Tuesday, May 13, 2008

மே PIT போட்டி-'ஜோடி'க்காகத் தேடியெடுத்துப் போட்டவை

இரு ஞானிகள் இரு பாறைகள்
அண்டசாகரங்கள் அவற்றின் அர்த்தங்கள்!


"எல்லோரும் வாழ்கிறோம் எதையோ தேடி! இருக்குது பார் விடை இங்கே" எனக் கூறும் 'நான்கு ஜோடி'களைகத் தன்னுள் அடக்கிய இந்த முதல் படத்தை PIT-மே 2008-போட்டிக்கு சமர்ப்பிக்கிறேன்!


உட்கார்ந்து ஒரு ஞானி தியானித்ததால்-
உலகப் புகழ் பெற்றது ஒரு பாறை!
உலகப் புகழ் பெற்ற குறளை
எழுதிய ஞானி எழுந்து நிற்பதால்
முக்(கியத்துவம்)தி பெற்றது மறு பாறை!

அலைகடலில் நீந்திக் கரைசேரும் வண்ணமாய்
வள்ளுவர் வகுத்த இம்மைக்கான
வாழ்வியலைக் குறிக்கும் ஆழ்கடலும்-
விவேகானந்தர் போதித்த மறுமைக்குமான
ஆன்மீகத்தின் அடையாளமாய் ஆகாயமும்-
வாழ்வின் 'இரு' ஆதார அர்த்தங்களைப்
பிரதிபலிக்கும் அடுத்த அற்புத ஜோடி!


*** *** ***


ஜோடிக் கம்பிகளுக்கிடையே
காணக் கிடைத்த ஜோடிப் படகுகள்!
*** *** ***ஜோரான ஜோடித் தந்தங்களுடன்
ஜோடி ஆனைகள்!

*** *** ***


ஒளிரும் சிப்பிக்கள்!


*** *** ***


சிப்பிகளுக்குள்ளிருந்து சிலிர்த்துக் கிளம்பும் டால்ஃபின்கள்!
*** *** ***நானின்றி நீயில்லை!


*** *** ***


சக்தியின்றி சிவனில்லை!உலகை ரட்சிக்கும் எம் பெருமானுடன்
ஊஞ்சலிலே ராஜ ராஜேஸ்வரி அம்பாளும்-
அடுக்கு விளக்குகளும்-
கோலக் கமலங்களூம்!


*** *** ***
எத்தனை ஜோடி எண்ணுங்கள் என்பதை விட
எதுவெல்லாம் ஜோடி சொல்லுங்கள் என்பதே சரி!மிளிரும் மின் விளக்கும் ஒளிரும் குத்து விளக்கும்
சிற்பத்தில் ஆனைகளும் சற்று கீழே இரு புறத்தில்
சர மணிக் கொத்துகளும் ஜோடி ஜோடியாய்
அல்ங்கரிப்பது போதாதென ஆறு ஜோடி மணிகள்!
*** *** ***
26 comments:

 1. பேனாவும் பேப்பரும் பிரிக்கமுடியாத ஜோடிதான். ரெண்டும் 'பே' ல ஆரம்பிக்கிறது.ஆனாலும் உங்களுக்கு 'பேப்பே' காட்டாது.
  வெற்றி வரிசையில் சேரும்.
  கடைசி படத்தில்தான் எத்தனை ஜோடிகள்!!!!!!

  ReplyDelete
 2. முதல் படம் தகுதிச் சுற்றுக்கு கரு அடிப்படையில்.ஆனா நாட்டாமைகள் கூடவே டச் அப்பும் வேணுமிங்கிறாங்களே.என்னையெல்லாம் நாட்டாமை ஆக்கினா 70 போட்டிப் படங்களில் ஒரு 50 பேருக்காவது பரிசு கொடுத்துறுவேன்.

  ReplyDelete
 3. விவேகாநந்தரையும் வள்ளுவரையும்
  ஜோடியாக்கிய ஐடியா அருமை, புதுமை.
  வாழ்த்துக்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 4. நானானி said:"வெற்றி வரிசையில் சேரும்."
  நன்றி நானானி! நான் எடுத்த படங்களில் ஜோடிக்கு எது சரி வரும் என்ற குழப்பத்தில் இருந்த போது, "'பே'சாம ஒரு 'பே'ப்பரை எடுங்க. மேலே ஒரு 'பே'னாவை வையுங்க. படமெடுங்க!" என போகிற போக்கில் இந்த யோசனையை உதிர்த்துச் சென்றான் என் மகன்.

  'எது ஜோடி' என்ற குழப்பமில்லாத படங்களையே அனுப்புவது நல்லது என்று
  P-i-T-ல் CVR சொல்லியிருப்பதைப் பதிவிட்ட பிறகுதான் பார்த்தேன். 'பே'சாம 'பேபே' படத்தையே முதல் படமாகக் கொடுத்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. ஆனாலும் ஆத்ம திருப்தி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா?

  ReplyDelete
 5. வாருங்கள் நட்டு! நீங்கள் இப்படி சொல்லியிருப்பதே பரிசு பெற்ற சந்தோஷத்தைக் கொடுத்து விட்டது!

  ReplyDelete
 6. முத்துச் சரத்துக்கு முதன்முறையாக வருகை தந்திருக்கும் சகாதேவனுக்கு வணக்கம்! பாராட்டுக்கும் நன்றி! ஆனால் படத்தைப் புரிந்து கொண்டு எல்லோரும் இதே கோணத்தில் யோசிப்பார்களா என்றுதான் தெரியவில்லை.

  ReplyDelete
 7. //ஒளிரும் சிப்பிக்கள்//
  நன்றாக வந்திருக்கிறது.

  //சிப்பிகளுக்குள்ளிருந்து...டால்ஃபின்கள்//
  //நானின்றி நீயில்லை!//
  //சக்தியின்றி சிவனில்லை!//
  என படங்களை தொடர்பு படுத்தித் தொகுத்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது.

  ReplyDelete
 8. வாவ்! விவேகானந்தரும் வள்ளுவரும்.மிக நல்ல ஜோடிகள்.

  நல்லா யோசிக்கிறீங்க. :)))))

  வாழ்த்துகள்.:)

  ReplyDelete
 9. நன்றிகள் பலப் பல சுமதி!

  "நானின்றி நீயில்லை!"
  "சக்தியின்றி சிவனில்லை!"

  எங்கேயோ கேட்ட மாதிரியில்லை?
  'திருவிளையாடல்' படத்தில் சிவனாக சிவாஜியும் சக்தியாக சாவித்திரியும் முழங்கும் வசனங்கள் அவை!

  ReplyDelete
 10. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி New Bee!

  ReplyDelete
 11. எனக்குப் பிடிச்சது 'நம்ம' பசங்கதான்.

  ReplyDelete
 12. நல்லது madam! PIT பசங்களைத்தான் சொல்றீங்கன்னு comment-யை publish பண்ணியதும்தான் புரிந்தது. ஏன்னா இன்னொரு ஜோடி GOOD பசங்களை என் "காலத்தின் கட்டாயம்' இடுகையில் இப்பத்தான் 'நம்ம' பசங்க என சீனா சாருக்கும், NewBee-க்கும் காட்டிட்டு வந்தேன்.

  ReplyDelete
 13. என்னங்க இது/ குண்டக்க மண்டக்கன்னு யோசிப்பீங்களோ?

  என் பசங்களுக்கு PIT பிடிக்காதுங்க. அதுலே விழுந்துட்டா ஆபத்துதான். அடிமையாக்கிருவாங்க.

  நம்ம 'கொம்பன்'களைச் சொல்றேன்.

  துளசிதளம் 'தலை'யிலே பார்க்கலையா? (-:

  ReplyDelete
 14. அதான் எனக்குத் தெரியுமே! துள்சியின்
  தும்பிக்கை எங்கே நீளும் என்று.

  ReplyDelete
 15. அடா, அடா, அடா! அதான் டீச்சர்கள் ரெண்டு பேரும் 'ஜோடி' போட்டுக்கிட்டு வந்து புரிய வச்சுட்டீங்களே:-))))))!
  நேற்று 'ஷொட்டு' வாங்கிய டீச்சரிடம் இன்று 'குட்டு'ம் வாங்கியாச்சு:-(((((!

  ReplyDelete
 16. இலக்கியமும் வேதாந்தமும் ஜோடி சேர்ந்தால் வெற்றிதானே.

  ReplyDelete
 17. துளசி மேடம்!'PIT பசங்க' என நான் குறிப்பிட்டது எனது அடுத்த (PIT) வேடிக்கைப் பதிவின் கடைசியில் வரும் 'சின்னக் கருப்பன்களை'! PIT என்றாலே ஆகாத 'பெரிய கருப்பன்கள்'தான் "உங்க" பசங்க என்ற உலகுக்கே தெரிஞ்ச விஷயம் உடனே எனக்கு strike ஆகாமப் போச்சே! அதான், துளசியம்மாவின் 'தும்பிக்கை' எங்கே நீளுமென நானானியம்மா 'மூக்கில்' 'டாண்'ணென வியர்த்து விட்டதே;-))! 'குண்டக்க மண்டக்க' யோசித்ததற்கு கிடைத்ததானாலும்.. மோதிரக் குட்டுகள்! அதனால் வலிக்கவேவில்லை!

  ReplyDelete
 18. வந்தனம் கோமா! இந்த ரீதியில் படத்தைப் பலரும் ஏற்றுக் கொண்டதே எனக்கு வெற்றிதான்.

  ReplyDelete
 19. //உட்கார்ந்து ஒரு ஞானி தியானித்ததால்-
  உலகப் புகழ் பெற்றது ஒரு பாறை!
  உலகப் புகழ் பெற்ற குறளை
  எழுதிய ஞானி எழுந்து நிற்பதால்
  முக்(கியத்துவம்)தி பெற்றது மறு பாறை//

  முடியல.. கலக்குறீங்க எளிய நடையில்.. எனக்கெல்லாம் கூட நல்லா புரியுது :-)

  //ஜோடிக் கம்பிகளுக்கிடையே
  காணக் கிடைத்த ஜோடிப் படகுகள்//

  //எத்தனை ஜோடி எண்ணுங்கள் என்பதை விட
  எதுவெல்லாம் ஜோடி சொல்லுங்கள் என்பதே சரி!//

  :-)

  ReplyDelete
 20. நன்றி கிரி. அதோ இதோன்னு ஜூன் PIT-க்கும் தேதி நெருங்கி விட்டது. ஏற்கனவே எடுத்தவற்றில் 3 தேற்றி விட்டேன். இன்னும் புதுசா ஏதாவது அகப்படுதா எனப் பார்த்து விட்டு களத்தில் இறங்க வேண்டியதுதான். பரிசு கிடைக்கிறதோ இல்லையோ பங்கேற்பே பரவசம்தான் இல்லையா?[பிற்சேர்க்கை அது இதுன்னு மிரட்டுகையில் வேறென்னத்த சொல்ல..:-)))!]

  ReplyDelete
 21. //வள்ளுவர் வகுத்த, இம்மைக்கான
  வாழ்வியலைக் குறிக்கும் ஆழ்கடலும்-
  விவேகானந்தர் போதித்த, மறுமைக்கும்
  ஆன ஆன்மீகத்தின் அடையாளமாய் ஆகாயமும்-//

  முதல் படமும் நீங்கள் இணைத்திருக்கும் விதமும் என்னை மிகவும் கவர்ந்தது!

  அடுத்தது ஒளிரும் சிப்பிகள்!

  அப்புறம் எனக்குப் பிடிச்ச ராஜராஜேஸ்வரி! :)

  பேப்பரும் பேனாவும் சூப்பர் ஜோடி!

  போங்க... இப்படியே எல்லாத்தையும் சொல்லிடுவேன்! :)

  ReplyDelete
 22. கவிநயா said...//முதல் படமும் நீங்கள் இணைத்திருக்கும் விதமும் என்னை மிகவும் கவர்ந்தது!

  அடுத்தது ஒளிரும் சிப்பிகள்!

  அப்புறம் எனக்குப் பிடிச்ச ராஜராஜேஸ்வரி! :)

  பேப்பரும் பேனாவும் சூப்பர் ஜோடி!//

  ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி கவிநயா.ராஜராஜேஸ்வரி எங்கள் குலதெய்வம்.

  ReplyDelete
 23. ராமலக்ஷ்மி

  படங்கள் அத்தனையும் அருமை

  முதல் படம் அருமை - சிந்தனை பாராட்டுக்குரியது - சோடி யானையும். சோடி சோடியாக பலவற்றைக் கொண்ட கதவும் விளக்குகளும் அருமை.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 24. cheena (சீனா) said...
  //முதல் படம் அருமை - சிந்தனை பாராட்டுக்குரியது - சோடி யானையும். சோடி சோடியாக பலவற்றைக் கொண்ட கதவும் விளக்குகளும் அருமை.//

  முதலில் பாறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்வு செய்தேன் அப்படத்தை. பார்க்கப் பார்க்க சிந்தனை விரிந்து "கண்டேன் (சீதையை) இன்னும் மூன்று ஜோடிகளை"! அதே போல கடைசிப் படத்திலும்..நோக்க நோக்க..சிறகையே விரித்து விட்டது கற்பனை:)!

  ReplyDelete
 25. இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணினேன் :((( படங்களோடு, தத்துவ வரிகளும் அருமை, அருமை. எத்தனை, எத்தனை ஜோடிகள். ஜோடிக் கம்பிக்குள், ஜோடிப் படகுகள் வித்தியாசம். டச்சப்பில் மிளிரும் இரு பாறைக் கலைகள் சூப்பர். பின் இன்டோர் இரட்டையரகள்.

  ReplyDelete
 26. ஜோடி பொருத்தம் அற்புதம்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin