புதன், 14 அக்டோபர், 2015

மனிதம்.. அன்பு.. அமைதி.. - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் 10

#1 எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயிர்த்திருக்கிறது.

#2 என் வாழ்க்கையே எனது அறிவுரை.

#3 அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.


#4 கண்ணுக்கு கண் எனும் கொள்கை,
உலகைக் குருடாக்குவதில்தான் சென்று முடியும்.


#5 பலகீனமானவர்களால் மன்னிக்க முடியாது. மன்னிப்பு உறுதி உடையோரின் பண்பு.


#6 முதலில் உங்களைப் பொருட்படுத்த மாட்டார்கள், அடுத்து எள்ளி நகையாடுவார்கள், அடுத்து சண்டை பிடிப்பார்கள், அதன் பின்... நீங்கள் வென்றிருப்பீர்கள்!


#7  உண்மையாய், பணிவாய், அஞ்சாது.. இருங்கள்.


#8 நாடுகளுக்கு இடையேயான அமைதி என்பது தனிமனிதர்களுக்கு இடையேயான புரிதல் எனும் பலமான அஸ்திவாரத்தின் மேல் அமைக்கப்பட வேண்டும்.


#9 என்றைக்கு அன்பின் சக்தியானது, அதிகாரத்தின் மீதான ஆசையை வெல்கிறதோ அன்றைக்கு உலகம் அமைதி காணும்.


#10 மனிதத்தின் மேலான நம்பிக்கையை இழக்கக் கூடாது. அது சமுத்திரத்தைப் போன்றது. அதன் சில துளிகள் அசுத்தமாய் இருப்பதால் சமுத்திரமே அசுத்தமாகி விடாது. 

*

(எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது.. தொடர்கிறது.)
***


12 கருத்துகள்:

  1. பலகீனமானவர்களால் மன்னிக்க முடியாது. எவ்வளவு உண்மை? அருமை. ஆறாவதும் உண்மை. அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படங்கள்.... கருத்துகளும் மிகச் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கள் தந்த லாகிரியில் புகைப் படங்களை முதல் பார்வையில் உள்வாங்கவில்லை . மீண்டும் அவற்றைத் தனியே ரசித்தேன். சபாஷ்!

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பொன்மொழிகளும் பொருத்தமாய் அமைந்தன! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல் உங்கள் பாணியில் எங்களுக்கு விருந்தாக அனைத்துமே அருமை ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி. உண்மை வெல்லும்.வெல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin