புதன், 22 டிசம்பர், 2010

உன்னோடு நீ..


பெருங்கிளையின் சிறுமுனையில்
வீற்றிருக்கிறது தேன்சிட்டு
உற்சாகமாய்

அவ்வப்போது
வண்ண மலர்களுக்குத் தாவி
மதுவருந்தி ஊஞ்சலாடிக் கரணமடித்து
மீண்டும் சிறுமுனை திரும்பி
கூவிக் கொண்டிருக்கிறது
கொஞ்சலாய்

ரசித்தபடி தனித்திருந்த முதியவரின்
இதழ்கடையோரம் பூத்து வழிந்தது
எதற்கோ புன்முறுவல்

'பார்ப்பவர் பரிகசிப்பார்
பார்த்து பெரியவரே'
ஏளனம் செய்தவனை
இரக்கத்துடன் ஏறிட்டார்

“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்

அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்

பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

என்னை நீயும் உன்னை நானும்
பார்வையால்.. சொல்லால்.. கூட
தாக்காது இருக்க”

கசிந்து வழிந்தது
பிறப்பின் அர்த்தம்
பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்

அண்டம் நிறைத்தது
வாழ்வின் அனுபவம்
புல்லாங்குழல் துளைவழிக் காற்றாய்.

சிறகுகள் விரித்து 
வானில் பறக்கிறது தேன்சிட்டு 
உல்லாசமாய்.

அழைத்த அலைபேசியை
அவசரமாய் அணைத்து விட்டு
சிலிர்த்து விரிக்கிறான் சிறகை

முதன்முறையாய்
தன்னைத் தான் சந்திக்க..
தன்னோடு தான் இருக்க..
***


12 டிசம்பர் 2010, திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை.

86 கருத்துகள்:

  1. சிந்திக்க வைத்த கவிதை.அருமை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.. சிந்திக்கவும் வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. ****அழைத்த அலைபேசியை
    அவசரமாய் அணைத்து விட்டு
    சிலிர்த்துச் சிறகு விரிக்கிறான்

    முதன்முறையாய்
    தன்னைத் தான் சந்திக்க..
    தன்னோடு தான் இருக்க..***

    ஏனோ புன்னகை புரிகிறேன், இதை வாசிக்கும்போது.

    உங்க தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  4. // “கருணை வைத்து உன்னோடு நீ
    இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

    அனுசரணையாய் அளவளாவ
    ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

    இருந்து பார் பேசிப் பார்
    கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

    காட்டித் தரும் அதுவே
    ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
    உன்னை உனக்கு அடையாளம் //

    இந்த வாரம் கல்கியில் காஞ்சிப்பெரியவர் உரைகளிலிருந்து
    திருப்பணி என்ன ? என்பது பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறார்.
    திரு என்றால் இறைவன். அவனுக்குச் செய்யும் பணி திருப்பணி.
    அந்த திருப்பணி என்ன ? நம்மோடு வாழும் அனைத்து உயிர்கள் மேலும்
    அன்பு பூண்டு ஒழுகுதல் . அதற்கென நம் நாளில் ஒரு நேரம், ஒரு மணித்துளி
    உங்களால் ஒதுக்கி நம்மால் என்ன செய்ய இயலும் என நினைத்து அதைச் செய்வதே
    திருப்பணி என்கிறார்கள்.

    நம் உள்ளிருக்கும் ஆன்மாவை நமக்கே அறிமுகம் படுத்த, உன்னை உனக்கே
    அடையாளம் காட்ட ..

    மறுபடியும் மேலே இருந்து படியுங்கள்.
    " கருணை வைத்து உன்னோடு நீ........."

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspsot.com

    பதிலளிநீக்கு
  5. கருணை வைத்து உன்னோடு நீ
    இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்//
    ரொம்ப பிடிச்சது ராமலக்‌ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  6. அர்த்த‌ங்க‌ள் பொதிந்த‌து.. வார்த்தை கோர்ப்பு ந‌ல்லாயிருக்கு..(சும்மாவா வெச்சாங்க‌ த‌லைப்பு 'முத்துச்ச‌ர‌ம்'னு :) ) இப்ப‌டி அடிக்க‌டி கோர்க்க‌ வாழ்த்துக்க‌ள்..

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதைங்க... அன்புதானே அனைத்தின் அடிநாதமும்..

    பதிலளிநீக்கு
  8. http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

    கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

    நூல் வெளியிடுவோர்:
    ஓவியர் மருது
    மருத்துவர் ருத்ரன்

    சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
    தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

    நாள்: 26.12.2010

    நேரம்: மாலை 5 மணி

    இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

    அனைவரும் வருக !

    பதிலளிநீக்கு
  9. ||தன்னைத் தான் சந்திக்க..
    தன்னோடு தான் இருக்க||

    இது மட்டும் போதும், வாழ்க்கை புரியும், இனிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. தேடிக் கோர்த்த வார்த்தைகள் முத்துச்சரம்தான்.
    அருமையாயிருக்கு அக்கா !

    பதிலளிநீக்கு
  11. வார்த்தைகளில் கோர்த்த கவிதை பிரமாதம். ஆனால் மனிதன் தன்னோடு தானே பேசிக் கொள்வதுதானே அதிகம்? தன்னைத் தேடுவது தனக்கான அன்பிற்காய் ஏங்குவதும்தானே எப்போதும் நடப்பது..?

    //"காட்டித் தரும் அதுவே
    ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
    உன்னை உனக்கு அடையாளம்"//

    இந்த வரிகளில் கொஞ்சம் புரிகிறது மேலே வந்த கேள்விக்கு பதில்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்வைத் தொலைக்காமலிருக்க சொன்னவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  13. \\கசிந்து வழிந்தது
    பிறப்பின் அர்த்தம்
    பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்\\

    சிந்திக்க வைத்த கவிதை.அருமை

    பதிலளிநீக்கு
  14. கவிதைகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன! தலைப்பும் அருமை, கவிதையைப் போலவே. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  15. அருமை. வார்த்தை சிக்கனம் காண முடிகிறது இக்கவிதையில்

    பதிலளிநீக்கு
  16. அமைதிச்சாரல் said...
    //அற்புதமான கவிதை ராமலஷ்மி..//

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  17. goma said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றிகள் கோமா.

    பதிலளிநீக்கு
  18. asiya omar said...
    //சிந்திக்க வைத்த கவிதை.அருமை.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  19. வெறும்பய said...
    //அருமையான கவிதை.. சிந்திக்கவும் வைக்கிறது...//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  20. வருண் said...
    //****அழைத்த அலைபேசியை
    அவசரமாய் அணைத்து விட்டு
    சிலிர்த்துச் சிறகு விரிக்கிறான்

    முதன்முறையாய்
    தன்னைத் தான் சந்திக்க..
    தன்னோடு தான் இருக்க..***

    ஏனோ புன்னகை புரிகிறேன், இதை வாசிக்கும்போது.

    உங்க தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு!//

    மிக்க நன்றி வருண்:)!

    பதிலளிநீக்கு
  21. sury said...
    ***// “கருணை வைத்து உன்னோடு நீ
    இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

    அனுசரணையாய் அளவளாவ
    ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

    இருந்து பார் பேசிப் பார்
    கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

    காட்டித் தரும் அதுவே
    ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
    உன்னை உனக்கு அடையாளம் //

    இந்த வாரம் கல்கியில் காஞ்சிப்பெரியவர் உரைகளிலிருந்து
    திருப்பணி என்ன ? என்பது பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறார்.
    திரு என்றால் இறைவன். அவனுக்குச் செய்யும் பணி திருப்பணி.
    அந்த திருப்பணி என்ன ? நம்மோடு வாழும் அனைத்து உயிர்கள் மேலும்
    அன்பு பூண்டு ஒழுகுதல் . அதற்கென நம் நாளில் ஒரு நேரம், ஒரு மணித்துளி
    உங்களால் ஒதுக்கி நம்மால் என்ன செய்ய இயலும் என நினைத்து அதைச் செய்வதே
    திருப்பணி என்கிறார்கள்.

    நம் உள்ளிருக்கும் ஆன்மாவை நமக்கே அறிமுகம் படுத்த, உன்னை உனக்கே
    அடையாளம் காட்ட ..

    மறுபடியும் மேலே இருந்து படியுங்கள்.
    " கருணை வைத்து உன்னோடு நீ........."//

    அருமையான இந்தப் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    மூன்று அன்புச் செய்திகளில் ஒன்றாக இக்கவிதையின் வரிகளை இடம்பெறச் செய்த தங்கள் நேற்றைய பதிவுக்கு என் வணக்கங்கள் சார்.

    பதிலளிநீக்கு
  22. எல் கே said...

    //நல்லக் கவிதை//

    நன்றி எல் கே.

    பதிலளிநீக்கு
  23. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //கருணை வைத்து உன்னோடு நீ
    இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்//
    ரொம்ப பிடிச்சது ராமலக்‌ஷ்மி :)//

    நாம கருணை வச்சாதான் அது சாத்தியம், இல்லையா:)? நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  24. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //அருமை. வாழ்த்துக்கள் மேடம்.//

    நன்றிகள் புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  25. அஹமது இர்ஷாத் said...
    //அர்த்த‌ங்க‌ள் பொதிந்த‌து.. வார்த்தை கோர்ப்பு ந‌ல்லாயிருக்கு..(சும்மாவா வெச்சாங்க‌ த‌லைப்பு 'முத்துச்ச‌ர‌ம்'னு :) ) இப்ப‌டி அடிக்க‌டி கோர்க்க‌ வாழ்த்துக்க‌ள்..//

    கோர்க்கிறேன்:)! நன்றிகள் இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  26. தமிழ் உதயம் said...
    //நல்லா இருக்குங்க.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  27. Bharkavi said...
    //ரொம்ப நல்லா இருக்கு! :)//

    வாங்க பார்கவி. மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  28. க.பாலாசி said...
    //நல்ல கவிதைங்க... அன்புதானே அனைத்தின் அடிநாதமும்..//

    ஆம். அதைக் கேட்க முடிந்து விட்டால் போதும். நன்றிகள் பாலாசி.

    பதிலளிநீக்கு
  29. sakthi said...
    //வரிகள் வெகு அழகு :)//

    மிக்க நன்றி சக்தி.

    பதிலளிநீக்கு
  30. ஈரோடு கதிர் said...
    ***||தன்னைத் தான் சந்திக்க..
    தன்னோடு தான் இருக்க||

    இது மட்டும் போதும், வாழ்க்கை புரியும், இனிக்கும்.***

    சரியாய் சொன்னீர்கள். நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  31. ஹேமா said...
    //தேடிக் கோர்த்த வார்த்தைகள் முத்துச்சரம்தான்.
    அருமையாயிருக்கு அக்கா !//

    நன்றிகள் ஹேமா.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். said...
    //வார்த்தைகளில் கோர்த்த கவிதை பிரமாதம். ஆனால் மனிதன் தன்னோடு தானே பேசிக் கொள்வதுதானே அதிகம்? தன்னைத் தேடுவது தனக்கான அன்பிற்காய் ஏங்குவதும்தானே எப்போதும் நடப்பது..?

    //"காட்டித் தரும் அதுவே
    ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
    உன்னை உனக்கு அடையாளம்"//

    இந்த வரிகளில் கொஞ்சம் புரிகிறது மேலே வந்த கேள்விக்கு பதில்!//

    நம்மை நாம் தேடுவதை சரியான பாதையில் தேடுகிறோமா என்பதுவும் கேள்வியே. நன்றிகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. "உழவன்" "Uzhavan" said...
    //வாழ்வைத் தொலைக்காமலிருக்க சொன்னவிதம் அருமை.//

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  34. S பாரதி வைதேகி said...
    //அருமை !!//

    தொடரும் வருகைக்கு நன்றி பாரதி வைதேகி:)!

    பதிலளிநீக்கு
  35. Jaleela Kamal said...
    //மிக அருமை//

    வாங்க ஜலீலா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. கனாக்காதலன் said...
    //மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  37. அம்பிகா said...
    ***\\கசிந்து வழிந்தது
    பிறப்பின் அர்த்தம்
    பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்\\

    சிந்திக்க வைத்த கவிதை.அருமை***

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  38. கவிநயா said...
    //கவிதைகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன! தலைப்பும் அருமை, கவிதையைப் போலவே. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)//

    மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.

    பதிலளிநீக்கு
  39. மோகன் குமார் said...
    //அருமை. வார்த்தை சிக்கனம் காண முடிகிறது இக்கவிதையில்//

    கடைப்பிடிக்க முயன்றிடுகிறேன்:)! நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  40. சே.குமார் said...
    //அற்புதமான கவிதை.//

    நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  41. தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  42. அருமையான கவி வரிகள் ...

    அள்ளி கொடுங்க கவிதைகளை ... நாங்கள் துள்ளி பருகிகொள்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  43. அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

    சூரி சாரின் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

    குயில் படமும் அழகு.

    பதிலளிநீக்கு
  44. குயிலின் குரல் இன்னும்...

    அழகான அருமையான உணர்வு

    நல்லதொரு கவிதை

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  45. @ கோமதி அரசு,

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  46. @ திகழ்,

    //குயிலின் குரல் இன்னும்...//

    மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்.

    பதிலளிநீக்கு
  47. மிக எளிமையான வரிகளில்
    மிக வலிமையான எண்ணங்களின் பிரதிபலிப்பு..... இனி நானும் முயல்வேன் என்னோடு நானிருக்க..... கவிதை காலம் வெல்லும்!

    சில காலம் வலைப்பக்கம் வர இயலாத வேலைச்சூழல்......

    உங்க ஆதரவுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  48. சிந்திக்க வைத்த கவிதை....


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  49. //“கருணை வைத்து உன்னோடு நீ
    இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

    அனுசரணையாய் அளவளாவ
    ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

    இருந்து பார் பேசிப் பார்
    கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்//

    இது அத்தனையும் நானும் உணர்கிறேன்
    ராம லக்ஷ்மி அவர்களே
    இனம் இனத்தோடு சேரும், உங்களோடு சேர்ந்திடலாம்
    என்று முடிவெடுத்து விட்டேன்!

    காட்டித் தரும் அதுவே
    ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
    உன்னை உனக்கு அடையாளம்

    அந்நொடி கசியத் தொடங்கும்
    சிறுதுளியன்பு போதும்

    பெருவெள்ளப் பிரவாகமாகி
    பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க//

    பதிலளிநீக்கு
  50. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)

    பதிலளிநீக்கு
  51. திகழ் said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)//

    அப்படியா....?
    எனதினிய நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. மிக அருமை ராமலெக்ஷ்மி.. திண்ணையிலேயே ரசித்தேன்.. தன்னோடு தான் இருக்க..ஹ்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  53. ரா.ல.அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  54. கவிதை அருமை.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  55. சி. கருணாகரசு said...
    //மிக எளிமையான வரிகளில்
    மிக வலிமையான எண்ணங்களின் பிரதிபலிப்பு..... இனி நானும் முயல்வேன் என்னோடு நானிருக்க..... கவிதை காலம் வெல்லும்!//

    கவிதை தங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றிகள் கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  56. Lakshmi said...

    //அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  57. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //சிந்திக்க வைத்த கவிதை....//

    நன்றிகள் ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  58. Meena said...
    //இது அத்தனையும் நானும் உணர்கிறேன்
    ராம லக்ஷ்மி அவர்களே
    இனம் இனத்தோடு சேரும், உங்களோடு சேர்ந்திடலாம்
    என்று முடிவெடுத்து விட்டேன்!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மீனா.

    பதிலளிநீக்கு
  59. திகழ் said...
    //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)//

    அட்வான்ஸாக வாழ்த்தியதோடு நின்றிடாமல் அழகான கவிபாடிப் பதிவிட்டு நெகிழ வைத்து விட்டீர்கள். நன்றிகள் திகழ்!!!

    பதிலளிநீக்கு
  60. சி. கருணாகரசு said...
    //திகழ் said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)//

    அப்படியா....?
    எனதினிய நல் வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் கருணாகரசு. நானானி அவர்கள் பதிவிலும் உங்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன்:)!

    பதிலளிநீக்கு
  61. Sriakila said...
    //கவிதை அருமை!//

    மிக்க நன்றிங்க ஸ்ரீஅகிலா.

    பதிலளிநீக்கு
  62. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அருமை ராமலெக்ஷ்மி.. திண்ணையிலேயே ரசித்தேன்.. தன்னோடு தான் இருக்க..ஹ்ம்ம்ம்//

    நன்றிகள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  63. பாலராஜன்கீதா said...
    //ரா.ல.அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்//

    நலமாக இருக்கிறீர்களா:)? மிக்க நன்றி பாலராஜன்கீதா.

    பதிலளிநீக்கு
  64. ஸாதிகா said...
    //கவிதை அருமை.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

    நன்றிகள் ஸாதிகா:)!

    பதிலளிநீக்கு
  65. அருமையான கவிதை..
    வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  66. @ ஜிஜி,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜிஜி.

    பதிலளிநீக்கு
  67. சிந்திக்க வைத்த அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் ராமுமேடம்

    பதிலளிநீக்கு
  68. அன்புடன் மலிக்கா said...
    //சிந்திக்க வைத்த அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் ராமுமேடம்//

    நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  69. Kanchana Radhakrishnan said...
    //கவிதை.. சிந்திக்க வைக்கிறது...//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  70. //அந்நொடி கசியத் தொடங்கும்
    சிறுதுளியன்பு போதும்

    பெருவெள்ளப் பிரவாகமாகி
    பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

    என்னை நீயும் உன்னை நானும்
    பார்வையால்.. சொல்லால்.. கூட
    தாக்காது இருக்க”
    //

    அழகான கருத்தாழமிக்க கவிதை அக்கா...

    பதிலளிநீக்கு
  71. @ கவிநா,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin