வியாழன், 8 நவம்பர், 2012

402_வது மைசூர் தசரா (Mysore Dasara) ஊர்வலக் காட்சிகள் : பாகம் 1


#1 

உலகப் புகழ் வாய்ந்த மைசூர் தசரா கர்நாடக மாநிலத்தின் அரசு விழாவும் கூட. இந்த விஜயதசமி நாளில் மைசூர் சென்றதும்,  402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் முன்னதாகத் திட்டமிடாமலே நிகழ்ந்தன.

# 2
தீயசக்திகளை உண்மை வெல்லும் தினமாக நவராத்திரிப் பண்டிகை முடிந்த பத்தாவது நாளான விஜயதசமி கொண்டாடப்படுவதற்குக் காரணம், அந்த நாளில்தான் அன்னை சாமூண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்தாள் எனப் புராணங்கள் சொல்கின்றன. மகிஷாசுரனின் பெயரிலிருந்தே ‘மைசூர்’ நகரின் பெயரும் உதித்ததாக அறியப்படுகிறது.

#3

பாரம்பரியம் மிக்க தசராவின் முக்கிய அம்சம் அரண்மனையில் ஆரம்பித்து மைசூர் நகரின் சாலைகளைச் சுற்றி வருகிற யானைகள் ஊர்வலம். யானைகள் வழிநடத்தக் கலைஞர்கள் ஆடிப்பாடிப் பின் தொடர, பொழுது சாயும் நேரத்தில் தீப்பந்த ஊர்வலத்துடன் நிறைவு பெறுவது வழக்கம். அன்னை சாமுண்டீஸ்வரியின் விக்கிரகத்தை தங்க அம்பாரியில் சுமந்து முன்னே செல்லுகிற பட்டத்து யானையைப் பார்த்துப் பரவசம் அடைவார்கள் மக்கள்.  கடந்த பத்து ஆண்டுகளாகப் பட்டத்து யானையாக இப்பணியை சிறப்புற ஆற்றி வந்த பலராம் வயதின் காரணமாக இந்த முறை அப்பணியை அர்ஜூனாவிடம் ஒப்படைத்து விட்டாலும் விழாவில் அர்ஜூனாவுக்கு அருகே சகல மரியாதையும் அளிக்கப்பட்டு கலந்து கொண்டது பலராமும்.

#4  விழாப்பந்தலுடன்.. 
அரண்மனை வளாகத்தில் மதியம் ஒன்றரை மணி அளவில் நந்தி பூஜை செய்து, ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நின்ற அர்ஜூனாவுக்கு மலர் தூவி, சாமுண்டீஸ்வரி அம்மனையும் மக்கள் நல்வாழ்வுக்காக வழிபட்டு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தவர் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.
ஆரவாரமாக ஆரம்பித்து மைசூர் சாலைகளில் சென்று கொண்டிருந்த ‘ஊர்வலக் காட்சிகள்’ அப்போதுதான் செக் இன் செய்து விட்டு மதிய உணவை ஆரம்பித்த ஃபார்ச்சூன் ஜே பி பாலஸின் உணவுக் கூடத்தில்  நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது தொலைக் காட்சியில். 
ஆயுதபூஜை முடித்துவிட்டு நான்கு நாட்கள் எங்கேனும் செல்லலாம் எனத் திடீரென முடிவெடுத்த போது அடிக்கடி பார்த்த இடமாயிருந்தாலும் அருகே என்பதால் மைசூருக்குக் காரில் சென்று அங்கிருந்து கபினியும் செல்வது என முடிவானது. இதே பயணத்தை ஒருசில தினங்கள் முன்னதாகத் திட்டமிட்டிருந்தால் அரண்மனையில் ஆரம்பிக்கும் ஊர்வலம் சென்று சேர்ந்து கலை விழா நடக்கிற பன்னி(banni) மண்டபத்தில், முன்சில வரிசைகளுக்குள் இடம் பெற்றிருக்க இயலுமென்பது தெரிய வந்த போது சற்றே எனக்கு ஆதங்கமாக இருந்தாலும் ‘இன்னொரு வருடம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். தசரா நாளே என்றாலும் ஊர்வலத்தைக் கூட்டத்துக்குள் சென்று பார்ப்பது சாத்தியமில்லை’ என நினைத்தவாறு ரிசப்ஷனில் ‘அரண்மனையிலிருந்து ஊர்வலம் எப்போது முழுவதுமாக வெளியேறும்? இரவு எப்போது விளக்குகள்?’ எனக் கேட்கச் சென்ற போது காத்திருந்தது இனிய ஆச்சரியம்.
‘ஊர்வலத்தைப் பார்க்கணும் என நினைக்கிறீர்களா? கூட்டம் எனத் தவிர்க்க நினைக்கிறீர்களா என்று புரியவில்லையே. பார்க்க ஆசையிருந்தால் எளிதாய் இருக்கிறது இப்போதே ஒரு நல்ல வாய்ப்பு’ என்றார்கள். விடுதிக்குச் சற்று தொலைவில்தான் பன்னி மண்டபம் என்றும் அச்சாலையின் இரு பக்கமும் மக்கள் இப்போது குழுமத் தொடங்கியிருப்பார்கள் என்றும், இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அச்சாலைக்கு ஊர்வலம் வந்து விடுமென்றும் சொன்னார்கள். கிளம்பி விட்டோம். வாகனங்களை LIC சந்திப்போடு நிறுத்தி விடுகிறார்கள். அதற்குமேல் தடுப்புகள். மக்கள் மட்டுமே செல்ல அனுமதி. அங்கே இறங்கிக் கொண்டு வாகனத்தை விடுதிக்குத் திருப்பி அனுப்பி விட்டோம். எங்கும் பார்க் செய்ய இடம் இல்லாத நெரிசல். ஜே ஜே ஜே என அலைமோதும் கூட்டம். சாலையின் இருமருங்கிலும் இடம்பிடித்துப் பொறுமையாக அமர்ந்திருந்தார்கள் மக்கள்.
#5 காத்திருப்பு
அருகிலிருந்து வீடுகளின் மதில் சுவர்கள், உயரமான கட்டிடங்கள் போக, மரக்கிளைகளிலும் ஏறி இடம் பிடித்திருந்தார்கள். முன் வரிசை வேண்டுமெனில் உள்நோக்கி நடந்தால் கிடைக்குமென சொல்லியிருந்தார்கள். அப்படியான எண்ணத்தில் ஊர்வலத்துக்கு எதிர்திசை பார்த்து பெரும் கூட்டம் இடம் பிடிக்க நடந்து கொண்டிருந்தது. பார்த்தோம். பன்னி மண்டபம் தாண்டி சில அடி தூரத்திலேயே, அதிக வெயில் காரணமாக இரண்டு வரிசை மட்டுமே அமர்ந்திருந்தவர்கள் பின்னால் சென்று நின்று விட்டோம். சுட்டெரித்த நான்கு மணி வெயிலுக்குப் பலர் குடையை விரித்துப் பிடித்து உட்கார்ந்திருந்தார்கள்.
அவ்வப்போது குதிரை வீரர்கள் ரோந்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.

# 6


 # 7

சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க இவர்களைப் போலவே ரோந்து வந்தார் ஒரு காக்கிச் சட்டை அதிகாரி. குதிரை வேகம் எடுத்து விடாமல் கண்காணிக்கக் கூடவே இரண்டு பேர்:).


#8

 அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் கூட்டத்தில் சலசலப்பு. ஆரவாரம். வந்தது முதலில்..

#9 கொடிக்கம்பம்


# 10 பன்னி மண்டப வாசலில்.. கொடி ஏற்றம்

# 11 தொடர்ந்து வந்த வாட்படை 

#12 சிகை அலங்காரம்:)

# 13 மேளதாளங்கள் முழங்க.. ஜோடி நம்பர் 1
# 14 ஆடி அசைந்து அழகாக.. ஜோடி நம்பர் 2
# 15 பராக் பராக் ஜோடி நம்பர் 3
# 16 கிட்டத்தில்..

# 17 டாட்டூ.. டாட்டூ..
[வால் கால் என அழகு படுத்த எத்தனை நேரம் எடுத்தார்களோ? ]

அதுசரி, அர்ஜூனாவும் பலராமும் எங்கே எனக் கேட்கிறீர்களா? இதே கேள்விதான் எனக்கும். 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி அரண்மனை வளாகம் தாண்டி வருவதில்லையா அல்லது முன்னதாகவே மண்டபத்துக்குச் சென்று விட்டனவா என அறிய முடியவில்லை.

பூஜை, பாராம்பரியம், மக்கள் நம்பிக்கை என எத்தனை சொல்லப்பட்டாலும், அன்புடன் பராமரிப்பதாக (அர்ஜூனாவின் பாகன்) பேட்டிகள் வெளியானாலும் வன விலங்குகளுக்கு எத்தனை அவஸ்தை என்கிற குறுகுறுப்புடனேயேதான் காண வேண்டியிருந்தது.

# 18.  Band வாத்தியம்

# 19 அன்னை சாமுண்டீஸ்வரி வெற்றி கொண்ட தீயசக்தியின் அடையாளமாய்..

# 20 கிருஷ்ணா.. முகுந்தா..

# 21. (படம் எடுத்துக்க) வரம் தா..
[ஒரு சிறுவனின் மொபைலுக்கும் என் கேமராவுக்கும் ஸ்பெஷல் போஸ்!]

# 22. ‘என்னையும் எடுங்கம்மா..
[‘அரிதாரம் பூசிக்கிட்டு மணிக்கணக்கா இருக்கிறதைப் போலதான் 
சிரமம் 
முகமூடியை மாட்டிக்கிட்டு மைல்கணக்கா நடக்கிறதும்..’]

ஊர்வலம் வர வர மக்கள் எழுந்து கொள்ள ஆரம்பிக்க, நின்ற இடத்திலிருந்து (ஒரு அங்குலம் கூட நகராமல்), முடிந்த வரையில் கிடைத்த கோணங்களில் (பெங்களூர் மலர் கண்காட்சி அனுபவங்கள்  கைகொடுக்க) படமாக்கியவை. ஆகையால் ரொம்ப நேர்த்தியை எதிர்பார்க்காமல் காட்சிகளை ரசித்திடுவீர்கள் என நம்புகிறேன்:)!

# 23.
மேலும் தொடர்ந்த நூற்றுக்கும் மேலான கலைக்குழுவினரை எடுத்த படங்களில் குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நேரம் கிடைக்கும்போது அடுத்தடுத்த பாகங்களாகப் பகிருகிறேன். 
***



44 கருத்துகள்:

  1. படங்களும் பதிவும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!!!!!

    வெகுவாக ரசித்தேன்.

    நன்றீஸ்.

    பதிலளிநீக்கு
  2. பகிர்வும் படங்களும் பளிச்.அருமை.

    பதிலளிநீக்கு
  3. Azhagaana padangal Ramalakshmi. Naan neril senru paarkka mudiyaatha kuraiyai theerthu viteergal.Thanks for sharing.

    Vanila

    பதிலளிநீக்கு
  4. வர்ணங்களின் தெளிப்பு அத்தனை பட்ங்களும் அற்புதம்.மிகப் பொறுமை தேவை. மிகமிக நன்றி. யானைக்குட்டிகள் சூப்பர் அழகு.

    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. அடாடா... முகபடாம் போடட யானைகள் அவ்வளவு அழகு. அவைங்க்ளுக்கு கால்லயும் வால்லயும் மெஹ்ந்தில்லாம் போட்டு அழகுபடுத்தி... அப்பறம் அந்த மாமா படம்... பாவம்ல அதுக்குள்ள இருக்கற ஆளு. இப்படி ஒவ்வொரு படத்தையும் புகழ்ந்துட்டே போலாம். மனசை அள்ளுது. நேர்ல அடுத்த முறை தசராவை வந்து பாக்கணும்னு மனசுல முடிவு எடுத்துக்க வெச்சுடுச்சுங்க உங்க எழுத்து. நன்றீஸ் (டீச்சர்ட்டருந்து சுட்டுட்டேன் இந்த வார்த்தைய)

    பதிலளிநீக்கு
  6. புரொபஷனல் புகைப்படக்காரர் தோத்தார் போங்க !

    பதிலளிநீக்கு
  7. நேர்ல வந்து பாத்த மாதிரி திருப்தியா இருக்கு! போட்டோ தும்ப சென்னாகிதே! :)

    பதிலளிநீக்கு
  8. கூட்ட நெரிசலில் ஒவ்வொரு இடமாக சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது தங்கள் பதிவை பார்த்து முடித்ததும்.

    பதிலளிநீக்கு
  9. அழகான அருமையான படங்கள்... மிகவும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  10. போட்டோக்கள் அனைத்தும் அருமை.எப்படி ஒவ்வொரு போட்டோவிலும் உங்கள் முத்திரையை பதிக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  11. படங்களும் பகிர்வும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நன்றி, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. //ரொம்ப நேர்த்தி எதிர்பார்க்காமல்//

    நேர்த்தி குறைவாக எடுப்பதே இப்படி இருந்தால்..! :))

    //வனவிலங்குகளுக்கு எத்தனை அவஸ்தை என்ற குறுகுறுப்புடனேயே...//

    யானைகளைப் பார்க்கும்போது எனக்கும் அதேதான் தோன்றியது!

    அருமையான படங்கள். நல்ல பகிர்வு.

    தேங்க்ஸ்கள் !

    //நன்றீஸ் (டீச்சர்ட்டருந்து சுட்டுட்டேன் இந்த வார்த்தைய)// :)))

    பதிலளிநீக்கு
  13. பெங்களூரில் அத்தனை வருடங்கள் இருந்தும் இது தெரியாமல் போனதே! கேள்விப்பட்டதே இல்லை. அற்புதமான
    படங்களுக்கும் விவரங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாவ்வ்வ் அக்கா அனைத்தும் அழகு!! நேரடியாக பார்த்த உணர்வு,பகிர்வுக்கு நன்றிக்கா!!

    பதிலளிநீக்கு
  15. அனைத்து படங்களும் அருமை. மைசூர் தசரா விழாவினை நேரில் பார்க்க முடியாத ஏக்கத்தினைப் போக்கிய படங்கள். தொடரட்டும் படங்களும் விளங்கங்களும்.

    பதிலளிநீக்கு
  16. அழகான படங்களுடன் அற்புதமான
    பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. @துளசி கோபால்,

    ரசித்தமைக்கு மிக்க நன்றி. யானைகள் உங்களுக்குச் செல்லம் ஆயிற்றே:)!

    பதிலளிநீக்கு
  18. @Vanila,

    நன்றி வனிலா. ஒரு வருடமாவது சென்று வாருங்கள் அவசியம்:)!

    பதிலளிநீக்கு
  19. @வல்லிசிம்ஹன்,

    மகிழ்ச்சி. அடுத்த பாகம் நேரம் இருக்கையில் பகிருகிறேன். ஏராளமான படங்கள்:)! சிலவற்றையேனும் தேர்வு செய்து பகிர்ந்திட எண்ணம். நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  20. @Balaji,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. @தக்குடு,

    நன்றி தக்குடு:)! நீங்கள் சென்றதுண்டா தசரா சமயத்தில்?

    பதிலளிநீக்கு
  22. @கோவை நேரம்,

    அடோப் ஃபோட்டோஷாப் அல்லது பிகாஸாவில் முயன்று பாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ஸ்ரீராம்.,

    ஊர்வலம் வரிசையாக வந்து கொண்டே இருந்ததால் நினைத்தபடி செட்டிங்ஸ், லென்ஸ் மாற்றி மாற்றி எடுக்கவெல்லாம் நேரமில்லை:).

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  24. @அப்பாதுரை,

    மிக்க நன்றி.

    பெங்களூரில் வசித்திருக்கிறீர்களா? மைசூர் தசரா பிரபலம் ஆயிற்றே.

    பதிலளிநீக்கு
  25. அழகிய படங்களுடன் தசரா காட்சிகள்.

    பதிலளிநீக்கு
  26. எட்டாவது படத்துல இருக்கும் அதிகாரிக்கு செம தொப்பை :-)

    முகுந்தன் உங்களுக்கு தான் ஸ்பெஷல் போஸ் போல இருக்கு.. மொபைலை கண்டுக்கவில்லை.

    நீங்க சொன்ன மாதிரி அரிதாரம் பூசுவதும் தலையில் உடலில் மாட்டிக்கொண்டு சுற்றுவதும் மிகக்கொடுமையான ஒன்று. இந்த சாயத்தை கழுவுரதுகுள்ள ஒரு வழி ஆகிடுவாங்க என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. தசரா படங்கள் எல்லாம் அழகு. படம் எடுக்க வரம் கொடுத்த முகுந்தன் அழகு. கூட்ட நெரிசலிலும் திறமையாக படம் எடுத்து எங்களுக்கு காட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. @கிரி,

    ஃப்ளிக்கரில் பகிர்ந்தபோது ‘போலீஸ் ஸிம்பல்’ எனக் குறிப்பிட்டிருந்தார் ஒரு நண்பர்:).

    முதலில் சிறுவன் மொபைலுக்குதான் போஸ். அவன் இரண்டு க்ளிக் செய்த பிறகுதான் என் கேமராவுக்கு:)! வழியெங்கும் கைநீட்டிய சிறுவர்களுக்கு நட்பாகக் கைகொடுத்தபடி நடந்தார் இந்த கிருஷ்ணர். அந்தப் படமும் பகிர்ந்திடுகிறேன்.

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin