Wednesday, June 16, 2010

மகிழ்ச்சி - JUNE PiT

இரட்டை மகிழ்ச்சி. என்னவென்று கேளுங்கள்.

முதலாவது, இந்த வாரக் க்ளிக்-ஐ தேர்ந்தெடுக்கச் சொல்லி என்னைக் கெளரவித்திருக்கிறது PiT இங்கே.

நன்றி PiT, என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்ததற்கும், நடுவராய் இருப்பதன் சிரமங்களைப் புரிய வைத்ததற்கும்!

எனது தேர்வும், படத்துக்காக நான் எழுதிய வரிகளும்:

எல்லோரும் ஓர் நாள்..

முதுமையின் சித்திரம்
கருப்பு வெள்ளையில்

தொலைத்த இளமை
நரைத்த முடியில்

வாழ்வின் அனுபவங்கள்
தோலின் சுருக்கங்களில்

எல்லோரும் ஓர் நாள்
எய்துவோம் இந்நிலையை
என்பதை மறந்திட்ட
மதிகெட்ட மனிதராலே

ஒதுக்கப்பட்ட வேதனை
ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.

***

தேர்வுக்கான காரணம்: Sharpness/ clever b&w treatment / conveys emotion (the feeling of loneliness) clearly

படத்தை எடுத்தவர்: கார்த்திக் ஆர் யாதவ்.

வாழ்த்துக்கள் கார்த்திக்.

என் தேர்வையும் கவிதை வரிகளையும் PiT தளத்தில் பாராட்டியிருந்தவர்களுக்கும் இங்கு என் நன்றிகள்.அடுத்த மகிழ்ச்சி? அதுதாங்க இம்மாதப் போட்டிக்கான தலைப்பே!

மகிழ்ச்சிப் படங்கள் பல இருந்தும் போட்டிக்குத் தர அதில் சிரிப்பவர் அனுமதி கோர ஏற்பட்ட தயக்கத்தில் இருந்த என்னைப் பார்த்துச் சிரி சிரியெனச் சிரித்தார் இவர் ‘மறந்து விட்டாயா என்னை’ என்பது போல. உடனே அனுப்பி வைத்து விட்டேன் இவரையே போட்டிக்கு இருத்தலின் அடையாளமாக!

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
சொல்லாமல் சொல்லி
தானிருக்கும் இடங்களில்
மகிழ்ச்சியலைகளைப் பரப்பி நிற்கிறார்
பேரானந்தமாய் சீனப் புத்தர்


[முன்னர் ‘பொம்மை’ தலைப்புக்காக எடுத்துப் பதிந்த படமே என்றாலும், போட்டிக்குத் தராத ஒன்றே. இவர் தரும் அதிர்ஷ்டம் பற்றி நான் எழுதி யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த கவிதை இங்கே.]

சரி, இம்மாதப் போட்டிக்காக, உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க வரிசை கட்டி நிற்கும் படங்கள் இங்கே. நேரமில்லாதவர் ஏற்படுத்திக் கொண்டு, கண்டு களியுங்கள். மனம் இலேசாகும்! சற்று அதிகப்படி நேரமிருப்பவர் பாராட்டுக்களையும் கருத்துக்களையும் வழங்கி ஊக்கப்படுத்துங்களேன்!

***

81 comments:

 1. படங்களும் கவிதைகளும் அருமை :-).

  ReplyDelete
 2. நான் அங்கே சொன்னதையே இங்க காபி பேஸ்ட் செஞ்சுக்குங்க! கவிதையான படம், பாடமான கவிதை!

  சிரிக்கும் புத்தரும் அருமை! ரொம்ப நல்லா வந்திருக்கு!

  ReplyDelete
 3. மிக அருமை. வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 4. மகிழ்ச்சி!

  என் பார்வையில் டாப் 10ல் இப்பொழுது ஓரிடம் பிடித்துவிட்டது! நடுவர்களின் பார்வையில் மூன்றில் ஒன்றாக வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 5. ////எல்லோரும் ஓர் நாள்
  எய்துவோம் இந்நிலையை
  என்பதை மறந்திட்ட
  மதிகெட்ட மனிதராலே//////

  மிகவும் உண்மையான வரிகள் எதார்த்த நடையில் . அருமை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அக்கா.

  தேர்வு சூப்பர்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி...அருமை கவிதை...

  ReplyDelete
 8. அந்த வயோதிபரின் படம் உயிராய் உணர்வோடு.சிரிக்கும் புத்தனை பார்த்தாலே ஒரு சந்தோஷம்.
  வாழ்த்துகள் லக்ஷ்மியக்கா.

  ReplyDelete
 9. அக்கா, கவிதையில் அழகாய் யோசிக்க வைக்கிறீர்கள்... படங்கள், பிரமாதம்!

  ReplyDelete
 10. அருமையான சிரிப்பு

  ReplyDelete
 11. முதுமையைக் கண்டு ஏளனம் செய்யாதே...அது உன் அருகிலேயே வந்துகொண்டிருக்கிறது என்று சொல்வார்கள். இந்த பழமொழியை உணர்த்தும் நெத்தியடியாய் உங்கள் கவிதை. பார்க்கும் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் புகைப்படம். அற்புதமான தேர்வு.

  ReplyDelete
 12. வோட்டே போட்டுட்டோம்ல

  ReplyDelete
 13. முதியவரின் புகைப்படம் கார்த்திக்கின் புகைப்படத்திறனை காட்டுகிறது...
  ஷார்ப்னெஸ் தூள் கார்த்திக்...

  pitல் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துகள் மேடம்..

  கன்னக்குழி சிரிப்போட இருக்கும் சிரிக்கும்புத்தர் நல்லாருக்கு...

  ReplyDelete
 14. காட்சியும் கவிதையும் எதார்த்தம்!
  ஓடுகின்ற மனிதனை நின்று
  யோசிக்கச் சொல்லும்.
  நன்றி.

  ReplyDelete
 15. மகிழ்ச்சி

  வாழ்த்துகள்

  ReplyDelete
 16. சீக்கிரம் பிட்டில் நடுவராக வாழ்த்துக்கள்!.. :-)

  ReplyDelete
 17. செயற்கையான புன்னகையா? இயற்கையானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 18. Nice Pics.


  இது மட்டும் இல்லை. உங்கள் புகைபடங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.

  அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. இரண்டு ப்டங்களையும் சேத்துத்தான் சொன்னேன் :)

  ReplyDelete
 20. மகிழ்ச்சி எங்களுக்கும்.. :) தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete
 21. வழக்கம் போல நல்ல கவிதைகள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. நல்ல தேர்வு மற்றும் கவிதை,,,,

  ReplyDelete
 23. கார்த்திக் படமும் சரி, உங்களின் படமும் சரி.. இரண்டுமே அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 24. அருமை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி
  அசத்துங்க!

  ReplyDelete
 26. கவிதைகள் அருமை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. அருமை,... வாழ்த்துகள்

  படங்களை அங்கேயும் பார்த்தேன்..

  ReplyDelete
 28. எங்கேயோ போய்க்கிட்டி இருக்கீங்க... :-)
  மகிழ்ச்சி

  ReplyDelete
 29. சூப்பர்! வாழ்த்துகள் ...இரட்டை மகிழ்ச்சிக்கு! :-)

  ReplyDelete
 30. புகைப்படம் அழகு...கவிதை அதைவிட அழகு...

  ReplyDelete
 31. தாத்தா படம் அட்டகாசம் :-) உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. நடுவருக்கு வாழ்த்துக்கள்.

  நீங்கள் தேர்ந்தெடுத்த படமும் கவிதையும் அருமை.

  மகிழ்ச்சி புத்தர் எல்லோர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அள்ளி தர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. இராமசாமி கண்ணண் said...

  // படங்களும் கவிதைகளும் அருமை :-).//

  நன்றி இராமசாமி கண்ணன்.

  ReplyDelete
 34. அபி அப்பா said...

  //நான் அங்கே சொன்னதையே இங்க காபி பேஸ்ட் செஞ்சுக்குங்க!

  கவிதையான படம், பாடமான கவிதை!//

  அங்கேயே ரசித்தேன் நீங்கள் சொல்லியிருந்த விதத்தை:)!

  // சிரிக்கும் புத்தரும் அருமை! ரொம்ப நல்லா வந்திருக்கு!//

  நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 35. ஜெஸ்வந்தி said...

  //Good selection Ramaluxmi.Well done.//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 36. natpu valai said...

  // மிக அருமை. வாழ்த்துக்கள் தோழி//

  நன்றிகள் மாலா சந்தானம்.

  ReplyDelete
 37. ஆயில்யன் said...

  // மகிழ்ச்சி!

  என் பார்வையில் டாப் 10ல் இப்பொழுது ஓரிடம் பிடித்துவிட்டது! நடுவர்களின் பார்வையில் மூன்றில் ஒன்றாக வாழ்த்துக்கள் :)//

  அப்படியா சொல்லுகிறீர்கள். இதுவே பரிசு பெற்றது போலதான்:)! நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 38. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ***/ ////எல்லோரும் ஓர் நாள்
  எய்துவோம் இந்நிலையை
  என்பதை மறந்திட்ட
  மதிகெட்ட மனிதராலே//////

  மிகவும் உண்மையான வரிகள் எதார்த்த நடையில் . அருமை பகிர்வுக்கு நன்றி/***

  மிக்க நன்றி சங்கர்.

  ReplyDelete
 39. சுசி said...

  // வாழ்த்துக்கள் அக்கா.

  தேர்வு சூப்பர்.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 40. அப்பாவி தங்கமணி said...

  // வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி...அருமை கவிதை...//

  மிக்க நன்றி புவனா.

  ReplyDelete
 41. ஹேமா said...

  // அந்த வயோதிபரின் படம் உயிராய் உணர்வோடு.சிரிக்கும் புத்தனை பார்த்தாலே ஒரு சந்தோஷம்.
  வாழ்த்துகள் லக்ஷ்மியக்கா.//

  இரண்டு படங்களையும் ரசித்துப் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு நன்றி ஹேமா.

  ReplyDelete
 42. Chitra said...

  // அக்கா, கவிதையில் அழகாய் யோசிக்க வைக்கிறீர்கள்... படங்கள், பிரமாதம்!//

  முதல் படம் படமாகவே எல்லோரையும் யோசிக்க வைத்து விடக் கூடியது. என் வரிகள் சும்மா கைப்பிடித்து நடக்கிறது.

  நன்றிகள் சித்ரா.

  ReplyDelete
 43. goma said...

  //அருமையான சிரிப்பு//

  நன்றி கோமா:)!

  ReplyDelete
 44. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  //முதுமையைக் கண்டு ஏளனம் செய்யாதே...அது உன் அருகிலேயே வந்துகொண்டிருக்கிறது என்று சொல்வார்கள். இந்த பழமொழியை உணர்த்தும் நெத்தியடியாய் உங்கள் கவிதை. பார்க்கும் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் புகைப்படம். அற்புதமான தேர்வு.//

  உங்கள் கருத்தும் அருமை. நன்றிகள் சரவணன்.

  ReplyDelete
 45. ஷர்புதீன் said...

  // வோட்டே போட்டுட்டோம்ல//

  ஆகா, நன்றி ஷர்புதீன்:)!

  ReplyDelete
 46. ப்ரியமுடன்...வசந்த் said...

  // முதியவரின் புகைப்படம் கார்த்திக்கின் புகைப்படத்திறனை காட்டுகிறது...
  ஷார்ப்னெஸ் தூள் கார்த்திக்...//

  கார்த்திக் அனுமதியுடன் இந்தப் பதிவினை வெளியிட்டிருப்பதால் எல்லோருடைய பாராட்டுக்களையும் அவர் நிச்சயம் கவனிப்பார்:)!

  // pitல் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துகள் மேடம்..//

  இந்த வார க்ளிக்-யை தேர்ந்தெடுக்க இந்த வாரம் மட்டும்தாங்க:)! அதுவே எத்தனை சிரமம் எனப் புரிந்தது.

  // கன்னக்குழி சிரிப்போட இருக்கும் சிரிக்கும்புத்தர் நல்லாருக்கு...//

  புத்தரின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

  ReplyDelete
 47. அமைதி அப்பா said...

  // காட்சியும் கவிதையும் எதார்த்தம்!
  ஓடுகின்ற மனிதனை நின்று
  யோசிக்கச் சொல்லும்.
  நன்றி.//

  அதுவே அந்தப் படத்தின் பெரிய ப்ளஸ். நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 48. ஈரோடு கதிர் said...

  // மகிழ்ச்சி

  வாழ்த்துகள்//

  உங்கள் வாழ்த்துக்களில் அடைந்தேன் மகிழ்ச்சி:)!

  ReplyDelete
 49. தமிழ் பிரியன் said...

  // செயற்கையான புன்னகையா? இயற்கையானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

  இருந்திருக்கும்தான். என் செய்ய? காரணமும் சொல்லியிருக்கிறேன் பாருங்கள் தமிழ் பிரியன்:)!

  ReplyDelete
 50. தமிழ் பிரியன் said...

  // சீக்கிரம் பிட்டில் நடுவராக வாழ்த்துக்கள்!.. :-)//

  காமெடி செய்யாதீர்கள் தமிழ் பிரியன்! அந்த அளவுக்கான தகுதியை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை.

  ReplyDelete
 51. SurveySan said...

  // nice click.//

  நன்றி சர்வேசன்.

  //இரண்டு ப்டங்களையும் சேத்துத்தான் சொன்னேன் :)//

  இரண்டாவது படமும் அருமை என்றால் அதன் பெருமை உங்களுக்கும். கடந்த அக்டோபர் ‘பொம்மை’ தலைப்பின் போது உங்கள் பதிவில் தந்திருந்த டிப்ஸின் படி எடுக்கப் பட்டதே. நீங்கள் சொன்ன டீஷர்டுக்குப் பதில் back drop ஆக துப்பட்டா. போக, இரண்டுபக்கமும் ஒளி பாய்ச்ச table lamps என. பல ஷாட் எடுத்து தேற்றியது இது:)!

  ReplyDelete
 52. மகேஷ் : ரசிகன் said...

  // Nice Pics.


  இது மட்டும் இல்லை. உங்கள் புகைபடங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.//

  மகிழ்ச்சி!

  //அருமை. வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி மகேஷ்.

  ReplyDelete
 53. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //மகிழ்ச்சி எங்களுக்கும்.. :) தொடர்ந்து கலக்குங்க..//

  மகிழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு நன்றிகள் முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 54. சசிகுமார் said...

  // வழக்கம் போல நல்ல கவிதைகள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 55. மோகன் குமார் said...

  // வாழ்த்துக்கள்!!//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 56. கமலேஷ் said...

  //நல்ல தேர்வு மற்றும் கவிதை,,,,//

  நன்றி கமலேஷ்.

  ReplyDelete
 57. க.பாலாசி said...

  // கார்த்திக் படமும் சரி, உங்களின் படமும் சரி.. இரண்டுமே அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...//

  பாராட்டுக்களுக்கு நன்றி பாலாசி.

  ReplyDelete
 58. மாதேவி said...

  // அருமை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 59. அம்பிகா said...

  // வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி
  அசத்துங்க!//

  நன்றிங்க அம்பிகா:)!

  ReplyDelete
 60. VELU.G said...

  // கவிதைகள் அருமை

  வாழ்த்துக்கள்//

  நன்றிகள் வேலு.

  ReplyDelete
 61. ஆ.ஞானசேகரன் said...

  // அருமை,... வாழ்த்துகள்

  படங்களை அங்கேயும் பார்த்தேன்..//

  நன்றிகள் ஞானசேகரன்.

  ReplyDelete
 62. "உழவன்" "Uzhavan" said...

  // எங்கேயோ போய்க்கிட்டி இருக்கீங்க... :-)
  மகிழ்ச்சி//

  அப்படீங்கறீங்க:)? நன்றி உழவன்!

  ReplyDelete
 63. சந்தனமுல்லை said...

  //சூப்பர்! வாழ்த்துகள் ...இரட்டை மகிழ்ச்சிக்கு! :-)//

  ஹி. நன்றி முல்லை.

  ReplyDelete
 64. ஸ்ரீராம். said...

  // புகைப்படம் அழகு...கவிதை அதைவிட அழகு...//

  ‘மகிழ்ச்சி’ ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 65. அஹமது இர்ஷாத் said...

  // வாழ்த்துக்கள் ...//

  நன்றி இர்ஷாத்.

  ReplyDelete
 66. கிரி said...

  //தாத்தா படம் அட்டகாசம் :-) உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

  நன்றிகள் கிரி.

  ReplyDelete
 67. கோமதி அரசு said...

  // நடுவருக்கு வாழ்த்துக்கள்.

  நீங்கள் தேர்ந்தெடுத்த படமும் கவிதையும் அருமை.//

  நன்றி கோமதிம்மா.

  // மகிழ்ச்சி புத்தர் எல்லோர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அள்ளி தர வாழ்த்துக்கள்.//

  உங்கள் நல்வாக்குப்படியே ஆகட்டும்.

  ReplyDelete
 68. தமிழ் மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 36 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 69. படம் சூப்பராருக்கு - நல்ல தெளிவு!! ம்ம்.. அடுத்த கட்டத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 70. ஹுஸைனம்மா said...
  //படம் சூப்பராருக்கு - நல்ல தெளிவு!! ம்ம்.. அடுத்த கட்டத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துகள்!!//

  நன்றி ஹுஸைனம்மா:)!

  ReplyDelete
 71. ரசிகன்! said...
  //good judgement :)//

  நன்றி ரசிகன்.

  ReplyDelete
 72. கவிதை மிக அருமை.. உங்கள் தளத்தை இதுவே முதல் தடவையாக பார்க்கிறேன்.. எல்லாம் அருமை

  ReplyDelete
 73. நடுவராக உயர்ந்ததற்கு வாழ்த்துக்கள் தோழி..

  ReplyDelete
 74. Riyas said...
  //கவிதை மிக அருமை.. உங்கள் தளத்தை இதுவே முதல் தடவையாக பார்க்கிறேன்.. எல்லாம் அருமை//

  நன்றி ரியாஸ். நல்வரவு.

  ReplyDelete
 75. thenammailakshmanan said...
  //நடுவராக உயர்ந்ததற்கு வாழ்த்துக்கள் தோழி..//

  PiT தன் வாசகர்களுக்கு ஊக்கமும் ஒரு பயிற்சியாகவும் எண்ணித் தந்த ‘இந்தவார’ வாய்ப்பு:)! நன்றி தேனம்மை.

  ReplyDelete
 76. மிக்க மகிழ்ச்சி ;வாழ்த்துக்கள் மேடம்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin