Sunday, May 4, 2008

காலத்தின் கட்டாயம்


வேலைக்காகப்
போனீங்க இன்டர்வ்யூ,
ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
எங்களுக்கு இன்டர்வ்யூ!
*
நலுங்காமல் நாலு வயசில்
நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!
நாலைந்து நோட்டுதான்
நாலாவது வகுப்பு வரை.
*
எம் மழலை மாறும் முன்னே
ப்ளே ஸ்கூல் அறிமுகம்!
வருஷங்கள் ஆக ஆக நிரம்பி
வழிகின்ற புஸ்தகங்கள்.
*
அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?
*
ஏழாவது வகுப்பிலே நீங்க
வாசிச்ச விஷயமெல்லாம்
எல்கேஜியிலேயே நாங்க
யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
*
இருபது வயசிலே நீங்க
வியந்து பார்த்த மானிட்டரிலே
இப்போதிலிருந்தே நாங்க
புகுந்து கேம் ஆடறோம்.
*
கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*
கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.
***

செப்டம்பர் 18, 2003 திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை

30 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:


18 comments:

 1. முத்துச் சரம்
  அருமையான பெயர்
  வரிகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த முத்துக்களாய் மிளிர்கிறது

  ReplyDelete
 2. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  ReplyDelete
 3. Goma said...
  "முத்துச் சரம்
  அருமையான பெயர்"

  -"முத்து" எனது அன்பு மகனின் அருமைப் பெயரும் அதுவே!

  ReplyDelete
 4. குட்டீஸ் போஸ் சூப்பர்!
  ஒருவன் ஓட்டை வழியாய் பார்க்கிறான்,
  அடுத்த வாண்டுக்கு என்ன ஒரு அவசரம்! கேட்டையே தள்ளி திறந்து
  பள்ளி பிரின்ஸியிடம் அட்மிஷன் வாங்கிவிடுவான் போல!!!

  ReplyDelete
 5. சரியா சொன்னீங்க ... காலத்தின் கட்டாயம் என்று. தவிர்க்க முடியாததாகவும் ஆகி விடுகிறது.

  --RL

  ReplyDelete
 6. Correct நானானி! காலத்தின் தேவைக்கு ஈடு கொடுக்கும் வேகத்தையும் இந்த இளைய தலைமுறைக்கு இறைவன் தாராளமாகவே கொடுத்திருக்கிறான்.

  ReplyDelete
 7. நல்லா இருக்கு பதிவு. உங்க பெயருக்காகவே வந்து எட்டி பார்த்தேன். என் தாயார் பெயரும் ராமலஷ்மி.
  :)

  ReplyDelete
 8. ஆமாம் RL! "கவலையைப் பறக்க விடுங்க" "பத்திரமா கரை சேருவோம்"ன்னு பசங்களே சொல்லும் போது பிறகென்ன? கதவை விரியத் திறந்திட வேண்டியதுதான்...

  ReplyDelete
 9. வாங்க மங்களூர் சிவா!
  அம்மாவின் பெயருக்காக அன்பு பாராட்டும் மூன்றாவது blogger நீங்க! ஏற்கனவே நானானியும், சகாதேவனும் அவர்களுக்கு முதன் முதலில் நானிட்ட பின்னோட்டத்தின் மறுமொழிகளில் இதைக் குறிப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்!

  ReplyDelete
 10. ராமலக்ஷ்மி,

  சற்று நேரம் முன்பு தான் என் பிள்ளையைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்தேன்.

  இந்தக் கவிதை நகைச்சுவையாக இருந்தாலும் முற்றிலும் உண்மை இது.Pressure குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.

  ஆனால், குட்டிகளின் புகைப்படம் என்னைச் சிரிக்க வைத்தது.

  நன்றி.:))))

  ReplyDelete
 11. ராமலக்ஷ்மி,

  படமும் அருமை - கவிதையும் அருமை. இக்கால மழலைகள் படும் பாடு - பாவம் அதுகள்.

  என்ன செய்வது - மழலைகளை மழலைகளாகப் பார்க்க வேண்டும் - ம்ம்ம்ம்ம்

  கவலையைப் பறக்க விடுங்க" "பத்திரமா கரை சேருவோம்"ன்னு பசங்களே சொல்லும் போது பிறகென்ன? கதவை விரியத் திறந்திட வேண்டியதுதான்...

  ReplyDelete
 12. NewBee மே PIT-க்காக நம்ம பசங்களைப் போலவே pose கொடுக்கும் ஜோடி பொம்மைகளைப் போட்டிக்குக் கொடுத்திருக்கிறார். (நேரம் இருந்தா போய் பாருங்க!) அதன் பின்னூட்டத்தில் I've said:
  "இந்த ஜோடியைப் போலவே pose கொடுக்கும் பொடிசுகளைப் பார்க்கணும்னா என் வலைப் பதிவில் "காலத்தின் கட்டாயம்" என்ற இடுகையைக் காண்க. என் தங்கை தன் மகன்களை எடுத்த அந்தப் படத்துக்காகவே நான் எழுதிய நகைச் சுவை கவிதை. படம் என்னிதில்லாததால் போட்டிக்குள் அது போக முடியவில்லை!"

  NewBee, அழைப்பை ஏற்று வந்து ரசித்ததில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 13. நல்வரவு சீனா! நன்றி!

  "இக்கால மழலைகள் படும் பாடு - பாவம் அதுகள்.

  என்ன செய்வது - மழலைகளை மழலைகளாகப் பார்க்க வேண்டும் - ம்ம்ம்ம்ம்"

  உங்கள் வருத்தமும், ஆதங்கமும் மிகச் சரி சீனா!

  ReplyDelete
 14. //என்ன செய்வது - மழலைகளை மழலைகளாகப் பார்க்க வேண்டும் - ம்ம்ம்ம்ம்///

  ரிப்பீட்டேய். காசும் கொட்டி, பிள்ளைகளையும் வாட்டி ... இந்த நிலை என்றாவது மாறுமா ????? நிறைய மாற்றம் வரணும். அது குழந்தைகள் கிட்ட இருந்து ஆரம்பிக்கணும். ஆனா குழந்தைகளையே பெரிய ஆளாய் படுத்துகையில், அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். மாற்றம் வரும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 15. சதங்கா said://நிறைய மாற்றம் வரணும். அது குழந்தைகள் கிட்ட இருந்து ஆரம்பிக்கணும். ஆனா குழந்தைகளையே பெரிய ஆளாய் படுத்துகையில், அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். மாற்றம் வரும் என்று நம்புவோம்.//

  உண்மைதான் சதங்கா! மாற்றம் கண்டிப்பாக வர வேண்டும். நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

  ReplyDelete
 16. //வேலைக்காகப்
  போனீங்க இன்டர்வ்யூ,
  ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
  எங்களுக்கு இன்டர்வ்யூ!//

  டாப்பு ஹா ஹா ஹா

  //ஏழாவது வகுப்பிலே நீங்க
  வாசிச்ச விஷயமெல்லாம்
  எல்கேஜியிலேயே நாங்க
  யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்//

  உண்மைதாங்க. இன்னைக்கு என் அக்கா பய்யன் கேட்கிற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. பொளந்து கட்டுறான். எனக்கு வெட்கமாக இருக்கிறது.

  //இருபது வயசிலே நீங்க
  வியந்து பார்த்த மானிட்டரிலே
  இப்போதிலிருந்தே நாங்க
  புகுந்து கேம் ஆடறோம்//

  அதோட மட்டுமில்ல நமக்கு சொல்லி தந்து, என்ன மாமா! இப்படி மெதுவா விளையாடுறீங்கன்னு நம்மளையே போட்டு தாக்குறாங்க :-) நிலைமைய பாருங்க

  //-"முத்து" எனது அன்பு மகனின் அருமைப் பெயரும் அதுவே!//

  வலைப்பதிவின் பெயரிலேயே கவிதையை கொண்டு வந்துவிட்டீர்கள் :-)

  /திண்ணை இணைய தளத்தில் வெளிவந்த கவிதை//

  நீங்கள் இதை போல நிறைய இணையதளத்தில் எழுதி கொண்டு இருக்கிறீர்களா? வாழ்த்துக்கள்.

  நான் LKG கட்டணம் பற்றி எழுதுகிறேன் என்று கூறியது விவரமாக அல்ல, நான் அக்காவிடம் கேள்வி பட்ட இந்த கட்டண உயர்வை மட்டுமே, இது நான் இடப்போகும் ஒரு பதிவில் ஒரு பகுதியாக வரும். எனக்கு இன்னும் அந்த அனுபவம் இல்லை, ஆனால் கூடிய விரைவில் கிடைக்க போகிறது :-)

  நீங்கள் இப்போது தான் பதிவு தொடங்கி இருக்கிறீர்களா? உங்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காகவும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. கிரி said://இப்படி மெதுவா விளையாடுறீங்கன்னு நம்மளையே போட்டு தாக்குறாங்க :-)//

  உண்மை. உண்மை.

  //எனக்கு இன்னும் அந்த அனுபவம் இல்லை, ஆனால் கூடிய விரைவில் கிடைக்க போகிறது :-)//

  மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள்:)!

  //நீங்கள் இதை போல நிறைய இணையதளத்தில் எழுதி கொண்டு இருக்கிறீர்களா? //

  திண்ணையில் மட்டும்தான். அதுவும் ஆயிற்று இடைவெளி விழுந்து 3வருடங்கள். என் வலைப்பூவின் முகப்பில் சொன்ன மாதிரி தொடர்ந்து எழுதுவது என் பழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் வழக்கமாக இருந்து வருகிறது. அதை வலைப்பூ மாற்றும் என்றே நம்புகிறேன்.

  //உங்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காகவும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.//

  நன்றி கிரி.

  ReplyDelete
 18. ////வேலைக்காகப்
  போனீங்க இன்டர்வ்யூ,
  ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
  எங்களுக்கு இன்டர்வ்யூ!////

  இந்த வரிகளைப் படித்தவுடன் நகைச்சுவை உணர்வுத் தோன்றினாலும் இந்நிலைக்காளன பிஞ்சுகளை நினைக்கும்போது சற்றே பரிதாபமாக இருக்கிறது.

  ///ஏழாவது வகுப்பிலே நீங்க
  வாசிச்ச விஷயமெல்லாம்
  எல்கேஜியிலேயே நாங்க
  யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
  *
  இருபது வயசிலே நீங்க
  வியந்து பார்த்த மானிட்டரிலே
  இப்போதிலிருந்தே நாங்க
  புகுந்து கேம் ஆடறோம்////


  இயல்பான வரிகள். என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin