திங்கள், 15 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
விஜய - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
லேபிள்கள்:
அனுபவம்,
பேசும் படங்கள்,
வாழ்த்து,
வாழ்த்துகள்
புதன், 10 ஏப்ரல், 2013
பரிசலோட்டி பன்னீர் - படம் மீட்டெடுத்த காவேரிக்கரை நினைவும், ரிஷிகேஷ் நிகழ்வும்
செல்லுமிடங்களில்
ஒரு சில நிமிடங்களோ மணிகளோ, சந்திக்கிற மனிதர்களின் பெயர்களைக்
கேட்டறிந்து படத்தோடு அவர்கள் பெயரையும் குறிப்பிடுவார் தன் அனைத்துப் பயணக் கட்டுரைகளிலும் பதிவர் துளசி
கோபால் அவர்கள். அவரிடத்தில் பிடித்த பல
விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த நல்ல வழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைத்தாலும் பலநேரங்களில் மறந்து போகிறேன்.
படத்தில் இருப்பவர் பெயர் பன்னீரா என்றால், இல்லை.
படத்தில் இருப்பவர் பெயர் பன்னீரா என்றால், இல்லை.
திங்கள், 8 ஏப்ரல், 2013
பூக்களைப் படமாக்குவதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?
#1 ஒட்டகச் சிவிங்கியை ஓரங்கட்டிய மலர்..
எனது 'படங்கள் ஆயிரம் - ஃப்ளிக்கர் பயணம்' பதிவில் ‘நீங்கள் அதிகமாய் பூக்களைதான் எடுக்கிறீர்கள்.’ என ஒரு நண்பர்
குறிப்பிட்டிருந்தார். ‘அனைத்து வகைப் படங்களும் எடுத்து வந்தாலும்,
அதிகமாய் சமூக வலைத்தளங்களில் பகிருவது பூக்களையே என்பதால் அப்படித்
தோன்றுகிறது’ என்றொரு பதிலை நான் சொன்னாலும் உடனடியாக ஆராய்ந்து
பார்த்ததில் (ஃப்ளிக்கரில் வகைப்படுத்தியிருக்கும் ஆல்பங்களில்) அதிக
எண்ணிக்கையில் படங்களைக் கொண்டிருப்பது பூக்கள் ஆல்பமே.
ஆயிரத்தில் 165 போலப் பூக்கள்
படங்கள் இருந்தன அன்று. இப்போது மேலும் சில. இப்படியே போனால் தனிப்பட்ட
ஆல்பத்தின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டு ‘பூக்கள் ஆயிரம்’ என ஒரு பதிவு
போட்டாலும் போடுவேன் போலிருக்கிறது:)! என்ன செய்வது? இயற்கை
பல்லாயிரக்கணக்கான வண்ணங்களில், வடிவங்களில் அல்லவா மலர்களைப் படைத்து
வைத்திருக்கிறது!
ஒரு தோழி சொன்னார், ‘பூக்களைப் படமாக்குவதில், பொதுவாகவே புகைப்படங்களிலும்தான் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது? கோலமோ, சித்திரமோ என்றால் நம் கைவண்ணம் என ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. இருக்கிறதை அப்படியே எடுத்துக் காட்டுவதில் என்ன பெரிய சுவாரஸ்யம்?’ என. மற்றவர் எடுப்பது குறித்து அல்லாமல் தனக்கு ஏன் அதில் ஆர்வம் இல்லை என்பதாகதான் சொன்னார். நல்லது. அது அவரது தனிப்பட்ட எண்ணம். என்னைப் பொறுத்தவரை,
![]() |
| விவரம் கடைசியில்.. |
ஒரு தோழி சொன்னார், ‘பூக்களைப் படமாக்குவதில், பொதுவாகவே புகைப்படங்களிலும்தான் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது? கோலமோ, சித்திரமோ என்றால் நம் கைவண்ணம் என ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. இருக்கிறதை அப்படியே எடுத்துக் காட்டுவதில் என்ன பெரிய சுவாரஸ்யம்?’ என. மற்றவர் எடுப்பது குறித்து அல்லாமல் தனக்கு ஏன் அதில் ஆர்வம் இல்லை என்பதாகதான் சொன்னார். நல்லது. அது அவரது தனிப்பட்ட எண்ணம். என்னைப் பொறுத்தவரை,
லேபிள்கள்:
அனுபவம்,
கட்டுரை/அனுபவம்,
பூக்கள்,
பேசும் படங்கள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
சிரிப்பு (சிறுகதை) - அமீரகத் தமிழ் மன்றம் 13_ஆம் ஆண்டு விழா மலரில்..
22 மார்ச் 2013 அன்று துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடந்து முடிந்த அமீரகத் தமிழ் மன்றத்தின் பதிமூன்றாம் ஆண்டுவிழாவில், ‘விழா மலர்’ சிறப்பு விருந்தினரான இயக்குனர் பிரபு சாலமனால் வெளியிடப்பட்டது. விழா குறித்த விரிவான விவரங்களை தினமலரில் இங்கே காணலாம்.
சிரிப்பு
வாய்க்கால் பாலத்தின் குட்டைச் சுவர் மேல் உட்கார்ந்து போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்காரம். அரிசி மில்லு அண்ணாச்சி, பரமசிவம் வாத்தியார், சங்கரலிங்கம் சம்சாரம், குருக்களைய்யா மகன் எனத் தெரிந்தவர்கள் கடந்து போனாலும் வாளாவிருந்தான். அவர்களும் இவனோடு பேச முற்படவில்லை. இவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பள்ளி சிநேகிதன் பெருமாள் மட்டும் சைக்கிளின் வேகத்தைக் குறைக்காமல் ‘என்னலே சிங்காரம்?’ என உற்சாகமாய்க் கையசைத்துப் புன்னகைத்தபடிக் கடந்து போனான். வேறு வழியில்லாமல் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தவன், ‘உருப்படாத பயலுவதான் இந்தக் காலத்துல உதார் விட்டுக்கிட்டுத் திரியுறானுங்க’ என நினைத்தான்.
ஒரே வகுப்பில் பத்தாவது வரைப் படித்தவர்கள் பெருமாளும் அவனும். சில வகுப்புகளில் ஒரே பெஞ்சில் கூட இருந்திருக்கிறார்கள். இவன் எழுபது எண்பது என மதிப்பெண்கள் எடுக்கையில் அவன் நாற்பத்தைந்தை எந்தப் பாடத்திலும் தாண்டியதாக நினைவில்லை. நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. ‘ஈ ஓட்டுற கடையில என்னமோ தலைக்கி மேலே வேல கெடக்கிறாப்ல பாவ்லா பண்ணிக்கிட்டு நிக்காமல்லாப் பெடலப் போடுதான். ஒரு வகையில நல்லாதாப் போச்சு. என்ன கெடக்குப் பேச? எப்படிப் போவுது வியாவாரம்னுதான் ஆரம்பிக்க வேண்டிருக்கும். அது போதுமே. ஆரம்பிச்சுருவான் புராணத்தை. அப்பன் ஆரம்பிச்சக் கடை அவனாலதான் ஆஹா ஓஹோன்னு போகுதுன்னு அம்பானி ரேஞ்சுக்குப் பேசுவான். போட்டும் போட்டும். நிக்காமயேப் போட்டும்’ என நினைத்தான்.
வியாழன், 4 ஏப்ரல், 2013
கோடை வந்தாச்சு! - ஏப்ரல் மாத PiT போட்டி
பென்ஷனர்ஸ் பாரடைஸ் என்பார்கள் ஒருகாலத்தில், இதமான சீதோஷ்ணத்திற்காகவே பெங்களூரை. மெட்ரோவுக்கு, பாலங்களுக்கு, சாலை விரிவாக்கத்திற்கு என என்னென்னவோ காரணங்களைச் சொல்லிக் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் மேலான மரங்களைப் பலி கொடுத்து வளர்ந்து நிற்கிற ஐடி நகரத்து பென்ஷனர் நண்பர் ஒருவர் ‘இந்தக் கோடைக்கு வேற எங்காவது ஓடிப் போயிரலாம்ன்னு இருக்கேன்’ என்றார் போன வாரம். எல்லோருமே கோடை நெருங்க நெருங்க நடுங்க ஆரம்பிச்சிடுறோம் எப்படி சமாளிக்கறதுன்னு. கூடவே சேர்ந்துக்கிற மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடுன்னு நாடு முழுக்க இருக்கு பிரச்சனை. விடுமுறைன்னு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம்னு இருக்கிற அவங்கள அனல் வெயில் தாக்காமப் பாத்துக்கணும். வீட்டிலேயே பூட்ட முடியாம அங்கே இங்கேன்னு கூட்டிக்கிட்டும் போகணும். ஏராளமான திட்டங்களை இப்பவே போட ஆரம்பிச்சிருப்பீங்க. இந்த சமயத்துக்குச் சரியானத் தலைப்பா எனக்குத் தோணுறது என்னென்னு இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு?
#1 தவிக்கிற வாய்களுக்கென..
#2 சூப்பர் ட்ரிங்க்
கோடை.
இதுதான் தலைப்பு. (போட்டி அறிவிப்பு இங்கே.)
வெப்பத்தின் தாக்கத்தை, வேண்டியிருக்கும் குளிர்ச்சியை, உல்லாச விடுமுறையை, இப்படி எந்தப் படமானாலும் அடிப்படையில் கோடை என்பதை உணர்த்துகிற விதமா இருக்கணும். உதாரணத்துக்கு கைவசமிருந்த சில படங்களை மாதிரிக்கு இங்கே தந்திருந்தாலும், நீங்க உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு:)! எலுமிச்சஞ்சாறு, நீர்மோரு, பனையோலை விசிறி, தர்பூசணி, குளுகுளுக் கண்ணாடி, உச்சி வெயிலில் பசங்க ஆடும் கிரிக்கெட் என எவ்வளவோ இருக்குதானே!
#1 தவிக்கிற வாய்களுக்கென..
#2 சூப்பர் ட்ரிங்க்
#3 பெருந்தாகம்
லேபிள்கள்:
அனுபவம்,
ஃபோட்டோ போட்டி-(PIT),
புகைப்படப் பதிவு
திங்கள், 1 ஏப்ரல், 2013
நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்! - கல்யாண் நினைவு - உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள்
ரியாத் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்பு ஆறுதல் பரிசு பெற்றிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்:)!
ரியாத் தமிழ்ச் சங்கத்திற்கும், நடுவர்களுக்கும் என் நன்றி!
போட்டி முடிவுகளையும் இங்கே அறியத் தருகிறேன்:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











