திங்கள், 23 ஜூன், 2008

மெகா முதலைகள்



தொலைக்காட்சித் தொடர்களிலே
தொலைந்து போகும் மணித் துளிகள்!
தொடருகின்ற அவலம் உணர்ந்து
திறப்பதெப்போ கண்கள்தனை?

அரை மணிதான் அரை மணிதான்-என
அடுத்தடுத்துப் பார்க்கையிலே
நித்தம் நித்தம் செலவாவது
எத்தனை அரை மணிகள்?

கூட்டிதான் பாருங்களேன்
வெட்டியாக வீணாகும்-தங்கக்
கட்டியான மணித் துளிகள்
ஆண்டொன்றுக்கு எத்தனை என?

பொன் போன்ற காலம்
பொசுங்கிப் போவது புரிந்திடுவீர்!
திரும்பி அது வாராது
தெளிவாகத் தெரிந்திடுவீர்!

'ரிலாக்ஸ் ' செய்யவெனக் காண்பது போய்
தொடர் பார்ப்பதே தொழிலாகி-
அன்றாட வேலைகள்தான் 'ரிலாக்ஸ் '
என ஆகலாமா?

கவலை மறக்கக் காட்சித் தொடர்
என்பது போய்-
கதா பாத்திரங்களுக்காகக்
கவலைப்படுவது முறைதானா?

சாபமிடும் சத்தங்களும்
ஓலமிடும் ஒலிகளும்-நாம்
வாழுகின்ற இல்லங்களில்
ஒலிப்பதும் நல்லதல்ல!

மெல்ல மெல்ல விழுங்குகின்ற
மெகாத் தொடர் முதலைகளிடம்
முழுதாகப் பலியாகாமல்
முன்னேற வழியேது?

தேர்ந்தெடுத்துப் பார்க்கையிலே
தேங்கி நிற்கும் பல வேலைகளைத்
தேனீ போல முடித்திடத்தான்
தேவையான நேரம் கிடைத்திடுமே!

மேலும் சேருகின்ற நேரத்தில்
நல்ல இசை கேட்டிடலாம்-
புத்தகங்களைத் துணையாக்கிப்
புத்துணர்ச்சி பெற்றிடலாம்!

முத்தான மணித் துளிகளைக்
கொத்தாக இழப்பதை நிறுத்தி-
சத்தான எதிர் காலத்துக்கு
வித்திடுவீர் விரைவாக!
***
[July 3, 2003 திண்ணை இணைய இதழில் வெளி வந்தது. ஆண்டுகள் ஐந்து உருண்டோடினும் மெகாக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன ஐந்து ஆண்டுகளாய் வெற்றி நடை போடும் மெகாவையும் சேர்த்து. கூடவே சேர்ந்து கொண்டு விட்டன ஆட்டபாட்ட நிகழ்ச்சிகள்...ஹூம்ம்!!!]

[படம்:இணையத்திலிருந்து]




இக்கவிதை 7 ஏப்ரல் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:

60 கருத்துகள்:

  1. பதிவர்களாகிய நமக்கான பிற்சேர்க்கை:

    //மேலும் சேருகின்ற நேரத்திலே//
    வலைதளங்களில் வலம் வந்து
    வலைப் பூக்கள் தொடுத்திடலாம்.
    பயனுள்ள பதிவு பல போடலாம்.
    இஷ்டத்துக்கு இடுகையும் இடலாம்.
    பின்னூட்டங்களில் பின்னிடலாம்.

    :))!

    பதிலளிநீக்கு
  2. //'ரிலாக்ஸ் ' செய்யவெனக் காண்பது போய்
    தொடர் பார்ப்பதே தொழிலாகி-
    அன்றாட வேலைகள்தான் 'ரிலாக்ஸ் '
    என ஆகலாமா?//

    நல்லா சொன்னீங்க, ராமலக்ஷ்மி! தீர்க்கதரிசியா இருப்பீங்க போல! எப்பவும் எக்காலத்துக்கும் பொருந்தற மாதிரியே நிறைய எழுதியிருக்கீங்களே :)))

    பதிலளிநீக்கு
  3. சபாஷ்! சரியா...கச் சொன்னீர்கள்!
    பொழுது போகாமல் மெகாதொடர்களில் சிக்கியிருந்த நான் இப்போது மெகா வலைத்தளங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இதற்கு என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  4. //July 3, 2003 திண்ணை இணைய இதழில் வெளி வந்தது. ஆண்டுகள் ஐந்து உருண்டோடினும் மெகாக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன ஐந்து ஆண்டுகளாய் வெற்றி நடை போடும் மெகாவையும் சேர்த்து. கூடவே சேர்ந்து கொண்டு விட்டன ஆட்டபாட்ட நிகழ்ச்சிகள்...ஹூம்ம்!!!]//

    ரிப்பீட்டே...... :)

    பதிலளிநீக்கு
  5. \\//மேலும் சேருகின்ற நேரத்திலே//
    வலைதளங்களில் வலம் வந்து
    வலைப் பூக்கள் தொடுத்திடலாம்.
    பயனுள்ள பதிவு பல போடலாம்.
    இஷ்டத்துக்கு இடுகையும் இடலாம்.
    பின்னூட்டங்களில் பின்னிடலாம்.

    :))!\\

    சிரிக்காம அடிக்கிறீங்க சோக்கு:-))))இங்க என்ன உருப்படியா நடக்குது அம்மனி!!!:-))) இதுக்கு பேசாம கவிதை எழுதியோ, கலைஞர் டிவி பார்த்தோ காலம் தள்ளலாம்:-)))

    ஆமா! வைரநெஞ்சம் சக்தி புது பிசினஸ் ஆரம்பிக்க போறாளே! அது வருஷ டர்ன் ஓவர் 2000 கோடிய தாண்டும்ன்னு சொல்ரேன் நான், நீங்க என்ன சொல்றீங்க:-))

    பதிலளிநீக்கு
  6. ஆமா வலையில் அதுவும் தமிழ்மணம் பதிவு பின்னூட்டம் என்னும் வலையில் சிக்கியவர்களுக்கு என்ன அறிவுரை ?? :) எப்படியோ எங்காவது சிக்கிக்கறோமே..

    பாட்டு போட்டா ஒரு படத்தில் நாகேஷ் சுழல் மாதிரிஆடுவாரா வேலைசெய்வாரா படகோட்டின்னு நினைக்கிறேன்.. அதே மாதிரி நானும் வேலை செய்வேன்..மத்தபடி டிவியில் சினிமா வலையில் பதிவு ரெண்டும் கட்டிப்போடுது ஒரு இடத்தில்... :(

    பதிலளிநீக்கு
  7. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதியதா? :-)

    இன்னும் பத்துவருஷம் கழிச்சும் இது அப்படியே புதுசாதானிருக்கும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  8. //கூட்டிதான் பாருங்களேன்
    வெட்டியாக வீணாகும்-தங்கக்
    கட்டியான மணித் துளிகள்
    ஆண்டொன்றுக்கு எத்தனை என//

    கூட்டி பார்த்தோம்னு வைங்க..அட! நாம இவ்வளோ வெட்டியா இருக்கோம்னு நமக்கே கூச்சம் வந்துடும் :-)))

    //பொன் போன்ற காலம்
    பொசுங்கிப் போவது புரிந்திடுவீர்//

    அறிவுக்கு தெரியுது மனசுக்கு புரியலையே

    //கதா பாத்திரங்களுக்காகக்
    கவலைப்படுவது முறைதானா?//

    பின்னறீங்க போங்க

    //மெல்ல மெல்ல விழுங்குகின்ற
    மெகாத் தொடர் முதலைகளிடம்
    முழுதாகப் பலியாகாமல்
    முன்னேற வழியேது?//

    இந்த மாதிரி தொடரங்கள் மட்டும் இல்லைங்க..பல நிகழ்ச்சிகள் இப்படி தான் இருக்கு

    //தேர்ந்தெடுத்துப் பார்க்கையிலே
    தேங்கி நிற்கும் பல வேலைகளைத்
    தேனீ போல முடித்திடத்தான்
    தேவையான நேரம் கிடைத்திடுமே//

    உண்மை தாங்க. இதனாலேயே பல வேலைகள் முடங்கி போய் விடுகின்றன

    //முத்தான மணித் துளிகளைக்
    கொத்தாக இழப்பதை நிறுத்தி-
    சத்தான எதிர் காலத்துக்கு
    வித்திடுவீர் விரைவாக//

    நிறுத்த முடியலையே ..எனக்கே என் மேல கோபம் வருது..

    //July 3, 2003 திண்ணை இணைய இதழில் வெளி வந்தது. //

    இது எந்த காலத்துக்கும் பொருத்தமான கவிதை தான்.

    உங்க பல கவிதைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் போலவே இருக்கு..உதாரணம் உங்க பள்ளி பற்றிய கவிதை

    பதிலளிநீக்கு
  9. நல்லா எழுதி இருக்கீங்க. :)

    பயனுள்ள பதிவு பல போடலாம்.
    இஷ்டத்துக்கு இடுகையும் இடலாம்.
    பின்னூட்டங்களில் பின்னிடலாம்.
    .
    .
    .
    "பதிவுகள் பல எழுதிடலாம். தங்கமணியை தேடிடலாம்
    பூரி கட்டை அடி வாங்கிடலாம்

    //இங்க என்ன உருப்படியா நடக்குது அம்மனி//

    என்ன அபி அப்பா, நாங்க உருப்படியா எங்க காரியத்தை பாக்கலையா? :))

    இப்ப என்ன சொல்றீங்க? :p

    பதிலளிநீக்கு
  10. சாபமிடும் சத்தங்களும்
    ஓலமிடும் ஒலிகளும்-நாம்
    வாழுகின்ற இல்லங்களில்
    ஒலிப்பதும் நல்லதல்ல//

    இதுதான் என்னுடைய மிகுந்த வருத்தமான எண்ணம்.
    இவர்கள் நடிப்பதை உட்கார்ந்து பார்ப்பவர்கள் எண்ணங்களும் மாறுகின்றன. அவர்கள் மெகா சீரியல் பார்க்கும் நேரம் நாம் அவர்கள் வீட்டுக்குப் போகக்கூடாது. வரவேற்பே ஒரு மாதிரி இருக்கும். நல்ல வேளை இந்த சுழலில் நான் மாட்டவில்லை.
    ஆனால் வலையில் விழுந்துவிட்டேன்.:)
    அருமையான கவித ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. எல்லோரும் சொல்வது போல்
    மெகா சீரியலில் சிக்கிக் கொள்வத்துக்கும்
    மெகா வலைத்தளத்தில் மாட்டிக்கொள்வதுக்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜெண்டில் மென்/வுமென்!!!

    பதிலளிநீக்கு
  12. பின்னி பெடலெடுக்குறீங்க!

    பதிலளிநீக்கு
  13. கவிநயா said... //நல்லா சொன்னீங்க, ராமலக்ஷ்மி! தீர்க்கதரிசியா இருப்பீங்க போல!எப்பவும் எக்காலத்துக்கும் பொருந்தற மாதிரியே நிறைய எழுதியிருக்கீங்களே :)))//

    நன்றி கவிநயா.

    தீர்க்க முடியாத பிரச்சனைகளைப் பேசிப் பேசியே தீர்க்கதரிசியா ஆயிடலாம் போலிருக்கே:)!

    மாற்றம் வரணும்னு நினைத்து எழுதுறோம். காலம் பறக்கையில் மாற்றமும் வருது..'ஏ'மாற்றம்...:( !
    என்னமோ போங்க.

    பதிலளிநீக்கு
  14. நானானி said...
    //பொழுது போகாமல் மெகாதொடர்களில் சிக்கியிருந்த நான் இப்போது மெகா வலைத்தளங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இதற்கு என்ன செய்வது?//

    அதுக்கு இது எவ்வளவோ தேவலாமுங்க. நேரத்தை விழுங்கினாலும் நல்ல நட்புகளையும், இதயங்களையும் வெல்ல முடிவதோடு (நீங்க அவார்டே வென்றிருக்கீங்க. ஸோ, 'இதுக்கு என்ன செய்வது'ன்னுல்லாம் கேட்கப்படாது, ஆமா!) உலக ஞானமும் கூடுது என்பதையும் ஒப்புக்கணும்.

    பதிலளிநீக்கு
  15. அபிஅப்பா! சொன்ன மாதிரி மொதப் பந்திக்கு வந்தீட்டீங்க. சந்தோசம்.

    //இங்க என்ன உருப்படியா நடக்குது அம்மனி!!!:-))) இதுக்கு பேசாம கவிதை எழுதியோ, கலைஞர் டிவி பார்த்தோ காலம் தள்ளலாம்:-)))//

    சரியாப் போச்சு போங்க:) !

    //வைரநெஞ்சம் சக்தி புது பிசினஸ் ஆரம்பிக்க போறாளே! //

    அபிஅப்பா சொன்னா நம்பணும். நான் மெகாவை நிறுத்தி நிஜமாவே அஞ்சு வருஷம் ஆச்சுங்க. "vaira nenjam sakthi"னு google-லில் பார்த்து இது கலைஞர் டிவி கைங்கரியம்னு புரிஞ்சுக்கிட்டேன்.

    //அது வருஷ டர்ன் ஓவர் 2000 கோடிய தாண்டும்ன்னு சொல்ரேன் நான், நீங்க என்ன சொல்றீங்க:-))//

    தாண்டும் தாண்டும் அவங்களுக்கு என்ன, மெகா முதலைகள்.
    மொத தீனி நாமளும் நம்ம நேரமுந்தானே!

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  17. கயல்விழி முத்துலெட்சுமி said...
    //ஆமா வலையில் அதுவும் தமிழ்மணம் பதிவு பின்னூட்டம் என்னும் வலையில் சிக்கியவர்களுக்கு என்ன அறிவுரை ?? :)//

    நானானிக்கு சொன்ன பதிலுதாங்க..நல்ல நட்பு, எழுதும் ஆர்வம் நம்மை விட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்வது, பலரது பதிவைப் படிக்கையில் கிடைக்கும் பரந்த நோக்கு, விஷய ஞானம்..இப்படிப் பல நல்லதும் இருக்கே. என்ன நேரத்தை நேர்த்தியா(time management) கையாளக் கத்துக்கணும்.

    பதிலளிநீக்கு
  18. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  19. என்ன 5 வருஷத்துக்கு முன்னாடி எழுதுனதா?பெரிய தீர்க்கதரிசி நீங்கள்! ஆமா நீங்க ராமலெஷ்மியா இல்லை ஸ்ரீ ல ஸ்ரீ ராமலெஷ்மி மாதாஜியா?

    பதிலளிநீக்கு
  20. லக்கிலுக் said...//அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதியதா? :-)
    இன்னும் பத்துவருஷம் கழிச்சும் இது அப்படியே புதுசாதானிருக்கும் போலிருக்கு.//

    கவிநயாவுக்கு சொன்னதுதாங்க. மாற்றம் வரணும்னு நினைத்து எழுதுறோம். ஆனால் காலம் பறக்கையில் 'ஏ'மாற்றம்தான் வருதுங்க :( !

    பதிலளிநீக்கு
  21. அருமையா அலசிப் பாராட்டியிருப்பதற்கு நன்றி கிரி.

    //அறிவுக்கு தெரியுது மனசுக்கு புரியலையே//

    அறிவுக்கு தெரிஞ்சா மனசுக்குப் புரிய வைப்பது கஷ்டமே கிடையாது கிரி. என்ன அதற்கும் கொஞ்சம் மனசு வைக்கணும்:) !

    பதிலளிநீக்கு
  22. ambi said...
    //நல்லா எழுதி இருக்கீங்க. :)//

    நன்றி அம்பி.

    //பதிவுகள் பல எழுதிடலாம். தங்கமணியை தேடிடலாம்//

    ஆகா பேச்சுலர்களே வந்து கவனியுங்கள்.

    //பூரி கட்டை அடி வாங்கிடலாம்//

    அடடா, வந்தவங்க காணாத போயிட்டாங்களே!

    //என்ன அபி அப்பா, நாங்க உருப்படியா எங்க காரியத்தை பாக்கலையா? :))//

    அதானே, சூர்யா பாப்பாவை தொட்டிலில் போட்டு ஆட்டுவது யாருன்னு நினைச்சீங்க அபிஅப்பா?

    பதிலளிநீக்கு
  23. /
    சிரிக்காம அடிக்கிறீங்க சோக்கு:-))))இங்க என்ன உருப்படியா நடக்குது அம்மனி!!!:-))) இதுக்கு பேசாம கவிதை எழுதியோ, கலைஞர் டிவி பார்த்தோ காலம் தள்ளலாம்:-)))

    ஆமா! வைரநெஞ்சம் சக்தி புது பிசினஸ் ஆரம்பிக்க போறாளே! அது வருஷ டர்ன் ஓவர் 2000 கோடிய தாண்டும்ன்னு சொல்ரேன் நான், நீங்க என்ன சொல்றீங்க:-))

    /

    ரிப்பீட்டேஏஏஏய்

    பதிலளிநீக்கு
  24. /
    ambi said...
    "பதிவுகள் பல எழுதிடலாம். தங்கமணியை தேடிடலாம்
    பூரி கட்டை அடி வாங்கிடலாம்

    என்ன அபி அப்பா, நாங்க உருப்படியா எங்க காரியத்தை பாக்கலையா? :))
    /

    இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கீடுங்கப்பா!!

    :)))))))

    பதிலளிநீக்கு
  25. வல்லிசிம்ஹன் said...
    //இவர்கள் நடிப்பதை உட்கார்ந்து பார்ப்பவர்கள் எண்ணங்களும் மாறுகின்றன.//

    உண்மைதான்.

    // நல்ல வேளை இந்த சுழலில் நான் மாட்டவில்லை.//

    நானும்தான். சுழலிலிருந்து எப்பவோ வெளிவந்து விட்டேன்.

    //ஆனால் வலையில் விழுந்துவிட்டேன்.:)//

    அது அத்தனை வருத்தப் பட வேண்டிய விஷயமா தெரியவில்லை வல்லிம்மா.

    //அருமையான கவித ராமலக்ஷ்மி.//

    ரொம்ப நன்றி வல்லிம்மா!

    பதிலளிநீக்கு
  26. நானானி said...
    //மெகா சீரியலில் சிக்கிக் கொள்வத்துக்கும் மெகா வலைத்தளத்தில் மாட்டிக்கொள்வதுக்கும் வித்தியாசம் அதிகமில்லை//

    அப்படியில்லை நானானி!

    மெகா சீரியல் மோகத்தில் சிக்கித் தவிப்பதை விட வலையில் எழுத்துத் தாகத்தில் விக்கித் தவிப்பது எவ்வளவோ பரவாயில்லைன்னுதான் தோணுது. கயல்விழிக்கு நான் தந்திருக்கும் பதிலையும் பாருங்களேன்.

    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  27. நீங்க, நான் பின்னூட்டம் போடலாமா வேணாமான்னு சொல்லாம ஜூட் விட்டுட்டீங்களே மேடம். ஆனாலும் என் பதிவுக்கு புருனோ சார் போட்ட பின்னூட்டத்தை அடிப்படையாக வைத்து ஒரு பில்டப்ப இங்க போடறேன். ஐம்பதுகளில் நாவல்கள், அறுபதுகளில் தொடர்கதைகள், எழுபதுகளில் சினிமா, எண்பதுகளில் தொலைகாட்சி,வீடியோ, டெக், தொன்னூறுகளில் தொடர்கள், இப்பொழுது நெடுந்தொடர்கள் மற்றும் கணினி இப்படியான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அவற்றை ஏதோ தீண்டத்தகா ஒரு விஷயமாக உருவகம் செய்துவருவதுதான் வேதனை.

    பதிலளிநீக்கு
  28. புதுகை.எம்.எம்.அப்துல்லா said... //என்ன 5 வருஷத்துக்கு முன்னாடி எழுதுனதா?பெரிய தீர்க்கதரிசி நீங்கள்!//

    கவிநயாவுக்கு அளித்த பதிலேதான். தீர்க்க முடியாத பிரச்சனைகளைப் பேசிப் பேசியே தீர்க்கதரிசியா ஆயிடலாங்க!

    //ஆமா நீங்க ராமலெஷ்மியா இல்லை ஸ்ரீ ல ஸ்ரீ ராமலெஷ்மி மாதாஜியா?//

    என்ன இப்படி வார்றீங்க:( ? மாதாஜி எல்லாம் இல்ல. சக மனிதர் மேல் அக்கறையுள்ள சக மனுஷி. அவ்வளவுதான்:) !

    பதிலளிநீக்கு
  29. மங்களூர் சிவா said...
    // /ambi said...
    "பதிவுகள் பல எழுதிடலாம். தங்கமணியை தேடிடலாம்
    பூரி கட்டை அடி வாங்கிடலாம்

    என்ன அபி அப்பா, நாங்க உருப்படியா எங்க காரியத்தை பாக்கலையா? :))/

    இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கீடுங்கப்பா!! //

    பார்த்தீர்களா அம்பி. மங்களூர் சிவா ஆனந்தமாய் அலுத்துக் கொள்வதை..

    பதிலளிநீக்கு
  30. rapp said... //நீங்க, நான் பின்னூட்டம் போடலாமா வேணாமான்னு சொல்லாம ஜூட் விட்டுட்டீங்களே மேடம்.//

    விவாத மேடையில் மாட்டிக்க வேண்டாமேன்னு வேகமா வந்துட்டேன். பின்னாடியே வந்து பின்னூட்டமிட்டிருவீங்கன்னு ஒரு நம்பிக்கைதான். அதான் குறிப்பாச் சொல்லலை.

    // ஐம்பதுகளில் நாவல்கள், அறுபதுகளில் தொடர்கதைகள், எழுபதுகளில் சினிமா, எண்பதுகளில் தொலைகாட்சி,வீடியோ, டெக், தொன்னூறுகளில் தொடர்கள், இப்பொழுது நெடுந்தொடர்கள் மற்றும் கணினி இப்படியான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அவற்றை ஏதோ தீண்டத்தகா ஒரு விஷயமாக உருவகம் செய்துவருவதுதான் வேதனை.//

    அந்தத் காலக் கட்டங்களில் மக்களின் பிரதான பொழுது போக்காக விளங்கியவற்றை பிரமாதமாக வரிசையிட்டிருக்கிறீர்கள். அளவு கடந்த தீராத மோகத்தால் ஏற்படும் விளைவுகள் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லாது போய் விடுகிறது. எனவேதான் அவை //தீண்டத்தகா ஒரு விஷயமாக உருவகம்// ஆகிறது. சரிதானா நான் சொல்வது?

    பதிலளிநீக்கு
  31. நான் கர்ம சிரத்தையாக, லேட்டாகாமல், சரியான நேரத்தில், இதற்கு முன் வந்து போட்ட, பின்னூட்டத்தைத் தூக்கிச் சென்ற காக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.:((((

    பதிலளிநீக்கு
  32. //பாட்டு போட்டா ஒரு படத்தில் நாகேஷ் சுழல் மாதிரிஆடுவாரா வேலைசெய்வாரா படகோட்டின்னு நினைக்கிறேன்.. அதே மாதிரி நானும் வேலை செய்வேன்..//

    நினைக்காதீங்க. சத்தியமா அந்த படம்தான்...

    அப்புறம் ராமலக்ஷ்மி அம்மா அவர்களுக்கு.... :(( சத்தியமா முடியல... தய்வு செஞ்சு மாத்துங்க. பின்னூட்டப்பொட்டிய

    பதிலளிநீக்கு
  33. \\முத்தான மணித் துளிகளைக்
    கொத்தாக இழப்பதை நிறுத்தி\

    அசத்தலா இருக்கு

    பதிலளிநீக்கு
  34. NewBee said... //நான் கர்ம சிரத்தையாக, லேட்டாகாமல், சரியான நேரத்தில், இதற்கு முன் வந்து போட்ட, பின்னூட்டத்தைத் தூக்கிச் சென்ற காக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.:(((( //

    "கர்ம சிரத்தையாக........
    லேட்டாகாமல்............
    சரியான நேரத்தில்........"

    நம்புகிறேன். நம்புகிறேன். ஸ்மைலிய வேற காணோமா நம்புகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  35. சென்ஷி said... // :(( சத்தியமா முடியல... தய்வு செஞ்சு மாத்துங்க. பின்னூட்டப்பொட்டிய//

    நீங்கள் சொன்ன மாதிரி செட்டிங்ஸ், கமென்ட்ஸ், பாப் அப் வரை போய் நோகாமல் 'நோ'வில் புள்ளியிட்டு சேவ் பண்ணவும் செய்தேன். உங்கள் பின்னூட்டம் பார்த்து மறுபடி செக் செய்தால் 'என்ன கொடுமை சென்ஷி இது' புள்ளி எப்படியோ துள்ளி 'யெஸ்'ஸில் போய் உட்கார்ந்திருக்கிறது. ம்...சரி செய்து விட்டேன். பார்க்கலாம் இனி ஒழுங்காக பெட்டி திறக்கிறதா இல்லையா என்று.

    ஒரு பதிவிட்டு எல்லோரையும் திருத்திக் கொள்ளச் சொன்னதோடின்றி, சரியில்லை என்றதும் பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கும் அக்கறைக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  36. /நம்புகிறேன். நம்புகிறேன். ஸ்மைலிய வேற காணோமா நம்புகிறேன்:)!
    //

    ஆ! ஆ! ஆ! அட! நிஜமாத் தான்.வேணும்னா, rapp அவர்களின் , இதே சீரியல் பற்றிய, பதிவில் என் பின்னூட்டத்தைப் பாருங்கள்.இங்க பின்னூட்டம் போட்ட கையோட அங்க போனேன்.

    என்னைய நம்பலைல????...:(((

    பதிலளிநீக்கு
  37. முரளிகண்ணன் said... //// \\முத்தான மணித் துளிகளைக்
    கொத்தாக இழப்பதை நிறுத்தி\\

    அசத்தலா இருக்கு////

    காலம் பொன்னானதாச்சுங்களே.
    கொஞ்சம் அசந்தா இழப்பது நிறைய..!

    பதிலளிநீக்கு
  38. newbee said...//ஆ! ஆ! ஆ! அட! நிஜமாத் தான்.வேணும்னா, rapp அவர்களின் , இதே சீரியல் பற்றிய, பதிவில் என் பின்னூட்டத்தைப் பாருங்கள்.இங்க பின்னூட்டம் போட்ட கையோட அங்க போனேன்.

    என்னைய நம்பலைல????...:(((//


    நம்புறேன் newbee. very sorry. என் சி.வா.ஜி பதிவில் தாங்கள் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக ஜோக் பண்ணுவதாகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் rapp அவர்களின் பின்னூட்டத்தில் முதிர்ச்சியுடன் தாங்கள் பின்வருமாறு கூறியிருந்ததையும் பார்த்தேன்.

    //இப்பொழுது தான் ராமலக்ஷ்மியின் tamilamudam-மில், ஒரு பின்னூட்டம் இட்டேன்.Self motivation இருந்தால் தான் பெண்கள், சீரியல் பார்ப்பதை விட்டு வேறு செயல்களில் ஆர்வம் காட்ட முடியும்...என்று//

    மிக நல்ல கருத்து. இதன் தொடர்பாய் வேறெதும் சொல்லியிருந்தாலும் மறுபடி பின்னூட்டமிட்டு பகிர்ந்து கொள்வதில் தடையென்ன newbee? படிப்பவருக்கு பயனாகுமில்லையா?

    பதிலளிநீக்கு
  39. newbee said...//இதற்கு முன் வந்து போட்ட, பின்னூட்டத்தைத் தூக்கிச் சென்ற காக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.:((((//

    காக்காய் தூக்கிப் போச்சா? இல்ல நீங்க தூங்கிட்டீங்களா:)! கோவிச்சுக்காதீங்க! எனக்கும் பலமுறை இந்த மாதிரி ஆகியிருக்கிறது. யோசித்து இட்ட பின்னூட்டங்களை வெள்ளை காக்காய்(technical error)கள் தூக்கிப் போய்விட, மறுபடி எழுத முயன்றால் முதலில் இருந்த flow வராது. Publish comment மேல் கிளிக்கியதும், மேலே Your comment has been saved என்கிற message வருகிறதா என கண்டிப்பாகப் பார்க்கவும். இப்போது நான் அதில் கவனமாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. டிவியில் எனக்குப் பிடிக்காதது சீரியல்களும் குடும்பத்தையே அழைத்து ஆட வைக்கும் நிகழ்ச்சிகள் தான். திரையுலகில் ரிடயர் ஆன வில்லிகளும், ஏன் கதாநாயகிகளும் கூட இப்போது டிவி சீரியலுக்கு வந்து விட்டார்கள். நான் மாலைப்பொழுதில் நண்பர்/உறவினர் வீட்டுக்கு சீரியல் பார்க்கும் நேரத்தில் செல்ல முடிவதில்லை.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  41. \\
    வலைதளங்களில் வலம் வந்து
    வலைப் பூக்கள் தொடுத்திடலாம்.
    பயனுள்ள பதிவு பல போடலாம்.
    இஷ்டத்துக்கு இடுகையும் இடலாம்.
    பின்னூட்டங்களில் பின்னிடலாம்.

    :))!
    \\

    நீங்கதானா அது ;-)

    உங்க அடுத்த பதிவ விரைவில் எதிர் பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  42. முதல்ல பகிர்வுக்கு நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு
  43. அபி அப்பா...said...

    ///சிரிக்காம அடிக்கிறீங்க சோக்கு:-))))இங்க என்ன உருப்படியா நடக்குது அம்மனி!!!:-))) இதுக்கு பேசாம கவிதை எழுதியோ, கலைஞர் டிவி பார்த்தோ காலம் தள்ளலாம்:-)))

    ஆமா! வைரநெஞ்சம் சக்தி புது பிசினஸ் ஆரம்பிக்க போறாளே! அது வருஷ டர்ன் ஓவர் 2000 கோடிய தாண்டும்ன்னு சொல்ரேன் நான், நீங்க என்ன சொல்றீங்க:-))///

    ரிப்பீட்டு

    (இதுதான் அந்த கேள்வியா :)

    பதிலளிநீக்கு
  44. லக்கிலுக்...said...

    ///அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதியதா? :-)

    இன்னும் பத்துவருஷம் கழிச்சும் இது அப்படியே புதுசாதானிருக்கும் போலிருக்கு.///

    ரிப்பீட்டு...

    பதிலளிநீக்கு
  45. //நம்புறேன் newbee//

    :))))...ஹி...ஹி...இது! இது! போதும்.

    வருத்தப்படாதீங்க! சில சமயம், பின்னூட்டங்களை,மின்னஞ்சலில் பார்க்கத் தவறவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதால், ஒரு ரிமைண்டர் மாதிரி தான் காக்கையைத் தூது அனுப்பினேன்.விளையாட்டாய்த் தான் சொன்னேன்.:))).

    நிஜாமாவே வெள்ளைக் காக்காய்ன்னு இப்பப் புரியுது.தங்கள் பொறுமைக்கு வாழ்த்துகள். :)

    பி.கு.:'ரிமைண்டர் ' தமிழில் என்ன வென்று சொல்வது? நடைமுறயில் அடிக்கடி பயன் படுத்தாததால், 'சட்' டென்று நினைவுக்கு வரமாட்டேனென்கிறது.:(

    பதிலளிநீக்கு
  46. ராமலஷ்மி மேடம்,

    ஆஹா நல்ல ஒரு அலசல்
    (பதிவு + பின்னூட்டங்கள்). ஆழ்ந்த சிந்தனை. இந்த சீரியல்களில் எனக்கும் வருத்தம் எப்போதும் சிந்தனையில் இருக்கும் வரிகள்

    //சாபமிடும் சத்தங்களும்
    ஓலமிடும் ஒலிகளும்-நாம்
    வாழுகின்ற இல்லங்களில்
    ஒலிப்பதும் நல்லதல்ல!//

    'வாழுகின்ற இல்லங்களில்' என்று சொன்னீங்க பாருங்க ... சூப்பர். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  47. சகாதேவன் said...
    // நான் மாலைப்பொழுதில் நண்பர்/உறவினர் வீட்டுக்கு சீரியல் பார்க்கும் நேரத்தில் செல்ல முடிவதில்லை.//

    ஆமாம், இது பற்றி தங்களது சமீபத்திய பதிவில் வருந்தியிருந்ததையும் பார்த்தேன்.
    என்ன செய்வது? வீடு தேடி வரும் சக மனிதர்களை விட நாடகத்தில் வரும் நகல் மனிதர்களிடம்தான் அவர்களுக்கு அதிக நாட்டம் என்றாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  48. அதிஷா said...
    ////
    \\வலைதளங்களில் வலம் வந்து
    வலைப் பூக்கள் தொடுத்திடலாம்.
    பயனுள்ள பதிவு பல போடலாம்.
    இஷ்டத்துக்கு இடுகையும் இடலாம்.
    பின்னூட்டங்களில் பின்னிடலாம்:))!//

    நீங்கதானா அது ;-)////

    என்ன அதிஷா:((?
    "நாமதானே அது"ன்னு கேட்பீங்கன்னு
    நினைச்சேன்!

    பதிலளிநீக்கு
  49. தமிழன்... said...
    //முதல்ல பகிர்வுக்கு நன்றி நன்றி...//

    வருகைக்கும் வழிமொழிகளுக்கும் நன்றி தமிழன்.

    பதிலளிநீக்கு
  50. தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பண்பைச் சாடி அதற்கு மாற்று வழியும் உரைப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  51. அருமையா சொல்லி இருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  52. சதங்கா (Sathanga) said...
    ////சாபமிடும் சத்தங்களும்
    ஓலமிடும் ஒலிகளும்-நாம்
    வாழுகின்ற இல்லங்களில்
    ஒலிப்பதும் நல்லதல்ல!//
    'வாழுகின்ற இல்லங்களில்' என்று சொன்னீங்க பாருங்க ... சூப்பர்.////

    சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் சதங்கா. இது போன்ற நெகடிவ் வைப்ரேஷன்ஸை கண்டிப்பாக நாம் வாழும் இல்லங்களில் அனுமதிக்கக் கூடாது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  53. NewBee said...
    //'ரிமைண்டர் ' தமிழில் என்ன வென்று சொல்வது? நடைமுறயில் அடிக்கடி பயன் படுத்தாததால், 'சட்' டென்று நினைவுக்கு வரமாட்டேனென்கிறது.:(//

    அதுக்கென்ன நாமே ஒரு பெயர் வச்சுக்கிட்டாப் போச்சு. இடுகை,சுட்டி இவற்றின் வரிசையில்...'நினைவூட்டி'! சரியா இருக்குமா newbee:)?

    பதிலளிநீக்கு
  54. அகரம்.அமுதா said...
    //தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பண்பைச் சாடி அதற்கு மாற்று வழியும் உரைப்பது அருமை.//

    எத்தனையோ நல்ல மாற்று வழிகள் இருக்கின்றன அமுதா. என் மனதுக்குப் பட்டதை மட்டும் சொன்னேன். Newbee சொன்ன மாதிரி "self motivation இருந்தால் வேறு செயல்களில் ஆர்வம் காட்ட முடியும்".

    பதிலளிநீக்கு
  55. பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி சஞ்சய்!

    பதிலளிநீக்கு
  56. ராமலக்ஷ்மி

    சிந்தனை அருமை - சதங்காவின் மறுமொழியும் தங்களின் புரிதலுணர்வும் பாராட்டுக்குரியவை.

    //சாபமிடும் சத்தங்களும்
    ஓலமிடும் ஒலிகளும்-நாம்
    வாழுகின்ற இல்லங்களில்
    ஒலிப்பதும் நல்லதல்ல!//

    வாழுகின்ற இல்லங்களில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது தயவு செய்து தொலைக்காட்சியைக் காண வேண்டாம். அமங்கலமான சொற்கள் அள்ளித் தெளிக்கப் படுகின்றன.

    வெள்ளைக் காக்காய் எனக்கும் பரிச்சயமுண்டு

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  57. cheena (சீனா) said...
    //வாழுகின்ற இல்லங்களில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது தயவு செய்து தொலைக்காட்சியைக் காண வேண்டாம். அமங்கலமான சொற்கள் அள்ளித் தெளிக்கப் படுகின்றன.//

    ஆமாம் சீனா சார். நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. தாங்களும் சதங்காவைப் போல சரியாக அந்தக் கருத்தை உணர்ந்து புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

    //வெள்ளைக் காக்காய் எனக்கும் பரிச்சயமுண்டு//

    தவிர்க்க முடியாத விநோதக் காக்காய்கள்:))!

    பதிலளிநீக்கு
  58. அருமையா எழுதி இருக்கீங்க! இங்க மெகா தொடர்களை பார்த்தால் நேரம் மட்டும் அன்றி மனுஷங்களும் சேர்ந்து கெட்டு சீரழிஞ்சு போயிடுவாங்க போல! கோலங்கள் தொடரை உதாரணத்திற்கு எடுத்துகிட்டா, ஒரு புருஷன், பொஞ்சாதி கூட சேர்ந்து குடும்பம் நடத்த மாட்டாங்க! இதை பார்த்தா குடும்பம் எப்படி விளங்கும்?

    பதிலளிநீக்கு
  59. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்யா.

    "ஐந்து ஆண்டுகளாய் வெற்றி நடை போடும் மெகா" என நான் பதிவிலே குறிப்பிட்டிருப்பது அதே "கோலங்கள்" சீரியலைத்தான்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin