Saturday, September 28, 2013

வார்த்தைகளற்றக் கவிதைகளும் வடித்த பிரம்மாக்களும் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 6)

"வார்த்தைகளால் சொல்ல முடியுமாயிருந்தால் நான் ஓவியம் தீட்ட வேண்டிய அவசியமே இல்லை” என்றவர் அமெரிக்க ஓவியர் எட்வர்ட் ஹாப்பர். “படம் என்பது வார்த்தைகளற்ற கவிதை” எனக் கொண்டாடியவர் ரோமானியக் கவிஞர் ஹொராஸ். மறுக்க முடியுமா? வாருங்கள், அப்படியான கவிதைகள் சிலவற்றோடு அவற்றைப் படைத்தவர்களையும் பார்க்கலாம்:

#1 ஞாபகம் வருதே..

#2 ஜல் ஜல்..

 சந்தையிலிருந்து கருக்கலில் வீடு திரும்பும் காட்சி.
படங்கள் 1,2-ல் சக்கரங்கள் கிளப்பும் புழுதியை அருமையாக வரைந்திருக்கிறார்.

#3 ஏர் உழவன்#4 ஓவியர் இவரே..

# கையெழுத்திலிருந்து அவர் பெயரை உங்களால் ஊகிக்க முடிந்தால் உதவுங்கள்:)!
***

சென்ற பாகத்தில் பகிர்ந்திருந்த இவ்விரண்டு கணபதியரைப் படைத்த ஓவியர்...


#5 J.B. கட்டிமணி..
தீவிர சிந்தனையில்..
***

வித்தியாசமான ஓவியங்கள் எனப் பத்திரிகைகளின் பாராட்டுகளைத் தட்டிச் சென்றவை:
#6

செதுக்கிய சிற்பி...
#7.
கருப்பு வெள்ளையில் (+செலக்டிவ் கலரிங்) செய்து முன்னர் பகிர்ந்த படம், வண்ணத்தில்...
பெரும்பாலான ஓவியர்கள் சொல்லி வைத்த மாதிரி வருவோர் போவோரை ஏறிட்டும் பாராமல் இவர் போலவே அமர்ந்திருந்தார்கள். நூறு இருநூறு பேர், அட ஆயிரம் இரண்டாயிரம் பேர் என்றால் கூட பரவாயில்லை. ஒரே நாளில் இலட்சத்துக்கு மேலான பார்வையாளர்கள். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி முடியுமா?
***

னாலும் ஒரு சிலர் கலகலப்பாகப் பேசியபடி, கேமராக்களுக்கு புன்னகைத்தபடி இருந்தார்கள்.

#8. சித்திரப் பாவை
தான் வரைந்த ஓவியங்களுடன்..
***
திருநெல்வேலி மக்களால் ‘நெல்லை ரவிவர்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஓவியர் மாரியப்பன், தன் மகளை மாடலாக வைத்துத் தீட்டிய ஓவியத்துடன்..
#9
ஓவியத்தை வண்ணத்தில் பாகம் மூன்றில் காணலாம்.
 ***
மீன்களை நீந்த விட்டுக் காட்சியலைகளை எழுப்பிப் பாகம் இரண்டில் பிரமிக்க வைத்த இளைஞர் K.குபேரன். 
#10.

இவரைப் பற்றி இணையத்தில் தேடியதில் கிடைத்த சிறுகுறிப்பு, இவ்வருடக் கண்காட்சியைப் பற்றி ஒருவரது பகிர்விலிருந்து... 
*முழுப்பெயர் குபேந்திரன் குபேரன். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனித்துவம் வாய்ந்த உயிரினங்களாக மீன்களைக் கருதுவாகச் சொல்லும் இவரது ஊர் புதுவை. சிறந்த மணல் சிற்பியும் என்பது கூடுதல் தகவல்.

இவரைப் பேட்டி காணும் ஆவல் ஏற்பட புதுவையைச் சேர்ந்த ஃப்ளிக்கர் நண்பர் நித்தியானந்தின் உதவியை நாடினேன். ஒரு மணி நேரத்தில் அவருடைய நண்பர்கள் மூலமாக அங்கிருக்கும் ஆர்ட் கேலரிகளில் விசாரித்ததில், ஒரு கலைக்கூடத்துக்கு அடிக்கடி வருவார் எனவும், தற்போது பெங்களூரில் படித்துக் கொண்டிருப்பதாகவும், அடுத்த விடுமுறைக்கு அங்கு வருகையில் தகவல் அளிப்பதாகச் சொன்னதாகவும் தெரிவித்தார். பேட்டி கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்:)! 
***

ண்ணற்ற நவீன ஓவியங்களின் மூலமாகத் தன் எண்ணங்களைப் பிரதிபலித்த ஓவியர் கணேஷ் பேச இயலாத மாற்றுத் திறனாளி என்பதை அங்கிருந்த சிலநிமிடங்களில், தனது நண்பருடனான அவரது சம்பாஷணை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. 

# 11

பொதுவாக நவீன ஓவியங்கள் பார்ப்பவர்களின் புரிதலுக்கே விடப்படும் என்பதே எனது புரிதல்.

#12

இவர் ஒவ்வொரு படத்துக்குமான தலைப்பையும், ஸ்டாலின் மேல் தன் பெயரையும் எழுதி வைத்திருந்தது ஏனென்று பிறகே புரிந்தது. 

#13 பேசும் பொற்சித்திரங்கள்

#14 கிராமத்துப் பள்ளி
ஆசிரியை பாடம் நடத்த தோளின் வழியாக எட்டிப் பார்ப்பது கிளி போல் இல்லை? வலது கை அருகே இன்னொரு பறவை, கைகளைக் கட்டி நிற்கும் மாணவி, மண்பானை மேல் கவிழ்த்தி வைக்கப்பட்ட டம்ளர், இன்னும் என்னென்ன தெரிகின்றன..?

#15 துறவியும் அன்னமும்
குறுக்கு நெடுக்கான கோடுகளுக்குள் அழுத்தமான வர்ணங்களைப் பரப்பி புதியதொரு உலகைப் படைத்திருப்பதோடு வாழ்வின் மீதான தன் நம்பிக்கையையும் காட்டியிருக்கும் சாதனை மனிதரை வாழ்த்துவோம்.

***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
*
பெங்களூர் சித்திரச் சந்தை 2013 - பத்தாவது பதிப்பு (பாகம் 1)
 *
மீன்கள் நீந்தும் ஓவியங்கள் (பாகம் 2)
 *
காஃபி பெயின்டிங் - “ஓம்” விநாயகர் - (பாகம் 3)
*
காவியமா.. ஓவியமா.. - நெல்லை மாரியப்பன் தூரிகை செய்கிற மாயம் - (பாகம் 4)
 *
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! - (பாகம் 5)


22 comments:

 1. பேசும் ஓவியங்கள்!

  ReplyDelete
 2. அழகான காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. ரசித்தேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. பிரம்மாக்களின் அழகிய படைப்புகள்.

  ReplyDelete
 5. மிக அருமை ராமலெக்ஷ்மி :)

  ReplyDelete
 6. அத்தனையுமே அருமையான ஓவியங்கள். அதைப் புகைப்படமாக எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 7. படங்களைப் பற்றிய சிறப்பான பகிர்வு. நெல்லை ரவிவர்மா ஓவியம் அழகு.

  ReplyDelete
 8. பேசாத ஓவியர்... பேசும் படங்கள்...
  படங்கள் அனைத்தும் அருமை அக்கா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. படங்கள் எல்லாம் அழகு.
  நெல்லை ரவி வர்மா தன் மகளை மாடலாக வைத்து வரைந்த படம் அழகு.
  பகிர்ந்த படங்கள் எல்லாம் மிக அழகு.
  முதல் மூன்று படங்கள் மிக அருமை.
  நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 10. மிகச்சிறப்பான ஓவியங்கள். நவீன ஓவியங்கள் புரிய சற்று சிரமமாயிருக்கும் என்பார்கள். ஆனால் இங்கே நவீன ஓவியங்கள் எவ்வளவு அழகாய் நம்மை உள்ளே ஈர்த்துக்கொண்டு விதவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றன. அற்புதமான பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. படங்களே கவிதைகளாக/

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin