Tuesday, February 24, 2009

ஜெய் ஹோ...!

முதன் முறையாக யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் எனது இக்கவிதை!


"எல்லாப் புகழும்
இறைவனுக்கே
"-
அல்லாவின் திருவடியில்
அத்தனைப் பாராட்டையும்
அர்ப்பணித்து
வெற்றி ஏணியின்
ஒவ்வொரு படியிலும்
ஏ.ஆர் ரஹ்மான்
தன் உள்ளிருந்து
உச்சரிப்பது.
உலகமே பார்த்திருக்க
இந்திய இதயங்கள்
இன்பத்தில் பூத்திருக்க
தமிழர் தலைகள்
பெருமிதத்தில்
நிமிர்ந்திருக்க
உச்சிப்படியில் நின்று
மறுபடி அதையவர்
உச்சரிக்கக் கேட்ட போது
அரங்கம் அதிர்ந்தது
கரகோஷத்தில்
அகிலம் அதிர்ந்தது
அவர் தந்த இசையில்..
ஜெய் ஹோ...!

தன்னம்பிக்கை இவரது
வெற்றியின் சூட்சமம்
தன்னடக்கமே இவரது
தாரக மந்திரம்-
ஈன்றெடுத்த
தாயின் பாதங்களில்
விருதினை சமர்ப்பித்து
தாய் மண்ணுக்கும்
ஈட்டித் தந்திருக்கிறார்
இத்தனை பெருமை-
ஆனந்த வெள்ளத்தில்
குதித்துக் கும்மாளமாய்
கூவுகிறார் ரசிகரெல்லாம்..
ஜெய் ஹோ...!

சூழ்கிறார் இவரைப் பேட்டிக்கு-
"எதுவும் முடியும்
எனும் எண்ணம்
இனி வரட்டும்
இளைஞர் ஒவ்வொருவருக்கும்"

சொல்கிறார் நற்செய்தி
வெல்கின்ற வழிகாட்டி-
சொல்லுங்கள் இளைஞர்களே
ஜெய் ஹோ..
வெல்லுங்கள் உலகை
ஜெய் ஹோ...!

செய்யும் தொழிலே
தெய்வம் என்று
நேர்த்தியை நாடி
விழித்தே இருந்த
இவரது இரவுகள்
யாவும் விடிந்தன
வெற்றியின் முகத்தில்
ஒவ்வொரு நாளும்-
வந்தன விருதுகள்
வாசலைத் தேடி..
ஜெய் ஹோ...!

வறுமை இவரை
வறுத்த போதும்
வருத்தம் விடுத்து
பொறுப்புகள் சுமந்தார்.
இளமையில் கல்வி
முழுமை அடைய
முடியாது போயினும்-
முயன்று கற்றார்
அல்லும் பகலும்-
முழுமையாய் இசையினை
மூத்தோர் பலரிடம்-
கூடவே கற்றார்
பணிவும் பண்பும்-
அயராத உழைப்பால்
அடைந்தார் வெற்றியும்-
ஜெய் ஹோ...!

பெற்றவர் இன்ன
துறையில் எனை
நுழைய விட்டிருந்தால்
தொட்டிருப்பேன் வானத்தை-
இன்னார் எனக்குவந்த
இவ்வாய்ப்பைத்
தட்டிப் பறிக்காதிருந்தால்
எட்டியிருப்பேன் இமயத்தை-
என்றெல்லாம்
போனவற்றைப் பேசிப்பேசிப்
பொழுதினைப் போக்காமல்
காரணத்தைத் தேடித்தேடி
கணங்களைக் வீணாக்காமல்
கற்றிடுங்கள் பாடமிவர்
பெற்றிருக்கும் வெற்றியில்
ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
நிச்சயமாய் நீங்களும்..
ஜெய் ஹோ...!
*** *** ***


[படம்: இணையத்திலிருந்து..]

[25-27 பிப்ரவரி 2009 விகடன் இணைய தள முகப்பிலும் ஒலித்தது 'ஜெய் ஹோ...!']


யூத்ஃபுல் விகடன் முகப்பில்
:
விகடன் இணையதள முகப்பில்:

111 comments:

 1. விகடனிலுள்ளது
  உங்களுடைய படமா ?

  இது எப்பொழுது எழுதிய கவிதை

  நான் படிக்காத வரிகளா உள்ளன.

  ReplyDelete
 2. திகழ்மிளிர் said...

  //வாழ்த்துகள்//

  முதல் வருகை வந்து வாழ்த்தியமைக்கு நன்றி திகழ்மிளிர்.

  //விகடனிலுள்ளது
  உங்களுடைய படமா ?//

  ஆமாங்க.

  //இது எப்பொழுது எழுதிய கவிதை

  நான் படிக்காத வரிகளா உள்ளன.//

  இன்றைக்கு எழுதி அனுப்பி அங்கு
  வெளிவந்ததும் சுடச் சுட இங்கு:)!

  ReplyDelete
 3. வாழ்த்துகள்!!!!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ராமலஷ்மி! கவிதைக்கு ஜெய் ஹோ!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் ரஹ்மானுக்கும் உங்களுக்கும். நல்லா வந்திருக்கு கவிதை. கூடவே உங்க புகைப்படமும். ஹம், கலக்குங்க. எங்களை எல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க.

  அனுஜன்யா

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 7. கலக்கல் மேடம்... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்.
  ஜெய் ஹோ !
  பிளாகர் அனைவருக்கும் இன்னொரு பாதையைக் காட்டி இருக்கிறீர்கள்.
  செய்தி அச்சில் ஏறுமுன் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தாற் போல் வந்து விழுந்த வார்த்தைகள் ரஹ்மானுக்கு பாராட்டுக் கவிதையாகக் கோர்த்து விட்டீர்.
  சூப்பர்சானிக் வேகம்.
  வேகத்தடை இல்லாமல் பயணிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. பிரண்ட்!
  40 வரை காத்திருக்க மனசும் இல்லை, என் உடல்நிலையும் ஜுரத்தில் இருப்பதால் இப்போதே வாழ்திக்கிறேன்! உங்க கவிதை நல்லா இருக்குன்னு நான் மட்டுமா சொல்லுவேன். ஆ.வி தனக்கு தானே மேலும் மேலும் புகழை சேர்த்துக்குது அத்தனையே சொல்ல முடியுது

  ReplyDelete
 10. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 11. //பெற்றவர் இன்ன
  துறையில் எனை
  நுழைய விட்டிருந்தால்
  தொட்டிருப்பேன் வானத்தை-
  இன்னார் எனக்குவந்த
  இவ்வாய்ப்பைத்
  தட்டிப் பறிக்காதிருந்தால்
  எட்டியிருப்பேன் இமயத்தை-
  என்றெல்லாம்
  போனவற்றைப் பேசிப்பேசிப்
  பொழுதினைப் போக்காமல்
  காரணத்தைத் தேடித்தேடி
  கணங்களைக் வீணாக்காமல்
  கற்றிடுங்கள் பாடமிவர்
  பெற்றிருக்கும் வெற்றியில்
  ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
  நிச்சயமாய் நீங்களும்..
  ஜெய் ஹோ...! //

  கலக்கல் :-)

  எனக்கும் (அனைவருக்கும்) இந்த வரிகள் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 12. அட! இத நான் பார்க்கலையே!
  கலக்குறீங்க!
  வாழ்த்துக்கள் அம்மா!!!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்! ஜெய் ஹோ!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்! உங்களை மாதிரி கவிஞர்களுக்கு இதை ஒரு அங்கீகாரமா வச்சுக்கலாம்.

  ReplyDelete
 15. அன்பின் ராமலக்ஷ்மி,

  விகடனில் உங்கள் கவிதை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இதயங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.

  ReplyDelete
 16. அக்கா உங்களுக்கும் ஜெய் ஹோ!

  ReplyDelete
 17. ***பெற்றவர் இன்ன
  துறையில் எனை
  நுழைய விட்டிருந்தால்
  தொட்டிருப்பேன் வானத்தை-
  இன்னார் எனக்குவந்த
  இவ்வாய்ப்பைத்
  தட்டிப் பறிக்காதிருந்தால்
  எட்டியிருப்பேன் இமயத்தை-
  என்றெல்லாம்
  போனவற்றைப் பேசிப்பேசிப்
  பொழுதினைப் போக்காமல்
  காரணத்தைத் தேடித்தேடி
  கணங்களைக் வீணாக்காமல்
  கற்றிடுங்கள்***

  WOW!!! I like these lines very much!

  Congratulations, Ramalakshmi- I did have a look at your article in youthful vikatan! Very nice :-)

  ReplyDelete
 18. ஜெய் ஹோ.. வாழ்த்துக்கள்
  வழக்கம் போல .. கருத்தாழமிக்க கவிதை. :)

  ReplyDelete
 19. உள்ளம் சிலிர்க்கிறது
  உந்தன் செய்கையிலே !

  பரிசிலை பெற்றாய்
  பைந்தமிழ் பகர்ந்தாய் !!

  அமைதியின் ரூபம் நீ
  ஆனந்தத்தின் எல்லையில் நாங்கள் !!!

  யோசித்து யோசித்து எழுதினாலும் நாலைந்து வரிகளுக்கு மேல் வரமாட்டேன் என்றிருக்க, ரஹ்மானைப் பற்றிய உங்கள் நீண்ட கவிதை, நிற்கிறது எங்கள் நெஞ்சில்.

  விகடன் பெருமைப்பட வேண்டும் :))) இது தான் ஆரம்பம், இன்னும் நிறைய படைப்புகள் வர வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 20. பெற்றவர் இன்ன
  துறையில் எனை
  நுழைய விட்டிருந்தால்
  தொட்டிருப்பேன் வானத்தை-
  இன்னார் எனக்குவந்த
  இவ்வாய்ப்பைத்
  தட்டிப் பறிக்காதிருந்தால்
  எட்டியிருப்பேன் இமயத்தை-
  என்றெல்லாம்
  போனவற்றைப் பேசிப்பேசிப்
  பொழுதினைப் போக்காமல்
  காரணத்தைத் தேடித்தேடி
  கணங்களைக் வீணாக்காமல்
  கற்றிடுங்கள் பாடமிவர்
  பெற்றிருக்கும் வெற்றியில்
  ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
  நிச்சயமாய் நீங்களும்..


  நல்லாச் சொன்னீங்க.
  வாழ்த்துக்கள் விகடனில் உங்கள் கவிதை வந்ததுக்கு :-)

  ReplyDelete
 21. //வாழ்த்துகள் ராமலஷ்மி! கவிதைக்கு ஜெய் ஹோ!//

  ரிப்பீட்டேய்...! :)

  ReplyDelete
 22. வாழ்த்துகள் ரஹ்மானுக்கும், அக்காவுக்கும் :)

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் இருவருக்குமே!

  ReplyDelete
 24. //விகடனிலுள்ளது
  உங்களுடைய படமா ?//

  ஆமாங்க.

  அப்படி என்றால் இனி பல பதிவாளர்களின்
  முகங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

  ReplyDelete
 25. http://pudugaithendral.blogspot.com/2009/02/blog-post_25.html//


  butterfly award க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. /*பெற்றவர் இன்ன
  துறையில் எனை
  நுழைய விட்டிருந்தால்
  தொட்டிருப்பேன் வானத்தை-
  இன்னார் எனக்குவந்த
  இவ்வாய்ப்பைத்
  தட்டிப் பறிக்காதிருந்தால்
  எட்டியிருப்பேன் இமயத்தை-
  என்றெல்லாம்
  போனவற்றைப் பேசிப்பேசிப்
  பொழுதினைப் போக்காமல்
  காரணத்தைத் தேடித்தேடி
  கணங்களைக் வீணாக்காமல்
  கற்றிடுங்கள் பாடமிவர்
  பெற்றிருக்கும் வெற்றியில்
  ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
  நிச்சயமாய் நீங்களும்..
  ஜெய் ஹோ...!
  */
  அருமை. மிகத் தேவையான ஊக்கம் இது. விகடனில் வந்தமைக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 27. வாழ்த்துகள்

  தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

  ReplyDelete
 28. ராமலக்ஷ்மி,

  நலமா? :)

  மனம் கனிந்த வாழ்த்துகள் :)

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் ராம் மேடம்
  நேத்தே அபி அப்பா பதிவில் பார்த்தேன்.

  ReplyDelete
 30. ஜெய் ஹோ!!! :-) ஒரு நீரோட்டம் போல அழகாய் தெளிவாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துகள்!

  ReplyDelete
 31. வாவ். வாழ்த்துக்கள்.

  பெங்களூர்ல உங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கு. :))

  ReplyDelete
 32. ஜெய் ஹோ!!!!இனி ஒவ்வொரு வெற்றிப் படியிலும் ஒலிக்கட்டும் 'ஜெய் ஹோ!!!'
  வாழ்த்துக்கள் பெண்ணே!!!

  ரூம் போட்டு யோசிப்பீஹளோ?

  ReplyDelete
 33. மனம் நிறைந்த பாராட்டுகள் :-)

  ReplyDelete
 34. கவின் said...

  //வாழ்த்துகள்!!!!//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கவின்.

  ReplyDelete
 35. ஷைலஜா said...

  //வாழ்த்துகள் ராமலஷ்மி! கவிதைக்கு ஜெய் ஹோ!//

  வாருங்கள் ஷைலஜா, நன்றி. என் கவிதைக்கு நீங்கள் ஜெய் ஹோ சொன்ன மாதிரி இம்மாதக் கலைமகள் மாத இதழில் ரஸவாதி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்ற உங்கள் ‘அவனும் இவனும்’ சிறுகதைக்கும் சொல்லிக் கொள்கிறேன், ஜெய் ஹோ...!

  ReplyDelete
 36. அனுஜன்யா said...

  //வாழ்த்துகள் ரஹ்மானுக்கும் உங்களுக்கும். நல்லா வந்திருக்கு கவிதை. கூடவே உங்க புகைப்படமும். ஹம், கலக்குங்க. எங்களை எல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க.//

  அட இது எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்கள் தந்த தொடர் ஊக்கத்தினால்தானே? மறந்தால்தானே ஞாபகம்னு ஒண்ணை வச்சுக்கணும்:)!

  மேலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் அர்த்தம் கொடுக்கும் உங்களது ஒவ்வொரு கவிதையிலும் நான் வியந்து போய் நிற்கிறேன் என்றால் அது மிகையன்று.

  நன்றி அனுஜன்யா:)!

  ReplyDelete
 37. கடையம் ஆனந்த் said...

  //வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 38. கணேஷ் said...

  //கலக்கல் மேடம்... வாழ்த்துக்கள்..//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ். ரஹ்மான் உங்களை இங்கே இழுத்து வந்து விட்டாரா:)? பார்த்தேன் உங்கள் வலைப்பூவில் நீங்கள் ‘எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே’ என அகமகிழ்ந்திருப்பதை:)!

  ReplyDelete
 39. goma said...

  //வாழ்த்துக்கள்.
  ஜெய் ஹோ !//

  நன்றி:)!


  //செய்தி அச்சில் ஏறுமுன் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தாற் போல் வந்து விழுந்த வார்த்தைகள் ரஹ்மானுக்கு பாராட்டுக் கவிதையாகக் கோர்த்து விட்டீர்.//

  எத்தனை ஆயிரம் இதயங்கள் பட்டாம்பூச்சியாக ஆனந்தத்தில் படபடக்கின்றன. அவைதான் வந்து வார்த்தைகளாக விழுந்திருக்கிறதோ என்னவோ:)!

  // சூப்பர்சானிக் வேகம்.
  வேகத்தடை இல்லாமல் பயணிக்க வாழ்த்துக்கள்//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோமா. உங்கள் வாய் முகூர்த்தம் இந்தப் பதிவும் செவ்வாயில் அமைந்து விட்டது:)!

  ReplyDelete
 40. அபி அப்பா said...

  //உங்க கவிதை நல்லா இருக்குன்னு நான் மட்டுமா சொல்லுவேன். ஆ.வி தனக்கு தானே மேலும் மேலும் புகழை சேர்த்துக்குது அத்தனையே சொல்ல முடியுது//

  எல்லாம் நீங்கள் பதிவிட்டு வாழ்த்திய நேரம்தான் பாருங்கள். அதுவேதான் ’பரிந்துரை’யில் நின்ற என்னை விகடனின் பக்கங்களுக்குள் கூட்டிச் சென்றிருக்கிறது.

  //பிரண்ட்!

  40 வரை காத்திருக்க மனசும் இல்லை, என் உடல்நிலையும் ஜுரத்தில் இருப்பதால் இப்போதே வாழ்திக்கிறேன்!//

  அதுசரி, எல்லாப் பதிவும் 40-யைத் தாண்டும் என என்ன நிச்சயம். ஆகையால் காத்திருக்காமல் வரலாம்
  ஃப்ரென்ட்:)! எனக்குத்தான் இனி கவலையே இல்லையே:)! ‘அபி வச்சி ஆப்பு’ எனும் அழகான அற்புதமான கவசம் எப்பவும் கைவசமிருக்கே:))!

  ReplyDelete
 41. அன்புடன் அருணா said...

  //மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
  அன்புடன் அருணா//

  உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 42. கிரி said...

  //கலக்கல் :-)//

  பாராட்டுக்கு நன்றி கிரி:)!

  //எனக்கும் (அனைவருக்கும்) இந்த வரிகள் பயனுள்ளதாக இருக்கும்//

  அந்தக் கடைசிப் பத்தி பலருக்கும் பிடித்துத்தான் போயிருக்கிறது பாருங்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நமக்கு ஒவ்வொரு செய்தி இருந்து கொண்டேதான் இருக்கிறது எப்போதும். நின்று கவனிக்கத்தான் நேரமின்றி போகிறது பெரும்பாலும் எல்லோருக்கும்.

  உங்கள் தொடர் ஊக்கத்துக்கும் எனது நன்றிகள் கிரி!

  ReplyDelete
 43. ஜீவன் said...

  //அட! இத நான் பார்க்கலையே!
  கலக்குறீங்க!
  வாழ்த்துக்கள் அம்மா!!!//

  வாங்க ஜீவன், எனது ”சேற்றிலே செந்தாமரைகள்...” யூத்ஃபுல் விகடனின் பரிந்துரையில் வந்ததைப் பார்த்தவுடனேயே மகிழ்ந்து வாழ்த்தியவரல்லவா நீங்கள். பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 44. தமிழ் பிரியன் said...

  //வாழ்த்துக்கள்! ஜெய் ஹோ!//

  ஆஹா, ஜெய் ஹோ:)!

  ReplyDelete
 45. தமிழ் பிரியன் said...

  //வாழ்த்துக்கள்! உங்களை மாதிரி கவிஞர்களுக்கு இதை ஒரு அங்கீகாரமா வச்சுக்கலாம்.//

  நிச்சயமா! வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 46. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //அன்பின் ராமலக்ஷ்மி,

  விகடனில் உங்கள் கவிதை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இதயங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.//

  எல்லாம் உங்கள் தொடர் ஊக்கத்தின் விளைவே:)! மிக்க நன்றி ரிஷான்!

  ReplyDelete
 47. திவா said...

  //அக்கா உங்களுக்கும் ஜெய் ஹோ!//

  நன்றி நன்றி திவா:)!

  ReplyDelete
 48. வருண் said...

  //WOW!!! I like these lines very much!//

  அந்தக் கடைசிப் பத்தி எழுதி முடிக்கையில் எனக்கும் கிடைத்தது ஒரு திருப்தி:)!

  //Congratulations, Ramalakshmi- I did have a look at your article in youthful vikatan! Very nice :-)//

  நன்றி வருண், உங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும்:)!

  ReplyDelete
 49. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  //ஜெய் ஹோ.. வாழ்த்துக்கள்//

  ரொம்ப நன்றி முத்துலெட்சுமி:)!


  //வழக்கம் போல .. கருத்தாழமிக்க கவிதை. :)//

  ”வழக்கம்... ஆழம்...” அப்படி வாங்க நீங்களும் என் வழிக்கு:)!

  ReplyDelete
 50. பாச மலர் said...

  //வாழ்த்துகள்//

  நன்றி பாசமலர்.

  ReplyDelete
 51. சதங்கா (Sathanga) said...

  //யோசித்து யோசித்து எழுதினாலும் நாலைந்து வரிகளுக்கு மேல் வரமாட்டேன் என்றிருக்க, ரஹ்மானைப் பற்றிய உங்கள் நீண்ட கவிதை, நிற்கிறது எங்கள் நெஞ்சில்.//

  ரொம்ப நன்றி சதங்கா. எத்தனை வரியானால் என்ன? எண்ணங்களின் வெளிப்பாடுதான் முக்கியம். அந்த வகையில் உங்களது அந்த அழகிய ஆறு வரிகள் அருமை.

  //விகடன் பெருமைப்பட வேண்டும் :))) இது தான் ஆரம்பம், இன்னும் நிறைய படைப்புகள் வர வாழ்த்துக்கள் !!!//

  பிரியத்தினால் வரும் பெரிய வார்த்தைகள்:)! வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்!

  அடுத்து உங்களால் விகடன் பெருமைப் படும் நாளுக்குக் காத்திருக்கிறேன் சதங்கா:)!

  ReplyDelete
 52. Truth said...

  //நல்லாச் சொன்னீங்க.//

  கடைசிப் பத்திக்கான உங்க ஸ்பெஷல் பாராட்டுக்கு என் நன்றிகள் ட்ரூத்.

  //வாழ்த்துக்கள் விகடனில் உங்கள் கவிதை வந்ததுக்கு :-)//

  மிக்க நன்றி:)! ஆரம்பக் காலத்தில் என் வலைப்பூவை ஃபாலோ பண்ண ஆரம்பித்த முதல் நால்வரில் நீங்களும் ஒருவர். அதற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்:)!

  ReplyDelete
 53. கவிநயா said...

  // //வாழ்த்துகள் ராமலஷ்மி! கவிதைக்கு ஜெய் ஹோ!//

  ரிப்பீட்டேய்...! :)// //

  உற்சாகமான உங்கள் வழிமொழிதலுக்கு நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 54. எம்.எம்.அப்துல்லா said...

  //வாழ்த்துகள் ரஹ்மானுக்கும், அக்காவுக்கும் :)//

  ஆஹா, அப்துல்லா ரஹ்மானுடன் சேர்த்து எனக்கும் வாழ்த்தா:)? கேட்கவே நல்லாயிருக்கிறது, நன்றி:)!

  ReplyDelete
 55. நாகை சிவா said...

  //வாழ்த்துக்கள் இருவருக்குமே!//

  உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவா.

  ReplyDelete
 56. திகழ்மிளிர் said...

  // ***//விகடனிலுள்ளது
  உங்களுடைய படமா ?//

  ஆமாங்க.***

  அப்படி என்றால் இனி பல பதிவாளர்களின்
  முகங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்//

  நல்லதுதானே திகழ்மிளிர்:)? எத்தனை காலம்தான் நாமெல்லாம் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாமல் பின்னூட்டங்களில் பேசிக் கொண்டிருப்பது:)? என்ன சொல்கிறீர்கள்:)?

  ReplyDelete
 57. புதுகைத் தென்றல் said...

  //http://pudugaithendral.blogspot.com/2009/02/blog-post_25.html//


  butterfly award க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  பட்டாம்பூச்சி விருதி வழங்கி என்னைப் பரவசப் படுத்தி விட்டீர்கள். நெகிழ்வாக உணர்ந்தேன். மிக்க நன்றி தென்றல்!

  ReplyDelete
 58. அமுதா said...

  //அருமை. மிகத் தேவையான ஊக்கம் இது.//

  கடைசிப் பத்திக்கான பிரத்தியேகப் பாராட்டுக்கு நன்றி அமுதா.

  //விகடனில் வந்தமைக்கு பாராட்டுக்கள்//

  அடுத்து உங்கள் கவிதையை அங்கு காண விரும்புகிறேன்.

  ReplyDelete
 59. நட்புடன் ஜமால் said...

  //வாழ்த்துக்கள் ...//

  நன்றி ஜமால்.

  ReplyDelete
 60. SurveySan said...

  //arumai! arumai! arumai!
  :)//

  நன்றி! நன்றி! நன்றி! :))!

  ReplyDelete
 61. @ Viji,

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 62. நெல்லை சிவா said...

  //Simply Super! Congrats!//

  Thanks a lot Siva!

  ReplyDelete
 63. NewBee said...

  //ராமலக்ஷ்மி,

  நலமா? :)

  மனம் கனிந்த வாழ்த்துகள் :)//

  அட வாங்க புதுவண்டு. நலமே. இத்தனை பிஸியிலும் எனை வாழ்த்தப் பறந்து வந்தது உண்மையிலேயே நெகிழ்வாக இருக்கிறது. நன்றி நன்றி:)!

  ReplyDelete
 64. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //வாழ்த்துக்கள் ராம் மேடம்
  நேத்தே அபி அப்பா பதிவில் பார்த்தேன்.//

  நன்றி அமித்து அம்மா. அவர் பதிவில் என்னைப் பாராட்டியது எனது ”சேற்றிலே செந்தாமரைகளும்.. ஆஸ்கார் அவார்டுகளும்,” விகடன் பரிந்துரையில் வந்ததற்கு. இன்று நான் விகடன் பக்கத்துக்குள் நுழைந்தமைக்கு உத்வேகம் தந்தது அவரது பாராட்டுப் பதிவுதான்:)!

  ReplyDelete
 65. சந்தனமுல்லை said...

  //ஜெய் ஹோ!!! :-) ஒரு நீரோட்டம் போல அழகாய் தெளிவாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துகள்!//

  அழகாய் பாராட்டியிருக்கிறீர்கள்:)! நன்றி முல்லை!

  ReplyDelete
 66. ambi said...

  //வாவ். வாழ்த்துக்கள்.//

  நன்றி:)!

  //பெங்களூர்ல உங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கு. :))//

  அட, நான் கூட உங்கள் ப்ரொஃபைலில் இருக்கும் சின்ன அம்பி சாயலில் யாரையாவது பார்த்தால் நீங்களாய் இருக்குமோன்னு நினைத்திருக்கிறேன்:)))!

  ReplyDelete
 67. நானானி said...

  //ஜெய் ஹோ!!!!இனி ஒவ்வொரு வெற்றிப் படியிலும் ஒலிக்கட்டும் 'ஜெய் ஹோ!!!'
  வாழ்த்துக்கள் பெண்ணே!!!//

  நன்றி:)! வாழ்த்துக்களை வணங்கி ஏற்கிறேன் நானானி!

  //ரூம் போட்டு யோசிப்பீஹளோ?//

  நல்லா கேட்டீங்களே. நாலு வரி எழுதவும் ஒரு ஃபோன் கால். அடுத்த நாலு வரியில் அடிக்கும் டோர் பெல். அப்புறம் மைக்ரோவேவ் பீப். இவற்றுக்குள்ளும் எழுதுவது என்பது ஒரு சுகமாய்த்தான்தானே இருக்கு நமக்கு:)?!

  ReplyDelete
 68. இனியவள் புனிதா said...

  //மனம் நிறைந்த பாராட்டுகள் :-)//

  நன்றி புனிதா:)!

  ReplyDelete
 69. வாழ்த்துக்கள் மேடம்.எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது,அதை அவர் தாய்க்கும்,தாய்நாட்டுக்கும் இறைவனுக்கும் அர்பணித்ததும்...இதை நீங்க ஒரு கவிதையா கோர்த்தது மிக மிக அருமை.முத்துச்சரத்தில் மேலும் ஒரு சரம்!!!!!.

  ReplyDelete
 70. \\”வழக்கம்... ஆழம்...” அப்படி வாங்க நீங்களும் என் வழிக்கு:)!// இந்தா வந்துட்டம்...:)

  ReplyDelete
 71. Hi

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

  ReplyDelete
 72. வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர.

  ReplyDelete
 73. வாழ்த்துகள்.... கவிதை படித்தேன்.. நீளம் என்ற சலிப்பின்றி அழகாக இருந்தது...

  தொடருங்க!!!

  ReplyDelete
 74. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!!!

  ReplyDelete
 75. //
  பெற்றவர் இன்ன
  துறையில் எனை
  நுழைய விட்டிருந்தால்
  தொட்டிருப்பேன் வானத்தை-
  இன்னார் எனக்குவந்த
  இவ்வாய்ப்பைத்
  தட்டிப் பறிக்காதிருந்தால்
  எட்டியிருப்பேன் இமயத்தை-
  என்றெல்லாம்
  போனவற்றைப் பேசிப்பேசிப்
  பொழுதினைப் போக்காமல்
  காரணத்தைத் தேடித்தேடி
  கணங்களைக் வீணாக்காமல்
  கற்றிடுங்கள்.
  //

  நல்ல ஒரு ஆசான் சொல்லும் அன்பான அறிவுரை மனதில் ஆழ்ந்த சிந்தனையோடு யோசிக்க வைத்திருக்கிறீர்கள்.

  மாணவப் பருவம் என்பது மிகச்சிறந்த பருவம்.

  அதில் தப்பிதத்தல்களினால் வாழ்க்கை தடம் மாறிப் போகும் அவல நிலையை போக்கும் உன்னதமான வரிகள்.

  நீங்கள் இன்னும் பல இமயங்களை தொட எனது வாழ்த்துக்கள்
  இமயத்திலும் நான் வாழ்த்த வருவேன் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 76. //மிக்க நன்றி:)! ஆரம்பக் காலத்தில் என் வலைப்பூவை ஃபாலோ பண்ண ஆரம்பித்த முதல் நால்வரில் நீங்களும் ஒருவர். அதற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்:)!

  அப்போ ட்ரீட் உண்டா? :-)

  ReplyDelete
 77. sindhusubash said...

  //வாழ்த்துக்கள் மேடம்.எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது,அதை அவர் தாய்க்கும்,தாய்நாட்டுக்கும் இறைவனுக்கும் அர்பணித்ததும்...இதை நீங்க ஒரு கவிதையா கோர்த்தது மிக மிக அருமை.முத்துச்சரத்தில் மேலும் ஒரு சரம்!!!!!.//

  நன்றி சிந்து. அவரது அர்ப்பணிப்பில் இருக்கிற அடக்கம் பாராட்டுக்குரியதல்லவா? ஒரு ரசிகையாக அவரது வெற்றி உங்களுக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பது தெரிகிறது:)!

  ReplyDelete
 78. Poornima Saravana kumar said...

  //வாழ்த்துகள்:))//

  வாழ்த்துக்களுக்கு நன்றி பூர்ணிமா:)!

  ReplyDelete
 79. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  //\\”வழக்கம்... ஆழம்...” அப்படி வாங்க நீங்களும் என் வழிக்கு:)!//

  இந்தா வந்துட்டம்...:) //\\

  ஆஹா, நன்றி:)! அப்போ இனி சேர்ந்து ஜமாய்ப்போம்:)!

  ReplyDelete
 80. @ வலைப்பூக்கள்,

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 81. தி. ரா. ச.(T.R.C.) said...

  //வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர.//

  உங்கள் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்கிறேன்.

  ReplyDelete
 82. ஆதவா said...

  //வாழ்த்துகள்.... கவிதை படித்தேன்.. நீளம் என்ற சலிப்பின்றி அழகாக இருந்தது...

  தொடருங்க!!!//

  நன்றி ஆதவன்.

  ’நீளம்’ எனது “பலவீனம்”.

  அது ’சலிப்பைத் தரவில்லை’ என்றதில் வந்தது ஒரு திருப்தி:).

  ’தொடருங்க’ என்றதில் வந்தது பெரும் நிம்மதி:).

  ReplyDelete
 83. RAMYA said...

  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!!!//

  நன்றி ரம்யா.


  ***//பெற்றவர் இன்ன

  துறையில் எனை
  நுழைய விட்டிருந்தால்
  தொட்டிருப்பேன் வானத்தை-
  இன்னார் எனக்குவந்த
  இவ்வாய்ப்பைத்
  தட்டிப் பறிக்காதிருந்தால்
  எட்டியிருப்பேன் இமயத்தை-
  என்றெல்லாம்
  போனவற்றைப் பேசிப்பேசிப்
  பொழுதினைப் போக்காமல்
  காரணத்தைத் தேடித்தேடி
  கணங்களைக் வீணாக்காமல்
  கற்றிடுங்கள்.//***

  நல்ல ஒரு ஆசான் சொல்லும் அன்பான அறிவுரை மனதில் ஆழ்ந்த சிந்தனையோடு யோசிக்க வைத்திருக்கிறீர்கள்.

  மாணவப் பருவம் என்பது மிகச்சிறந்த பருவம்.

  அதில் தப்பிதத்தல்களினால் வாழ்க்கை தடம் மாறிப் போகும் அவல நிலையை போக்கும் உன்னதமான வரிகள்.//

  ரம்யா, மாணவப் பருவத்திலுள்ளவர்களுக்கும்.. அதை அப்போதுதான் கடந்தவர்களுக்கும் மட்டுமின்றி அவ்வரிகள் எந்த வயதினருக்கும் பொருந்தக் கூடியவைதானே. எல்லோரது வாழ்விலும் கற்பதற்கு பாடமுண்டு. அதிலும் ரஹ்மானிடம் கற்பதற்கு எத்தனையோ இருக்கிறது.

  //நீங்கள் இன்னும் பல இமயங்களை தொட எனது வாழ்த்துக்கள்
  இமயத்திலும் நான் வாழ்த்த வருவேன் ராமலக்ஷ்மி.//

  இந்த அன்புக்குக் கட்டுப் பட்டு விட்டேன். வாழ்த்துக்களுக்கும் நன்றி ரம்யா.

  ReplyDelete
 84. Truth said...

  \\அப்போ ட்ரீட் உண்டா? :-)\\

  அதற்கென்ன:)? கொடுத்திட்டாப் போச்சு, இதோ வரும் அடுத்த உங்கள் இந்திய விஜயத்தின் போது:)!

  ReplyDelete
 85. பாலராஜன்கீதா said...

  //வாழ்த்துகள்.//

  நன்றி மேடம்.

  ReplyDelete

 86. விகடன் இணையதள பக்கத்திலும்
  தங்கள் பாராட்டினைப் பதிந்திருக்கும் பதிவர்கள் கோமா, கிரி, வல்லிம்மா, சர்வேசன், viji, கவிஞர் N.சுரேஷ், தீபா ஆகியோருக்கும் மேலும் வாழ்த்தியிருக்கும் ரெஜினா, அப்துல் ரஹ்மான், அஸ்ஜத் ஆகியோருக்கும் என் நன்றிகள். கவிதையை முகப்பில் கால நீட்டிப்பு செய்திருக்கும் யூத்ஃபுல் விகடனுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 87. நான் சார்ந்திருக்கும் குழுமம் மூலம் இன்று தான் தெரிய வந்தது. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 88. வாழ்த்துக்கள். அழகான கவிதை.

  ReplyDelete
 89. அக்கா, விகடனின் மெயின் இணையதளத்திலும் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்களது ஜெய் ஹோ...! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 90. தமிழ் மண விருதில் மூன்று பிரிவுகளில் 3 ஆம், 4ஆம் மற்றும் 15ஆம் இடங்களைப் பிடித்தமைக்கு இன்னொரு ஜெய் ஹோ...!

  ReplyDelete
 91. நம் அனைவருக்கும் ஜெய் ஹோ...! மீ த 100! அதனால் பரிசுப் பணத்தை என் அக்கவுண்டில் போட்டுடுங்க:)!

  ReplyDelete
 92. தமிழ் மண விருதில் மூன்று பிரிவுகளில் 3-ம், 4- ம் இடங்களைப் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.
  இன்னும் நிறைய படைப்புகள் வர வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 93. ////தன்னம்பிக்கை இவரது
  வெற்றியின் சூட்சமம்
  தன்னடக்கமே இவரது
  தாரக மந்திரம்-///  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. ரஹ்மானுக்கும் உங்களுக்கும்.

  ReplyDelete
 94. geethasmbsvm6 said...

  //நான் சார்ந்திருக்கும் குழுமம் மூலம் இன்று தான் தெரிய வந்தது. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  அறிந்தவுடன் வந்து அன்போடு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

  ReplyDelete
 95. உமா said...

  //வாழ்த்துக்கள். அழகான கவிதை.//

  நன்றி உமா.

  ReplyDelete
 96. தமிழ் பிரியன் said...

  //அக்கா, விகடனின் மெயின் இணையதளத்திலும் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்களது ஜெய் ஹோ...! வாழ்த்துக்கள்!//

  பார்த்தேன் தமிழ் பிரியன், மூன்று நாட்கள் விகடன்.காம் முகப்பிலும்:)! நன்றி.

  ReplyDelete
 97. தமிழ் பிரியன் said...

  //தமிழ் மண விருதில் மூன்று பிரிவுகளில் 3 ஆம், 4ஆம் மற்றும் 15ஆம் இடங்களைப் பிடித்தமைக்கு இன்னொரு ஜெய் ஹோ...!//

  நன்றி நன்றி:)! எனது அடுத்த பதிவு வாக்களித்து என்னை அவ்விடங்களுக்குக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்வதாய் தயாராகிக் கொண்டிருக்கிறது:)!

  ReplyDelete
 98. தமிழ் பிரியன் said...

  //நம் அனைவருக்கும் ஜெய் ஹோ...! மீ த 100! அதனால் பரிசுப் பணத்தை என் அக்கவுண்டில் போட்டுடுங்க:)!//

  நீங்கள்தான் 100ஆவது:)! ஜெய் ஹோ...! ம்ம். இணைய தளத்தில் வெளிவந்தவற்றிற்கு பரிசுப் பணம் தருவதில்லையே, அதனால் என்ன? என்றைக்காவது விகடன் இதழில் என் படைப்பு பிரசுரமாகையில் கண்டிப்பாக அந்த சன்மானம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து சேரும்:)!

  ReplyDelete
 99. கடையம் ஆனந்த் said...

  //தமிழ் மண விருதில் மூன்று பிரிவுகளில் 3-ம், 4- ம் இடங்களைப் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.
  இன்னும் நிறைய படைப்புகள் வர வாழ்த்துக்கள் !!!//

  மிக்க நன்றி ஆனந்த். என் பதிவுகளுக்கிடையான இடைவெளி அதிகமானால் உடனே வந்து ‘எப்போது அடுத்த பதிவு’ என அக்கறையுடன் கேட்பது போல இப்போது விருதுகள் கிடைத்த போதும் தேடி வந்து வாழ்த்தியிருக்கிறீர்கள்:)! எனது அடுத்த பதிவு உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லத்தான்..!

  ReplyDelete
 100. தங்கராசா ஜீவராஜ் said...

  //மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. ரஹ்மானுக்கும் உங்களுக்கும்.//

  என் மனமார்ந்த நன்றிகள் ஜீவன்.

  ReplyDelete
 101. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.. கவிதை நன்றாக இருக்கிறது.. பாராட்டுகள்..

  ReplyDelete
 102. @ வெண்பூ,

  உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி வெண்பூ.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin