புதன், 19 அக்டோபர், 2011

உண்மை - நவீன விருட்சத்தில்..

உண்மைகள் என்றால்
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்

தனக்குத் தெரியாத உண்மைகளே
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்

அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்

முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்

அவனது பாதுகாப்பே
விலையென்றாலும்
பயப்பட மாட்டான்

எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே
சொல்லி அனுப்பினார்கள்

சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்

சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்

அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும்
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்

மறுக்கப்படும்
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை
என்கிற உண்மை மட்டும்

பார்வைக்குச் சிக்காமல்
அவனது நடுமுதுகில் அமர்ந்து
கண்சிமிட்டிச் சிரித்தபடி
சவாரி செய்து கொண்டிருந்தது

தன்னை விலை பேசவே முடியாதென்று.
***

படம்: இணையத்திலிருந்து
..

12 செப்டம்பர் 2011 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

41 கருத்துகள்:

  1. தன்னை விலை பேசவே முடியாதென்று.////

    ஆஹா அருமை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //நாளையைப் பற்றியதான நம்பிக்கை
    என்கிற உண்மை மட்டும்

    பார்வைக்குச் சிக்காமல்
    அவனது நடுமுதுகில் அமர்ந்து
    கண்சிமிட்டிச் சிரித்தபடி
    சவாரி செய்து கொண்டிருந்தது
    //

    அருமையான வரிகள் அக்கா.
    கவிதை நல்லாயிருக்கு.
    நவீன விருட்சத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அம்மா

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. மிக அற்புதமான கோணத்தில் உண்மையின் நிலைப் பாடுகள் சித்தரிக்கப் பட்டுள்ளது தங்கள் கவிதையில்... நாளை நடப்பது யாரும் அறியார்.தெரிந்தால் தானே விலை வைக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  6. ஆழமான அருமையான சிந்தனை
    அள்வான சொற்பிரயோகம்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அருமையான படைப்பு
    முத்துச் சரத்தில் கோர்த்த மாணிக்கம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நாளையைப்பற்றிய நம்பிக்கை .... கண்சிமிட்டி சவாரி செய்து கொண்டிருந்தது....

    அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. //அறியாதவற்றால் ஏற்படும்
    ஆச்சரியங்களாலும்
    தெரிய வராதவற்றால் தொடரும்
    சுவாரஸ்யங்களாலும்
    உயிர்த்திருக்கும் வாழ்வில்//

    கையை மூடி வெச்சிருக்கற வரைக்கும்தானே சுவாரஸ்யம் :-))

    பதிலளிநீக்கு
  9. உண்மைக் கவிதை.பாராட்டும் உண்மையாகவே !

    பதிலளிநீக்கு
  10. சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்னு தலைவர் சுஜாதா சொன்னார். அதே மாதிரி அடுத்தவங்க மனசுல இருக்கறதெல்லாம் படிக்க முடிஞ்சிட்டாலும் நரகம்தான்! உண்மைகளைத் தேடி அலையும் இவன் ஞானியா, பத்திரிகையாளனா (ஞானியும் பத்திரிகைக் காரர்தான் இல்லை?!!)..உண்மைகளை 'எந்த' வழியில் வேண்டுமானாலும் அறியத் துடிக்கும் இவன் தன்னைப் பற்றிய உண்மைகளை முதலில் அறிந்தானா...(சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி...)

    இவ்வளவும் மனதில் ஓடியது, இதைப் படித்ததும்...!

    பதிலளிநீக்கு
  11. தேடல் தான் வாழ்க்கை. தேடல் இல்லையென்றால் மனிதன் இயந்திரம் தான்.

    நல்ல கவிதைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. அரைகுறை உண்மைகளை
    அறவே வெறுத்தான்

    சந்தைக்கு வராத உண்மைகளைச்
    சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்!

    இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன.அனைத்து வரிகளும் அருமை!

    பதிலளிநீக்கு
  13. உண்மை இங்கு உண்மையாய் நல்லக் கவிதையாய்...

    பதிலளிநீக்கு
  14. ஸாதிகா said...
    //தன்னை விலை பேசவே முடியாதென்று.////

    ஆஹா அருமை.வாழ்த்துக்கள்!//


    நன்றி ஸாதிகா:)!

    பதிலளிநீக்கு
  15. சே.குமார் said...
    //அருமையான வரிகள் அக்கா.
    கவிதை நல்லாயிருக்கு.
    நவீன விருட்சத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  16. Rathnavel said...
    //அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அம்மா//


    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. கோமதி அரசு said...
    //கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  18. Lalitha Mittal said...
    //சூப்பர் கவிதை!//

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //Very Nice article. Congratulations.//

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. kothai said...
    //மிக அற்புதமான கோணத்தில் உண்மையின் நிலைப் பாடுகள் சித்தரிக்கப் பட்டுள்ளது தங்கள் கவிதையில்... நாளை நடப்பது யாரும் அறியார்.தெரிந்தால் தானே விலை வைக்க முடியும்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  21. Kanchana Radhakrishnan said...
    //கவிதை அருமை.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  22. Ramani said...
    //ஆழமான அருமையான சிந்தனை
    அள்வான சொற்பிரயோகம்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அருமையான படைப்பு
    முத்துச் சரத்தில் கோர்த்த மாணிக்கம்
    தொடர வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மாதேவி said...
    //நாளையைப்பற்றிய நம்பிக்கை .... கண்சிமிட்டி சவாரி செய்து கொண்டிருந்தது....

    அருமை வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  24. ஈரோடு கதிர் said...
    //உண்மைதான்!//

    நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  25. அமைதிச்சாரல் said...
    ***//அறியாதவற்றால் ஏற்படும்
    ஆச்சரியங்களாலும்
    தெரிய வராதவற்றால் தொடரும்
    சுவாரஸ்யங்களாலும்
    உயிர்த்திருக்கும் வாழ்வில்//

    கையை மூடி வெச்சிருக்கற வரைக்கும்தானே சுவாரஸ்யம் :-))//

    ஆம் சாந்தி:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ஹேமா said...
    //உண்மைக் கவிதை.பாராட்டும் உண்மையாகவே !//

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம். said...
    //சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்னு தலைவர் சுஜாதா சொன்னார். அதே மாதிரி அடுத்தவங்க மனசுல இருக்கறதெல்லாம் படிக்க முடிஞ்சிட்டாலும் நரகம்தான்! உண்மைகளைத் தேடி அலையும் இவன் ஞானியா, பத்திரிகையாளனா (ஞானியும் பத்திரிகைக் காரர்தான் இல்லை?!!)..உண்மைகளை 'எந்த' வழியில் வேண்டுமானாலும் அறியத் துடிக்கும் இவன் தன்னைப் பற்றிய உண்மைகளை முதலில் அறிந்தானா...(சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி...)

    இவ்வளவும் மனதில் ஓடியது, இதைப் படித்ததும்...!//

    தங்கள் சிந்தனையில் எழுந்த கேள்வி மிக நன்று. மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  28. வேங்கட ஸ்ரீனிவாசன் said...
    //தேடல் தான் வாழ்க்கை. தேடல் இல்லையென்றால் மனிதன் இயந்திரம் தான்.

    நல்ல கவிதைக்கு நன்றிகள்.//


    ஆம், ஆனால் அவன் தேடும் இயந்திரமாகவே மாறிவிடவும் கூடாதே. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. நம்பிக்கைபாண்டியன் said...
    //அரைகுறை உண்மைகளை
    அறவே வெறுத்தான்

    சந்தைக்கு வராத உண்மைகளைச்
    சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்!

    இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன.அனைத்து வரிகளும் அருமை!//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அன்புடன் அருணா said...
    //அட! இது புதுப் பார்வை!//

    வாங்க அருணா. நலமா:)? மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. குமரி எஸ். நீலகண்டன் said...
    //உண்மை இங்கு உண்மையாய் நல்லக் கவிதையாய்...//

    கருத்துக்கு மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  32. திகழ் said...
    //இரசித்தேன்//

    மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்:)!

    பதிலளிநீக்கு
  33. கவிநயா said...
    //:) நல்லாருக்கு.//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin