சனி, 7 செப்டம்பர், 2013

தங்க மீன்கள்

#1. அன்புப் பிடி

பத்திரிகைகள் பாராட்ட, பார்த்தவர்கள் பரிந்துரைக்க வெற்றி நடை போட்டு வருகிறது ‘தங்க மீன்கள்’ திரைப்படம். இயக்குநர் ராம் இத்திரைப்படத்தின் தலைப்புக்காக ஒரு ஒளிப்படப் போட்டி அறிவித்திருந்தார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்களின் தேர்வில் போட்டி முடிவு சமீபத்தில் அறிவிப்பானது. வெற்றி பெற்றவர் நாமெல்லாம் நன்கறிந்த நண்பரும், புகழ் பெற்றப் புகைப்படக் கலைஞருமான..

மெர்வின் ஆன்டோ!
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும், மெர்வின்:)!

[தினகரன்  வசந்தம் இதழுக்காக, சென்ற டிசம்பரில் இவரை நான் கண்ட பேட்டி இங்கே.]

திரைப்படம் குறித்த விமர்சனங்கள் படத்தைப் பார்க்கிற ஆவலை ஏற்படுத்தியுள்ளது. கதையைத் தெரிந்து கொண்ட வகையில், குழந்தைகளைத் தான் எடுத்த பல அருமையான படங்களில் மிகப் பொருத்தமானதாகத் தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார் மெர்வின். அதற்கும் பாராட்டுகள்! வெற்றி பெற்ற இந்தப் ஒளிப்படம் உணர்த்தும் செய்திகள் பல.
குழந்தைகள் மென்மையானவர்கள்.
அவர்களது கனவுகளை உடைத்திடாதிருப்போம்.
குழந்தைகளின் உலகம் பரிசுத்தமானது.
அதனுள் நுழைந்து அவர்களைப் புரிந்து கொள்வோம்.
நம்பிக்கையுடன் நீளும் அவர்களது கரங்களை அன்புடன் பற்றி வழி நடத்துவோம்.

இப்போது என் கேமரா வலையில் சமீபத்தில் நான் ஏந்திப் பிடித்த தங்க மீன்கள் உங்கள் பார்வைக்கு.

#2. சோலையில் மாலை நடை

#3. பூப்போலே உன் புன்னகை..

#4. பட்டுப் பாப்பா

#5. எதைப் பார்த்து இந்த வியப்பு?

#6. யாரைப் பார்த்து இந்த சிரிப்பு?

#7. உள்ளங்கையில் உலகம்

#8. என்ன வாங்கலாம் கண்ணா?
Eco friendly toys.
மரத்தினாலான விளையாட்டுச் சாமான்கள்..
#9. குறும்புச் சிரிப்பு

#10. வானமே எல்லை

#11. தொட்டு விடும் தூரம்தான் வானம்

#12. பாலகன்


#13. புல் வெளியில் மான் குட்டிகள்


#14. செல்லமே..

#15. சின்னக் கண்ணன்

#16. ஆனந்த யாழ்


#17. ஆகாய வெண்ணிலா

அத்தனை மழலை மொட்டுகளின் வாழ்வும் அழகாய் மலர்ந்து பிரகாசிக்க வாழ்த்துவோம்!

32 கருத்துகள்:


  1. திரு மெர்வின் ஆன்டோ அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    தினகரன் பேட்டிக்கான லிங்க் கிளிக்கினால் தனி விண்டோவில் திறக்குமாறு அமைத்தால் வசதியாக இருக்கும். (ரைட் க்ளிக் ஆப்ஷனும் டிசெபில் செய்யப்பட்டுள்ளது!) இங்கேயே திறப்பதால் படித்துக் கொண்டிருக்கும் விண்டோ மாறிவிடுகிறது!

    நீங்கள் எடுத்துப் பகிர்ந்துள்ள (உங்கள் தங்கை மகன் உட்பட்ட) எல்லா புகைப்படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. மேலும் பல 'தங்க மீன்கள்' .......உங்கள் வரிகளில்..படஙக்ளில்....நன்றி நன்றி நன்றி மேடம்

    ந்ன்றி திரு ராம்

    பதிலளிநீக்கு
  3. மெர்வின் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். சக புகைப்படக் கலைஞர்களைப் பாராட்டும் உங்கள் மனதும் விசாலமானதே. உங்கள் தங்க மீன்கள் அழகு சொல்லி முடியாது.மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. அழகு & அற்புதம் ராமலெக்ஷ்மி.

    மெர்வின் ஆண்டோவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா, அழகோ அழகு. அருமையோ அருமை.

    சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் மிக அருமை

    பதிலளிநீக்கு
  7. மெர்வின் ஆண்டோ அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    நீங்கள் எடுத்த தங்கமீன்கள் மலரும் மொட்டுக்கள் மிக அழகு.
    அவர்கள் நலமாக வளர்ந்து அவர்கள் கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. திரு மேர்வின் ஆன்டோ அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

    உங்கள் புகைப்பட வலையில் சிக்கியிருக்கும் தங்க மீன்களும் ஜொலிக்கிறார்கள். கூடவே உங்கள் காமென்ட் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  9. மெர்வின்ஜி இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.

    உங்கள் வலையில் அகப்பட்ட மீன்களும் ஜொலிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.,

    /தனி வின்டோவில்../ நண்பர் தனபாலனும் முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கொடுத்த இணைப்பில் இருந்தபடி 2,3 முறை செய்தும் பார்த்தேன். சரியாக இயங்கவில்லை. விரைவில் சரி செய்யப் பார்க்கிறேன்.

    சமீபமாக அடிக்கடி என் படங்களில் தோன்றுபவர் தம்பி மகன்:)! தங்கை மகனும் இருக்கிறார் படம் 12-ல். நன்றி ஸ்ரீராம்:).

    பதிலளிநீக்கு
  11. @Ranjani Narayanan,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. The photos that won prizes and are shown in the titles in the film show mostly children from poor sections of society, except a few.

    But your photos shows only one section.

    We should not discriminate between children.

    பதிலளிநீக்கு
  13. மெர்வின் ஆன்டோ குறித்து எனக்கெல்லாம் தெரியவே தெரியாது. :))) மேலும் நீங்கள் குறிப்பிட்ட போட்டி குறித்தும் தெரியாது. :))) என்றாலும் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகளை என் சார்பில் தெரிவித்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. குழந்தைகள் படங்கள் என்றதும் ஓடோடி வந்தேன். என்னைக் கவர்ந்தது முதல் படமும், எதைப் பார்த்து வியப்பு படமும். எல்லாமுமே அருமை தான் என்றாலும் என் விருப்பம் இவை இரண்டும். :)))

    பதிலளிநீக்கு
  15. @குலசேகரன்,

    குழந்தைகள் குழந்தைகளே. நீங்களே சொல்லியிருப்பது போல ஏன் வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்? வாய்ப்புக் கிடைத்தபோது, அதுவும் சமீபத்தில் எடுத்தப் படங்கள் என்ற வகையில் பகிர்ந்திருக்கிறேனே தவிர எந்த ஒரு குறிப்பிட்ட தலைப்புக்காவும் எடுக்கப்பட்டவை அல்ல.

    நேரமிருந்தால் எனது இந்தப் பதிவுகளை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன்:

    உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?

    நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்..

    இவர்களும் நண்பர்களே..

    நன்றி குலசேகரன்.

    பதிலளிநீக்கு
  16. @geethasmbsvm6,

    அவசியம் தெரிவிக்கிறேன்:)! ஒளிப்படக் கலைஞர்களாலும் ஆர்வலர்களாலும் நன்கு அறியப்பட்டவர் மெர்வின். FB-யில் அவர் ஏற்படுத்தியிருக்கும் . ‘புகைப்படப் பிரியன்’ குழுமத்தில் 3700-க்கும் மேலானவர்கள் இணைந்து படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். பத்திரிகைகள் பலவற்றில் அவர் எடுத்த படங்களும், அவர் குறித்த கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

    --

    வருகைக்கும், பிடித்த படங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி:).

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு படமும் கண்களை விட்டு அகலவிடாது ஒரே உணர்வினை வேறு வேறு கோணத்தில் அளிக்கிறது. ராமலக்‌ஷ்மி. மெர்வினுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  18. திரு மெர்வின் ஆன்டோ அவர்களுக்கு வாழ்த்துகள்!

    குழந்தைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  19. தங்கமீன்கள் அத்தனையும் மிகவும் அழகானவர்கள்.

    திரு மெர்வின் ஆன்டோ அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin