வியாழன், 17 மார்ச், 2016

சில்வண்டுகளின் ஆரவாரம் - ‘மட்சுவோ பாஷோ’ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஆறு)

1.
இறக்கின்ற சில்வண்டு
என்னமாய்ப் பாடுகிறது
அதன் வாழ்க்கையை?

2.
மின்மினிப்பூச்சிகள் பார்த்திருக்கின்றன
மூழ்குகிறது படகு
போதையில் படகோட்டிகள்.

3.
சிறந்த சிப்பாயின்
காலித் தலைக்கவசத்துள்ளிருந்து
பாடுகிறது சில்வண்டு, பண்பற்று.

4.
தட்டான் பூச்சியால்
இறங்க முடியவில்லை எளிதாக
கூரிய புற்களின் மேல்.

5.
இறக்கப் போவதற்கான
எந்த அறிகுறியுமில்லை
சில்வண்டுகளின் ஆரவாரத்தில்.

6.
தனித்த அமைதி
மூழ்குகிறது பாறைக்குள்
ஒற்றைச் சுவர்க்கோழியின் கீச்சொலி.

**


மூலம்: (ஜப்பானிய மொழியில்..) Matsuo Basho
ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.
படம்: இணையத்திலிருந்து..

***

மட்சுவோ பஷோ (1644 -1694) புகழ் பெற்ற ஜப்பானின் இடோ காலத்துக்கவிஞர். இவரது வாழ்க்கைக் காலத்திலேயே "ஹைக்காய் னொ ரெங்கா"  என்னும் கவிதைவடிவத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுருக்கமானவையும் தெளிவானவையுமாகக் கொண்டாடப்படும் ஹைக்கூ கவிதைகளில் வல்லுனராக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு ஹைக்கூ கவிதைகளின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். ஆசிரியராகத் தொழில் புரிந்த இவரது கவிதைகள் ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும், மரபு சார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
இலக்கியத் துறையினரின் சமூக மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளி, எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தவர். இவர் பெற்ற நேரடி அனுபவங்களே இவரது கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். காட்சிகளையும் உணர்வுகளையும் எளிமையான கூறுகளில் அடக்கியவர்.

***

14 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை.. முக்கியமாக ஐந்தாவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சாந்தி. என்னையும் அத்துளி அதிகம் கவர்ந்தபடியால் தலைப்பாயிற்று.

      நீக்கு
  2. அருமை. ரசித்தேன்.

    3 'சிறந்த'வா, 'இறந்த'வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறந்த(great) வீரனின் தலைக் கவசத்துக்குள் இருந்து மரியாதையின்றிப் பாடுகிறதாம் சில்வண்டு!

      நன்றி ஸ்ரீராம்:)!

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin