ஞாயிறு, 4 மே, 2008

விழுந்த கல்லும் புகையும் கல்லும்

விழுந்தது கல்

வருண பகவான்
கருணை மழையால்
அணை தாண்டிக்
காவேரி கரை தொட்டோட-
தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சனை-
தற்காலிகமாகவேனும்
தலை தூக்காதெனச்
சற்றே நிம்மதிப் பெருமூச்செறிந்த
தமிழன் தலையில்
விழுந்தது (ஹொகேனக்)கல்!
***

புகையும் கல்

ஹொகேனக்கல்
என்றால்
'புகையும் கல்' எனப்
பொருளாமே
கன்னடத்தில்.
தம் எல்லை
தாண்டிப் போனாலும்
தமக்குப் பயன்படாத
தண்ணீரே ஆனாலும்
தமிழன் தாகம்
தீர்க்கப் போகிறது
என்றதுமே
ஒரு சிலரின்
காது வழியே
'புகையும் கல்'தானோ
ஹொகேனக்கல்?
***

படங்கள்: இணையத்திலிருந்து

13 கருத்துகள்:

  1. வருக !வருக!
    நற்றமிழில் ,
    நல்ல நல்ல கருத்தோடு ,
    தமிழ் வாழ வேண்டும், என்ற உருத்தோடு வலைப் பூ ஒன்று தொடங்கி,
    எம்மையெல்லாம்,
    வலையில் கட்டிப் போட வந்திருக்கும் தமிழ் செல்வி ராமலக்ஷ்மியை
    வாழ்த்தி வரவேற்போம் .

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்களை வணங்கி ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க..வாங்க..ராமலஷ்மி!
    பதிவர்கள் குடும்பத்து புது வரவு..அதுவும் நல்வரவு!!
    முத்துமுத்தாய் சொற்கள் தேர்ந்ததெடுத்து நல்ல தமிழ் மாலை தொடுக்க வருக!
    நல்ல தமிழ் உங்கள் தாய் வீட்டு சீதனமோ?
    ஒகே ஒக்க கல்தான் அது என்ன பாடுபடுத்துகிறது!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி!

    "நல்ல தமிழ் உங்கள் தாய் வீட்டு சீதனமோ?"

    இருக்கலாம். ஏனெனில், தமிழன்னையின் ஆசி எம் வீட்டார் பலருக்கும் தவமின்றிக் கிடைத்த வரமாக அமைந்து விட்டது. அதைத் தக்க வைத்தல் நலமாகும் என்றே 'தமிழ் அமுதம்' படைக்க வந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. முத்துச்சரம்..அருவி..கவிதை மழை..என தமிழருவியில் குளிக்க வைக்கிறீங்க..நம்ம ஊருன்னு, தமிழும் தானே கூட வந்துருது இல்ல..

    கவிதையோடு நில்லாமல், கரை கடந்து எல்லாத் தமிழிலும் விளையாட வாழ்த்துக்கள். சீக்கிரம் தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டியிலும் சேருங்க..

    படிக்கின்ற வாசகர்களின் ஆர்வமும் கூடும், படைக்கின்ற ஆர்வமும் கூடும்..

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறீர்கள், ஆனால், தமிழ்மணத்தின் கருவிப் பட்டையையும் இணைக்கவும். தேன்கூட்டின் மறுமொழி திரட்டியையும் சேர்க்கவும். அப்படிச் செய்வதன் மூலம், உங்களுக்கு வருகின்ற பின்னூட்டங்கள் முகப்பில் தெரிகின்ற வாய்ப்பு உண்டு. மேலும் அதிக வாசகர்வட்டத்தைச் சென்றடைய அது உதவும்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9 மே, 2008 அன்று 9:01 AM

    அருமையான கவிதை -- RL

    பதிலளிநீக்கு
  8. அதிக வாசகர் வட்டத்தைப் பெறும் வழியினை அக்கறையுடன் கூறியதோடு நின்று விடாமல், விரிந்த வாசகர் வட்டத்தைக் கொண்ட தங்கள் வலைப்பூவில், பரந்த மனத்துடன் எனது பதிவைப் பரிந்துரையும் செய்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் நானானி! ஒகே ஒக்க (ஒக்கேனக்)கல் படுத்தும் பாட்டில், பரிதவித்து நிற்பவர்கள் பாவப் பட்ட தமிழர்கள்தானே!

    பதிலளிநீக்கு
  10. நெல்லை சிவா said in மின்மினி:
    "'ஹோகேனேக்கல்''ங்கிற காரணப்பெயர(கன்னடத்தில்) வச்சு, சூப்பரா ஒரு கவித படிச்சிருந்தாங்க.. நல்லாயிருந்தது..

    விழுற தண்ணி, அதன் வேகத்தில புகை மண்டலமா சாரல் அடிக்கிறதுனால, 'ஹோகனேக்கல்'ங்கிற காரணப்பெயர் வந்ததுவாம். (அப்ப அது தமிழ்ப் பெயர் இல்லையான்னு கேக்காதீங்க...) புகைய வச்சு, பத்த வச்சுட்டாங்க... ம்..ம்ம்..."

    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  11. //சற்றே நிம்மதிப்
    பெருமூச்செறிந்த
    தமிழன்
    தலையில்
    விழுந்தது (ஹொகேனக்)கல்!//

    கவிதை! கவிதை!! அருவி மாதிரி கொட்டுது :-))

    பதிலளிநீக்கு
  12. கிரி said://கவிதை! கவிதை!! அருவி மாதிரி கொட்டுது :-))//

    அங்கே அருவியும் கொட்டிக்கிட்டேதான் இருக்கு. தீர்வுதான் என்னன்னு யாருக்கும் தெரியலை!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin