செவ்வாய், 8 ஜூன், 2010

PiT-ன் இந்த வார க்ளிக்-கடல வாங்குங்க


இந்த வார க்ளிக் ஆக எனது ‘கடல வாங்குங்க’ படத்தை Photography-in-Tamil தளம் தேர்வு செய்துள்ளது.

நன்றி PiT! அறிவிப்புப் பதிவில் வாழ்த்தியிருந்த நண்பர்கள் அனைவருக்கும் இங்கும் என் நன்றிகள்.

Flickr தளத்தில் இப்படமும் தொடர்ந்து கிடைத்த பாராட்டுக்களும்.

பரிசுக்குத் தேர்வானது அறிந்து வாழ்த்தி ஃப்ளிக்கர் மெயில் அனுப்பியிருந்த நண்பர் ஜேம்ஸ் வசந்த் “I felt as if I was standing before the vendor ..” எனக் குறிப்பிட்டிருந்தார். உங்களுக்கு எப்பூடின்னு சொல்லுங்க:)! அப்படித்தான் என்றால் ஆழாக்கு கடலையும் மறக்காம வாங்கிக்குங்க. இதோ அழகா உங்களுக்காக பொட்டலம் ரெடியாகுது பாருங்க:



இந்தவாரப் படம் என்பது எப்படித் தேர்வாகிறது என்பது குறித்து முன்னர் வெற்றி பெற்ற போது நான் இட்ட பதிவு இங்கே. “இது வேறயா? பரிசுக்குத் தேர்வானது இரண்டாவது தடவைன்னு கடலையை உடைக்கிற மாதிரி உடைச்சு சொல்லிட்டுப் போலாமே’ங்கறீங்களா? ஹி.. ரைட்! விடு ஜூட்:)!

63 கருத்துகள்:

  1. கூடை, படி, கடலை பொட்டலம் நிஜத்தினில் பார்த்த நாட்கள் வெகுதொலைவில் சென்றுவிட்டன/விட்டுவந்துவிட்டேன் என்பது மட்டும் புரிகிறது படத்தினை காணுகையில் !

    பதிலளிநீக்கு
  2. யதார்த்தமான படம்....

    அந்தம்மா வாயில புகையில மாதிரி எதையோ அடக்கியிருக்கோ!!!

    பதிலளிநீக்கு
  3. எங்க கேமராவில எடுத்தாலும், இப்படி படம் வருமா மேடம்?
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்...ஜேம்ஸ் வசந்தின் கருத்தை வழி மொழிகிறேன்... இந்த புகைப் படம் எடுக்கப் பட்டபோது அந்தப் பெண்ணின் மனதில் என்ன தோன்றியிருக்கும்...கண்களில் கேள்வி தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  5. ஆயில்யன் said...
    //கூடை, படி, கடலை பொட்டலம் நிஜத்தினில் பார்த்த நாட்கள் வெகுதொலைவில் சென்றுவிட்டன/
    விட்டுவந்துவிட்டேன் என்பது மட்டும் புரிகிறது படத்தினை காணுகையில் !//

    இப்படி வாங்கி உடைத்து சாப்பிடுவது ஒரு தனிச் சுவை, இனிய அனுபவமாய். பகிர்வுக்கு நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  6. அன்புடன் அருணா said...

    // பூங்கொத்து ராமலக்ஷ்மி! //

    நன்றிகள் அருணா.

    பதிலளிநீக்கு
  7. ஈரோடு கதிர் said...

    // யதார்த்தமான படம்....

    அந்தம்மா வாயில புகையில மாதிரி எதையோ அடக்கியிருக்கோ!!!//

    நன்றி கதிர். அப்படித்தான் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  8. அஹமது இர்ஷாத் said...

    //வாழ்த்துக்கள்...//

    நன்றி இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  9. Chitra said...
    //Congratulations! very nice photo.//

    So nice of you. Thank you Chitra:)!

    பதிலளிநீக்கு
  10. அமைதி அப்பா said...
    //எங்க கேமராவில எடுத்தாலும், இப்படி படம் வருமா மேடம்?
    வாழ்த்துக்கள்.//

    பாராட்டாய் வந்திருக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம். said...
    //வாழ்த்துக்கள்...ஜேம்ஸ் வசந்தின் கருத்தை வழி மொழிகிறேன்... இந்த புகைப் படம் எடுக்கப் பட்டபோது அந்தப் பெண்ணின் மனதில் என்ன தோன்றியிருக்கும்...கண்களில் கேள்வி தெரிகிறது...//

    நன்றி ஸ்ரீராம். இந்தப் பெண்மணி பொட்டலம் சுருட்டும் நேர்த்தியைதான் முதலில் க்ளிக்கினேன்[கொடுத்திருக்கும் ஃப்ளிக்கர் சுட்டியில் அதையும் பார்க்கலாம்.].‘ என் முகத்தையும் சேர்த்துப் புடிம்மா’ன்னு போஸ் கொடுத்தாங்க. ‘நல்லாப் புடிப்பாங்களோ மாட்டாங்களோ’ன்னு கூட நினைத்திருக்கலாம்:)! எடுத்ததை உடனே காட்ட அவர்களுக்கு சந்தோஷமே.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் அக்கா.
    அழகா இருக்கு.

    மூணு வருஷமாச்சு.. இப்டி கடலை சாப்டு.. :((

    பதிலளிநீக்கு
  13. நன்றி ராமலக்ஷ்மி. I have a confession:
    My first visit to your blog inspired me to open my own. :)

    பதிலளிநீக்கு
  14. படம் மிக அழகு... நேர்த்தி
    வெற்றி பெற்றத்திற்கு... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. படம் உணர்வோடு தெளிவாக இருக்கிறது முத்தக்கா.என் கமெராவில் எடுத்தால் இப்பிடி வாறதில்லை !

    பதிலளிநீக்கு
  16. தங்களின் பண்முக திறமை கண்டு ஆச்சரிய பட்டு போகிறோம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. உங்கள் படம் கடலைக்கார அம்மாவுக்கும் சந்தோஷம். எங்களுக்கும் சந்தோஷம்.

    கடலை வாங்கிவிட்டேன். நடந்து கொண்டு உடைத்து , மேல் தோலை ஊதி மூக்கை நீக்கி சாப்பிடும் சுகமே தனி.
    சுட,சுட என்றால் மேலும் சுவை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. படம் மகா துல்லியம் ராமலக்ஷ்மி.
    கால் சுண்டுவிரல் நகத்தின் கருப்பு வரை தெளிவாக படத்தில் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. கடல் இல்லாத ஊரில் கடலை போடும் கண்ணம்மா...

    பதிலளிநீக்கு
  20. கடலைக்காரம்மாவுக்கு என்ன ராயல்டி கொடுத்தீங்க... :-)
    படம் அழகா இருக்கு!

    பதிலளிநீக்கு
  21. வெற்றி பெற்றதற்கு வாங்கிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துகள்.

    புகைப்படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  23. அழகான படம் ராமலஷ்மி. இந்த வாரப்படத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. புகைப்படம் எடுத்த ஷாட் எதார்த்தமா இருக்கு மேடம் மேலும் எடுத்த புகைப்படத்தை மேலும் அழகாகக்க எந்த மென் பொருள் பயன் படுத்துகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  25. உங்களூரு கடலைக்காரி கடலைக்கடந்து பிரபலமாகிவிட்டார்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  26. கூடை, படி, கடலை பொட்டலம் புகைப்படம் மிக அருமை. படத்தினை காணுகையில் யதார்த்தமான படம்....

    பதிலளிநீக்கு
  27. எதார்தங்களை அழகாய் படம் பிடிக்கிறீங்க மேடம் சூப்பர் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  29. எனக்கு கடலை கொடுக்கத்தான் தெரியும் "போடத்" தெரியாது என்று கூறுகிறார்களோ! ;-)

    நன்றாக உள்ளது ராமலக்ஷ்மி.. பொதுவாக இதைப்போல படங்களுக்கான சிறப்பே படம் எடுக்கப்படுபவர்கள் தங்களை எடுத்தது தெரியாமல் இயல்பாக இருப்பதே! நீங்கள் அந்த பெண் கூறியதை கூறி இருந்தாலும் அவருக்கு அந்த படத்தை காட்டி விட்டு அவர் கேமராவை பார்க்காத படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்பது என் (வழக்கமான) கருத்து :-).

    இது என்னுடைய எண்ணம் மட்டுமே மற்றபடி நீங்கள் அடிக்கடி எடுக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாததல்ல.

    பதிலளிநீக்கு
  30. சுசி said...
    //வாழ்த்துக்கள் அக்கா.
    அழகா இருக்கு.

    மூணு வருஷமாச்சு.. இப்டி கடலை சாப்டு.. :((//

    நன்றி சுசி. அடுத்த முறை இந்தியா வரும் போது தேடிச் சாப்பிடுங்க:)!

    பதிலளிநீக்கு
  31. James Vasanth said...
    //நன்றி ராமலக்ஷ்மி. I have a confession:
    My first visit to your blog inspired me to open my own. :)//

    மகிழ்ச்சி ஜேம்ஸ்:)! இரண்டு தினம் முன்னர்தான் உங்கள் ப்ளாக் பார்க்கக் கிடைத்தது. காமிரா பிடித்த கைகள் எழுதுவதை வாசிக்கும் ஆர்வத்தில் இருக்கிறோம். வாழ்த்துக்களும் நன்றிகளும்!!

    பதிலளிநீக்கு
  32. சி. கருணாகரசு said...
    //படம் மிக அழகு... நேர்த்தி
    வெற்றி பெற்றத்திற்கு... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.//

    நன்றி நன்றி நன்றி கருணாகரசு:)!

    பதிலளிநீக்கு
  33. ஹேமா said...
    //படம் உணர்வோடு தெளிவாக இருக்கிறது முத்தக்கா.என் கமெராவில் எடுத்தால் இப்பிடி வாறதில்லை !//

    நன்றி ஹேமா. வலைப்பூவின் பெயராலேயே அழைக்க ஆரம்பித்து விட்டீர்களா:)? உங்கள் காமிராவிலும் நிச்சயம் வரும். அடிக்கடி படங்கள் எடுத்துப் பழகியபடி இருங்கள்.

    பதிலளிநீக்கு
  34. மோகன் குமார் said...
    //தங்களின் பன்முக திறமை கண்டு ஆச்சரிய பட்டு போகிறோம் வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  35. கோமதி அரசு said...
    //உங்கள் படம் கடலைக்கார அம்மாவுக்கும் சந்தோஷம். எங்களுக்கும் சந்தோஷம்.

    கடலை வாங்கிவிட்டேன். நடந்து கொண்டு உடைத்து , மேல் தோலை ஊதி மூக்கை நீக்கி சாப்பிடும் சுகமே தனி.
    சுட,சுட என்றால் மேலும் சுவை.//

    நன்றி கோமதிம்மா. சூடான கடலையெனில் இன்னும் சூப்பர்தான். நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ இதை உடைத்துச் சாப்பிடுவதே ஒரு பொழுது போக்காகப் பார்க்கப் படுகிறது. பெங்களூர் பார்க்குகளில் கடலையை ‘பாஸ் டைம். பாஸ் டைம்’ என்றே கூவி விற்பார்கள்:)!

    பதிலளிநீக்கு
  36. அம்பிகா said...
    //படம் மகா துல்லியம் ராமலக்ஷ்மி.
    கால் சுண்டுவிரல் நகத்தின் கருப்பு வரை தெளிவாக படத்தில் வந்திருக்கிறது.//

    ரொம்ப நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  37. goma said...
    //கடல் இல்லாத ஊரில் கடலை போடும் கண்ணம்மா...//

    நன்றி கோமா!

    பதிலளிநீக்கு
  38. தமிழ் பிரியன் said...
    //கடலைக்காரம்மாவுக்கு என்ன ராயல்டி கொடுத்தீங்க... :-)
    படம் அழகா இருக்கு!//

    திரும்பக் கண்ணில் கிடைத்தால் கட்டாயம் கொடுத்து விடுகிறேன்:)! நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  39. திருவாரூரிலிருந்து சரவணன் said...
    //வெற்றி பெற்றதற்கு வாங்கிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கள்...//

    மிகவும் நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  40. செ.சரவணக்குமார் said...
    //வாழ்த்துகள்.

    புகைப்படம் மிக அருமை.//

    நன்றிகள் சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  41. அமைதிச்சாரல் said...
    //அழகான படம் ராமலஷ்மி. இந்த வாரப்படத்துக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் சாரல்.

    பதிலளிநீக்கு
  42. ஜெஸ்வந்தி said...
    //Very realistic and clear photo. Congrats.//

    மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  43. வேர் கடலை வித்தானது
    விளைவில் ஒற்றுமைக்கு
    ஒரு எடுத்துக்காட்டானது
    ஒரு பானை சோற்றுக்கு

    இப்படம் ஒரு பதமானது
    இயல்பான ஒரு க்ளிக்கில்
    என் மனதும் பித்தானது
    ஏழ்மையின் செம்மையில்

    பார்த்தவர் பாராட்டுவது
    பொட்டலம் மடித்த கை
    முத்தாய் படம் பிடித்து
    முடிசூடிய பெருந்தகை!


    என்றும் அன்புடன்
    தமாம் பாலா

    பதிலளிநீக்கு
  44. ப்ரியமுடன்...வசந்த் said...
    //புகைப்படம் எடுத்த ஷாட் எதார்த்தமா இருக்கு மேடம் மேலும் எடுத்த புகைப்படத்தை மேலும் அழகாகக்க எந்த மென் பொருள் பயன் படுத்துகிறீர்கள்?//

    நன்றி வசந்த். அட்வான்ஸ்ட் விஷயங்களுக்கு GIMP. மற்றபடி அதிகம் எனக்குக் கை கொடுப்பது Picasa & IrfanView.

    பதிலளிநீக்கு
  45. சகாதேவன் said...
    //உங்களூரு கடலைக்காரி கடலைக்கடந்து பிரபலமாகிவிட்டார்.
    பாராட்டுக்கள்.//

    அழகான பாராட்டுக்கு நன்றிகள்:)!

    பதிலளிநீக்கு
  46. prasanthsriram said...
    //கூடை, படி, கடலை பொட்டலம் புகைப்படம் மிக அருமை. படத்தினை காணுகையில் யதார்த்தமான படம்....//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரசாந்த்ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  47. அன்புடன் மலிக்கா said...
    //எதார்தங்களை அழகாய் படம் பிடிக்கிறீங்க மேடம் சூப்பர் வாழ்த்துக்கள்..//

    நன்றிகள் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  48. விஜய் said...
    //வாழ்த்துக்கள் அக்கா //

    நன்றிகள் விஜய்.

    பதிலளிநீக்கு
  49. கிரி said...
    //நன்றாக உள்ளது ராமலக்ஷ்மி.. பொதுவாக இதைப்போல படங்களுக்கான சிறப்பே படம் எடுக்கப்படுபவர்கள் தங்களை எடுத்தது தெரியாமல் இயல்பாக இருப்பதே!//

    மிகச் சரி.

    //நீங்கள் அந்த பெண் கூறியதை கூறி இருந்தாலும் அவருக்கு அந்த படத்தை காட்டி விட்டு அவர் கேமராவை பார்க்காத படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்பது என் (வழக்கமான) கருத்து :-).//

    வழக்கமான கருத்துக்காகவே காத்திருந்தேன்:)! ஆனால் எடுத்தபிறகு, பெண்மணி காமிராவைப் பார்க்கும் படம் இன்னும் உயிர்ப்புடன் தோன்றியதால் ஃபிளிக்கரிலும் அதையே முதன்மைப் படுத்தி விட்டேன். தலைப்பும் நம்மைப் பார்த்து சொல்வது போல ‘கடல வாங்குங்க’ :)!

    //இது என்னுடைய எண்ணம் மட்டுமே மற்றபடி நீங்கள் அடிக்கடி எடுக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாததல்ல.//

    உங்கள் எண்ணம், 'இயல்பான படத்தையும் இங்கே பதிந்து வைத்தால் என்ன' என, எண்ண வைத்து விட்டது என்னை:)! சேர்த்து விட்டேன் அதையும்.

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  50. Dammam Bala (தமாம் பாலா) said...
    //வேர் கடலை வித்தானது
    விளைவில் ஒற்றுமைக்கு
    ஒரு எடுத்துக்காட்டானது
    ஒரு பானை சோற்றுக்கு

    இப்படம் ஒரு பதமானது
    இயல்பான ஒரு க்ளிக்கில்
    என் மனதும் பித்தானது
    ஏழ்மையின் செம்மையில்

    பார்த்தவர் பாராட்டுவது
    பொட்டலம் மடித்த கை
    முத்தாய் படம் பிடித்து
    முடிசூடிய பெருந்தகை!//

    அருமையான கவிபாடி வாழ்த்தியமைக்கு நன்றி பாலா:)!

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடி நீங்கள் பதிவெழுத வந்தது தந்தது எனக்கு மகிழ்ச்சியை.

    பதிலளிநீக்கு
  51. தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 26 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  52. thenammailakshmanan said...
    //வாழ்த்துக்கள் லெக்ஷ்மி//

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  53. ரொம்ல லேட்டா பாத்துட்டேன்... படம் இயல்பாவும் அழகாவும் இருக்குங்க... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  54. க.பாலாசி said...
    //ரொம்ல லேட்டா பாத்துட்டேன்... படம் இயல்பாவும் அழகாவும் இருக்குங்க... வாழ்த்துக்கள்....//

    மிக்க நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  55. படம் ரொம்பவும் யதார்த்தமாய் இருந்தது.அந்த விளிம்பு மனிதர்களின் வறுமையை மீறிய ஒரு சந்தோஷப் புன்னகைக் கீற்று முகத்தில் படு ஜோர்!!
    மேடம், நீங்கள் உண்மையிலேயே ஒரு
    MULTIFACETED PERSONALITY தான்!!

    பதிலளிநீக்கு
  56. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
    //படம் ரொம்பவும் யதார்த்தமாய் இருந்தது.அந்த விளிம்பு மனிதர்களின் வறுமையை மீறிய ஒரு சந்தோஷப் புன்னகைக் கீற்று முகத்தில் படு ஜோர்!!//

    ஆமாங்க அதற்காகவே முகம் தெரியும் படத்தை முதன்மைப் படுத்தினேன்.

    //மேடம், நீங்கள் உண்மையிலேயே ஒரு
    MULTIFACETED PERSONALITY தான்!!//

    உங்கள் பாராட்டுக்குத் தகுதியா தெரியவில்லை. ஆனாலும் கேட்க மகிழ்ச்சியாகவே உள்ளது:)! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin