திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..


இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடி...


1. நம்மை நாம் நம்பும் முன் நம் மீது நம்பிக்கை வைக்கும் நட்புகளின் அன்பினால் நகருகின்றது வாழ்வு சரியான பாதையில்.

2. எவ்வளவுக்கு எவ்வளவு நம் குறைகளுக்காக வாதிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை நம்மிடம் இருப்பது உறுதியாகிறது. ஒப்புக் கொண்டு உருப்படுகிற வழியைப் பார்ப்போம்.

3. வெற்றிகள் சந்தோஷத்துக்கு வித்திடுவதில்லை. சந்தோஷங்களே வெற்றிக்கு வித்திடுகின்றன. எந்தச் செயலையும் விரும்பி சந்தோஷமாகச் செய்வோம்.

4. குற்றம் காண்பதில் மகிழ்ச்சி கொள்வது பழகி விட்டால் பெருமகிழ்ச்சி தரக்கூடிய நல்லன பலவற்றின் தரிசனங்களை நாமாகவே நழுவ விடுகிறோம்.

5. வெற்றிக்குக் காத்திராமல் பயணத்தைத் தொடருவது விவேகம்.

6. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்துப் பாராட்டி கொண்டாடி மகிழலாம். பின்னொருநாள் நினைத்துப் பார்க்கையில் அவை பெரிய விஷயங்களாகி விட்டிருக்கும்.

7. ஒருவர் நம்பிக்கையுடன் முன்னேறிக் காட்டுவது, ஒரு நூறு பேரின் ஆர்வத்தை ‘நம்பிக்கை’ ஆக்க வல்லது.

8. ‘நம்மால் முடியாது’ என ஒரு விஷயத்தை விட்டு விலகுவதுதான் தோல்வியே தவிர நமக்கு முன்னால் செல்பவரால் ஏற்படுவது அல்ல தோல்வி.

9. நனவாக சாத்தியமற்றவை கனவாகத் தோன்றுவதில்லை. மெய்ப்பட உழைக்கவும் வேண்டும்.

10. இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடியை விடச் சிறந்த தருணம் எதுவாக இருக்க முடியும்?

[தொகுப்பது தொடரும்]


பி.கு: ஆன்றோரும் சான்றோரும் அனுபவத்தில் சொல்லாத ஏதொன்றையும் புதிதாக நாம் சொல்லிவிடப் போவதில்லை. ஆயினும் நம் அனுபவத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, புரிந்து கொண்டவற்றை, நடைமுறைப் படுத்தியவற்றை, கடைப்பிடிக்க விரும்புவற்றை நமக்கு நாமே உரக்கச் சொல்லிக் கொள்வது உற்சாகமாய் இருக்கவும் உறுதியுடன் நகரவும் வழிவகுக்கும். அப்படியாக ஆரம்பித்த ‘ட்வீட்’களை, பலராலும் விரும்பப்பட்டவற்றை, நான் எடுக்கிற படங்களுடன் ‘ஃபேஸ்புக்’ கில் நிலைத்தகவலாகப் பகிர்ந்தவற்றை.. நண்பர்களும் கேட்டுக் கொண்டதன் பேரில் இங்கும் தொகுத்து வைக்கிறேன். உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதோடு, எனக்கான சேமிப்பாகவும்.

61 கருத்துகள்:

  1. இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடி...//
    அழகானது!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த தொகுப்பு..சிறப்பாகும் தொகுப்பு !

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு. குறிப்பா 2-ம், 8-ம் ரொம்ப பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  4. ஒன்று, இரண்டு, மூன்று, இருங்கள்....எல்லாமே நன்றாக இருப்பதால்.......

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் சேமிப்பு சூப்பர்.பயன்படுத்த வேண்டியதும்கூட.

    பதிலளிநீக்கு
  6. தொகுப்புகள் தொடரட்டும்.அனைத்தும் மிக உண்மை.

    பதிலளிநீக்கு
  7. தொகுப்புகள் எல்லாமே நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
    இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடியை விடச் சிறந்த தருணம் எதுவாக இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  8. தொடரட்டும் உங்கள் சிந்தனை!


    பி.கு. நன்று.

    //நம் அனுபவத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, புரிந்து கொண்டவற்றை, நடைமுறைப் படுத்தியவற்றை நமக்கு நாமே உரக்கச் சொல்லிக் கொள்வது உற்சாகமாய் இருக்கவும் உறுதியுடன் நகரவும் வழிவகுக்கும்.//

    நிச்சயமாக...!

    பதிலளிநீக்கு
  9. அருமையான அனுபவக் குறிப்புகள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அனைத்துமே வாழ்வியலுக்கு அவசியமானவை..தொடருங்கள்..தொடர்கிறேன்..வாசித்தேன்..வாக்கிட்டேன்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  11. முக புத்தகத்திலேயே கொஞ்ச நாளாக நீங்கள் எழுதி வருவதை கவனித்தேன். அருமை. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. எல்லாமே வாழ்வியல்.இந்தத் தருணம்தான் எனது.
    அருமை அக்கா !

    பதிலளிநீக்கு
  13. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்துப் பாராட்டி கொண்டாடி மகிழலாம். பின்னொருநாள் நினைத்துப் பார்க்கையில் அவை பெரிய விஷயங்களாகி விட்டிருக்கும்.//

    பின்னாளில் அவை சிறந்த தருணங்களாய் நிச்சியம் மலரும் உண்மை.

    சிறந்த தொகுப்பு எல்லோருக்கும் எல்லா காலத்திலும் உதவும்.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  14. எல்லாமே அவசியம் தொகுத்துச் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்தான் நல்லா இருக்கு. எனக்கு 2ம் 6ம் ரொம்ப ரொம்பப் பிடிச்சது. அருமை!

    பதிலளிநீக்கு
  15. குறித்துகொள்ளப்படவேண்டிய நன்மொழிகள்!

    பதிலளிநீக்கு
  16. நாம் உரக்கப் படிக்க உரத்த சிந்தனைகள்...

    பதிலளிநீக்கு
  17. அழகான சிந்தனைப் பதிவு ஆழமான வார்த்தைகள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல தொகுப்பு. அத்தனை கருத்துக்களுமே ஏற்றுக் கொள்ளக் வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  19. தொகுப்புகள் சிறப்பு ..
    தொடரட்டும் தொகுப்பு....

    பதிலளிநீக்கு
  20. 'ஆறு' பிடிச்சுருக்கு,

    சிலசமயம் பெரிய விஷயமுன்னு அப்போ நினைச்சுக் கஷ்டப்பட்டதை, இப்போ நினைச்ச்ச்சுப்பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்:-)))))

    பதிலளிநீக்கு
  21. எல்லோரும் சொல்லிட்டாங்க எனக்கும் வேறு சொல் தெரியவில்லை.

    சிறப்பு.

    பதிலளிநீக்கு
  22. மிக அருமையான் தொகுப்பு ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  23. படம் அருமை. லேசான அலையின் அசைவோடு பிம்பம்...

    தொகுப்பும் அதற்கிணையாய்..

    பதிலளிநீக்கு
  24. Vasudevan Tirumurti said...
    ***/இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடி...//
    அழகானது!/***

    நன்றி திவா சார்.

    பதிலளிநீக்கு
  25. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //Nice//

    நன்றி டி வி ஆர் சார்.

    பதிலளிநீக்கு
  26. kothai said...
    //சிறந்த தொகுப்பு..சிறப்பாகும் தொகுப்பு !//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //:) good தொகுத்துவைக்கப்படவேண்டியதே..//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  28. கவிநயா said...
    //நல்ல பகிர்வு. குறிப்பா 2-ம், 8-ம் ரொம்ப பிடிச்சிருக்கு.//

    மகிழ்ச்சி. நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம். said...
    //ஒன்று, இரண்டு, மூன்று, இருங்கள்....எல்லாமே நன்றாக இருப்பதால்.......

    நல்ல தொகுப்பு.//

    நன்றியும் மகிழ்ச்சியும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  30. விச்சு said...
    //உங்கள் சேமிப்பு சூப்பர்.பயன்படுத்த வேண்டியதும்கூட.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. Asiya Omar said...
    //தொகுப்புகள் தொடரட்டும்.அனைத்தும் மிக உண்மை.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  32. Lakshmi said...
    //தொகுப்புகள் எல்லாமே நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
    இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடியை விடச் சிறந்த தருணம் எதுவாக இருக்க முடியும்?//

    மகிழ்ச்சி. நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  33. அமைதி அப்பா said...
    //தொடரட்டும் உங்கள் சிந்தனை!


    பி.கு. நன்று.

    //நம் அனுபவத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, புரிந்து கொண்டவற்றை, நடைமுறைப் படுத்தியவற்றை நமக்கு நாமே உரக்கச் சொல்லிக் கொள்வது உற்சாகமாய் இருக்கவும் உறுதியுடன் நகரவும் வழிவகுக்கும்.//

    நிச்சயமாக...!//

    மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  34. Ramani said...
    //அருமையான அனுபவக் குறிப்புகள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. Madhu Mathi said...
    //அனைத்துமே வாழ்வியலுக்கு அவசியமானவை..தொடருங்கள்..தொடர்கிறேன்..வாசித்தேன்..வாக்கிட்டேன்..வாழ்த்துகள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. மோகன் குமார் said...
    //முக புத்தகத்திலேயே கொஞ்ச நாளாக நீங்கள் எழுதி வருவதை கவனித்தேன். அருமை. தொடருங்கள்//

    மிக்க நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  37. ஹேமா said...//எல்லாமே வாழ்வியல்.இந்தத் தருணம்தான் எனது.
    அருமை அக்கா !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  38. கோமதி அரசு said...
    //சிறந்த தொகுப்பு எல்லோருக்கும் எல்லா காலத்திலும் உதவும்.
    நன்றி ராமலக்ஷ்மி.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  39. கணேஷ் said...
    //எல்லாமே அவசியம் தொகுத்துச் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்தான் நல்லா இருக்கு. எனக்கு 2ம் 6ம் ரொம்ப ரொம்பப் பிடிச்சது. அருமை!//

    மகிழ்ச்சி. நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  40. ஸாதிகா said...
    //குறித்துகொள்ளப்படவேண்டிய நன்மொழிகள்!//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  41. குமரி எஸ். நீலகண்டன் said...
    //நாம் உரக்கப் படிக்க உரத்த சிந்தனைகள்...//

    ஆம், உரத்த சிந்தனைகளே. நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  42. dhanasekaran .S said...
    /அழகான சிந்தனைப் பதிவு ஆழமான வார்த்தைகள் வாழ்த்துகள்./

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. Kanchana Radhakrishnan said...
    /நல்ல பகிர்வு./

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  44. கோவை2தில்லி said...
    /நல்ல தொகுப்பு. அத்தனை கருத்துக்களுமே ஏற்றுக் கொள்ளக் வேண்டியது தான்./

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  45. pudukai selva said...
    /தொகுப்புகள் சிறப்பு ..
    தொடரட்டும் தொகுப்பு..../

    மிக்க நன்றி, முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  46. துளசி கோபால் said...
    /'ஆறு' பிடிச்சுருக்கு,

    சிலசமயம் பெரிய விஷயமுன்னு அப்போ நினைச்சுக் கஷ்டப்பட்டதை, இப்போ நினைச்ச்ச்சுப்பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்:-)))))/

    உண்மைதான்:)! நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  47. கோவி.கண்ணன் said...
    /எல்லோரும் சொல்லிட்டாங்க எனக்கும் வேறு சொல் தெரியவில்லை.

    சிறப்பு./

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. Jaleela Kamal said...
    /மிக அருமையான் தொகுப்பு ராமலக்‌ஷ்மி/

    மிக்க நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  49. அப்பாவி தங்கமணி said...
    /wow...what a photography... நல்ல தொகுப்பும் கூட.../

    நன்றி புவனா:)!

    பதிலளிநீக்கு
  50. அப்பாதுரை said...
    /stunning photograph!/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. அமைதிச்சாரல் said...
    /எல்லாமே நல்லாருக்கு../

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  52. ஹுஸைனம்மா said...
    /படம் அருமை. லேசான அலையின் அசைவோடு பிம்பம்...

    தொகுப்பும் அதற்கிணையாய்../

    மகிழ்ச்சி. நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  53. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. Shakthiprabha said...
    //சிறப்பான சிந்தனைகள்.//

    நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin