Sunday, March 8, 2009

மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்!
தாய்மை என்பது அன்பின் உச்சம்.
உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.

அன்பின் வடிவாய்.. தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.

புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குடியும் இவ்வாறாகப் பெண்ணினால் பக்குவப் பட்டு நின்றால் போதுமே: "குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்"! ஒளவை சொன்னதுதான்!

இப்படித் தாய்மை உள்ளத்தில் பரிமளித்துத் தத்தமது குடிகளை உயர்த்துகிற பெண்களுக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக் காட்டாக இருந்து சாதி மத இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடக் காரணமாயிருந்தார்கள்.

அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. இன்று அமைதி என்பது ஆங்காங்கே அவ்வபோது ஆட்டம் கண்டபடியே இருப்பது ஏன் எனச் சற்று ஆராயத்தான் வேண்டும். அப்படி ஆராய்கையில், தாய்மையும், பெண்மையின் தன்னிகரற்ற தியாக உள்ளமும் போற்றப் பட ஆரம்பித்த பிறகுதான் இந்த 'உலகின் சுபிட்சம்' உச்சத்துக்கு செல்லத் துவங்கிய உண்மை புரியும்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் வரையிலும் கூட உலகின் பல நாடுகளில் பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருக்கவில்லை. வளர்ந்த நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அமெரிக்காவில் 1920ஆம் ஆண்டுதான் பெண்கள் மதிக்கப்பட்டு ஓட்டுரிமை தரப் பட்டார்கள்.

உன்னிப்பாக உலக சரித்திரத்தைக் கவனித்தால் வியக்கத்தகு வளர்ச்சி என்பது மங்கையர் மதிக்கப்பட ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டில்தான் வந்தது என்றிடலாம். 1905-ல் கண்டு பிடிக்கப் பட்ட விமானம் முதல் தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் போன்ற உலகத்தை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்த அத்தனை சமாச்சாரங்களுக்கும் இருபதாம் நூற்றாண்டே சாளரங்களை விரியத் திறந்து விட்டது.

இந்தியாவில் 'உடன்கட்டை' வழக்கம் முற்றிலுமாக ஒழிந்தது. பெண்களும் கல்விக்காக வெளிவரத் தொடங்கினார்கள். பரவலாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். பொருளாதார ரீதியாகவும் குடும்பப் பொறுப்பினைத் தாங்க ஆரம்பித்தார்கள். உடலால் பலவீனமானவர்களாய் அறியப் பட்ட பெண்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலையிலும் பெரும் வெற்றிகளைக் குவித்த படி பெரும் சக்திகளாய் மாறலானார்கள்.

மகாக் கவி பாரதி பெண்களின் விடுதலை வேண்டிப் பாடிய கும்மிப் பாட்டு அட்சரம் பிசகாமல் மெய்ப் பட்டது.

'சிவனின்றி சக்தி இல்லை. சக்தியின்றி சிவனில்லை’ என்பது வேதகாலப் பாடமாக மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கையிலும் நடக்கக் கண்டார்கள். வேலைக்குச் செல்லாவிடினும் வீட்டிலிருந்த படி குடும்பப் பொறுப்புகள் நிர்வகிப்பதில் ‘ஒன்றும் தெரியாது உனக்கு’ என்கிற மாதிரியான பிம்பங்கள் உடைத்து திறமைமிகு மதி மற்றும் நிதி மந்திரிகளானார்கள்.


யின்-யாங்


சீனர்களின் யின்-யாங் தத்துவம் எதிரெதிரான பெண் ஆண் சக்திகளின் அலைகள் ஒன்றில்லா விட்டால் மற்றதில்லை எனும் அளவுக்கு ஒன்றையொன்று சார்ந்து ஒன்றின் உயர்வுக்கு மற்றது காரணமாய் அமைவதே இயற்கையின் நியதி என்கிறது. அது உண்மையென்றே படுகிறது.

இப்படி சரிவிகித அலை உலகிலே என்றும் இருக்குமாயின் செழிப்பிற்குக் குறைவிருக்காது. கருணை என்பது கடலெனப் பெருகி தீவிரவாதம் தீய்ந்தே போய்விடும். எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப் படாது போகிறார்களோ அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!
*** *** ***

அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

*** *** ***

முதல் படம் நன்றி: முத்துலெட்சுமி கயல்விழி
இரண்டாவது படம்: இணையத்திலிருந்து..

 • இளமை விகடன் 5 மார்ச் 2009-ல் வெளியிட்டிருக்கும் மகளிர் தினச் சிறப்பிதழான சக்தி 2009-ல் இக்கட்டுரையைக் காண்க இங்கே:
54 comments:

 1. பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
  பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

  மகளிர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 3. விகடனிலே பார்த்து விட்டேன் அக்கா. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ****பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை பிறகு திண்ணை இணைய இதழ் எனத் தொடர்கிறது. தொடர்ந்து எழுதுவது என் வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கமாக இருந்து வருகிறது.****

  உங்க கட்டுரை, ஷக்தி 2009 லயும் பார்த்தேங்க, ராமலக்ஷ்மி!

  அதுபோல் ப்ரிண்ட்ல வரும் கட்டுரையால் உங்கள் எண்ணங்களும் ஆக்கங்களும் கோடிக்கணக்கான தமிழர்களை போய் சேரும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

  வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 5. கை வண்ணம் அங்கு (ம்) கண்டேன் இங்கும் கண்டேன்! வாழ்த்துகள் ராமலஷ்மி!

  ReplyDelete
 6. தமிழ் பிரியன் said...

  //பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
  பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

  மகளிர் தின வாழ்த்துக்கள்!//

  மகாக்கவியின் வரிகளுடன் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 7. நாங்கெல்லாம் இப்போ விகடனைப் பார்த்துட்டுதானெ முத்துச்சரத்துக்குள்ளே நுழையறோம்.
  விகடன் இனி உங்களுக்கு முன்வாசல்

  ReplyDelete
 8. //எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப் படாது போகிறார்களோ அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!//

  :-)

  ReplyDelete
 9. பாச மலர் said...

  //அனைவருக்கும் வாழ்த்துகள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி பாசமலர்.

  ReplyDelete
 10. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 11. // அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!//

  என்ன பசங்களுக்கும் சேத்தே சொல்லுரீங்களா

  எது எப்படியோ மகளிர் அனைவருக்கும் எனது மகளிர்தின வாழ்துக்கள்

  ReplyDelete
 12. நண்பர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..!!!

  ReplyDelete
 13. மகளிர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. மகளிர் தின வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் பிரண்ட்!நான் இந்த பதிவுக்கு நீண்ட பதில் சொல்லலாம்! ஆனா அது ஒரு பதிவு அளவு வந்துவிடும்! நீங்க அனுமதி கொடுத்தா அழகா சின்னதா ஆக்கி பின்னூட்டமா போடுறேன்!

  ReplyDelete
 16. மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம். (ஒரு நாள் லேட், ஆனா, விகடன்.காம் ல நேற்று வாழ்த்திட்டேன் :-))

  ReplyDelete
 17. @ அபி அப்பா,

  சொல்லுங்கள். உங்கள் கருத்தைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.

  ReplyDelete
 18. கடையம் ஆனந்த் said...

  //விகடனிலே பார்த்து விட்டேன் அக்கா. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.//

  கடந்த பதிவிலேயே வாழ்த்துக்களைச் சொன்னதோடு நின்றிடாமல் பதிவிட்டதும் வந்து வாழ்த்துக்களைப் பதிந்தமைக்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 19. வருண் said...

  //****பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை பிறகு திண்ணை இணைய இதழ் எனத் தொடர்கிறது. தொடர்ந்து எழுதுவது என் வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கமாக இருந்து வருகிறது.****

  உங்க கட்டுரை, ஷக்தி 2009 லயும் பார்த்தேங்க, ராமலக்ஷ்மி!//

  வாருங்கள் வருண், விகடனுக்கு நன்றி. என்னைப் பற்றிய அறிமுதத்தை அவர்களாகவே என் வலைப்பூவில் கண்டெடுத்து இணைத்திருந்தார்கள்.

  //அதுபோல் ப்ரிண்ட்ல வரும் கட்டுரையால் உங்கள் எண்ணங்களும் ஆக்கங்களும் கோடிக்கணக்கான தமிழர்களை போய் சேரும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!//

  இது மின்னிதழ் என்பதால் எனக்குத் தெரிந்த வரையில் பிரின்ட்டில் வரும் சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆயினும் விகடன் இணைய தளத்துக்கான வரவுகள் அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் படைப்புகளைக் கொடுத்த பதிவர்கள் யாவருக்கும் மகிழ்ச்சியே:)!

  //வாழ்த்துக்கள்! :-)//

  வாழ்த்துக்களுக்கு நன்றி வருண்!

  ReplyDelete
 20. ஷைலஜா said...

  //கை வண்ணம் அங்கு (ம்) கண்டேன் இங்கும் கண்டேன்! வாழ்த்துகள் ராமலஷ்மி//

  நன்றி ஷைலஜா, நம் எல்லோரது கை வண்ணங்களாலும் மிளிருகிறது விகடனின் சிறப்பு மின்னிதழ் என்றே சொல்லுங்கள்:)!

  ReplyDelete
 21. ஜோதிபாரதி said...

  //வாழ்த்துகள்!//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் புதிதாக 'தமிழ்அமுதம்' விரும்பி வலைப்பூவைத் தொடரும் அன்புக்கும் மிக்க நன்றி ஜோதிபாரதி.

  ReplyDelete
 22. goma said...

  //நாங்கெல்லாம் இப்போ விகடனைப் பார்த்துட்டுதானெ முத்துச்சரத்துக்குள்ளே நுழையறோம்.
  விகடன் இனி உங்களுக்கு முன்வாசல்//

  விகடனில் கண்ட கணமே வந்து போன பதிவிலே உங்கள் வாழ்த்துக்களைப் பதிந்ததற்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் நன்றி:)!

  விகடனின் வாசல் நம் எல்லோருக்கும் திறந்திருக்கிறது என்பதை ’சக்தி 2009’ மட்டுமல்ல தினம் தினம் யூத்ஃபுல் விகடனில் தோன்றிய வண்ணமாயிருக்கும் நம் பதிவ நண்பர்களின் படைப்புகள் [உங்களதும் சேர்த்து] சொல்லுகின்றனவே:)!

  ReplyDelete
 23. சந்தனமுல்லை said...

  \\ //எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப் படாது போகிறார்களோ அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!//

  :-)\\

  என்ன செய்வது முல்லை? நேற்றைய டைம்ஸ் ஆஃப் இண்டியா சொல்கிறது கர்நாடகாவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பெண்களைத் தாக்கியதாக கலாச்சார காவலர்கள் மேல் எழுபது வழக்குகள் பதிவாகியுள்ளன என்று. எனது தோழியர் பலரும் கல்லூரிப் பருவத்திலிருக்கும் தங்கள் மகள்களை வெளியில் அனுப்பவே பயப்படுகிறார்கள்:(! ஆகையால்தான் அந்த எச்சரிக்கை:)! அதில் உண்மையும் இருக்கிறதுதானே:)?

  ReplyDelete
 24. திகழ்மிளிர் said...

  //வாழ்த்துகள்//

  நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 25. அமுதா said...

  //அனைவருக்கும் வாழ்த்துகள்//

  மிக்க நன்றி அமுதா.

  ReplyDelete
 26. கார்த்திக் said...

  \\// அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!//

  என்ன பசங்களுக்கும் சேத்தே சொல்லுரீங்களா\\

  ஆமாம் கார்த்திக், அதை வாங்கிப் போய் உங்க வீட்டிலுள்ள மகளிருக்கு சொல்லிடணும்னுதான்:)!

  //எது எப்படியோ மகளிர் அனைவருக்கும் எனது மகளிர்தின வாழ்துக்கள்//

  நன்றி நன்றி:)!

  ReplyDelete
 27. கார்த்திகைப் பாண்டியன் said...

  // நண்பர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..!!!//

  நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

  ReplyDelete
 28. ராஜ நடராஜன் said...

  //மகளிர் தின வாழ்த்துக்கள்.//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜ நடராஜன்.

  ReplyDelete
 29. sindhusubash said...

  // மகளிர் தின வாழ்த்துகள் !!!//

  நன்றி சிந்து!

  ReplyDelete
 30. அபி அப்பா said...
  //வாழ்த்துக்கள் பிரண்ட்!நான் இந்த பதிவுக்கு நீண்ட பதில் சொல்லலாம்! ஆனா அது ஒரு பதிவு அளவு வந்துவிடும்! நீங்க அனுமதி கொடுத்தா அழகா சின்னதா ஆக்கி பின்னூட்டமா போடுறேன்!//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஃப்ரென்ட். உங்கள் அழகிய பின்னூட்டத்துக்கு காத்திருப்பதாகச் சொன்னதைக் கவனித்தீர்கள்தானே?

  ReplyDelete
 31. மதுரையம்பதி said...

  //மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம். (ஒரு நாள் லேட், ஆனா, விகடன்.காம் ல நேற்று வாழ்த்திட்டேன் :-))//

  அங்கும் பார்த்தேன்:)! நன்றி மதுரையம்பதி.

  ReplyDelete
 32. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. //எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப் படாது போகிறார்களோ அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!//

  நன்றாகச் சொன்னீர்கள் ராமலக்ஷ்மி.

  மங்கையராகப் பிறந்திட மாதவம் செய்திருக்கத்தான் வேண்டும் போலும் :)

  ReplyDelete
 34. வால்பையன் said...

  //உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வால்பையன்.

  ReplyDelete
 35. கவிநயா said..

  //நன்றாகச் சொன்னீர்கள் ராமலக்ஷ்மி.//

  நன்றி கவிநயா:)!

  //மங்கையராகப் பிறந்திட மாதவம் செய்திருக்கத்தான் வேண்டும் போலும் :)//

  நிச்சயமா:)!

  ReplyDelete
 36. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 37. அன்பு ராமலக்ஷ்மி இங்கே பாருங்கள். உங்களுக்கு பட்டாம் பூச்சி பதிவர் விருது :)

  http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html

  ReplyDelete
 38. ஜீவன் said...

  //அனைவருக்கும் வாழ்த்துகள்//

  நன்றி ஜீவன்.

  ReplyDelete
 39. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  // அழகா எழுதி இருக்கீங்க.. :)//

  நன்றி முத்துலெட்சுமி, அழகாய் நீங்கள் எடுத்திருக்கும் அந்தப் புகைப்படத்துக்கும்:)!

  ReplyDelete
 40. மதுமிதா said...

  //அன்பு ராமலக்ஷ்மி இங்கே பாருங்கள். உங்களுக்கு பட்டாம் பூச்சி பதிவர் விருது :)

  http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html//

  பார்த்தேன் மதுமிதா. நெகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி:)!

  ReplyDelete
 41. மகளிர் தினத்திற்கு சிறப்பாய் ஒரு பதிவு.. அந்த சீன தத்துவம் ரொம்ப நல்லா இருக்கு.. எல்லாருக்கும் தாமதமான அல்லது அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸாக மகளிர் தின வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 42. //வீட்டிலிருந்த படி குடும்பப் பொறுப்புகள் நிர்வகிப்பதில் ‘ஒன்றும் தெரியாது உனக்கு’ என்கிற மாதிரியான பிம்பங்கள் உடைத்து திறமைமிகு மதி மற்றும் நிதி மந்திரிகளானார்கள்.//

  பலே பலே ... அப்படினு சொல்ல வைக்கிற வரிகள். அழ்ந்த கடலினுள் சென்று சேகரித்த இந்த முத்து அற்புதம்.

  ReplyDelete
 43. SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

  //மகளிர் தினத்திற்கு சிறப்பாய் ஒரு பதிவு.. அந்த சீன தத்துவம் ரொம்ப நல்லா இருக்கு.. எல்லாருக்கும் தாமதமான அல்லது அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸாக மகளிர் தின வாழ்த்துக்கள். :)//

  தாமதமில்லை, வாழ்த்துக்களை எப்போது வேண்டுமானாலும் கூறிடலாம்:)!

  சீனத் தத்துவத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் என் நன்றிகள் சஞ்சய்.

  ReplyDelete
 44. சதங்கா (Sathanga) said...

  \\//வீட்டிலிருந்த படி குடும்பப் பொறுப்புகள் நிர்வகிப்பதில் ‘ஒன்றும் தெரியாது உனக்கு’ என்கிற மாதிரியான பிம்பங்கள் உடைத்து திறமைமிகு மதி மற்றும் நிதி மந்திரிகளானார்கள்.//

  பலே பலே ... அப்படினு சொல்ல வைக்கிற வரிகள். அழ்ந்த கடலினுள் சென்று சேகரித்த இந்த முத்து அற்புதம்.\\

  பின்னே கொண்டாட்டத்தில் இந்த முத்துக்களை யாரும் மறந்துவிடக் கூடாதல்லவா:)? நன்றி சதங்கா!

  ReplyDelete
 45. விகடனில் படித்து விட்டேன். இங்கே மீண்டுமொரு முறை.

  வாழ்த்துக்கள் ராம் மேடம்.

  (போட்டோவில் அழகா இருக்கீங்க !!!)

  ReplyDelete
 46. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //விகடனில் படித்து விட்டேன். இங்கே மீண்டுமொரு முறை.

  வாழ்த்துக்கள் ராம் மேடம்.//

  நல்லது அமித்து அம்மா, நன்றி!

  //(போட்டோவில் அழகா இருக்கீங்க !!!)//

  ஹிஹி இதற்கும் நன்றி:)!

  ReplyDelete
 47. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. @ புதுகைத் தென்றல்,

  நன்றி தென்றல். உங்களுக்கும் வாழ்த்துக்கள், இங்கு அரைசதம் போட்டதற்கும் சேர்த்து:)!

  ReplyDelete
 49. தாமதமான மகளிர் தின வாழ்த்துகள்

  ReplyDelete
 50. @ கிரி,

  வாழ்த்துக்களுக்கு நன்றி. தாமதமெல்லாம் இல்லை கிரி. இன்னும் இக்கட்டுரை வெளியான 'சக்தி 2009’, விகடன்.காம் மெயின் முகப்பில் சுட்டி தரப் பட்டு நிற்கிறது:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin