Wednesday, May 14, 2008

மே PIT -'ஜோடி'க்காக வேடிக்கையாக எடுத்தவை..


போட்டிக்கான படங்கள் முந்தைய பதிவில்! இவை தங்கள் பார்வைக்காகப் பல 'ஜோடி'களை வீட்டுக்குள்ளேயே ஓடியோடி வேடிக்கையாகப் பிடித்தது! ரசிக்க முடியுதா பாருங்க!

இந்த ஜோடிக்குத் தேவை...

இந்த ஜோடியின் சேவை!
*** *** ***
ஜோடிப் பொர்ருத்தம் பார்க்க வாரீங்களா?


தண்ணிக் குடமெடுத்து தங்கமணி காட்டு வழி நடை போட
கையில் கம்பெடுத்து ரங்கமணி காவலுக்குக் கூட வர..
***"ராஜாவின் பார்வை..."


***"ஆகா! என்னப் பொருத்தம்..."


*** *** ***


காலம் பொன்னானதெனத் தூக்கி காட்டும் கண்மணிகள்!
***கடமை கண்ணானதெனக் கூடை சுமக்கும் குமரிகள்!
*** *** ***தரையில் தவழும் வாத்துக்களே போட்டிக்குப் போகையிலே...
புறப் படுவோம் நாமுமெனப் புயலாய்ப் பாயும் புரவிகள்!


*** *** ***கொஞ்சம் திரும்புங்க பசங்களா..


***


தெரியாம சொல்லிப்புட்டேன் சாமிங்களா!


*** *** ***

41 comments:

 1. எல்லாப் படங்களும் அருமை...  Senthil,
  Bangalore

  ReplyDelete
 2. எங்கள் வீட்டுக்கு அருகில் கலைக் கண்காட்சி ஒன்று நடக்கும் .அதை வீட்டிலிருந்தே பார்த்து ரசித்தேன் தங்கள் முத்துச் சரத்தில்

  ReplyDelete
 3. காமடிப் படங்கள் அருமை!ராமலஷ்மி!
  அதுவும் கடைசி ரெண்டு படங்கள்
  நல்லாருக்கு. இட்லிக்கு ஜோடி சட்னி அல்லவா?

  ReplyDelete
 4. நானானி மாதிரி நானும் சட்னியோன்னு நினைச்சேன்.. ஆனா சேவைன்னு சொல்லிட்டீங்க.. :)

  காட்டுவழி போறபொண்ணு படம் நிஜம்மா சூப்பர்.. அதை அனுப்பி இருக்க்லாம் போட்டிக்கு...

  ReplyDelete
 5. வாருங்கள் செந்தில்! பாராட்டுக்கு நன்றி!

  ReplyDelete
 6. நன்றி கோமா! தங்கள் April Pit-'தனிமை'யின் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. சரியாப் பாருங்க நானானி! இட்லிக்கு ஜோடி சட்னியா சாம்பாரா என்பது அல்ல matter. முந்தைய ஜோடிக்குத் தேவை, பிந்தைய ஜோடியின் சேவை.

  வீட்டுக்குள்ளேயே எப்படி variety-ஆக ஜோடி சேர்க்கலாம் என்பதை துளசி தளத்திலும், உங்கள் 9-west-லும்தான் கற்றுக் கொண்டேன். பரிசு பெற்ற 'தனிமை' படத்தை எடுக்க உங்கள் 'வியர்டு' படமும் inspiration-ஆக இருந்ததாக கோமா கூறியிருப்பதையும் பார்த்தேன். Blogger-களுக்கு துளசி madam senior teacher என்றால் உங்களை junior teacher என்று அழைக்கலாமா? [ஜோடிக்காக இரு teacher-களும் தொலைபேசியில் discussion வேறு நடத்தினீர்கள் போலிருக்கிறது:-)!]

  ReplyDelete
 8. கயல் விழியின் வருகைக்கு நன்றி! முதல் 2 படங்களைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டீங்க!

  காட்டு வழி போற Chenna patana (ஸ்ரீரங்க பட்னா, mysore toys) ஜோடிக்கு inspiration நானானி! அவங்க ஜோடிப் பதிவிலும் இந்த ஜோடி உண்டு.

  ReplyDelete
 9. படங்களும் அதற்கான கமெண்ட்டுகளும் சூப்பர்.

  ReplyDelete
 10. ஜோடிகளும், கவித்துவமும், விகடமும் கலந்த அருமையான தலைப்புகளும் அருமை. வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இவ்வளவு ஜோடிகளை உருவாக்கிட்டீங்க... மிக அருமை...

  ReplyDelete
 11. அருமை.

  ஆமாம் பிந்தைய ஜோடியில் (?) ஒருத்தரைத் 'தூக்கிட்டீங்க?' பாவம்(-:


  அதாங்க நான் நினைக்கிறது...... எதுக்கும் (வெளியில்) அலையவே வேணாம் வ்வேணெங்கில் பலா வீட்டு(குள்ளிலு) லேயும் காய்க்கும்:-)))

  ReplyDelete
 12. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பிரேம்ஜி!

  ReplyDelete
 13. வாருங்கள் சூர்யா! ரசித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்! நன்றி!

  ReplyDelete
 14. வாருங்கள் துளசி மேடம்!வருகைக்கும் 'மோதிர ஷொட்டு'க்கும் :-) வந்தனங்கள் பல!

  யாரை தூக்கிட்டேன்னு புரியலையே! புரிஞ்சவங்க சொல்லுங்களேன், தெரிஞ்சுக்கிறேன்..!(ஒருவேளை அதே சட்னி மேட்டர்தானோ?)

  ReplyDelete
 15. மூணாவது cone எங்கே? :-)))))

  three is a company இல்லையா?

  ReplyDelete
 16. ஆகா புரியுது இப்போ! சத்தியமா நான் யாரையும் தூக்கலே துளசி madam! என் வீட்டு அரவைக் கற்களின் model-லே இதுதான். (Company வேணுமின்னா cones குட்டி போட்டுக்க வேண்டியதுதான்:-))!

  ReplyDelete
 17. குழவிகள் சேர்ந்து ஒரு குட்டிக் குழவி
  போட்டுக்கலாம்....நல்ல நகைச் சுவை!!!!
  காலம் இருக்கும் இருப்பில் அதுவும் நடக்கலாம்.

  ReplyDelete
 18. வாங்க junior madam! 'சிரிப்பு உடம்புக்கு நல்லது' என senior madam சொல்லியிருக்காங்க!

  ReplyDelete
 19. ஆஹா...அருமையான ஜோடிகள்.. :)
  முதல் படத்தப் போட்டு இப்படிப் பசிக்க விட்டுட்டீங்களே :P

  ReplyDelete
 20. எல்லா ஜோடிகளுமே அருமை.
  குட் லக்.
  சகாதேவன்

  ReplyDelete
 21. Pictures 'nachunu' irukku

  ReplyDelete
 22. சும்மா வளைச்சு வளைச்சு, வீட்டுக்குள்ளேயே இத்தனை ஜோடிகளா? வாவ்....

  அருமை. வாழ்த்துக்கள்.

  - RL

  ReplyDelete
 23. வாருங்கள் ரிஷான்! தமிழர்களின் இஷ்ட உணவாச்சே இட்லிகள்! பார்த்ததும் பசிக்கத்தான் செய்யும்:-)))!

  ReplyDelete
 24. ஆசிகளுக்கு நன்றி சகாதேவன்!

  ReplyDelete
 25. Hello anony,
  பாராட்டும் மூணே வார்த்தையிலே 'nachunu' இருக்கு! நன்றி.

  ReplyDelete
 26. வாருங்கள் RL! வளைத்து வளைத்து எடுத்தவைதான் வாழ்த்துக்களை அள்ளியிருக்கு!

  ReplyDelete
 27. ரொம்ப நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.

  நல்ல கற்பனை வளம்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. நல்ல ஜோடிகள், வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 29. ///நல்ல கற்பனை வளம்/// - வல்லிசிம்ஹன்...

  ரீபீட்டே!

  ReplyDelete
 30. வல்லிசிம்ஹன், முன்னூறு பதிவு கண்டமைக்கு வாழ்த்துக்கள்! இம் மாதம் பிறந்த முத்துச் சரத்துக்கு வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் வணக்கங்கள் பல.

  ReplyDelete
 31. வாழ்த்துகளுக்கு நன்றி முரளி!

  ReplyDelete
 32. வாருங்கள் சிவா, கவிதைகளைத் தாண்டி எல்லா தளத்திலும் கால் பதிக்க அழைப்பு விடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்களில் பங்குண்டு!

  ReplyDelete
 33. ஜோடிப் பொருத்தம் வெகுஜோர்.கவிதை மழை வேறு. களை கட்டி விட்டது.

  ஜோடின்னா எனக்கு இப்போ படித்த ஜோக்கு ஞாபகம் வருது.கல்யாணத்திலே ஜோடிப் பொருத்தம் நல்லாவேஇல்லை. என்ன அப்படி சொல்லறே. பொண்ணும் பையனும் அழகத்தானே இருக்கான். நான் அதைச் சொல்லலே. ஒரு புது செருப்பு கூட எனக்கு ஜோடி சேரலே!

  ReplyDelete
 34. வந்தனம் தி.ரா.ச! கவிதைகளிலும் விளையாடலாமேன்னு போட்ட பதிவு.

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'ஜோடிப் பொருத்தம்'.....நல்ல நகைச் சுவை!

  ReplyDelete
 35. //கொஞ்சம் திருப்புங்க பசங்களா//

  திருப்புங்களாவா? அல்லது திரும்புங்களாவா??

  ReplyDelete
 36. சொல்ல மறந்துட்டேன் படங்கள் அனைத்தும் அருமை :-)

  ReplyDelete
 37. கிரி said://திருப்புங்களாவா? அல்லது திரும்புங்களாவா??//

  அடடா நானும் கவனிக்கவேவில்லை.(நல்லவேளை இதுவரை யாருமே கவனிக்கவில்லை). இப்பவே திருப்புவை திரும்புவா திருத்திடுறேன்.
  நன்றி கிரி, பாராட்டுக்கும்தான்!

  ReplyDelete
 38. ராமலக்ஷ்மி

  வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட படங்களாயினும் - அதன் பின்னே உள்ள உழைப்பும் ஈடுபாடும் நன்றாகவே தெரிகிறது - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 39. cheena (சீனா) said...
  //வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட படங்களாயினும் - அதன் பின்னே உள்ள உழைப்பும் ஈடுபாடும் நன்றாகவே தெரிகிறது//

  உண்மை. இதை சரியாக உணர்ந்து சொன்னது தாங்கள் மட்டும்தான். முந்தைய பதிவின் முதல் மூன்று படங்கள் தவிர்த்து மற்றவையும், இப் பதிவில் உள்ளவையும் வீட்டுக்குள்ளேயே ஒரே நாளில் எடுத்தது. ஒவ்வொரு படத்துக்கும் 'குறைந்த' பட்சம் ஆறேழு ஷாட்களாவது எடுத்து அதில் பெஸ்டை தேர்ந்தெடுத்துப் போட்டேன். இத்தனை நுணுக்கமாக அதைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 40. ella photokkalume arumaiyana karpanai nayathudan edukkappattulladhu.

  ivai endha cameravil edukkappattavai ena therindhu kollalama!

  Er.TKGANESAN/Vidhyaranyapura/Bangalore

  ReplyDelete
 41. @ TKG,

  இப்பதிவிலுள்ளவை எல்லாம் Nikon- E3700 காமிராவால் எடுக்கப்பட்டவை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி TK கணேசன்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin