நிகழ்ந்தது மாற்றம்--ஏழையானேன் நான்;
உன் அன்பு, சிலநாள் முன்வரை
பிரியமிகு என் இதயவாசல் முன் நீரூற்றாய்;
பொங்கிப் பிரவாகிக்க மட்டுமே தெரிந்ததாய்;
வேறெதைப் பற்றிய கவனமுமின்றி
என் தேவைக்காகவும் அன்றி,
தனக்கேயான அழகிய துள்ளலுடன்.
எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள் அவை நினைத்துப் பார்க்கிறேன்!
மேலிருந்து வழங்கப்பட்ட பேரின்பத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன்!
சலசலத்து, சுடர்விட்டு மினுமினுத்த உயிர்ப்பான அந்த நேசம்..
அந்தப் புனிதமான ஊற்று.. எங்கே இப்போது?
என்ன உள்ளது என்னிடம்? தைரியமாகச் சொல்லிவிடவா?
அசெளகரியமான.. ஒளிந்துகொண்ட ஒரு கிணறு.
அன்புக் கிணறு--ஆழமான கிணறு--
வற்றாத ஒன்று,--அப்படிதான் நம்புகிறேன்:
எது முக்கியம்?
அறியாமை இருளில் உறங்குகிறது
அமைதியில் தண்ணீர்.
-அப்படியான மாற்றம், பிரியம் நிறைந்த என் இதயவாசலின்
வெகு அருகாமையில் நிகழ்ந்து
ஏழையாக்கி விட்டது என்னை.
***
மூலம் ஆங்கிலத்தில்.. "A Complaint" by William Wordsworth
15 ஜூன் 2012 அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.
ஓடி ஒளிந்த அந்த நினைவுகள் அந்த அன்புக் கிணற்றினுள்தான் எப்போதும் ஒளிந்திருக்கும் போலும்! அருமை.
பதிலளிநீக்குஉணர்வில் ஊறித் ததும்பும் வார்த்தைகள்
பதிலளிநீக்குமனதை நெகிழச் செய்து போகிறது
மன்ம் கொள்ளை கொண்ட கவிதை
அருமையான உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்புக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான மொழிமாற்றம்....
பதிலளிநீக்குவார்த்தைகளைத் தேர்ந்தெடுத்த கவனம், இது மொழிமாற்றம் செய்யப்பட்டது என்பதை சமரசம் செய்ய மறுக்கிறது.
தடுமாற்றம் இல்லாத சொற்கோர்வை, அந்த ஏழையின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது.
நல்லதொரு ஆக்கம்.
அருமையான மொழிபெயர்ப்புக்கு
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
அருமையான மொழி மாற்றம்!
பதிலளிநீக்குகவிதை ஏழ்மையை பற்றி சொல்கிற மாதிரி எனக்கு தோணலை. இழந்த காதல் பற்றி சொல்கிற மாதிரி தெரியுது. என் புரிதல் சரியா?
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் நினைக்கிறேன் மோகன் குமார் சார்.!
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்குஅருமையானதொரு மொழிபெயர்ப்பு..
பதிலளிநீக்குஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஓடி ஒளிந்த அந்த நினைவுகள் அந்த அன்புக் கிணற்றினுள்தான் எப்போதும் ஒளிந்திருக்கும் போலும்! அருமை.//
நன்றி ஸ்ரீராம்.
Ramani said...
பதிலளிநீக்கு//அருமையான உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்புக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி.
சிசு said...
பதிலளிநீக்கு//அருமையான மொழிமாற்றம்....//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//அருமையான மொழிபெயர்ப்புக்கு
வாழ்த்துகள்.//
நன்றி மேடம்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அருமையான மொழி மாற்றம்!//
நன்றி ஸாதிகா.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//கவிதை ஏழ்மையை பற்றி சொல்கிற மாதிரி எனக்கு தோணலை. இழந்த காதல் பற்றி சொல்கிற மாதிரி தெரியுது. என் புரிதல் சரியா?//
சரிதான். நன்றி மோகன் குமார்:)!
வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்கு//நானும் அப்படித்தான் நினைக்கிறேன் மோகன் குமார் சார்.!//
நல்லது:). நன்றி.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//அருமை.....//
நன்றி வெங்கட்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//அருமையானதொரு மொழிபெயர்ப்பு..//
நன்றி சாந்தி.
மொழிமாற்றக் கவிதைபோல் இல்லை
பதிலளிநீக்குஒளி ஓவிய கவிதாயினின் கைவண்ணத்தில்
மெச்சமாய் ஒளிர்கிறது கவிதை
@ செய்தாலி,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
வழக்கம்போல வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ விச்சு,
பதிலளிநீக்குநன்றி.
அமிழ்தஊற்றால் துள்ளி, அகன்றவனை எண்ணி,
பதிலளிநீக்குஎவளோ கவலையினால் ஏங்கஅப் பெண்ணின்,
கவிதைக் கருகிணற்றுள் காணஅதை இந்த
புவித்தைஆய, போயிற்றே தூக்கம்!
பறக்கும்ஓர் தட்டைநான் பார்த்தேன் புவிமேல்
இறங்கிஅது மீண்டும்வான் ஏகிற்றே என்றே
தரணியர் சொல்ல, தவிப்புற்றேன் சிட்டே!
புறப்படு மெய்அறி போ!
அண்ட சராசரத்தின் அற்புதமெ லாம்திரட்டி
கொண்டுவர நீயும் குவலயத்தில் இன்றே
சிறகுவிரிச் சிட்டே! திரிந்தந்த விண்ணுள்
மறைந்திருக்கும் மெய்களோடு வா!
Web site names/
Web site addresses:
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
அருமையான மொழி மாற்றம்.
பதிலளிநீக்கு@ WillsIndiasWillswords,
பதிலளிநீக்குசுட்டியைத் தங்கள் தளத்தில் பகிர்ந்திருப்பதற்கு நன்றி.
நன்றி கோமதிம்மா.
பதிலளிநீக்குநல்லதொரு முயற்சி !!! எப்போமே ஒரிஜினல் ஒரிஜினல் தான் .. இருந்தாலும் மொழிப் பெயர்ப்பும் நல்லா இருக்கு !
பதிலளிநீக்கு@இக்பால் செல்வன் மறுப்பதற்கில்லை. வெவ்வேறு காலக் கட்டங்களில் உலகின் ஏதோ ஒரு பக்கத்தின் வாழ்க்கையை, சமூகத்தை, அக்காலச் சூழல் எழுத்தாளர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை தாய்மொழியினருக்கு அறியத் தருபவைதான் மொழிபெயர்ப்புகள். அப்பணியில் என் மிகச் சிறிய பங்கு:)! கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு