை! போட்டி முடிவு இங்கே . வல்லமைக்கும், படத்தைத் தேர்வு செய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும், கவிதை படைத்தவர்களுக்கும், ஆராய்ந்து சிறந்த கவிதையைத் தேர்வு செய்த திருமதி. மேகலா இராமமூர்த்திக்கும் என் நன்றி. வெற்றி பெற்ற கவிஞருக்கு என் வாழ்த்துகள்!
இதற்கு முன்னர் ஏழாவது படக் கவிதைப் போட்டிக்குத் தேர்வான என் படம்:
போட்டி முடிவு இங்கே.
ஆல்பம்:
பதிவுலகம் மற்றும் ஃப்ளிக்கர் மூலமாக அறிமுகமாகிய நட்புகளுடன் நடந்த சந்திப்புகளைப் பற்றி அவ்வப்போது தூறல் பதிவுகளில் பகிர்ந்து வந்திருக்கிறேன். வலை உலகம் வந்த புதிது. ப்ரொஃபைல் படங்களைப் பகிரவே அனைவரும் தயங்கிய காலம். அப்போது பகிராமல் விட்டுப் போன சந்திப்புகளின் படங்களை இந்த ஆல்பம் பகுதியில் இனி பகிர்ந்திட உள்ளேன். மூன்று வருடங்களுக்கொரு முறை கணினி மாற்றுவது என்றாகி விட்ட நிலையில் படங்கள் எங்கேனும் மாட்டிக் கொண்டு விடுகின்றன. சில படங்கள் தேடியும் கிடைக்கவில்லை. எனவே இருப்பவற்றையேனும் இங்கே சேமித்து வைப்பது நல்லதென... இதோ..
#2008
பதிவுலகம் வந்ததிலிருந்து சரியாக ஆறாவது மாதம். எழுதுவதோடு நிறுத்தி விட வேண்டும். வெளியே முகம் காட்ட வேண்டாமென இருந்த எனது இறுக்கத்தை இந்த முதல் சந்திப்பு தளர்த்தியது என்றே சொல்ல வேண்டும்:)! "எண்ணிய முடிதல் வேண்டும்" ஷைலஜா, ""திருமால், "பாலைத் திணை" காயத்ரி சித்தார்த் மற்றும் குடும்பத்துடன் "எண்ணங்கள் இனியவை - PiT" ஜீவ்ஸ் (ஐயப்பன் கிருஷ்ணன்). Photos credit: Jeeves
# ஷைலஜாவுடன்..
பல்வேறு சமயங்களில் எடுக்கப்பட்ட படங்கள். முதல் படத்தில் ஜீவ்ஸ் மகளுடன். நடுவில் இருக்கும் படத்தில் காலம் சென்ற விசாலம் அம்மாவுடன் நாங்கள்.
படத்துளி:
எங்கள் அக்கா
‘அக்காவுடன் ஆட்டமென்றால்
எல்லோருக்கும் பிடிக்கும்
அதட்ட மாட்டாள் அடிக்க மாட்டாள்
அதனாலே நெருக்கம்
குரங்கு போல உறுமலாம்
குட்டிக் கரணம் போடலாம்
ஆனைபோல பிளிறலாம்
ஆந்தை போல அலறலாம்
எதைச் செய்தாலும் ஆனந்தமாய்
எங்கள் அக்கா சிரிப்பாள்
கையைத் தட்டி ஊக்கம் ஊட்டி
ஆட்டம் போட வைப்பாள்’
பாடல்: எழுத்தாளர் பாவண்ணன்
“யானை சவாரி” சிறுவர் பாடல்கள் தொகுப்பிலிருந்து..
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவில் 2014 – 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான விருதைப் பெற்ற நூல். வழங்கியவர்கள்: தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம். 64 அருமையான பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலுக்கும் ஓவியர் ராமமூர்த்தி அழகான கோட்டோவியத்தை வரைந்து அளித்திருக்கிறார். குழந்தைகளுக்குப் பாடிக் காட்டவும், சிறுவர்களுக்குப் பரிசளிக்கவும் ஏற்றதொரு நூல்.
நான் எடுக்கும் குழந்தைகள் படங்களை ஃப்ளிக்கரில் பதியும் போது, பொருத்தமான பாடல் வரிகள் இருப்பின் தொடர்ந்து பயன்படுத்திட உள்ளேன்.
நூல் கிடைக்குமிடம்:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
விலை. ரூ.40
இணையத்தில் வாங்கிட: http://discoverybookpalace.com/
***
கவிதைகள் அனைத்தும் அருமை
பதிலளிநீக்குஇறுதியாகப் பதியப்பட்ட கவிதை
மிக மிக அருமை
அக்கா என்றால் ஒருவகையில்
குட்டித்தாய் தானே
பரிசு பெற்றமைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
குட்டித் தாய்.. உண்மைதான். நன்றி ரமணி sir.
நீக்குஅழகான தூறல் தொகுப்பு.. அக்காவுக்காக தங்கை உருவாக்கிய செயலியில் துவங்கி அக்காவைப் போற்றும் பாவண்ணன் பாடலோடு நிறைவு செய்தமை சிறப்பு. உங்களுக்கும் தங்கைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி கீதா. தங்கையிடம் சொல்கிறேன்.
நீக்குபல துளிகள். செயலி இப்போதுதான் கவனிக்கிறேன். முயற்சி செய்கிறேன். நவீன விருட்சம், வளரி, வல்லமைப் படைப்புகளுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்தும் அருமை . உங்கள் தங்கைக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை பகிர்வும் நன்றாக இருக்கிறது.
குழந்தை படங்களில் பொருத்தமான பாடல் பதிய போவதற்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குசெயலிக்கு பாராட்டுக்கள் ...மற்ற படைப்புகளுக்கு வாழ்த்துக்கள் ..
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை ..
நன்றி அனுராதா.
நீக்குகவிதைகள் அருமை ராமலெக்ஷ்மி,புகைப்படங்களும் சிறப்பு. வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை :).
நீக்குபடைப்புக்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குகவிதை அருமை.
நன்றி குமார்.
நீக்குசெயலி நல்ல முயற்சி.
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்கு