செவ்வாய், 23 டிசம்பர், 2025

சாக்பீஸ் சூரியன் - [ஒன்பது குறுங்கவிதைகள்] - பண்புடன் இதழில்..


1.
மிதக்கும் சோப்புக் குமிழிகள்
அருகில் வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் மகிழ்ச்சி.

2.
பாதி கடித்த ஆப்பிள்
விரியத் திறந்த கதைப்புத்தகம்
வியப்புக்கு முடிவில்லை.

3.
குழந்தை பென்சிலால் தட்டும் ஒலி
ஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவி
கற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக.

4.
மரத்தில் சிக்கியக் காற்றாடி
அந்தியில் உயர ஏறும் நிலா 
விழ மறுக்கின்றன இரண்டும். 

5.
மேகங்களுக்குப் பின்னால் நிஜ சூரியன் 
சுவரில் குழந்தையின் சாக்பீஸ் சூரியன் 
நம்பிக்கை வரைகிறது தனது ஒளியை.

6.
மின்னும் நட்சத்திரங்கள்
விரல் நீட்டி எண்ணும் குழந்தை 
கனவு காணும் இரவு.

7.
சேற்றில் காலடித் தடங்கள்
சூரிய ஒளியை ஏந்தும் சிறு கைகள் 
புன்னகைக்கிறது பூமி.

8.
காலை ஒளியில் புல்வெளி
தன் நிழலைத் துரத்துகிறது குழந்தை 
வளரக் கற்கின்றனர் இருவரும்.

9.
பெரிய கையைப் பற்றும் சிறிய கை
சேர்ந்து கடக்கிறார்கள் தெருவை
நம்பிக்கை எடையற்றது, அர்த்தமுள்ளது.
*

6 டிசம்பர் 2025, பண்புடன் இணைய இதழில்..,
நன்றி பண்புடன்!
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin