திங்கள், 29 அக்டோபர், 2012

கூண்டுப் பறவை - இரவீந்திரநாத் தாகூர் கவிதை (1) - அதீதத்தில்..



செல்லப் பறவை கூண்டில் இருந்தது,
சுதந்திரப் பறவை காட்டில் இருந்தது.
விதியின் கட்டளை..
இருவரும் சந்திக்கும் வேளை வந்தது.

அன்பே வா, பறந்திடுவோம் காட்டுக்கு
அழைத்தது ஏக்கத்துடன் சுதந்திரப் பறவை.
அருகே வா. வாழ்ந்திடலாம் கூண்டுக்குள்ளே
கிசுகிசுத்தது காதோடு கூண்டுப் பறவை.

கம்பிகளுக்கு ஊடே சிறகினை விரிக்கத்தான் இடமேது?’
கேட்டது சுதந்திரப் பறவை.
அந்தோ! எனக்கும்தான் தெரியவில்லை
எங்கு அமர்ந்து இளைப்பாறுவதாம்
குறுக்குக் கம்பியற்ற வானத்திலே
?’
பதிலுக்குச் சொன்னது கூண்டுப் பறவை.

ஆருயிரே, பாடுவாய் எனக்காகக் கானகத்துப் பாடல்களை
கெஞ்சியது சுதந்திரப் பறவை.
அமர்வாய் என் அருகே, கற்றுத் தருகிறேன் நானுனக்கு
ஆன்றோரின் உரைகளை
’ சொன்னது கூண்டுப் பறவை.
முடியாது. முடியவே முடியாது!
பாடல்களை ஒருநாளும் கற்றுப் பாட முடியாது

மறுத்தது சுதந்திரப் பறவை.
ஐயோ, என் நிலைமை!
அறியேன் நான் கானகத்துப் பாடல்களை
!’
என்றது கூண்டுப் பறவை.

ஏக்கம் நிறைந்த தீவிரமான அன்பு அங்கே இருந்தது.
ஆனால் சிறகு விரித்து சேர்ந்து அவர்களால் பறக்கவே முடியாது.
கூண்டுக் கம்பிகளின் வழியாகவே பார்த்துக் கொண்டவர்கள்
ஒருவரையொருவர் புரிந்து கொள்ள விருப்பம் காட்டவேயில்லை.
சிறகுகள் மட்டும் படபடக்கின்றன தாபத்தால்,
சொல்லிக் கொள்கின்றனர் ‘அன்பே வா அருகில்’ என.

இது நடக்காது! அடைக்கப்பட கூண்டில் வாழ
அச்சமாக இருக்கிறது எனக்கு
’ தேம்புகிறது சுதந்திரப் பறவை.

அந்தோ! என் இறக்கைகளோ பறக்கும் சக்தியிழந்து
உயிரற்றே போயின
’ விசும்புகிறது கூண்டுப் பறவை.
***

மூலம்:
The Tame Bird Was In A Cage
By Rabindranath Tagore


அதீதம், 2012 அக்டோபர் இரண்டாம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.


படம்: நன்றி இணையம்

28 கருத்துகள்:

  1. அருமையான கவிதை
    அழகான மொழிபெயர்ப்பு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகளை அற்புதமாக வடிவமைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை அழகான மொழிபெயற்பு நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. அருமையான மொழிபெயர்ப்பு. மனசை என்னவோ செய்யுதுங்க கவிதை.

    பதிலளிநீக்கு
  5. அழகு தமிழில் அருமையா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  6. தங்கத்தமிழில் தங்களின் மொழியாக்கம் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. முடியாது, முடியாது, பாடல்களை ஒரு நாளும் கற்றுக்கொண்டு பாட இயலாது.//

    உண்மை. தானாக வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. அவரவர்க்கு அவரவர் இடம்தான் சரி!
    "யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" :))

    பதிலளிநீக்கு
  9. @geethasmbsvm6,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin