செவ்வாய், 22 ஜனவரி, 2013

தோகை மயில்கள் - மைசூர் காரஞ்சி பூங்கா (3)

கைபுனையாச் சித்திரங்கள்
பாகம் 1 ; பாகம் 2 .

எனது 400-வது பதிவு. முத்துச்சரம் தொடர்ந்து  இயங்கக் காரணமாய், வாசித்தும் ஊக்கம் தந்தும் வருகிற அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி!

#1
அழகிய மயிலே! அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்,
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்,
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
- பாவேந்தர் பாரதிதாசனார்
இரண்டு வருடங்களுக்கு முன் ‘மயிலே மயிலே’ என, திருச்செந்தூர் மற்றும் பெங்களூர் பனர்கட்டா தேசியப்பூங்காவில் எடுத்த சில மயில் படங்களுடன் ‘எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது ஆசையையும் பகிர்ந்திருந்தேன்.  சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை [ மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா? ] விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு..)

Pavo cristatus வகை நீல மயில்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் தென் ஆசியப் பறவைகள். Pavo muticus வகை தென்கிழக்கு ஆசியாவின் வட மியான்மர், தென் சீனா, ஜாவாத் தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் காணப்படும் பச்சை மயில்கள். IUCN (International Union for Conservation of Nature) இவற்றை வேகமாக அழிந்து வருகிற இனமாகப் பட்டியலிட்டிருக்கிறது. பறவைகள் வேட்டையாடப்படுவதும், உகந்த வாழ்விடங்கள் குறைந்து வருவதுமாய் இருக்கிற சூழலில் இதுபோன்ற பூங்காக்களும் அவசியமென்றே தோன்றுகிறது. காரஞ்சிப் பூங்காவில், சென்ற பாகத்தில் பார்த்த வெள்ளை மயில் தவிர மற்ற எல்லாமே நீல மயில்கள்தாம். வித்தியாசமான ஒன்றை மைசூர் ஜூவில் காண முடிந்தது:


#2  சாம்பல் வண்ண மேனி..


#3  இளம் பச்சையில் கழுத்து..


இனி,

கைபுனையாச் சித்திரங்களாய்.. நீல மயில்கள் விதம் விதமான கோணங்களில்..

#4 பார்த்த விழி பார்த்தபடி..


#5  Portrait

#6 புல்வெளியில்..

#7  ஓய்வாக..

#8 மிடுக்கு நடை..
 
#9 உலாத்தல்

#10  ‘மயில் கழுத்து’ வண்ணம்


#11 தோகை விரித்து..

#12 சுழன்றாடி..


#13  கொடுக்கிறார் போஸ்


#14 ‘கொஞ்சம் வலப்பக்கமாத் தலையை சாய்ச்சுக்கோ..’
சமர்த்து:)!
***

(காரஞ்சி தொடர் அடுத்த பாகத்தில் நிறைவுறும்)

53 கருத்துகள்:

  1. அத்தனை மயில்களும் எத்தனை சமத்தாய் உங்கள் காமெராவில் அழகுடன் சிறைபட்டிருக்கின்றன. எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி! 400... வாவ்...! இன்னும் பல ஆயிரங்களை நீங்கள் தொடவும் நாங்கள் தொடர்ந்திருக்கவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. நானூறுக்கு இனிய பாராட்டுகள். ஒவ்வொன்னும் நல்முத்து. ஒன்னும் சோடைபோகலை கேட்டோ!!!

    மயிலாரின் அழகை விழிவாங்காமல் பார்த்து ரசித்தேன்.

    மழைவரும்போது மயில் ஆடுமாமே...நெசமாவா?

    பதிலளிநீக்கு
  3. மயில் படங்கள் அழகோ அழகு...!

    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. நேரடியாகப் பார்த்தால் கூட இப்படி அழகாக
    எங்களால் ரசிக்க முடியாது.அழகான அருமையான
    புகைப்படங்களை பதிவாக்கித் தந்தமைக்கும்
    400 வது பதிவுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அழகு மயில்கள்.படங்கள் அருமை.நானூறுக்கு இனிய பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. எச்சரிக்கை ...

    நான் ஒரு வான்கோழியை படம் எடுக்கப் போகிறேன்....

    பதிலளிநீக்கு
  7. உனதுதோ கைபுனையாச் சித்திரம்
    ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

    அழகுமயில்கள் தங்கள் கைவன்ணத்தில் மிளிர்கின்றன..

    400 வது பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. 400 க்கு வாழ்த்துக்கள். தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ பாட்டு பதிவு படிக்கும்போது பாடிக்கிட்டேன்.

    உங்க கைபுனையாச் சித்திரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  9. 400 ஆவது பதிவு..வாழ்த்துகக்ள்.இன்னும் பல பல சதங்கள் அடிக்க வாழ்த்துகக்ள்!மயில் அத்தனையும் எத்தனை அழகு!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  10. வண்ண வண்ண மயில்கள்
    போதாதென
    பாரதிதாசனின் கவிதைதனையும்
    இணைத்து என்னையும்
    அழகிய மயிலே ! அழகிய மயிலே !
    என ஹம்சா நந்தி ராகத்திலே
    பாட வைத்துவிட்டீர்களே !!

    சபாஷ் !!

    சுப்பு ரத்தினம்.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. முதற்கண் 400 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    எல்லாப் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  12. மயில்களின் அணிவகுப்பு அழகு! 400வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. 400 வது பதிவுக்கு முதலில் வாழ்த்துக்க
    ள் ராமலக்ஷ்மி.
    மயிலகள் அழகு.
    பாரதி தாசன் கவிதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தோகை மயிலார் கண்ணுக்கு விருந்து.

    400க்கு வாழ்த்துகள். தொடரட்டும் சிறப்புகள்.

    பதிலளிநீக்கு
  15. 400 வது பதிவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. அத்தனை மயில்களும் அழகு.....

    400-வது பதிவிற்கு வாழ்த்துகள்.... தொடரட்டும் பகிர்வுகள்....

    பதிலளிநீக்கு

  17. 400-வது பதிவிற்கு வாழ்த்துகள். தோகை மயிலாய் தொடரட்டும் பதிவுலகப் பயணம்...

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள் ராம்லக்ஷ்மி. ஒவ்வொரு பதிவும் செதுக்கப்பட்டவை. நீஙட நாட்கள் நிற்கும். மயில்களின் அழகை வர்ணிக்க முடியாது. அதென்ன அப்படி ஒரு நீல வர்ணம். அருமை. இதுபோல் நூறாயிரம் பதிவிகள் கூடக் கொடுக்க முடியும் உங்களால். வளர்க வாழ்க மா.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள் 400 க்கு..:) கலர்ஃபுல் ..கொண்டாட்டம்..

    பதிலளிநீக்கு
  20. சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்திருந்தேன். ஆனால், மயில் பார்த்தது இல்லை.

    மயில்-ஐ நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கல்லூரி நாட்களில்தான் சாத்தியமாயிற்று. எங்கும், இவ்வளவு முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. அந்தக் குறையும் இப்போது தங்களின் காமிரா வழியாக நிறைவேறி விட்டது. நன்றி.

    400 - க்கு வாழ்த்துகள் மேடம்!

    பதிலளிநீக்கு
  21. மயில் படங்கள் அனைத்தும் சூப்பர்.

    நன்றி.

    www.padugai.com

    Thanks

    பதிலளிநீக்கு
  22. மயில் தோகைவிரித்து நிற்கும் முதல் படத்தில், தோகை வெகு அடர்த்தியாக இருக்கிறது. இங்கு நான் பார்த்த மயில்களில், இவ்வளவு அடர்த்தி இல்லை. (அதனாலேயே படங்களைப் பகிரவில்லை) இந்திய மயில்களின் இயல்போ அது? அல்லது புகைப்படத்தில் அப்படித் தெரிகிறதோ? அதுவே 13, 14வது படங்களில் அத்தனை அடர்த்தி இல்லை பாருங்க.

    இங்குள்ள மயில்களும் இந்தியாவில் இருந்துதான் வந்ததா என்று தெரியவில்லை.

    அப்புறம், அப்பப்ப படத்துக்கேத்த மாதிரி பாடல்களும் இணைக்கிறீர்களே, எப்படி - கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க? கவிதை எழுதும் ஆர்வம் இருப்பதாலா? :-))

    பதிலளிநீக்கு
  23. @துளசி கோபால்,

    வாழ்த்துகளுக்கு நன்றி. போதுமெனும் எண்ணம் வரும்போதெல்லாம் உங்களை நினைப்பேன்:)! பதிவுகள் தொடருகின்றன.

    ‘வானில் மழை வருமோ’ன்னு பாட்டுதான் கேட்டிருக்கிறேன். அன்றைக்கு மழை ஏதும் இல்லை:).

    பதிலளிநீக்கு
  24. @அமைதி அப்பா,

    மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  25. @ஹுஸைனம்மா,

    முதல் படம் நான் பூங்காவுக்குள் நடைப்பயணம் போகும் முன் எடுத்தது. 13,14-லிருக்கும் மயிலும் அதுவும் ஒன்றா எனத் தெரியவில்லை. என்றாலும், முதல் படத்தில் தோகை அடர்த்தியாகத் தெரிவதன் காரணம் மயில் நின்ற இடம். இருண்ட சுற்றுப்புற சுவரையொட்டி நின்றிருந்தது. அதனால் கருப்புப் பின்னணியில் அடர்த்தியாகத் தோற்றமளிக்கிறது.

    இந்தப் பாடல் சட்டென நினைவுக்கு வந்தது:)! நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  26. @தருமி

    விளையாட்டா சொன்னேன். சொல்லியதைச் செய்தும் விட்டேன்.

    முதல் 2,3 படங்களில் மயிலின் பின்னால் கம்பி வலை. உங்கள் பக்கம் இருந்த கம்பி வலை என்ன ஆயிற்று?

    பதிலளிநீக்கு
  27. @தருமி,

    அந்த இரண்டும் மட்டும் மைசூர் zoo-ல் எடுத்ததெனக் குறிப்பிட்டிருக்கிறேன். கூண்டுக்கு வெளியே, கம்பியை ஒட்டியிருந்த நீண்ட மேடையில் நடை பயின்று கொண்டிருந்தது.

    இந்தப் பக்கம் கம்பியிருந்தால், அதை மாயமாய் மறையச் செய்யும் வித்தையையும் கேமரா படித்து வைத்திருக்கிறது:)! நேரமின்மையால் அது குறித்துப் பகிரத் தாமதமாகிறது. விரைவில் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin