Tuesday, June 21, 2011

மறுப்பு - கீற்றினில்..

ஓவியம் நன்றி: சந்திரமோகன்

உச்சிகால பூஜைக்குத்
தட்டிலே தங்கவெள்ளி மலர்களுடன்
உள் நுழைந்தவனை நிறுத்திக்
கடைசி முழம் பூவை
வாங்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள்
சுட்டெரித்த சூரியக் கதிரில்
சுருங்கிப் போயிருந்த கிழவி.

பலமான தலை அசைவில்
மறுப்பை உணர்த்தியவனிடம்
தன் காணிக்கையாகவேனும்
கடவுளிடம்
சேர்த்துவிடக் கோருகிறாள்.

ஒதுக்கிவிட்டு நகர்ந்தவனின்
அன்றைய பிரார்த்தனைகள் யாவும்
பலித்திருக்கவே கூடும்.

ஆயினும் அவன் தோட்டத்து
மல்லிகைச் செடிகள் மட்டும்
மொட்டு விட மறந்து போயின
அதன் பிறகு.
***

21 ஜூன் 2011 கீற்று இணைய இதழில்.., நன்றி கீற்று.

64 comments:

 1. எதார்த்தம்..நாம் எங்கேயோ எப்போதோ சந்தித்த அனுபவம் போல் உள்ளது..வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. //தன் காணிக்கையாகவேனும்
  கடவுளிடம் சேர்த்துவிடக் கோருகிறாள்.//

  ஆஹா, என்ன ஒரு நல்லெண்ணம் அந்தக்கிழவிக்கு.

  //ஆயினும் அவன் தோட்டத்து
  மல்லிகைச் செடிகள் மட்டும்
  மொட்டு விட மறந்து போயின
  அதன் பிறகு.//

  பூவினால் கொடுக்கப்பட்ட சாபமல்லவா!

  அருமையான கவிதை.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அருமை அக்கா... சிம்ப்ளி சூப்பர்ப்... படித்து முடித்த பின்னும் கடைசி வரிகள் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது...

  ReplyDelete
 4. அழகிய வரிகள்..

  ReplyDelete
 5. அருமை அக்கா!!

  ReplyDelete
 6. ம்...இதுதான் சாபம் !

  ReplyDelete
 7. வரமாய் வாங்கும் சாபம்...!

  ReplyDelete
 8. உண்மை. கொடுத்தால் தான் எதுவும் கிடைக்கும்.

  ReplyDelete
 9. அருமையான கவிதை

  ReplyDelete
 10. நல்ல கவிதை... வெப்ப மனதில் வெந்து போயின மலர்கள்

  ReplyDelete
 11. அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. என்னமா யோசிக்கிறீங்க !!

  ReplyDelete
 13. கற்பனை செய்துக் கொண்டே படித்தேன் லஷ்மி..கவிதை அருமை...

  ReplyDelete
 14. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

  ReplyDelete
 15. ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 16. காட்சியைக் கண்முன் நிறுத்தி கருவைப் படம்பிடித்துக் காட்டிய கவிதை.

  ReplyDelete
 17. கோவிலும் கிழவியும் தங்கவெள்ளி மலர்களும் கண் முன் நிற்கின்றன. அருமை ராமலக்ஷ்மி.  --

  ReplyDelete
 18. ஆயினும் அவன் தோட்டத்து
  மல்லிகைச் செடிகள் மட்டும்
  மொட்டு விட மறந்து போயின
  அதன் பிறகு.

  இப்படியே மலர்களும் மனிதனைத் தண்டிக்க முற்பட்டால்,வெறும் குச்சியும் மட்டையுமே மிஞ்சும்...அதற்குள் மனிதன் ,உண்மையான பக்தியை உணரட்டும்,

  ReplyDelete
 19. pookkalin saabham alla...pookkalin varuththam. very nice.

  ReplyDelete
 20. மிக அருமையாக இருக்கிறது கவிதை. கடைசி வரிகள் சூப்பர் வாழ்த்துகள்..

  ReplyDelete
 21. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை திருவாரூர் தேரோடும் வீதி ஒன்றில் சைக்கிளில் வேகமாக போய்க்கொண்டு இருந்தேன். வழியில் ஒருவர் லிப்ட் கேட்டார். என்னைய வெச்சு மிதிக்கிறதுக்குள்ளயே மூச்சு வாங்குது...இதுல எக்ஸ்ட்ரா லக்கேஜ் வேறயா என்று அலட்சியப்படுத்திவிட்டு அவரைக் கடந்த நொடிதான் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதைக் கண்டேன். சட்டென்று மனதில் உறுத்தல் ஏற்பட்டு அவரை அழைத்துக்கொள்ளலாம் என்று திரும்பிய போது யாரோ ஒருவர் தன் மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டதைப் பார்த்ததும் எனக்கு ஏமாற்றமாயிற்று. அடுத்த சில நாட்கள் அவருக்கு உதவ முடியாமல் போயிற்றே என்று வருத்தத்துடன் தான் கழிந்தது. நீ என்னத்த பெருசா கிழிச்சுட்ட என்று என் மன சாட்சி என்னை கேள்வி கேட்கக்கூடிய இந்த சம்பவத்தை தூசி தட்டி என் நினைவுக்கு கொண்டு வந்த ஆழமான கவிதை இது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. மிக அருமை ராமலெக்ஷ்மி. வாழ்த்துக்கள் கீற்று வெளியீட்டுக்கு..:)

  ReplyDelete
 23. பாச மலர் / Paasa Malar said...
  //எதார்த்தம்..நாம் எங்கேயோ எப்போதோ சந்தித்த அனுபவம் போல் உள்ளது..வாழ்த்துகள்..//

  நன்றி மலர்.

  ReplyDelete
 24. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //அருமையான கவிதை.
  பாராட்டுக்கள்.//

  கருத்துப் பகிர்வுக்கு நன்றிங்க vgk.

  ReplyDelete
 25. பிரசாத் வேணுகோபால் said...
  //அருமை அக்கா... சிம்ப்ளி சூப்பர்ப்... படித்து முடித்த பின்னும் கடைசி வரிகள் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது...//

  நன்றி பிரசாத்.

  ReplyDelete
 26. சந்ரு said...
  //அழகிய வரிகள்..//

  நன்றி சந்ரு.

  ReplyDelete
 27. S.Menaga said...
  //அருமை அக்கா!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 28. ஹேமா said...
  //ம்...இதுதான் சாபம் !//

  கருத்துக்கு நன்றி ஹேமா.

  ReplyDelete
 29. ஸ்ரீராம். said...
  //வரமாய் வாங்கும் சாபம்...!//

  இதுவும் சரியே. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 30. "உழவன்" "Uzhavan" said...
  //அட்டகாசம் :-)//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 31. தமிழ் உதயம் said...
  //உண்மை. கொடுத்தால் தான் எதுவும் கிடைக்கும்.//

  ஆம், நன்றி தமிழ் உதயம்/

  ReplyDelete
 32. மதுரை சரவணன் said...
  //arumai... vaalththukkal//

  நன்றி சரவணன்.

  ReplyDelete
 33. ஸாதிகா said...
  //அருமையான கவிதை//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 34. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நல்ல கவிதை... வெப்ப மனதில் வெந்து போயின மலர்கள்//

  மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 35. Lakshmi said...
  //அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க லக்ஷ்மி.

  ReplyDelete
 36. மோகன் குமார் said...
  //என்னமா யோசிக்கிறீங்க !!//

  நன்றி மோகன் குமார்:)!

  ReplyDelete
 37. சே.குமார் said...
  //எதார்த்தம்...//

  நன்றி குமார்.

  ReplyDelete
 38. June 22, 2011 10:39 AM
  தமிழரசி said...
  //கற்பனை செய்துக் கொண்டே படித்தேன் லஷ்மி..கவிதை அருமை...//

  வாங்க தமிழரசி. மிக்க நன்றி.

  ReplyDelete
 39. kathir said...
  //அபாரம்!//

  மிக்க நன்றி கதிர்.

  ReplyDelete
 40. இராஜராஜேஸ்வரி said...
  //தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.//

  அன்புக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 41. GEETHA ACHAL said...
  //ரொம்ப நல்லா இருக்கு...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

  ReplyDelete
 42. கீதா said...
  //காட்சியைக் கண்முன் நிறுத்தி கருவைப் படம்பிடித்துக் காட்டிய கவிதை.//

  வாங்க கீதா. மிக்க நன்றி.

  ReplyDelete
 43. சசிகுமார் said...
  //அருமை...
  tamilmanam- 7//

  நன்றி சசிகுமார், ஏழுக்கும்:)!

  ReplyDelete
 44. அமைதி அப்பா said...
  //நல்ல கவிதை!//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 45. வல்லிசிம்ஹன் said...
  //கோவிலும் கிழவியும் தங்கவெள்ளி மலர்களும் கண் முன் நிற்கின்றன. அருமை ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 46. goma said...
  //இப்படியே மலர்களும் மனிதனைத் தண்டிக்க முற்பட்டால்,வெறும் குச்சியும் மட்டையுமே மிஞ்சும்...அதற்குள் மனிதன் ,உண்மையான பக்தியை உணரட்டும்,//

  உண்மைதான், ஏற்கனவே இயற்கை பலவிதங்களில் தன் மறுப்பைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. வானம் பொழியவும் பூமி விளையவும் மனிதன் மனதில் இருக்க வேண்டும் ஈரம். மிக்க நன்றி.

  ReplyDelete
 47. நானானி said...
  //pookkalin saabham alla...pookkalin varuththam. very nice.//

  இந்தப் பார்வை அருமை. மிக்க நன்றி.

  ReplyDelete
 48. அன்புடன் மலிக்கா said...
  //மிக அருமையாக இருக்கிறது கவிதை. கடைசி வரிகள் சூப்பர் வாழ்த்துகள்..//

  வாங்க மலிக்கா. மிக்க நன்றி.

  ReplyDelete
 49. சரண் said...
  // என் மன சாட்சி என்னை கேள்வி கேட்கக்கூடிய இந்த சம்பவத்தை தூசி தட்டி என் நினைவுக்கு கொண்டு வந்த ஆழமான கவிதை இது.//

  முதல் பின்னூட்டத்தில் பாசமலர் சொல்லியிருப்பது போல எல்லோருக்குமே எங்கோ சந்தித்த அனுபவம்தான்.

  //வாழ்த்துக்கள்.//

  நன்றி சரண்.

  ReplyDelete
 50. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அருமை ராமலெக்ஷ்மி. வாழ்த்துக்கள் கீற்று வெளியீட்டுக்கு..:)//

  மிக்க நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 51. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  ReplyDelete
 52. அருமையா கவிதை!... வாழ்த்துக்கள் உங்களுக்கு.......

  ReplyDelete
 53. @ அம்பாளடியாள்,

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 54. @ கவிநயா,

  நன்றி கவிநயா!

  ReplyDelete
 55. வித்தியாசமான சிந்தனையில் அருமை.

  இப்போதெல்லாம் மருந்தைஅடித்து பூக்கவைத்துவிடுவார்களே :))

  ReplyDelete
 56. தங்க,வெள்ளி பூக்களுடன் ஏழை பூக்கார அம்மாவின் பூவையும் கொஞ்சம் வாங்கி இறைவனுக்கு அர்ச்சனை செய்து இருந்தால் இறைவன் மகிழ்ந்து இருப்பார்.

  ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதை அறியாத மனிதன்.


  கவிதை அருமை ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 57. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin