https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/ |
சுமாராக எடுத்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் முத்துச்சரம் மூலமாகப் பெற்ற ஊக்கமும் காரணம். இன்று PiT - தமிழில் புகைப்படக்கலை தளத்தை நிர்வகித்து வருகிறேன் என்றால் அதன் வாசகியாக போட்டிகளில் கலந்து கொண்ட போது இங்கு கிடைத்த கைத் தட்டல்களும் பாராட்டுகளும் முக்கியக் காரணம். அதனாலேயே இந்த மைல் கல்லை இங்கே நட்டு வைத்துக் கொள்கிறேன்:)! இன்றைய நாளில் ஆர்வம், ஆத்மதிருப்தி இரண்டுமே என்னைச் செலுத்துவதில் முக்கியபங்கு வகிக்கின்றன என்றாலும் பகிரும் படங்கள் மற்றவருக்குப் பிடித்திருப்பதை அறிய வருகையில் அவை இரு மடங்காவதை மறுக்க முடியாது.
முத்துச்சரத்தைத் தொடருபவர்களுக்கும், பதிவுலகை விட்டு சற்றே ஒதுங்கி விட்டாலும் கூட பகிரும் ஃப்ளிக்கர் படங்களை FB மற்றும் G+-ல் கவனித்து வருபவர்களுக்கும், இந்த நெடும்பயணத்தில் உடன் வந்து, ஒவ்வொரு படத்துக்கும் கருத்தளித்து, துறை சார்ந்த விஷயங்களுக்கு ஆலோசனைகள் வழக்கி வரும் ஃப்ளிக்கர் நண்பர்களுக்கும் என் நன்றி!
என் ஆர்வத்தைப் பாராட்டி நான் எடுத்த படங்களோடு நேர்காணல்களையும் குறிப்புகளையும் வெளியிட்ட கல்கி, தேவதை, குங்குமம் தோழி, அவள் விகடன், தென்றல், குமுதம், தினகரன் வசந்தம், வடக்குவாசல், தினமலர் உள்ளிட்ட அனைத்துப் பத்திரிகைகளுக்கும் என் நன்றி.
இது ஒரு எண்ணிக்கைதான். சாதனை அல்ல. தொடர்ந்து செயல்பட கிடைத்திருக்கும் உத்வேகம். அவ்வளவே.
பலமுறை சொன்னது போல வலைப்பூவில் தொகுப்பாகப் பகிர்ந்த படங்கள் அனைத்தும் Flickr_ல் இருப்பதில்லை. அதேபோல அங்கே பகிர்ந்த அனைத்தையும் இங்கே பதிந்ததாகச் சொல்ல முடியாது. வளர்ச்சியும் தேர்ச்சியும் எப்படிப் படிப்படியாக இருந்தது எனத் திரும்பிப் பார்த்துக் கொள்ள உதவும் வகையில் ஆரம்ப காலத்தில் பதிந்த எதையும் ஃப்ளிக்கரிலிருந்தோ வலைப்பூவிலிருந்தோ அகற்றவில்லை.
தவிர்க்க முடியாத இடைவெளிகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் பெரும்பாலும் தினம் ஒன்று அல்லது இரண்டு என ஃப்ளிக்கரில் பதிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரே மாதிரியான படங்கள் அடுத்தடுத்து அமையக் கூடாதென்பதில் கவனம் எடுக்கிறேன். வெளியில் செல்லும் போது எடுத்து ஏராளமாய்க் குவிந்து கிடப்பவற்றிலிருந்து மட்டுமே பகிராமல்.. முக்கியமாகக் கேமராவை உறங்க விடாமல்.. நடுநடுவே கண்ணில் படும் பொருட்களை வைத்து உள் அரங்குப் படங்களை வெவ்வேறான ஒளி அமைப்பில் எடுத்துப் பழகுகிறேன். தொடர்ந்து கற்கிறேன். பரீட்சித்துப் பார்க்கிறேன்.
முன் போல அதிகம் எழுதுவதில்லையே என அக்கறையுடன் நண்பர்கள் விசாரிக்கையில் குற்ற உணர்வு வருகிறது. ஒளிப்படக் கலை மீதான ஈர்ப்பு அதிக நேரத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. எழுத்திலும் வாசிப்பிலும் சம அளவு கவனத்தைத் திருப்ப வேண்டும். எண்ணமாக நின்று போவதை செயல்படுத்த வேண்டும்.
சென்ற வருட இறுதியில் “ FLICKR_ம் நானும்” என்றொரு பதிவிட்டிருந்தேன். 2014 _ல் என் ஒளிப்படப் பயணம் குறித்த அப்பகிர்வில், EXPLORE ஆன இரு படங்களைக் காணத் தந்திருந்தேன். இந்த வருடம் EXPLORE_ல் தேர்வாகி 4700+ பார்வையாளர்களைப் பெற்ற படம்.. கவிஞர் கலாப்ரியாவின் பெங்களூர் வருகையை முன்னிட்டு கப்பன் பூங்காவில் நடைபெற்ற சந்திப்பில் எடுத்தது..
திருமதி. சரஸ்வதி கலாப்ரியா
சமீபத்தில் எடுத்ததில் என் மனம் கவர்ந்த ஒன்று:
அன்புச் சகோதரர்கள்
கைக்குழந்தையில் இருந்து இப்போது வரை தம்பி மகனை எடுத்த படங்களைத் தனி ஆல்பமாக பிகாஸாவில் சேமித்து வருகிறேன். அவற்றில் தேர்ந்தெடுத்த வெகுசிலவற்றை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். எனக்கு என்றில்லை, ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்த இரண்டு இரண்டரை வயதிலிருந்து கேமராவுக்கு இவன் தருகிற ஒத்துழைப்பு அபாரமானது. ஆச்சரியம் அளிக்கக் கூடியது. நீங்களும் அறிவீர்கள்:)!
ஷண்முகத்துக்கு அத்தையின் அன்பு முத்தங்கள்!
ALWAYS AWESOME!
19 ஆகஸ்ட், உலக ஒளிப்படத் தினம் வருகிற இம்மாதத்தில் எட்டியிருக்கும் எண்ணிக்கையும், ஹாட்ரிக் போல மூன்று பத்திரிகைகளில் நான் எடுத்த படங்களும்..
பவளவிழா கல்கி, செல்லமே மற்றும் கலைமகளில்..!
பின் இரண்டை விரைவில் பகிருகிறேன்:)!
***
உங்களின் இடைவிடாத முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,,,,,,
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமையான அழகான படங்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஷண்முகம்! நவரச நாயகன். பாராட்டுகளும், வாழ்த்துகளும். உங்கள் எழுத்தையும் அவ்வப்போது கொஞ்சம் தொடருங்கள்.
பதிலளிநீக்கு:)))))
நிச்சயமாக:)! நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அருமை சகோ வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமை.... வாழ்த்துகள்....
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குவாழ்த்துகள்.....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குசண்முகத்திற்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஎழுத்தாளரை புகைப்பட கலைஞர் முந்தி விட்டாரோ என்று நான் நினைப்பதுண்டு. அதை இப்பொழுது சரி செய்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களின் பணி.
எழுத்தும் தொடரும் :). நன்றி அமைதி அப்பா.
நீக்கு