Wednesday, March 17, 2010

ஒற்றை-மார்ச் PiT போட்டிக்கு-பறக்கும் படங்கள்

'ஒற்றை’ இதுதான் தலைப்பு. ‘சிங்கம் சிங்கிளாதான் வரும். அப்படி இருக்கணும் படங்கள்’ என்கிறது போட்டியின் விதிமுறை. பறவைகளில் ஆரம்பித்து விலங்குகளையும் காண்பித்துப் படகிலே முடித்துள்ளேன்.

[கணினித் திரையை விட்டு விலகித் தெரியும் படங்களை ரசிக்க ‘கண்ட்ரோல், மைனஸ்’ பொத்தான்களை ஒருசேர அழுத்தங்கள். நன்றி.]


கொக்கரக்கோ

போட்டிக்கு!
***

பாசக்காரன்
விட்டு விட்டுக் கூவி
விட்டேனா பாரென
பாயைச் சுருட்டியெழும்வரைப்
பார்த்து நிற்கும் ஸ்னூஸ் அலாரம்
***

ஒயிலாய் ஓர் மயில்

வான்கோழியும் விடாமுயற்சியும்
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை...! ஒரு உவமைக்காகச் சொல்லப் பட்டதைப் பிடித்துக் கொண்டு.. எதற்கெடுத்தாலும் எல்லோரும் உபயோகித்தபடி..ஏன்? இன்று வரை வான்கோழி என்றாலே நினைவுக்கு வருவது இந்தப் பழமொழிதான். பாவமில்லையா அது? மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டுவோமே!
***
நடக்கையில் சிலிர்க்கும் சிறகும்..


சிலிர்க்கையில் விரியும் இறகும்..


கொடுத்திருக்கிறான் இறைவன்
அழகென இதற்கும்
***


உஜாலா

நான் மாறிட்டேன். அப்போ நீ?
***

வான்கோழிக் குஞ்சு

‘ராபின் தி பெஸ்ட்’

விளம்பரங்களில் போட்டித் தயாரிப்புகளைச் சற்றே குறிப்பாகக் கோடு காட்டினாலே கோர்ட்டுக்கு போய் உடனே ஸ்டே வாங்கி விடுவார்கள். இப்போது ரின் தன் விளம்பரத்தில் டைட் பாக்கெட்டையே காட்டி, போட்டுத் தாக்கி வருகிறது! டைடும் கோர்ட்டுக்கு போயிருப்பதாகக் கேள்வி! என்ன தாமதமோ? ரின் கொண்டாட்டமாய் விளம்பரைத்தைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்கிறது!


இரட்டைவால்

ஒற்றையாய் வீற்றிருக்கும்
இரட்டைவால் குருவி
இலைகளுக்குள் எங்கிருக்கு
உற்றுப் பார்த்துக் கண்டுபிடி
***


'விலங்கு'
வனத்தில் வாழப் படைத்தான் இறைவன்
அடக்கி ஒடுக்கி ஆள்கிறான் மனிதன்

இப்படிப் பம்மி நிற்கிறது, ‘அட்டென்ஷன்’ ட்ரில் மாஸ்டர் போலக் குரல் கொடுத்தாரோ பாகன்? மனிதனின் முன்னேற்றத்துக்குத் தடையான கால் விலங்கும், தன் பலம் உணராமைதான்!


தனிமை
இனிமையா கொடுமையா?
இருண்டு வரும் வானும்
உருண்டு மோதும் அலையும்
விரிந்து பரந்த மணலில்
புள்ளியாய் நாயும்..

இனிமையென சொல்ல முடியாதபடி ஏதோவொரு சோகம் இயம்புகிறதோ இப்படம்?


ஒரு படகு
பழுப்பழகு
வண்ணமயமல்ல..
கருப்பு வெள்ளையுமல்ல..
இரண்டோடும் சேராத பழுப்பழகு!

இது மீள்படம் அன்று ! கடந்த மாத PiT பதிவில் , படகுப் படங்கள் வேறு மூன்றைப் பகிர்ந்து கொண்டு விட்டதால், இதை இப்படித் தந்துள்ளேன் பிக்காஸாவின் ‘சேப்பியா’வை உபயோகித்து. மூதாதையர் ஆல்பம் ஒன்றைப் புரட்டும் உணர்வு வருகிறதா? எனது ஃப்ளிக்கர் தளத்தில் ஒரிஜனலையும் காண விரும்பியவருக்காக எழில் வண்ணமாய் இங்கு.

போட்டிக்கான கடைசித் தேதி 20, மார்ச். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

பிடித்த படமெனக் குறிப்பாக ஏதேனும் இருப்பின் சொல்லிச் செல்லுங்கள். நன்றி!
***

77 comments:

சின்ன அம்மிணி said...

கடற்கரையில் இருக்கும் பைரவர் நல்லா இருக்குங்க

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வழக்கம் போல அருமையான படங்கள்..:))

சகாதேவன் said...

//தனிமை இனிமையா கொடுமையா//
அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தனிமையில் இருக்கும் பைரவர் அசத்தறார்..

வான்கோழிக்கும் மனமிரங்கும் உங்க கமெண்ட் சூப்பர்..

படங்கள் வழக்கம் போல அருமை..

அமைதிச்சாரல் said...

கடற்கரை பைரவர் அழகு.யானையார் மனதை என்னவோ செய்கிறார்.பாவமா இருக்கு.உஜாலாதான் ரொம்ப பிடிச்சிருக்கார்.வெளிச்சம் அழகா இருக்கு அந்தப்படத்தில்.

thenammailakshmanan said...

வான் கோழியின் சிலிர்க்கையில் விரிக்கும் அழகு என் மனதை கொள்ளை கொண்டது ராமலெக்ஷ்மி

ஆயில்யன் said...

யானை - நேருக்கு நேர் நின்றதால் என்னவோ அதன் பிரம்மாண்டம் மறைந்துவிட்டதோ?

ஆயில்யன் said...

சிலிர்த்திருக்கும் இறகுகள் - கொள்ளை கொள்கிறது !


தனித்திருக்கும் பைரவரே என்னோட சாய்ஸ் :)

க.பாலாசி said...

படங்களனைத்தும் அருமைங்க... மொதப்படமே ஒரு சிங்கத்த சீண்டிவிட்டா மாதிரி இருக்கு....

சத்ரியன் said...

படங்கள்.... சரம் கோக்கப்படாத உதிரி முத்துக்கள்.

எல்லாமே அழாகாத்தான் இருக்கு.

அமுதா said...

கடற்கரையில் தனிமையின் ஏகாந்தத்தில் திளைக்கும் பைரவர் சூப்பர். மற்ற படங்களும் கண்ணுக்கு குளுமையாக உள்ளன

"உழவன்" "Uzhavan" said...

இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.
எல்லா படங்களுமே வெகு சிறப்பு என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.. வழமை போல் கொள்ளை அழகு அத்தனையும் :-)
சேவலை வளைச்சு வளைச்சு எடுத்துருக்கீங்க :-)
 
வெற்றி பெற வாழ்த்துகள்!!!

Mrs.Menagasathia said...

//தனிமை இனிமையா கொடுமையா// சூப்பர்ர்

எல்லா படங்களுமே அழகு!!

goma said...

உஜாலா
சூப்பர்

goma said...

பீச்சாங்கரையில் காத்திருக்கும் ஜீவன் அற்புதம்

அக்பர் said...

படங்கள் அனைத்தும் அருமை.

யானை எனக்கு ரொம்ப பிடித்தது. பாவம் காலில் சங்கிலி.

Chitra said...

எல்லா புகைப்படங்களிலும் கவிதையும் கருத்தும் இருக்கு.

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களும் அருமை. சில ஏற்கெனவே பார்த்தது - நீங்களே சொல்லியிருப்பதுதான்..
கடற்கரை நாய் அருமை. என் கணக்கில் முதலிடம்.
அந்தப் படகு வீட்டை இப்போது கறுப்பு வெள்ளையில் பார்க்கும்போது ஏதோ...ஏதோ..நினைவுகள்.
வான்கோழியின் ஸ்டைல் நடை...ஆஹா..அற்புதம்

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சகா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

தனித்திருக்கும் பைரவரே என்னோட சாய்ஸ் :)

சுசி said...

பழுப்பழகு சூப்பர் அக்கா..

தனிமையில இருந்தாலும் நாயார் அலையோட சேர்த்து அள்ளிக் கிட்டுப் போறார்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் அக்கா..

எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான படங்கள் சகோதரி.
கடற்கரை நாய் தனிமையையும் ஏக்கத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது.

பிரியமுடன்...வசந்த் said...

பழுப்புநிற வீடுதான் பிடிச்சது

ஃப்லிக்கர்ல இருந்த இதனோட ஒரிஜினல் செம்ம குளிர்ச்சி மேடம் எங்க எடுத்தது?

கோமதி அரசு said...

அனைத்து படமும் அழகு.

தனிமையில் கடலில் ஆரப்பரிக்கும் அலையைப் பார்த்தால் இனிமை.
அது தன் தலைவன் பைரவர் காவலுக்கு செல்லும் போது நம்மையும் அழைத்து செல்வாரே, இன்னும் காணவில்லையே என்று சோகத்துடன் காத்திருக்கிறது .தன் தலைவன் வரும் வழிப் பார்த்து.

கவிதை அருமை ராமலக்ஷ்மி.

காத்திருக்கும் நாய் என் சாய்ஸ்.

ராமலக்ஷ்மி said...

சின்ன அம்மிணி said...

//கடற்கரையில் இருக்கும் பைரவர் நல்லா இருக்குங்க//

நன்றி அம்மிணி.

ராமலக்ஷ்மி said...

♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//வழக்கம் போல அருமையான படங்கள்..:))//

மிக்க நன்றி ஷங்கர்:)!

ராமலக்ஷ்மி said...

சகாதேவன் said...

***/ //தனிமை இனிமையா கொடுமையா//

அருமை//***

உங்கள் பின்னூட்டமும்:)! மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//தனிமையில் இருக்கும் பைரவர் அசத்தறார்..

வான்கோழிக்கும் மனமிரங்கும் உங்க கமெண்ட் சூப்பர்..

படங்கள் வழக்கம் போல அருமை..//

நன்றி முத்துலெட்சுமி. பைரவரே பலருக்கும் பிடித்துப் போயிருக்கிறார்.
வான்கோழிக்கு சப்போர்ட் பண்ணியதற்கும் நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...

//கடற்கரை பைரவர் அழகு.யானையார் மனதை என்னவோ செய்கிறார்.பாவமா இருக்கு.உஜாலாதான் ரொம்ப பிடிச்சிருக்கார்.வெளிச்சம் அழகா இருக்கு அந்தப்படத்தில்.//

உஜாலா ‘பளீர்’ வெண்மை:)! கருத்துகளுக்கு நன்றி அமைதிச்சாரல்!

ராமலக்ஷ்மி said...

thenammailakshmanan said...

//வான் கோழியின் சிலிர்க்கையில் விரிக்கும் அழகு என் மனதை கொள்ளை கொண்டது ராமலெக்ஷ்மி//

ஒரே கோழியின் படத்தை மூன்று முறை போடவேண்டுமா என நினைத்தேன். உங்கள் பின்னூட்டம் போட்டதில் தப்பில்லை என சொல்லிவிட்டது:)! ரசித்தமைக்கு நன்றி தேனம்மை.

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...

//சிலிர்த்திருக்கும் இறகுகள் - கொள்ளை கொள்கிறது !//

படத்தில் வெளிச்சம் சற்றே குறைவென்றாலும் அடுக்கடுக்கான இறகுகள் அழகேதான் இல்லையா? நன்றி ஆயில்யன்.

//தனித்திருக்கும் பைரவரே என்னோட சாய்ஸ் :)//

ரைட்:)!

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...

//யானை - நேருக்கு நேர் நின்றதால் என்னவோ அதன் பிரம்மாண்டம் மறைந்துவிட்டதோ?//

இதே யானை பிரமாண்டத்துடன் ‘சில ஸ்தலங்கள்’ பதிவில் உள்ளது. இதில் கால் விலங்குகளும் அதன் நேர் போஸும் மனதை வருத்துவதாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

க.பாலாசி said...

//படங்களனைத்தும் அருமைங்க... மொதப்படமே ஒரு சிங்கத்த சீண்டிவிட்டா மாதிரி இருக்கு....//

மிக்க நன்றி பாலாசி. போட்டிப் படத்துக்கு கிடைத்த ஒரே ஆறுதல் பின்னூட்டம்:)!

ராமலக்ஷ்மி said...

சத்ரியன் said...

//படங்கள்.... சரம் கோக்கப்படாத உதிரி முத்துக்கள்.

எல்லாமே அழாகாத்தான் இருக்கு.//

எல்லாம் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றிகள் சத்ரியன்.

ராமலக்ஷ்மி said...

அமுதா said...

//கடற்கரையில் தனிமையின் ஏகாந்தத்தில் திளைக்கும் பைரவர் சூப்பர். மற்ற படங்களும் கண்ணுக்கு குளுமையாக உள்ளன//

ஆமாங்க அந்த சூழல் ஏகாந்தத்தை இன்னும் அழுத்தமா பிரதிபலிப்பதாகவே நானும் நினைக்கிறேன். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அமுதா.

ராமலக்ஷ்மி said...

"உழவன்" "Uzhavan" said...

//எல்லா படங்களுமே வெகு சிறப்பு என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.. வழமை போல் கொள்ளை அழகு அத்தனையும் :-)//

நன்றி:)!

//சேவலை வளைச்சு வளைச்சு எடுத்துருக்கீங்க :-)

வெற்றி பெற வாழ்த்துகள்!!!//

நல்லவேளை விரட்டி விரட்டி என சொல்லாதிருந்தீர்கள்:)! வாழ்த்துக்களுக்கும் நன்றி உழவன்!

ஆடுமாடு said...

சேவல் படம் சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

Mrs.Menagasathia said...

***/ //தனிமை இனிமையா கொடுமையா// சூப்பர்ர்

எல்லா படங்களுமே அழகு!!/***

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகசத்யா.

ராமலக்ஷ்மி said...

goma said...

//உஜாலா
சூப்பர்//

திருவாளர் வெண்மை அதாங்க மிஸ்டர் வொயிட்:)!

//பீச்சாங்கரையில் காத்திருக்கும் ஜீவன் அற்புதம்//

நன்றி கோமா.

ராமலக்ஷ்மி said...

அக்பர் said...

//படங்கள் அனைத்தும் அருமை.

யானை எனக்கு ரொம்ப பிடித்தது. பாவம் காலில் சங்கிலி.//

நன்றி அக்பர். அதன் பலம் அதற்கே தெரியாததால் அடக்கி ஆள முடிகிறது மனிதனால்:(!

ராமலக்ஷ்மி said...

Chitra said...

//எல்லா புகைப்படங்களிலும் கவிதையும் கருத்தும் இருக்கு.//

நன்றி சித்ரா.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//எல்லாப் படங்களும் அருமை.//

நன்றி.

//சில ஏற்கெனவே பார்த்தது - நீங்களே சொல்லியிருப்பதுதான்..//

நான் எங்கே சொன்னேன்:))? எந்தப் படமும் ஏற்கனவே காண்பித்ததல்ல, படகுப் படமும். நல்லாப் பாருங்க. . ‘மீள் படமல்ல’ எனச் சொல்லியுள்ளேன்.
ஒன்றே போல தோன்றக் கூடுமென்பதாலேயே இது பழுப்பாக..! ஹி, பெரிய விஷயமில்லை இது.

// அந்தப் படகு வீட்டை இப்போது கறுப்பு வெள்ளையில் பார்க்கும்போது ஏதோ...ஏதோ..நினைவுகள்.//

படம் பிடித்ததே, அதுதான் வேண்டும்:)!

//கடற்கரை நாய் அருமை. என் கணக்கில் முதலிடம்.//

பலர் கணக்கிலும்:)!

//வான்கோழியின் ஸ்டைல் நடை...ஆஹா..அற்புதம்//

ரசித்தமைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

கார்த்திக் said...

மொதல் படம் சூப்பர் பேக்ரவுண்ட் மட்டும் டார்க்கா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

கடசிப்படம் செபியால ஜொலிக்குதுக்குங்க

எல்லாப்படங்களும் ரொம்ப அழகு போங்க

வாழ்துக்கள் :-))

ராமலக்ஷ்மி said...

பா.ராஜாராம் said...

//நல்லாருக்கு சகா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பா ரா.

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...

//தனித்திருக்கும் பைரவரே என்னோட சாய்ஸ் :)//

பெரும்பாலும் பதிவைப் போட்டு சர்வே எடுத்து போட்டிக்கு எதை அனுப்பலாமெனத் தீர்மானிப்பேன். கடைசித் தேதி 15 என நினைத்து அவசரமாய் கோழியை அனுப்பிய பிறகுதான் ‘இட்டேன் இடுகையை’! இப்போ பைரவர் லீடிங்ல போய்க்கொண்டே இருக்கிறார்:)!

நன்றி தமிழ் பிரியன்.

ராமலக்ஷ்மி said...

சுசி said...

// பழுப்பழகு சூப்பர் அக்கா..//

நன்றி சுசி. நேரமிருந்தா வண்ணத்திலேயும் பாருங்கள்.

//தனிமையில இருந்தாலும் நாயார் அலையோட சேர்த்து அள்ளிக் கிட்டுப் போறார்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் அக்கா..//

நாயார் எல்லோரது பாராட்டுக்களையும் அள்ளிக்கிட்டு இருக்கார்:)! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

எம்.ரிஷான் ஷெரீப் said...

//அழகான படங்கள் சகோதரி.//

மிக்க நன்றி ரிஷான்.

//கடற்கரை நாய் தனிமையையும் ஏக்கத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது.//

அதுவேதான் எனக்கும் தோன்றியது.

ராமலக்ஷ்மி said...

பிரியமுடன்...வசந்த் said...

// பழுப்புநிற வீடுதான் பிடிச்சது//

ஆஹா, நன்றி வசந்த்:)!

//ஃப்லிக்கர்ல இருந்த இதனோட ஒரிஜினல் செம்ம குளிர்ச்சி மேடம் எங்க எடுத்தது?//

குமரகத்தில் எடுத்தது. குமரகம் படங்களுக்கென்றே இட்ட பதிவில் பகிராதது:)!

ராமலக்ஷ்மி said...

ஆடுமாடு said...

//சேவல் படம் சூப்பர்.//

ரொம்ப நன்றிங்க. நீங்கள் சொல்வது முதல் படமா இரண்டாவதா எனப் புரியவில்லையே? ஹி.., எனக்கே இதில் எது கோழி எது சேவல் என சரியாகத் தெரியாததால் இரண்டாவதை பாசக்காரி எனக் கோழி ஆக்கிவிட்டேன்:)!

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...

//அனைத்து படமும் அழகு.//

நன்றிம்மா.

//தனிமையில் கடலில் ஆரப்பரிக்கும் அலையைப் பார்த்தால் இனிமை.

அது தன் தலைவன் பைரவர் காவலுக்கு செல்லும் போது நம்மையும் அழைத்து செல்வாரே, இன்னும் காணவில்லையே என்று சோகத்துடன் காத்திருக்கிறது .தன் தலைவன் வரும் வழிப் பார்த்து.//

அருமையான விளக்கம்.

//கவிதை அருமை ராமலக்ஷ்மி.

காத்திருக்கும் நாய் என் சாய்ஸ்.//

அனைவரின் அன்பையும் அள்ளிக் கொண்டது அந்த வாயில்லா ஜீவன். மங்களூர் கடற்கரையில் எடுத்ததாகும்.

வல்லிசிம்ஹன் said...

அத்தனை படங்களும் பிரம்மாண்டம் ராமலக்ஷ்மி. இருந்தாலும் வான்கோழியின் பார்வை என்னை மயக்கிவிட்டது.:)

ராமலக்ஷ்மி said...

கார்த்திக் said...

//மொதல் படம் சூப்பர் பேக்ரவுண்ட் மட்டும் டார்க்கா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்//

ஃப்ளிக்கரில் பதிந்தபோது இந்த ஒரிஜனல் பேக்ரவுண்டை வியந்து PS மூலம் மாற்றினீர்களா எனக் கேட்டிருந்தார் ஒருவர்:)!

//கடசிப்படம் செபியால ஜொலிக்குதுக்குங்க//

சேபியாவில் என் முதல் முயற்சி. சாச்சுரேஷன் போன்ற சில அட்ஜஸ்ட் செய்து இப்படிக் கொண்டு வந்தேன். உங்கள் பாராட்டு உற்சாகம் தருகிறது.

//எல்லாப்படங்களும் ரொம்ப அழகு போங்க

வாழ்துக்கள் :-))//

நன்றி நன்றி:)!!

ராமலக்ஷ்மி said...

//Hi Ramalakshmi,

Congrats!

Your story titled 'ஒற்றை- மார்ச் PiT போட்டிக்கு- பறக்கும் படங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th March 2010 11:42:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/205396

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேர்களுக்கும், தமிழிஷில் வாக்களித்த 21 பேர்களுக்கும் என் நன்றிகள்! நன்றிகள்!!

ராமலக்ஷ்மி said...

வல்லிசிம்ஹன் said...

//அத்தனை படங்களும் பிரம்மாண்டம் ராமலக்ஷ்மி. இருந்தாலும் வான்கோழியின் பார்வை என்னை மயக்கிவிட்டது.:)//

வாங்க வல்லிம்மா. வான்கோழிக்கு ஒரு ரசிகையர் மன்றம் ஆரம்பிப்போமா:)? ரொம்ப சாதுவாக பொறுமையாக போஸ் கொடுத்தது. அது நடக்கும் போதும் கம்பீரமே. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!

விக்னேஷ்வரி said...

மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டுவோமே! //

சூப்பர்.

கொக்கு, வாத்து, நாய்ப்படங்கள் அழகிலும் அழகு.

ராமலக்ஷ்மி said...

விக்னேஷ்வரி said...

***/ மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டுவோமே! //

சூப்பர்.

கொக்கு, வாத்து, நாய்ப்படங்கள் அழகிலும் அழகு./***

பிடித்தவற்றைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கு நன்றி விக்னேஷ்வரி!

முகுந்த் அம்மா said...

கலக்கலா இருக்குங்க, புகை படங்களும் சரி உங்கள் விமர்சனமும் சரி சூப்பர். வான்கோழி அழகு.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

நசரேயன் said...

3,5,7

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

பிடித்தது எது என்று எதைச்சொல்வது எதை விடுவது?அனைத்தும் பிடித்தம் உங்க காமிரா உட்பட!

ராமலக்ஷ்மி said...

முகுந்த் அம்மா said...

//கலக்கலா இருக்குங்க, புகை படங்களும் சரி உங்கள் விமர்சனமும் சரி சூப்பர். வான்கோழி அழகு.//

கருத்துக்கும் வான்கோழியை ரசித்தமைக்கும் நன்றிகள் முகுந்த் அம்மா!

ராமலக்ஷ்மி said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//புகைப்படங்கள் அனைத்தும் அருமை !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி சங்கர்.

//மீண்டும் வருவான் பனித்துளி !//

நல்லது அவசியம் வருக!

ராமலக்ஷ்மி said...

நசரேயன் said...

//3,5,7//

ஹை.. மயில்:)!
சிலிர்க்கும் சிறகு, மிஸ்டர். வொயிட்..

ரைட்:)! நன்றிகள் நசரேயன்.

ராமலக்ஷ்மி said...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

//பிடித்தது எது என்று எதைச்சொல்வது எதை விடுவது?அனைத்தும் பிடித்தம் உங்க காமிரா உட்பட!//

கேமிராவுக்கும் வாக்களித்த உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் சாந்தி.

மின்னல் said...

படங்கள் அனைத்தும் அருமை.ரெட்டை வால் குருவியை தேடி பார்த்துட்டேன்.அப்புறம் யானை குட்டி யானையா?சிறியதாக தெரிகிறதே?

திருவாரூரிலிருந்து சரவணன் said...

எல்லா படங்களும் அழகு. ஆனால் என் கவனத்தில் பளிச் என ஒட்டிக்கொண்டது உஜாலாதான். ஒருவேளை எப்போதும் அமைதியை விரும்பும் என்னுடைய மன நிலையும் இதற்கு காரணமாக இருக்குமோ?

மாதேவி said...

தனித்திருக்கும் பைரவர், பழுப்புநிற வீடு இரண்டும் பிடித்தன.

பாச மலர் said...

பழுப்பழகு மிக அழகு

ராமலக்ஷ்மி said...

மின்னல் said...

//படங்கள் அனைத்தும் அருமை.ரெட்டை வால் குருவியை தேடி பார்த்துட்டேன்.//

முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி மின்னல். இரட்டை வாலைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவில்லைதானே:)?

//அப்புறம் யானை குட்டி யானையா?சிறியதாக தெரிகிறதே?//

ரொம்பக் குட்டி அல்ல. ஆனால் சின்ன யானையே!

ராமலக்ஷ்மி said...

திருவாரூரிலிருந்து சரவணன் said...

//எல்லா படங்களும் அழகு.//

ரசனைக்கு நன்றி சரவணன்.

//ஆனால் என் கவனத்தில் பளிச் என ஒட்டிக்கொண்டது உஜாலாதான். ஒருவேளை எப்போதும் அமைதியை விரும்பும் என்னுடைய மன நிலையும் இதற்கு காரணமாக இருக்குமோ?//

இருக்கலாம். வெண்மை சமாதானத்துக்கு மட்டுமல்ல அமைதிக்கும்தான் அல்லவா?

ராமலக்ஷ்மி said...

மாதேவி said...

//தனித்திருக்கும் பைரவர், பழுப்புநிற வீடு இரண்டும் பிடித்தன.//

வருகைக்கும் பிடித்ததைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி மாதேவி.

ராமலக்ஷ்மி said...

பாச மலர் said...

//பழுப்பழகு மிக அழகு//

நன்றி பாசமலர்!

கிரி said...

//பாசக்காரி//

பாசக்காரன்!? (சேவல்)

ராமலக்ஷ்மி படங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.. குறிப்பாக எட்ஜ் சரியாக உள்ளது. பழுப்பாக உள்ள படங்கள் அனைவருக்கும் அதிகம் பிடித்ததற்கு காரணம்..அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமையே!

எனக்கும் ரொம்ப பிடித்தது. எனக்கு தெரிந்து நீங்க ஒருவர் தான் போட்டிக்குன்னு அனுப்பிட்டு இருக்கீங்க.. வேற யாராவது அனுப்பறாங்களா! ஏன் என்றால் நான் எங்கேயும் பார்க்கவில்லை ;-)

ராமலக்ஷ்மி said...

@ கிரி,

பாசக்காரன்? மாற்றி விட்டேன்:). நன்றி. சின்னக் கொண்டையாக இருந்ததால் குழப்பம்.

பாராட்டுக்கு நன்றி. இதற்கெனப் பதிவிடுபவர் குறைவாக இருக்கலாம். ஆனால் இம்மாதப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டும் 91 பேர்கள் கிரி.

soorya said...

உங்கள் இனிமையான படங்கள் ரொம்ப அருமையாக உள்ளது. சூர்யா

ராமலக்ஷ்மி said...

@ Soorya,

படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி சூர்யா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin