Monday, July 11, 2011

படத்திற்குள் படம் -Get Set CLICK - ஜூலை போட்டி சுவாரஸ்யம்

பிரதானமாக ஒரு படத்தைக் கொடுத்து, அதில் தெரிகிற ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துப் படமாக்கிக் கொண்டு வாருங்கள் என அறிவித்து, இம்மாதப் போட்டியை சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார் புது நடுவர் ஆன்டன் க்ரூஸ்.

போட்டி அறிவிப்பு இங்கே. அந்த பிரதானப் படம் நான் எடுத்த ஒன்று என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. முன்னொரு சமயம் பிட் அறிவித்திருந்த ‘முகங்கள்’ எனும் தலைப்புக்காகவே எடுத்த படம். இளைக்க இளைக்க ஓடிவந்த இடது பக்க நாய் சற்று ஆட்டம் கண்டிருக்க, திருப்தியின்றி போட்டிக்குக் கொடுக்கவில்லை. இங்கும் தரவில்லை. ஃப்ளிக்கரில் பதிந்த வைத்தது நடுவர் கண்களில் மாட்ட இம்மாதப் போட்டிக்கு ‘பிள்ளையார் சுழி’ படமாகத் தேர்வு செய்து விட்டுள்ளார்:)!


1. Get Set CLICK

இந்தப் படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது பாருங்கள். நாய், பெல்ட், காலணிகள், சோளம் சாப்பிட்டபடி செல்லும் பெரியவர், சோள ‘வண்டி’, பலூன், விற்பனையாளர், வீதி, கட்டிடம், இளம் யுவதி, சுறுசுறுப்பான இளைஞர்கள், மரங்கள், பின்னால் பேசிச் சிரித்தபடி வரும் நண்பர்கள்...! இப்படியாகப் இந்தப் படத்தில் இருக்கிற ஏதாவது ஒரு விஷயம் நீங்கள் போட்டிக்கு அனுப்புகிற படத்தில் இருக்கவேண்டும். சுவாரஸ்யம்தானே?

சரி மாதிரிக்கு சில படங்கள் என் ஆல்பத்தில் இருந்து பார்வைக்கு...

#பெரியவர்

2. தனிமை
வானுயர்ந்த சோலையிலே..
ஒத்தையடிப் பாதையிலே..
உள்ளம் ஏதோ தேடலிலே..
***

#கீழ்வரும் படத்தில் பெரியவருடன் காலணிகளும் போட்டிக்குப் பொருத்தமாக..

3. முதுமை
வழக்கொழிந்து வருவது
அரிக்கேன் விளக்குகள் மட்டும்தானா?

# நாய்கள்

4. கருப்பழகன்
சிந்தனையில்


5. பூங்காவில் பூக்குட்டி
அனாதரவாய் அன்புக்கு ஏங்கி

#பலூன்கள்

6. லூன்


7. பிஞ்சு விரல்கள் பிடியிலே
மஞ்சள் நிற பலூன்

8. மேலே மேலே போகப் போக..
கண்கள் விரியுது பரவசமாக..


8. ஏக்கம்
தலைப்பு என்னவோ பொருத்தமாகதான் உள்ளது. ஆனால் பையனுக்கு ஏக்கம் பலூன் மேல் இல்லை. ‘அப்பா எப்பக் கெளம்புவாரு. எப்ப வூடு போய் சாப்புடலாம்’னு. ஆயிரக் கணக்கில் மக்கள் கூட்டம் அலைமோதிய லால்பாக் மலர்கண்காட்சி தினத்தில் இருள் சூழ ஆரம்பித்த வேளையில் எடுத்தபடம். வெளிச்சத்தைக் கூட்டிப் பதிந்துள்ளேன்.

#மரங்கள்

9.ஞாயிறு மதியம்
மரத்தடித் தூக்கம்


10. பரந்து விரிந்து..
என் கண்ணளவில் நாற்பது அடிக்கும் மேல் பரந்து விரிந்த மரம் இது. முந்தைய மரத்தின் முன் நின்று 18mm focal length-லும் முழுசா frame-க்குள்ளே கொண்டு வர முடியவில்லை.

11.ஊருக்குள்ள இருந்தா வெட்டிப்புடுவாங்கன்னு
நீருக்குள்ள நிம்மதியா..

#கட்டிடங்கள்
12. Twin Domes


13. Twin Towers

#வீதிகள்
14. ஓங்கி வளர்ந்த மூங்கில் மரங்களுடன் வீதி
எதையோ கொறித்தபடி நடக்கும் இளம்யுவதி

15. BALANCE
சுமை எத்தனை சேர்ந்தாலும்
சமநிலையில் செல்லத் தெரிந்தவனுக்கு
சாலை கம்பளமாக விரியும்..
பயணம் (பிடித்த) சவாலாக அமையும்..


16. கோடு போட்டா ரோடு


17. எல்லோரும் வீதியைக் காட்டுனா வீதியைப் போடுபவரையேக் காட்டலாம்னு..#இளைஞர்கள், நண்பர்கள்

18. சோளம் சுவைக்கையிலே

# விற்பனையாளர்கள்

‘படத்துல பலூன் விற்கிறவரு, சோள வண்டி தெரிவதாலே அவர்களை மட்டும்தான் காட்டணுமா?’ என்றால் இல்லை. எந்த விற்பனையாளரையும் காட்டலாம் நீங்கள்.

19. அரை ஆழாக்கு அஞ்சு ரூவா


20. சுடச் சுடச் சுண்டல்


21. கொளுத்தும் கோடைக்குக் குளுகுளு பழங்கள்


22. உறுதி
உச்சி வெயிலில்
உற்றுப் பார்த்திருக்கும் விழிகளில்
உறுதி தெரிகிறது
விற்று விடும் அத்தனையும் என்று.
***

23. நாள் தொடங்குகிறது நம்பிக்கையுடன்..


24. உழைக்கும் கைகளே
வண்டி வாங்க வசதி இல்லாவிட்டாலும்
மண்ணிலே இடம் இருக்கு
உழைப்புக் கசக்காதவருக்கு.
***

மாதிரிக்கு 23 படங்கள் தந்திருக்கிறேன். ஒருபடம் தர உங்களாலே முடியாதா என்ன? இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. முடிந்தவரை புதுப்படமாக போட்டிக்கென எடுத்து அனுப்பப் பாருங்கள். சிறந்த பயிற்சியாகவும் அமையும். இதுவரை போட்டிக்கு அணிவகுத்திருக்கும் படங்கள் இங்கே. வலப்பக்க மேல் மூலையிலும் நிரந்தரமாக ஒரு இணைப்பு உங்கள் வசதிக்காக.

பகிர்வு:
நீல உடையில் நிலாப்பாட்டி
வாழ்க்கையிலே பார்த்தோமானாலே பேக் ரவுண்ட் மட்டும் நல்லா இருந்தா போதாம, நம்மளயும் தனிப்பட்ட முறையில அழுத்தம் திருத்தமா நிரூபிக்க.. அடையாளப்படுத்திக்க.. வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். அதே கதிதான் படங்களுக்கும்.

ஓலை வேஞ்ச கூரைக்குள்ளே ஆங்காங்கே நட்சத்திரங்களா எட்டிப் பார்க்கும் சூரியன். இங்கே அதுக்குக் கூட வழியில்லாம அடர்ந்த கிளை இலைகள். தள்ளிக் காய்ஞ்சுட்டிருந்த வெயிலுகிட்டே வெளிச்சத்தைக் கடன் கேட்டுக் கெஞ்சிக்கிட்டிருந்த மரத்தடி.இப்படி நிழல் சூழ்ந்த இடத்துல ஆட்டோ மோடில் வைத்து எடுத்திருந்தா...

ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்த நிலவுக் கதையுடன் DSLR-ன் aperture mode பயன்பாட்டைப் பற்றி நான் கற்றறிந்தவற்றைக் குறிப்புகளாகப் படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன் PiT தளத்தில். விருப்பமானவர்கள் வாசித்திடலாம்:


57 comments:

 1. படங்களையெல்லாம் பார்த்த பிறகு புரிந்தது உங்களை ஏன் ஒன் ஆஃப் தி ஜட்ஜஸாக அமர்த்தி விட்டார்கள் என்று.
  பரிசெல்லாம் ஒரே ஆள் அடித்துச் செல்லவிடலாமா?

  ReplyDelete
 2. பலூன் ரொம்ப பிடிச்சது! பின்னே குழந்தைகளுக்கு அதானே பிடிக்கும்?
  :-)))

  ReplyDelete
 3. படங்கள் அனைத்தும் அருமை.

  //வண்டி வாங்க வசதி இல்லாவிட்டாலும்
  மண்ணிலே இடம் இருக்கு
  உழைப்புக் கசக்காதவருக்கு//

  ஆம், உழைப்பு என்றுமே இனிப்பு!

  ReplyDelete
 4. பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது புகைப்படங்கள்

  ReplyDelete
 5. ராமலக்ஷ்மி,

  படங்கள் அமைந்த கருத்துகள் அத்தனையும் அருமை.

  அத்தனைக்கும் பரிசு கொடுக்க ஆசை அம்மா.

  ReplyDelete
 6. ஏக்கமும் தூக்கமும். .. பிடிச்சிருந்தது..

  நீங்க 23 என்ன அதுக்கு மேலையும் போட்டிருவீங்க.. :)

  உங்க படத்துக்குள்ள அடங்காம தலைய விரிச்சிக்கிட்டு நிக்கிற மரம் ரொம்ப சூப்பர்.

  ReplyDelete
 7. எல்லாப் படங்களும் உங்கள் கைக்குள் அடங்கிய அழகு.என்றாலும் உங்கள் கைக்குள் அடங்காத மரம் எனக்குப் பிடிச்சது !

  ReplyDelete
 8. சவாலான படங்கள் .அருமையான காட்சிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்குது ஜட்ஜம்மா :-))

  ReplyDelete
 10. அருமையான படைப்பு!! படங்கள் + கருத்துக்கள் அருமை!!! தொடரட்டும் உங்களது (புகைப்பட) பயணம்...கூடவே நாங்களும் வாசகர்களாக‌!!

  ReplyDelete
 11. முதுமை- மனதை அசைக்கிறது.
  கருப்பழகன்- சற்றே பயமுறுத்துகிறது.
  பூங்காவில் பூக்குட்டி-மிகக் கவர்கிறது.
  லூ-அழகு.
  பரந்து விரிந்து - மிக அழகு.
  மூங்கில் மர வீதி- அழகு.
  சுமையும் சமநிலையும்- இது எடுக்கப் பட்டிருக்கும் கலர் கவர்கிறது.

  ReplyDelete
 12. மாதிரிப் படங்கள் அத்தனையும் அழகு.
  முன்பே இப்படி விலாவாரியாக புரிந்திருந்தால்.....இன்னும் சேர்த்திருப்பேன். பரவாயில்லை.

  ReplyDelete
 13. எல்லா படமும் சூப்பர்.
  சில சூப்பர்லட்டிவ்!!!!!!!!!!
  தாமிரபரணித்தண்ணி இலக்கியம் மட்டுமல்ல..
  ஒளி ஒவியமும் படைக்கும் எனத்தெரிந்து கொண்டேன்.
  [நான் திருச்செந்தூர்]

  குழந்தைகளுக்கான உலக சினிமா,பெண்களுக்கான உலகசினிமா
  குடும்பத்தோடு பார்க்க முடிகின்ற உலக சினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.
  தற்ப்போதைய பதிவு நாயகன்,தேவர்மகன் படங்களின் தாய்...காட்பாதர்.

  ReplyDelete
 14. படங்கள் கண்களையும்,கருத்தையும் கவர்ந்தன.

  ReplyDelete
 15. New lay out of the blog is nice. Seems you have spent quite a lot of time in it.

  ReplyDelete
 16. //goma said...
  படங்களையெல்லாம் பார்த்த பிறகு புரிந்தது உங்களை ஏன் ஒன் ஆஃப் தி ஜட்ஜஸாக அமர்த்தி விட்டார்கள் என்று.
  பரிசெல்லாம் ஒரே ஆள் அடித்துச் செல்லவிடலாமா?//

  இவுங்க சொல்லுவது தான் உண்மை. உங்களின் படங்கள் எப்பவும் வெற்றி படங்கள் தான்.

  ReplyDelete
 17. படங்கள் அத்தனையும் அருமை.

  ReplyDelete
 18. கர்ணனுக்கு கவசகுண்டலம் மாதிரி, உங்களுக்கு கேமரா போல. ;-))))))

  ReplyDelete
 19. சகோதரி....படங்கள் அத்தனையும் பிரமாதம்..

  ReplyDelete
 20. படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 21. கருப்பழகன்..நீருக்குள் மரம்..இரண்டும் விசேட அழகு

  ReplyDelete
 22. பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது புகைப்படங்கள்

  ReplyDelete
 23. அருமை அருமை.. சூப்ப‌ர்ங்க‌...

  ReplyDelete
 24. அடடா எல்லாப் படத்தையும் அனுப்பணும்னு கை துடிக்குதே..:)

  ReplyDelete
 25. முதுமை புகைப்படம் மிகத் துல்லியம்!
  மரத்தடியில் தனிமையும் உறக்கமுமாக....மிக அழகிய தேர்வு!
  'சுமையைப்' பற்றிய கருத்தாழம் மிக்க கவிதை பிரமாதம்!
  'உறுதி' யிலும் 'விரிந்த மரத்திலும்' கவிதையும் புகைப்படமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறன்றன!
  புகைப்படங்கள் அனைத்துமே உங்களை ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞராகக் காட்டுகிறது ராமலக்ஷ்மி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. எல்லாப் படங்களும் அருமை.

  ReplyDelete
 27. Great job! Excellent article with lot of samples + explanation! It seems to me PiT-2!

  //ஊருக்குள்ள இருந்தா வெட்டிப்புடுவாங்கன்னு
  நீருக்குள்ள நிம்மதியா..//

  I’d call it as a “punch dialog” of this article. A simple sentence with usual language flow tells a great story!

  ReplyDelete
 28. goma said...
  //படங்களையெல்லாம் பார்த்த பிறகு புரிந்தது உங்களை ஏன் ஒன் ஆஃப் தி ஜட்ஜஸாக அமர்த்தி விட்டார்கள் என்று. பரிசெல்லாம் ஒரே ஆள் அடித்துச் செல்லவிடலாமா?//

  எப்போதும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் அதுவே எனக்கான பரிசு:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 29. திவா said...
  //பலூன் ரொம்ப பிடிச்சது! பின்னே குழந்தைகளுக்கு அதானே பிடிக்கும்?
  :-)))//

  அது சரி:)! நன்றி திவா சார்!

  ReplyDelete
 30. அமைதி அப்பா said...
  ***/படங்கள் அனைத்தும் அருமை.

  //வண்டி வாங்க வசதி இல்லாவிட்டாலும்
  மண்ணிலே இடம் இருக்கு
  உழைப்புக் கசக்காதவருக்கு//

  ஆம், உழைப்பு என்றுமே இனிப்பு!/***

  மிக்க நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 31. தமிழ் உதயம் said...
  //பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது புகைப்படங்கள்//

  மகிழ்ச்சியும் நன்றியும் தமிழ் உதயம்.

  ReplyDelete
 32. வல்லிசிம்ஹன் said...
  //ராமலக்ஷ்மி,

  படங்கள் அமைந்த கருத்துகள் அத்தனையும் அருமை.

  அத்தனைக்கும் பரிசு கொடுக்க ஆசை அம்மா.//

  மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //ஏக்கமும் தூக்கமும். .. பிடிச்சிருந்தது..

  நீங்க 23 என்ன அதுக்கு மேலையும் போட்டிருவீங்க.. :)

  உங்க படத்துக்குள்ள அடங்காம தலைய விரிச்சிக்கிட்டு நிக்கிற மரம் ரொம்ப சூப்பர்.//

  நன்றி முத்துலெட்சுமி. ஆம். 30 போட்டு பிறகு குறைத்துவிட்டேன்:)! இது போலப் பரந்து விரிந்த அல்லது உயர்ந்து வளர்ந்த மரங்கள் விதம் விதமாக உள்ளன கப்பன் மற்றும் லால்பாகில். இது கப்பனில் எடுத்தது.

  ReplyDelete
 34. ஹேமா said...
  //எல்லாப் படங்களும் உங்கள் கைக்குள் அடங்கிய அழகு.என்றாலும் உங்கள் கைக்குள் அடங்காத மரம் எனக்குப் பிடிச்சது !//

  உங்களுக்கும் மரம் பிடித்ததில் மகிழ்ச்சி ஹேமா.

  ReplyDelete
 35. இராஜராஜேஸ்வரி said...
  //சவாலான படங்கள் .அருமையான காட்சிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 36. அமைதிச்சாரல் said...
  //படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்குது ஜட்ஜம்மா :-))//

  நன்றி சாரல்:)!

  ReplyDelete
 37. Nithi Clicks said...
  //அருமையான படைப்பு!! படங்கள் + கருத்துக்கள் அருமை!!! தொடரட்டும் உங்களது (புகைப்பட) பயணம்...கூடவே நாங்களும் வாசகர்களாக‌!!//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஆனந்த்.

  ReplyDelete
 38. ஸ்ரீராம். said...
  //முதுமை- மனதை அசைக்கிறது.
  கருப்பழகன்- சற்றே பயமுறுத்துகிறது.
  பூங்காவில் பூக்குட்டி-மிகக் கவர்கிறது.
  லூ-அழகு.
  பரந்து விரிந்து - மிக அழகு.
  மூங்கில் மர வீதி- அழகு.
  சுமையும் சமநிலையும்- இது எடுக்கப் பட்டிருக்கும் கலர் கவர்கிறது.//

  ரசனைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 39. நானானி said...
  //மாதிரிப் படங்கள் அத்தனையும் அழகு.
  முன்பே இப்படி விலாவாரியாக புரிந்திருந்தால்.....இன்னும் சேர்த்திருப்பேன். பரவாயில்லை.//

  உங்கள் குழுப்பமே ‘விலாவாரிக்கு’ வித்திட்டது. பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 40. உலக சினிமா ரசிகன் said...
  //எல்லா படமும் சூப்பர்.
  சில சூப்பர்லட்டிவ்!!!!!!!!!!
  தாமிரபரணித்தண்ணி இலக்கியம் மட்டுமல்ல..
  ஒளி ஒவியமும் படைக்கும் எனத்தெரிந்து கொண்டேன்.
  [நான் திருச்செந்தூர்]//

  மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 41. ஸாதிகா said...
  //படங்கள் கண்களையும்,கருத்தையும் கவர்ந்தன.//

  மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 42. மோகன் குமார் said...
  //New lay out of the blog is nice. Seems you have spent quite a lot of time in it.//

  நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 43. சசிகுமார் said...

  //இவுங்க சொல்லுவது தான் உண்மை. உங்களின் படங்கள் எப்பவும் வெற்றி படங்கள் தான்.//

  உங்களுக்கெல்லாம் பிடித்தாலே வெற்றிதானே. நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 44. சே.குமார் said...
  //படங்கள் அத்தனையும் அருமை.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 45. ஹுஸைனம்மா said...
  //கர்ணனுக்கு கவசகுண்டலம் மாதிரி, உங்களுக்கு கேமரா போல. ;-))))))//

  நன்றி ஹுஸைனம்மா:)!

  ReplyDelete
 46. ESWARAN.A said...
  //சகோதரி....படங்கள் அத்தனையும் பிரமாதம்..//

  மிக்க நன்றிங்க. புதுக் காமிராவில் படம் எடுக்க ஆரம்பித்து விட்டீர்களா?

  ReplyDelete
 47. Kanchana Radhakrishnan said...
  //படங்கள் அனைத்தும் அருமை.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 48. VELU.G said...
  //very nice photos//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 49. பாச மலர் / Paasa Malar said...//கருப்பழகன்..நீருக்குள் மரம்..இரண்டும் விசேட அழகு
  //

  மகிழ்ச்சியும் நன்றியும் பாசமலர்.

  ReplyDelete
 50. மாலதி said...
  //பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது புகைப்படங்கள்//

  நன்றி மாலதி, தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 51. அஹமது இர்ஷாத் said...
  //அருமை அருமை.. சூப்ப‌ர்ங்க‌...//

  நன்றி அஹமது, நீண்ட இடைவெளிக்குப் பின்னான வருகைக்கும்:)!

  ReplyDelete
 52. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அடடா எல்லாப் படத்தையும் அனுப்பணும்னு கை துடிக்குதே..:)//

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 53. மனோ சாமிநாதன் said...
  //முதுமை புகைப்படம் மிகத் துல்லியம்!
  மரத்தடியில் தனிமையும் உறக்கமுமாக....மிக அழகிய தேர்வு!
  'சுமையைப்' பற்றிய கருத்தாழம் மிக்க கவிதை பிரமாதம்!
  'உறுதி' யிலும் 'விரிந்த மரத்திலும்' கவிதையும் புகைப்படமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறன்றன!
  புகைப்படங்கள் அனைத்துமே உங்களை ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞராகக் காட்டுகிறது ராமலக்ஷ்மி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

  விரிவான கருத்துக்கும் ரசனைக்கும் நன்றிகள் மனோ சாமிநாதன்.

  ReplyDelete
 54. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //எல்லாப் படங்களும் அருமை.//

  வாங்க ஜெஸ்வந்தி:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 55. Anton Cruz said...
  //Great job! Excellent article with lot of samples + explanation! It seems to me PiT-2!

  //ஊருக்குள்ள இருந்தா வெட்டிப்புடுவாங்கன்னு
  நீருக்குள்ள நிம்மதியா..//

  I’d call it as a “punch dialog” of this article. A simple sentence with usual language flow tells a great story!//

  மிக்க நன்றி ஆன்டன்:)!

  ReplyDelete
 56. ப‌ட‌ங்க‌ளுடன் குறிப்புக‌ளும் அருமை மேட‌ம். குறிப்பாக‌ ப‌லூன் விற்ப‌வ‌ரும் அவ‌ரின் ம‌க‌னும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin