புதன், 6 ஜூலை, 2011

கடன் அன்பை வளர்க்கும் - திண்ணையில்..


‘வேறு எந்தக் கடனும்
இப்போது இல்லை.’
புதுக் கடனுக்கு
விண்ணப்பிக்க வந்த இடத்தில்
வங்கி மேலாளர்
கேட்கும் முன்னரே சொன்னான்.
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்ததற்கான
நற்சான்றிதழ்களை
பெருமையுடன் முன் வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ
பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்..
முன் தினம் கடற்கரையில்
கடலை வாங்க
சில்லறை இல்லாத போது
தன் குட்டிப் பையைக்
குலுக்கித்தேடி

எடுத்துத்தந்த
இரு ஐந்து ரூபாய்
நாணயங்களை நினைவூட்டி.
***

படம் நன்றி: இணையம்

3 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!

62 கருத்துகள்:

  1. கியுட் ஒன். சரிங்க எனக்கு ஒரு பத்து ரூபாய் கடன் தாங்க...????

    பதிலளிநீக்கு
  2. அட..சகோ,கவிதைக்காக எப்படி எல்லாம் யோசிக்கறீங்க.சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    இது அன்பு சம்பந்தப்பட்ட கடனாச்சே
    அவ்வளவு சீக்கிரம் அடைக்கவும் முடியாதே
    அருமையான சிந்தனை. அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. திரும்பி வராக் கடனே எலும்பை முறிக்கும். திருப்பி தரும் கடனே அன்பை வளர்க்கும். ே அன்பை வளர்க்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹஹ குட்டிப் பசங்க எப்பவுமே இந்த விஷயத்தில் சமத்துங்க..

    பதிலளிநீக்கு
  6. ஆம் உண்மை - கடன் அன்பினை வளர்க்கும் - மகளிடம் கடன் வாங்கியதால் - பெரும்பாலும்.

    பதிலளிநீக்கு
  7. கியூட்டா.. அதே சமயம் நெகிழ்வா இருக்கு அக்கா.. படமும் பொருத்தமாய் :)

    பதிலளிநீக்கு
  8. அன்பின் கடன் தீராது அக்கா !

    பதிலளிநீக்கு
  9. My book review also has come in Thinnai on 3rd July.

    Periya periya ezhuthaalargal kooda ellaam namma padaippum onnaa varrathai ninaichaa perumaiyaa keethu.

    பதிலளிநீக்கு
  10. அக்கா குட்டியா இருந்தாலும் கலக்குது கவிதை... உங்கள் கவிதை திண்ணை மட்டுமின்றி வீடு முழுக்க வெளிவர வேண்டும் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  11. ஒரு குட்டிக் கவிதையிடம் வாங்கிய (கவிதைக்) கடன்.....

    பதிலளிநீக்கு
  12. சூப்பரான கவிதை. இதுபோன்ற கடன்கள் அதிகரிக்கட்டும். அதனால் அன்பு பெருகட்டும். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  13. கவிதை ரொம்ப‌ சூப்பரா இருக்குக்கா...

    பதிலளிநீக்கு
  14. ஆஹா! குட்டி மகளிடம் கடன் எப்படி மறக்கலாம்?

    அருமை.

    பதிலளிநீக்கு
  15. தீராத அன்போடு என்றும் தீராத கடன்கள்

    பதிலளிநீக்கு
  16. அன்புக்கடன் கொடுக்க கொடுக்க வளரும்.. அருமையான கவிதை மேடம்..

    பதிலளிநீக்கு
  17. karai nallathu.. vilambaram maathiri "kadan nallathu"nu sollalam.. gud :-)

    பதிலளிநீக்கு
  18. இதுதான் பெற்ற கடனோ?
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  19. இது செல்ல குழந்தையிடம் வாங்கிய செல்ல கடனோ!!! அருமை.

    பதிலளிநீக்கு
  20. கடன் அன்பை வளர்க்கும்?! அதென்னவோ ஒருவகையில் உண்மைதாங்க ராமலக்ஷ்மி! அதாவது மகள் சிறுமியாகவும், கடன் வாங்கிய தொகையும் சிறியதாக இருந்தால் மேன்மேலும் வளர்க்கத்தான் செய்யும்! :)

    பதிலளிநீக்கு
  21. கவிதை அருமை!

    குழந்தை‌யாக‌ இருக்கும்போது கடன் அன்பை வளர்க்கிறது!
    பெரியவரான பின் அந்தக் அந்த க‌டனே அன்பை முறிக்கிறது!

    பதிலளிநீக்கு
  22. எல்லாக் கடன்களையும் அடைத்து விடுவோம்!ஆனால், குழந்தைகளுக்கு கொடுத்த கடனை மட்டும் அடைக்கவே முடியாது!

    பதிலளிநீக்கு
  23. சௌந்தர் said...
    //கியுட் ஒன். சரிங்க எனக்கு ஒரு பத்து ரூபாய் கடன் தாங்க...????//

    நன்றி செளந்தர். பத்து ரூபாய் போதுமா:)?

    பதிலளிநீக்கு
  24. ஸாதிகா said...
    //அட..சகோ,கவிதைக்காக எப்படி எல்லாம் யோசிக்கறீங்க.சூப்பர்ப்.//

    நன்றி ஸாதிகா:)!

    பதிலளிநீக்கு
  25. kathir said...
    //’கடன்’ நல்லது! :)//

    நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  26. Ramani said...
    //அருமை அருமை
    இது அன்பு சம்பந்தப்பட்ட கடனாச்சே
    அவ்வளவு சீக்கிரம் அடைக்கவும் முடியாதே
    அருமையான சிந்தனை. அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  27. தமிழ் உதயம் said...
    //திரும்பி வராக் கடனே எலும்பை முறிக்கும். திருப்பி தரும் கடனே அன்பை வளர்க்கும். ே அன்பை வளர்க்கும்.//

    சரியாய் சொன்னீர்கள். நன்றி தமிழ் உதயம்:)!

    பதிலளிநீக்கு
  28. தமிழரசி said...
    //ஹஹஹஹ குட்டிப் பசங்க எப்பவுமே இந்த விஷயத்தில் சமத்துங்க..//

    ஆம் தமிழரசி:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  29. cheena (சீனா) said...
    //ஆம் உண்மை - கடன் அன்பினை வளர்க்கும் - மகளிடம் கடன் வாங்கியதால் - பெரும்பாலும்.//

    நன்றி சீனா சார்:)!

    பதிலளிநீக்கு
  30. சுசி said...
    //கியூட்டா.. அதே சமயம் நெகிழ்வா இருக்கு அக்கா.. படமும் பொருத்தமாய் :)//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  31. ஹேமா said...
    //அன்பின் கடன் தீராது அக்கா !//

    ஆம் ஹேமா:)! நன்றி!

    பதிலளிநீக்கு
  32. அமைதி அப்பா said...//சிறப்பான கவிதை!//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  33. Rathnavel said...
    //அருமை.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  34. மோகன் குமார் said...
    //My book review also has come in Thinnai on 3rd July.//


    வாசித்தேன் மோகன் குமார். புத்தக விமர்சனங்கள் தொடர்ந்து தந்து வருவதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  35. அமைதிச்சாரல் said...
    //நிச்சயமா அன்பை வளர்க்கும் :-)))//

    நன்றி சாந்தி, திண்ணையில் சொன்ன “ஜூப்பரு’க்கும்:)!

    பதிலளிநீக்கு
  36. சசிகுமார் said...
    //அக்கா குட்டியா இருந்தாலும் கலக்குது கவிதை... உங்கள் கவிதை திண்ணை மட்டுமின்றி வீடு முழுக்க வெளிவர வேண்டும் ஹி ஹி//

    நன்றி சசிகுமார்:)!

    பதிலளிநீக்கு
  37. July 6, 2011 6:00 PM
    Kanchana Radhakrishnan said...
    //அருமையான பதிவு.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம். said...
    //ஒரு குட்டிக் கவிதையிடம் வாங்கிய (கவிதைக்) கடன்.....//

    ஆம் ஸ்ரீராம்:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //சூப்பரான கவிதை. இதுபோன்ற கடன்கள் அதிகரிக்கட்டும். அதனால் அன்பு பெருகட்டும். அன்புடன் vgk//

    மிக்க நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  40. S.Menaga said...
    //கவிதை ரொம்ப‌ சூப்பரா இருக்குக்கா...//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  41. கோமதி அரசு said...
    //ஆஹா! குட்டி மகளிடம் கடன் எப்படி மறக்கலாம்?

    அருமை.//

    நன்றி கோமதிம்மா:)!

    பதிலளிநீக்கு
  42. குமரி எஸ். நீலகண்டன் said...
    //தீராத அன்போடு என்றும் தீராத கடன்கள்//

    ஆம், தீராக்கடன். நான் முதலில் யோசித்த தலைப்பும்:)! நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  43. அன்புடன் மலிக்கா said...
    //அன்புக்கடன் கொடுக்க கொடுக்க வளரும்.. அருமையான கவிதை மேடம்..//

    நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  44. "உழவன்" "Uzhavan" said...
    //karai nallathu.. vilambaram maathiri "kadan nallathu"nu sollalam.. gud :-)//

    நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  45. சகாதேவன் said...
    //இதுதான் பெற்ற கடனோ?
    சகாதேவன்//

    ஆம், தீராத அன்புக் கடன்:)! நன்றி:)!

    பதிலளிநீக்கு
  46. அம்பிகா said...
    //இது செல்ல குழந்தையிடம் வாங்கிய செல்ல கடனோ!!! அருமை.//


    ஆகா எத்தனை விதக் கடன்கள். செல்லக் கடனே அம்பிகா:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வருண் said...
    //கடன் அன்பை வளர்க்கும்?! அதென்னவோ ஒருவகையில் உண்மைதாங்க ராமலக்ஷ்மி! அதாவது மகள் சிறுமியாகவும், கடன் வாங்கிய தொகையும் சிறியதாக இருந்தால் மேன்மேலும் வளர்க்கத்தான் செய்யும்!//

    கருத்துக்கு நன்றி வருண்:)!

    பதிலளிநீக்கு
  48. மனோ சாமிநாதன் said...
    //கவிதை அருமை!

    குழந்தை‌யாக‌ இருக்கும்போது கடன் அன்பை வளர்க்கிறது!
    பெரியவரான பின் அந்தக் அந்த க‌டனே அன்பை முறிக்கிறது!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன்!

    பதிலளிநீக்கு
  49. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //எல்லாக் கடன்களையும் அடைத்து விடுவோம்!ஆனால், குழந்தைகளுக்கு கொடுத்த கடனை மட்டும் அடைக்கவே முடியாது!//

    உண்மைங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. சே.குமார் said...
    //அழகான கவிதை.
    பொருத்தமான படம்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  51. அழகு..கவிதை..அதைவிட அழகு..தலைப்பு..

    பதிலளிநீக்கு
  52. சூப்பரோ....சூப்பர்!!எங்க ஒக்காந்து யோசிச்சீங்க? அற்புதம்!!

    பதிலளிநீக்கு
  53. கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் மேலேமேலே வட்டியை வளர்த்துக்கொண்டே போகும் கடனாயிற்றே. அருமை.

    பதிலளிநீக்கு
  54. கடன் அன்பை வளர்க்கும்..:) பொறுப்புணர்வையும் .. அருமை ராமலெக்ஷ்மி:)

    பதிலளிநீக்கு
  55. இதைப்படித்தவுடன் என் நாத்தனார் மகள் நினைவுக்கு வந்தாள். எப்பவும் கையில் ஒரு குட்டியூண்டு பை இருக்கும். அதுக்குள்ளே என்னல்லாமோ வைத்திருப்பாள். டிக்டாக் மிட்டாயை அவள் பகிர்ந்துகொண்டு இன்றைக்கு ஒன்று குடுத்தேன் நாளைக்கு நீங்க தரனும் என்று அவள் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்துவிட்டது.:)

    பதிலளிநீக்கு
  56. நைஸ்.

    அன்பை வளர்க்கும் கடன்.... சிறுவர்களிடமிருந்து தப்பமுடியுமா :))

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin