வெள்ளி, 4 மார்ச், 2011

ராணித் தேனீ - நவீன விருட்சத்தில்..


தேனீக்கள் பற்றிய புதியபாடம்
நாளைக்கு

ஆசிரியர் நடத்தும் முன்
வாசித்துச் செல்லும் பழக்கம்
செல்வராணிக்கு

குடும்பமாய் வாழும் தேனீக்கள்..
குடும்பத்தின் தலைவி ராணித்தேனீ ’

படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது
ராணித் தேனீ

“எப்போடி வந்தே, சாப்பிட்டியா?”
உழைத்த களைப்பைக்
குரலில் காட்டாமல் கேட்டாள்
வீட்டுக்குள் நுழைந்த அம்மா.

ராணியாக வளரவேண்டிய
புழுவுக்கான அறை
பிரத்தியேகமானது..
நிலக்கடலை வடிவில்
அழகிய கிண்ணம் போன்றது’

“எந்திரிடி போயீ திண்ணயில
உக்காந்து படி”
உதைத்துத் துரத்தினார்
போதையில் வந்த அப்பா.

ராஜாக்களின் வேலை
உண்பது உறங்குவது
இனம் பெருக உதவுவது..
இவற்றுக்குக்
கொடுக்குகள் கிடையாது’

"அய்யோ விடு
புள்ளை பரீச்சைக்கி கட்ட
வச்சிருக்கம்யா”
உள்ளே பாத்திரங்களின் உருளல்
அம்மாவின் அலறல்

“சம்பாதிக்கற திமிராடி
பொட்டக்குட்டி படிச்சு
என்னாத்தக் கிழிக்கப் போவுது”
அப்பாவின் உறுமல்
மீண்டும் டாஸ்மாக் நோக்கி
நகர்ந்தன அவர் கால்கள்

ஞ்சகாலத்தில் வெளியே
தள்ளப் படுவார்கள்
சோம்பேறி ராஜாக்கள்’

எத்தனை முறை வாசித்தாலும்
இதுமட்டும் மனதில் ஏறாமல்

கேட்கத் தொடங்கியிருந்தது
அம்மாவின் கேவல்

மேலே படிக்க இயலாத
செல்வராணியின் கண்களிலிருந்து
மெல்ல வழிந்திறங்கிய நீர்த்துளிகள்
புத்தகத்தில் விழுந்து நிற்க

முதன் முறையாய்
உப்புக் கரித்தத் திரவத்தை
உறிஞ்சிச் சுவைத்த ராணித்தேனீ..

நன்றி சொல்லியது கடவுளுக்கு
ராஜாத் தேனீக்களுக்குக்
கொடுக்குகள் தராததற்கு.
***

படம்: இணையத்திலிருந்து..


இன்றைய நவீன விருட்சத்தில்
.., நன்றி நவீன விருட்சம்!

59 கருத்துகள்:

  1. >>>
    நன்றி சொல்லியது கடவுளுக்கு
    ராஜாத் தேனீக்களுக்குக்
    கொடுக்குகள் தராததற்கு.

    கிளாசிக் டச்சிங்க்

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்றதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னால மேடம்.. இபோவெல்லாம் பெண்கள் தான் மிரட்டறாங்க..


    எனிவே கவிதை கலக்கல்

    பதிலளிநீக்கு
  3. எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க,பாராட்டுக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  4. :(((

    பெண்கள் பாவம் தான். முன்பை விட நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறதே ஒழிய, முழுக்க மாறலை.

    ஆமாம் எங்களை எல்லாம் மதிச்சு நேரா உங்க ப்ளாகில் எப்ப தான் எழுதுவீங்க? (இது சும்மா கலாய்க்க..சீரியசா எடுத்துக்காதீங்க)

    பதிலளிநீக்கு
  5. கவிதை நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. அக்கா, உங்களால் மட்டும் தான் இப்படி எழுத முடியும். சூப்பர்! பாராட்டுக்கள், அக்கா!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமை ராமலெக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  8. \\நன்றி சொல்லியது கடவுளுக்கு
    ராஜாத் தேனீக்களுக்குக்
    கொடுக்குகள் தராததற்கு.\\

    அருமை

    பதிலளிநீக்கு
  9. அருமை சகா, வாழ்த்துகள்!

    // ஆமாம் எங்களை எல்லாம் மதிச்சு நேரா உங்க ப்ளாகில் எப்ப தான் எழுதுவீங்க?//

    அதானே மோகன்,. :-))

    பதிலளிநீக்கு
  10. குதிரையிலேறி இரண்டுகளங்களில் பயணித்த நல்லதோர் அனுபவ சித்திரம்

    பதிலளிநீக்கு
  11. அக்கா..

    திண்ணையில சிறுமி.. கண்ணுக்குள்ளவே இருக்கிறா..

    பதிலளிநீக்கு
  12. மிக அருமை!!! கவிதையின் முடிவு இன்னும் அருமை!

    பதிலளிநீக்கு
  13. நான் அந்த வேலைக்கார தேனீக்கள் பத்தி நெறையா யோசிப்பதுண்டு. என்ன ஒரு தியாக மனப்பான்மைனு. ராணியப் பத்தி (கொடுக்கு உண்டு என்றும், கொட்டினால் ராணி உயிருக்கு ஆபத்து இல்லைனும்) இப்போத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!

    இணையத்தில் நான் கற்றுக்கொண்டது!


    ---------------
    Yes, a queen bee can sting.

    A worker bee has a barbed sting so can only sting once because the sting and venom sac is left in the victim when the bee pulls away. The queen has a smooth sting which she can withdraw, so she can potentially sting several times.

    However, under normal circumstances you are unlikely to be stung by a queen. Soon after a new queen hatches, she goes on a mating flight where she will climb well above head height followed by the drones (male bees). After mating she returns to the hive and will not leave it again unless the colony decides to swarm to find a new home.

    Within a swarm the queen would be closely guarded by the worker bees. She would not be flying free and able to sting anyone.
    ----------------

    நல்ல கவிதைங்க, ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  14. வாழ்வின் இயல்பு நிலை கவிதையில்.
    ரொம்ப நல்லாயிருக்கு அக்கா !

    பதிலளிநீக்கு
  15. வா..ஹ்ஹ்ஹ்ஹ்..ழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. ஹ்ம்.. ராணீத்தேனீ கத்துக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு... :( நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  17. நன்றாக இருக்கு தேனீ வாழ்வு...

    பதிலளிநீக்கு
  18. வாழ்வின் யதார்த்த நிலையை வலியுடன்
    வாசித்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  19. அசத்தலனா கவிதைகளில் இதுவும் ஒன்று!!!!

    பதிலளிநீக்கு
  20. "ஆசிரியர் நடத்தும் முன்
    வாசித்துச் செல்லும் பழக்கம்
    செல்வராணிக்கு"//

    இது மாணவர்களுக்கான நல்ல அறிவுரை.

    கவிதை எப்பொழுதும் போல் நன்றுதான்.

    பதிலளிநீக்கு
  21. முத்தாய்ப்பாய்க் கடைசி வரி. டாப்.

    பதிலளிநீக்கு
  22. க(வி)தைகளில் நீங்கதான் ராணி
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  23. சி.பி.செந்தில்குமார் said...
    ***/நன்றி சொல்லியது கடவுளுக்கு
    ராஜாத் தேனீக்களுக்குக்
    கொடுக்குகள் தராததற்கு.

    கிளாசிக் டச்சிங்க்/***

    நன்றி செந்தில் குமார்.

    /நீங்க சொல்றதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னால மேடம்.. இபோவெல்லாம் பெண்கள் தான் மிரட்டறாங்க../

    செல்வராணியைப் போல பரிதவிக்கும் குழந்தைகள் இன்றும் உள்ளார்கள். இது போன்ற குடும்ப சூழல்களும் தொடர்ந்தபடியேதான் உள்ளன.

    பதிலளிநீக்கு
  24. தமிழ் உதயம் said...
    //மனதை பாதித்த கவிதை.//

    நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  25. S.Menaga said...
    //எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க,பாராட்டுக்கள் அக்கா!!//

    மிக்க நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  26. மோகன் குமார் said...
    //:(((

    பெண்கள் பாவம் தான். முன்பை விட நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறதே ஒழிய, முழுக்க மாறலை.//

    முழுக்க மாறவில்லை என்பதே உண்மை மோகன் குமார்.

    //ஆமாம் எங்களை எல்லாம் மதிச்சு நேரா உங்க ப்ளாகில் எப்ப தான் எழுதுவீங்க? (இது சும்மா கலாய்க்க..சீரியசா எடுத்துக்காதீங்க)//

    சமயம் பார்த்து சாடும் விதம் சூப்பரா இருக்கே:)!

    பதிலளிநீக்கு
  27. கோமதி அரசு said...
    //கவிதை நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  28. Chitra said...
    //அக்கா, உங்களால் மட்டும் தான் இப்படி எழுத முடியும். சூப்பர்! பாராட்டுக்கள், அக்கா!//

    மிக்க நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  29. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிகவும் அருமை ராமலெக்ஷ்மி..//

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  30. அமைதிச்சாரல் said...
    //அசத்தலான கவிதை ராமலஷ்மி..//

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  31. அம்பிகா said...
    ***\\நன்றி சொல்லியது கடவுளுக்கு
    ராஜாத் தேனீக்களுக்குக்
    கொடுக்குகள் தராததற்கு.\\

    அருமை//***

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  32. பா.ராஜாராம் said...
    ***அருமை சகா, வாழ்த்துகள்!

    // ஆமாம் எங்களை எல்லாம் மதிச்சு நேரா உங்க ப்ளாகில் எப்ப தான் எழுதுவீங்க?//

    அதானே மோகன்,. :-))//***

    எழுதிட்டா போச்சு:))! நன்றி பா ரா!!

    பதிலளிநீக்கு
  33. Kanchana Radhakrishnan said...
    //கவிதை அருமை ராமலெக்ஷ்மி.//

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  34. குமரி எஸ். நீலகண்டன் said...
    //குதிரையிலேறி இரண்டுகளங்களில் பயணித்த நல்லதோர் அனுபவ சித்திரம்//

    மிக்க நன்றி நீலகண்டன், நவீன விருட்சத்தில் அளித்திருந்த கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  35. சுசி said...
    //அக்கா..

    திண்ணையில சிறுமி.. கண்ணுக்குள்ளவே இருக்கிறா..//

    மிக்க நன்றி சுசி. இது போன்ற சிறுமிகளின் வாழ்வு சீராகிடப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  36. ஸாதிகா said...
    //அருமை..//

    மிக்க நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  37. குட்டிப்பையா|Kutipaiya said...
    //மிக அருமை!!! கவிதையின் முடிவு இன்னும் அருமை!//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  38. அன்புடன் அருணா said...
    //Nice one!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  39. goma said...
    //நல்ல கவிதை... வா..ஹ்ஹ்ஹ்ஹ்..ழ்த்துக்கள்//

    மிக்க நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  40. வருண் said...
    //நான் அந்த வேலைக்கார தேனீக்கள் பத்தி நெறையா யோசிப்பதுண்டு. என்ன ஒரு தியாக மனப்பான்மைனு. ராணியப் பத்தி (கொடுக்கு உண்டு என்றும், கொட்டினால் ராணி உயிருக்கு ஆபத்து இல்லைனும்) இப்போத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!

    இணையத்தில் நான் கற்றுக்கொண்டது!
    ............
    நல்ல கவிதைங்க, ராமலக்ஷ்மி! :)//

    பகிர்வுக்கு நன்றி. மின் குழுமம் ஒன்றில் தேனீக்களைப் பற்றியதான் ஒரு கட்டுரையை வாசித்த போது எழுந்த யோசனையின் விளைவே இக்கவிதை. அவற்றின் வாழ்க்கை முறை யாவும் வியப்புக்குரியது. உண்மைதான், வேலைக்காரத் தேனீக்கள் தியாகிகள்தான்! நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  41. மதுரை சரவணன் said...
    //arumai... vaalththukkal . antha kataisi vari .. super//

    நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  42. ஹேமா said...
    //வாழ்வின் இயல்பு நிலை கவிதையில்.
    ரொம்ப நல்லாயிருக்கு அக்கா !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  43. கவிநயா said...
    //ஹ்ம்.. ராணீத்தேனீ கத்துக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு... :( நல்ல கவிதை.//

    ஆம் கவிநயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  44. மாதேவி said...
    //நன்றாக இருக்கு தேனீ வாழ்வு...//

    மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  45. இராஜராஜேஸ்வரி said...
    //வாழ்வின் யதார்த்த நிலையை வலியுடன்
    வாசித்த வரிகள்.//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  46. ஈரோடு கதிர் said...
    //அசத்தலனா கவிதைகளில் இதுவும் ஒன்று!!!!//

    மிக்க நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  47. அமைதி அப்பா said...
    ***"ஆசிரியர் நடத்தும் முன்
    வாசித்துச் செல்லும் பழக்கம்
    செல்வராணிக்கு"//

    இது மாணவர்களுக்கான நல்ல அறிவுரை.

    கவிதை எப்பொழுதும் போல் நன்றுதான்.//***

    அறிவுரையாய் நினைத்து சொல்லாவிட்டாலும் உங்கள் சிந்தனையில் சிறப்பிடம் பிடித்து விட்டுள்ளது அவ்வரி. நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  48. ஹுஸைனம்மா said...
    //அருமையாருக்குக்கா.//

    நன்றி ஹூஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  49. ஸ்ரீராம். said...
    //முத்தாய்ப்பாய்க் கடைசி வரி. டாப்.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  50. சகாதேவன் said...
    //க(வி)தைகளில் நீங்கதான் ராணி//

    மிக்க நன்றி உங்கள் அன்புக்கு:)!

    பதிலளிநீக்கு
  51. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin