வெள்ளி, 29 ஜூன், 2012

உறுதி ஊற்றெடுக்கும் காலம்


1. எப்போதோ வாய்க்கும் வரமல்ல மகிழ்ச்சி. புலரும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சிக்குரிய வரமே.

2. சில துளிகளேனும் நம் மீது சிந்திக் கொள்ளாமல் தெளிக்க இயலாது மற்றவர் மேல் மகிழ்ச்சி எனும் பன்னீரை!

3. நேசிக்க யாராவது இருப்பதும், செய்வதற்கு ஏதாவது இருப்பதும், நம்பிக்கையுடன் காத்திருக்க ஏதாவது இருப்பதும் மகிழ்ச்சிக்கான வித்துகள்!

4. வந்து சேர்ந்த இடத்தை விடவும் சிலநேரங்களில் பயணத்த பாதை பேரழகானதாய் இருக்கும். இலக்கை அடைய எடுத்த பாதையையும் மறவாது கொண்டாடி மகிழ்வோம்.

5. காத்திருப்பு வெற்று நம்பிக்கையன்று. இலக்கை அடைய உள்ளூர உறுதி ஊற்றெடுக்கும் காலம்.

6.ஒரு நல்ல புத்தகத்துடன் செலவிடும் ஒரு மணிநேரம், அன்றைய தினத்தை அற்புதமானதாக்கி விடும்.

7. எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலுண்டு, அது எப்படியானதாக இருக்க வேண்டும் என நாம் சொல்லாத வரையில்.

8. முதன்மையான திறமை நம்முள் இருக்கும் திறமைகளை அடையாளம் காண்பது.

9. ஆசைகள் கனவு காண்கின்றன. இலட்சியங்கள் சாதிக்கின்றன.

10. அனுமானங்களை விட கேட்டுத் தெளிவது சாலச் சிறந்தது.
*****

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி

அறிவின் கருவி

42 கருத்துகள்:

 1. அட்சர லட்சம் பெறுகின்ற முத்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அருமையான அனுபவ மொழிகள்
  தொகுத்துத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சொன்ன மொழிகள் அனைத்தும் வாழ்க்கைக்குத் தேவையானவைதான்..

  பதிலளிநீக்கு
 4. எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலுண்டு, அது எப்படியானதாக இருக்க வேண்டும் என நாம் சொல்லாத வரையில்.


  எல்லா கருத்துக்களுமே நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. //சில துளிகளேனும் நம் மீது சிந்திக் கொள்ளாமல் தெளிக்க இயலாது மற்றவர் மேல் மகிழ்ச்சி எனும் பன்னீரை!//

  //எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலுண்டு, அது எப்படியானதாக இருக்க வேண்டும் என நாம் சொல்லாத வரையில்//

  Nice. Pl. continue

  பதிலளிநீக்கு
 6. மகிழ்ச்சியின் வித்து ..நல்ல தொகுப்புகள் தொடரட்டும் ராமலக்‌ஷ்மி..

  பதிலளிநீக்கு
 7. உங்களின் சேமிப்பாகத் தொகுக்கும் நல முத்துக்களை முத்துச்சரம் மூலம எங்களுக்கும் வழங்குவதில் பெருமகிழ்ச்சி. பயனுள்ள பகிர்விற்கு என் இதய நன்றி.

  பதிலளிநீக்கு
 8. எல்லாமே நல்முத்துகள். ஏழாவதும் எட்டாவதும் எனக்குப் பிடித்தவை.

  பதிலளிநீக்கு
 9. //2. சில துளிகளேனும் நம் மீது சிந்திக் கொள்ளாமல் தெளிக்க இயலாது மற்றவர் மேல் மகிழ்ச்சி எனும் பன்னீரை!//

  இது ரொம்பப் பிடித்தது :)

  பதிலளிநீக்கு
 10. நல்முத்துகள் தொடரட்டும் உங்கள் பக்கத்தில்.....

  பதிலளிநீக்கு
 11. நேசிக்க யாராவது இருப்பதும், செய்வதற்கு ஏதாவது இருப்பதும், நம்பிக்கையுடன் காத்திருக்க ஏதாவது இருப்பதும் மகிழ்ச்சிக்கான வித்துகள்!

  அத்தனையும் உண்மைகள் !!!

  பதிலளிநீக்கு
 12. அழகான படம்.அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான தொகுப்பு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. மிக அருமையான கருத்துக்கள்.. தொகுப்பு தொடரட்டும் ராமலக்ஷ்மி !

  பதிலளிநீக்கு
 15. கே. பி. ஜனா... said...
  //உறுதியான உண்மைகள்!//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. kg gouthaman said...
  //அட்சர லட்சம் பெறுகின்ற முத்துக்கள்!//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. Ramani said...
  /அருமையான அனுபவ மொழிகள்/

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. மதுமதி said...
  //சொன்ன மொழிகள் அனைத்தும் வாழ்க்கைக்குத் தேவையானவைதான்..//

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. Lakshmi said...

  /எல்லா கருத்துக்களுமே நல்லா இருக்கு./

  கருத்துக்கு நன்றி லஷ்மிம்மா..

  பதிலளிநீக்கு
 20. மோகன் குமார் said...

  /Nice. Pl. continue/

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 21. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  /மகிழ்ச்சியின் வித்து ..நல்ல தொகுப்புகள் தொடரட்டும் ராமலக்‌ஷ்மி../

  நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 22. அமைதிச்சாரல் said...
  /அத்தனையும் அருமை ராமலக்ஷ்மி../

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 23. பா.கணேஷ் said...
  /உங்களின் சேமிப்பாகத் தொகுக்கும் நல முத்துக்களை முத்துச்சரம் மூலம எங்களுக்கும் வழங்குவதில் பெருமகிழ்ச்சி. /

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம். said...
  /எல்லாமே நல்முத்துகள். ஏழாவதும் எட்டாவதும் எனக்குப் பிடித்தவை./

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 25. மாதேவி said...
  /அருமையான முத்துக்கள்./

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 26. கவிநயா said...
  ***//2. சில துளிகளேனும் நம் மீது சிந்திக் கொள்ளாமல் தெளிக்க இயலாது மற்றவர் மேல் மகிழ்ச்சி எனும் பன்னீரை!//

  இது ரொம்பப் பிடித்தது :)//***

  மகிழ்ச்சி கவிநயா:)!

  பதிலளிநீக்கு
 27. Nithi Clicks said...
  //அருமை வாழ்த்துக்கள்//

  நன்றி நித்தி.

  பதிலளிநீக்கு
 28. வெங்கட் நாகராஜ் said...
  //நல்முத்துகள் தொடரட்டும் உங்கள் பக்கத்தில்.....//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 29. MangaiMano said...
  //நேசிக்க யாராவது இருப்பதும், செய்வதற்கு ஏதாவது இருப்பதும், நம்பிக்கையுடன் காத்திருக்க ஏதாவது இருப்பதும் மகிழ்ச்சிக்கான வித்துகள்!

  அத்தனையும் உண்மைகள் !!!//

  நன்றி மங்கை:)!

  பதிலளிநீக்கு
 30. திண்டுக்கல் தனபாலன் said...
  /அருமையான முத்துக்கள் !/

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 31. துபாய் ராஜா said...
  /அழகான படம்.அருமையான கருத்துக்கள்./

  கருத்துகளோடு படத்தையும் ரசித்தமைக்கு நன்றி:).

  பதிலளிநீக்கு
 32. சே. குமார் said...
  /அருமையான தொகுப்பு./

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 33. James Vasanth said...
  /மிக அருமையான கருத்துக்கள்.. தொகுப்பு தொடரட்டும் ராமலக்ஷ்மி !/

  ஆகட்டும் ஜேம்ஸ். நன்றி.

  பதிலளிநீக்கு
 34. //ஆசைகள் கனவு காண்கின்றன. இலட்சியங்கள் சாதிக்கின்றன.
  //

  கனவே சரியா வரமாட்டேங்குது! இலட்சியத்துக்கு எப்போ போய்ச் சேர்ரது!!?

  பதிலளிநீக்கு
 35. எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலுண்டு, அது எப்படியானதாக இருக்க வேண்டும் என நாம் சொல்லாத வரையில்.//

  அருமையான முத்து.

  தொகுப்பு எல்லாம் அருமை ராமலக்ஷ்மி.
  நல்ல தொகுப்புகள் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. கோமதி அரசு said...
  //நல்ல தொகுப்புகள் தொடர வாழ்த்துக்கள்.//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin