வியாழன், 18 அக்டோபர், 2012

மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூரு? - அதீதம் கடைசிப் பக்கம்

ஆறு மாதங்களுக்கு முன் என் தூறல் பகிர்வொன்றில் பல்பொருள் அங்காடியில் என் தங்கை மகள் கேட்ட கேள்வியைப் பற்றிப் பகிர்ந்திருந்தேன். வாங்கிய சாமான்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் மக்கள் குற்ற உணர்வோ வருத்தமோ இன்றி வாங்கிக் கொள்வதைப் பார்த்து கல்லாவில் இருந்தவரிடம் விலையை ஐம்பது நூறு என ஆக்கிப் பாருங்கள் என்றாள் அன்று. இப்போது கடைகளில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அரசாங்கமே கடைக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்து விட்டதில் ‘பை கொண்டு வந்தா சாமான். இல்லேன்னா கையிலே அள்ளிக்கிட்டுப் போவது மக்களே உங்கள் சமர்த்து’ என சொல்ல ஆரம்பித்து விட்டன கடைகள்.

அதே போல பெங்களூர் சர்ஜாப்பூர் சாலையிலிருக்கும் குடியிருப்பொன்றின் அசோஷியேஷனைச் சேர்ந்த மீரா நாயர், தன்னார்வமுள்ள குடியிருப்புவாசிகளை இணைத்துக் கொண்டு Greenbugs எனும் அமைப்பை ஏற்படுத்தி, சுற்றுச் சூழல் காக்க மாநகராட்சி பரிந்துரைத்த திட்டங்களை மிகத் திறமையாகச் செயல்படுத்திக் காட்டியதற்காக ‘பெங்களூர் ரிசைக்கிளிங் ஹபா 2011’ நிகழ்வில் கர்நாடகா ஹைகோர்ட் நீதிபதி திரு N.K. பாட்டீல் கையால் சிறப்பு விருது பெற்றது குறித்தும் அப்பதிவில் பகிர்ந்திருந்தேன்.

தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியும், வசிப்பவரின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம் என்றவரை பெங்களூர் மாநகராட்சியும் வெகுவாகு பாராட்டியதோடு இவர்களை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து குடியிருப்புகளும் இம்முறையைப் பின்பற்றக் கேட்டு வந்தது.  வாய் வார்த்தையாகக் கேட்டுக் கொண்டது எதிர்பார்த்த பலனைத் தராததால் இப்போது வேண்டுகோள் எனும் பெயரில் ஆணையே பிறப்பித்து விட்டது மாநகராட்சி.

எங்கள் குடியிருப்பிலும் குப்பைகளைப் பிரித்து வெளியேற்றும் முறை அமலுக்கு வந்து விட்டது. சமையல் குப்பைகளும், கழிவறைக்குப்பைகள் தனித்தனியாக தினம் வெளியேற்றப்படுகின்றன. காகிதக் குப்பைகளுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெரிய சணல் பை வழங்கப்பட்டு வாரம் இருமுறை சேகரித்துக் கொள்கிறார்கள்.

நகரெங்கும் உள்ள குடியிருப்புகளிலிருந்து தினம் இலட்சக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருந்த Garbage Cover எனும் கருப்பு வண்ண பிளாஸ்டிக் கவர்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன. ஊர் கூடித் தேர் இழுத்தால்தான் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என உணர்ந்து ஒத்துழைக்கிறார்கள் மக்களும். புதிய முறைக்குப் பழகி, நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் ஆரம்பச் சிரமங்களை கடந்து வருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது. 

இந்த முறை மற்ற மாநிலங்களிலும் பரவும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏன், சில இடங்களில் வழக்கத்தில் இருந்தாலும் இருக்கக் கூடும். புதிதாக இதை அமல்படுத்த எண்ணுகிறவர்களின் வசதிக்காக Green Bugs அமைப்பினர் பின்பற்றுகிற முறையை அதற்கானப் படங்களுடன் விரிவாக விளக்கியிருக்கிறேன், அதீதம் கடைசிப் பக்கத்தில். மாநகராட்சியின் ஆணை நகல் மற்றும் தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த ஐயப்பன் கிருஷ்ணனும்.
***

33 கருத்துகள்:

  1. இந்த முன் மாதிரியை அனைவரும் பின்பற்றினால் நாடு நலம் பெறும். இங்கு இவ்விஷயம் இன்னும் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஒரு சில பகுதிகளில்தான் இருக்கிறது. அதீதம் சுட்டியுடன் கொடுத்திருந்தது பயனுள்ளது. மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  2. சென்னையிலும் இந்த நிலை வரும் நாள் எந்நாளோ? அதீதத்தில் எழுதிய ஜீவ்சுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்குரிய நடத்தை. பெருமைப்பட வைக்கிறது பெங்களூரு.

    தன்னார்வலர்=volunteer?

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்குரிய விஷயம்....

    தலைநகர் திருந்துமா?

    பதிலளிநீக்கு
  5. தமிழ்நாட்டிலும் சீக்கிரம் எல்லா நகரங்களிலும் இந்நிலை வரவேண்டும் சட்டம் என்று போடா விட்டால் யாரும் மதிக்க மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  6. இந்த விசயத்தில் பெங்களூரு எல்லா நகரங்களுக்கும் "ரோல் மாடல்" லா விளங்குதா!? பாராட்டப் பட வேண்டிய விசயம்தான். :-)

    பங்களூரில் வாழ்ந்து பல வருடங்களாகி விட்டது. பழைய பேங்ளூர்ல மல்லேஸ்வரம் இட்லிகடைதான் (13த் க்ராஸ்?) தான் ஞாபகம் வருது. இன்று ஒரே கூட்டமாயிருக்கும்னு நெனைக்கிறேன். :)

    அதீதத்தில் உங்க கட்டுரை இடம் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  7. சுற்றுச்சூழல் பற்றிய விழ்ப்புணர்வு இங்கு ரொம்ப கம்மி மேடம்,அதிலும் இப்படி செய்தால் என்ன கெட்டு விட்டபோகிறது இங்கே என்பதில் ஆரம்பித்து நினைத்தத
    இடத்தில் காறித்துப்புவதிலிருந்து
    ப்ளாஸ்டிக் பை புழக்கத்தில் இருப்பது வரை சீரழிந்து கிடக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
  8. @பால கணேஷ்,

    சுற்றுச் சூழல் சீர்க்கேடு நாளுக்குநாள் எல்லா இடங்களிலும் பெரிய பிரச்சனையாக வளர்ந்து கொண்டே இருக்கிற நிலையில் செய்தாக வேண்டிய கட்டாயம் வந்தே தீரும் என்றுதான் தோன்றுகிறது. நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  9. @மோகன் குமார்,

    கூடிய சீக்கிரம் வந்து விடும். நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  10. @அப்பாதுரை,

    போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறதுதான். தொடக்கம் நம்பிக்கை தந்திருக்கிறது. பார்க்கலாம்.

    தன்னார்வலர். ஆம். தட்டச்சுகையில் நடுவில் ஒரு க சேர்ந்து விட்டிருந்தது:)! சரி செய்து விட்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட். நடைமுறைக்கு வரலாம் விரைவில்.

    பதிலளிநீக்கு
  12. @ஸ்ரீராம்.,

    சட்டம்தான் சரி. வேண்டுகோளாக வைத்த போது எவரும் அலட்டிக் கொள்ளவில்லை. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. @வருண்,

    வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டால் ரோல் மாடல்தான்:)!

    வீணா ஸ்டோர்ஸ், ‘15’th cross, மர்கோஸா ரோடை எப்போது கடந்து போனாலும் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது:)!

    நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  14. @விமலன்,

    டெங்குக் காய்ச்சல் போல் அவ்வப்போது விசுவரூபம் எடுக்கிற பிரச்சனைகளாவது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நன்றி விமலன்.

    பதிலளிநீக்கு
  15. பாராட்டப்பட வேண்டிய முயற்சி. நம்மூருக்கெல்லாம் கடுமையான சட்டம்தான் சரிப்பட்டு வருது. தன்மையா வேண்டுகோள் வெச்சா யாருமே கேக்க மாட்டேங்கறாங்க.

    பதிலளிநீக்கு
  16. பாராட்டப்படவேண்டிய சமாச்சாரம்.

    என்ன இருந்தாலும் எங்க அக்காவாச்சே இந்த பெங்களூரு.

    தங்கை சில வருசத்துக்கு முன்னே குப்பையை ஸார்ட் அவுட் பண்ணிருச்சு.

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  17. பாராட்டுக்குரியது.

    எமதுநாட்டிலும் இப்படிச் சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.

    முன்னர் அங்காடிகளில் பைகளுக்கு விலை போட்டார்கள் சனம் வாங்குவது குறைந்தது. அப்புறம் இலவசமாக கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.:(

    பதிலளிநீக்கு
  18. நம்ம ஆளுங்களுக்கு வாய் வார்த்தையாக சொன்னால் எல்லாம் சரிப்பட்டு வராது... அதிரடியாகத் தான் செயல்பட வேண்டும்.

    சென்னையில் இது போல நடக்காமல் (நடக்குமா என்பதே சந்தேகம் தான்) பெங்களூரில் நடப்பது சிறு ஏமாற்றம் தான். இது போன்ற விசயங்களில் சென்னை மொக்கை தான்.


    பதிலளிநீக்கு
  19. @துளசி கோபால்,

    பதிவைப் பார்த்தேன். தங்கைதான் சொல்லியிருக்கணும், அக்கா படும் சிரமங்களைப் பார்த்து இந்த வழியை:)! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @மாதேவி,

    நன்றி மாதேவி. இப்போது கடைகளுக்கு அரசு அபராதம் விதிப்பதால், பயந்து அவர்களே பை தர மறுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  21. @கிரி,

    சென்னையிலும் ஒரு கட்டத்தில் இதை செயல்படுத்தும் கட்டாயம் வந்தே தீருமெனத் தோன்றுகிறது.

    பெங்களூரிலும் இது ஆரம்பமே. போகவேண்டிய தூரம் நிறைய உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் மாநகராட்சியின் பக்கமிருந்தும் முறையான திட்டமிடல் அவசியப்படுகிறது.

    ஊருக்கு வெளிப்புறம் குழிகள் (landfill) அமைத்துக் குப்பைகள் கழிக்கப்பட்டு வந்தன. இப்போது சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    வேறு இடங்களில் landfill அமைக்கும் சவாலை மாநகராட்சி எப்படி சமாளிக்கிறது, எவ்வளவு விரைவில் செயல்படுகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப நல்ல விஷயம் அக்கா. தொடரட்டும்.

    இங்கே அபுதாபியிலும், போன வருஷம்தான் ஆரம்பிச்சாங்க. என் வீடு புறநகர்ப்பகுதி என்பதால், இந்தத் திட்டம் இங்கு இன்னும் வரவில்லை. இருப்பினும், அடித்துப் பிடித்து, ஏழு மாதங்கள் நச்சரித்து, ஒரு re-cycling bin-ஐ வாங்கி வைத்து, ஆவலோடும் பெருமையோடும் அதில் குப்பைகளைத் தரம்பிரித்துக் கொட்டி வைத்தால்.....

    குப்பைகளை எடுத்துச் செல்லும் கம்பெனியினர், எல்லா வகைக் குப்பைகளையும் ஒரே லாரியில் ஒன்றாக அள்ளிப்போட்டுச் செல்கின்றனர்!! இதென்னடா கொடுமை என்று அவர்களிடம் சண்டை போட்டால், எத்தினி bin நீங்க வச்சாலும், நாங்க எல்லாத்தையும் ஒண்ணாத்தான் கொட்டிக்குவோம்; எங்க வழக்கம் அப்படித்தான் என்று அவர்கள் பதில்!! நொந்துபோய்விட்டேன். வாசகர் கடிதமும், புகார்க் கடிதமும் போட்டிருக்கிறேன். பார்ப்போம் பலன் இருக்கிறதா என்று!! :-) :-(

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான விஷயம். எல்லா இடங்களிலும் இப்படிக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. @ஹுஸைனம்மா,

    நன்றி ஹுஸைனம்மா.

    உங்கள் புகார் கடிதத்துக்குப் பலன் கிடைக்கட்டும். இன்னும் சிலரின் கையெழுத்துகளையும் பெற்று அனுப்பிப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  25. மிக நல்ல பகிர்வு ராமலட்சுமி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin