புதன், 15 ஜூலை, 2026

பண்புடன் மின்னிதழ் கவிதைப்போட்டியில் பரிசு




ண்புடன் மின்னிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் நான் எழுதிய ‘இல்லாத எல்லாமும்’ கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த அங்கீகாரத்திற்காக பண்புடன் மின்னிதழ் ஆசிரியர் குழுவினர், நடுவர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றி பெற்ற மற்ற நான்கு கவிஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்! 

கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகளுக்காக வெளியான அறிவிப்பை ஏற்கனவே சென்ற தூறல் பதிவில் இங்கே பகிர்ந்திருந்தேன். 

தற்போது முடிவுகள் குறித்து வெளியான ஃபேஸ்புக் பதிவுகளின் இணைப்புகளை உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் இங்கே தருகிறேன்.

கவிதைப்போட்டி முடிவுகள் - முதற்கட்ட அறிவிப்பு: https://www.facebook.com/groups/9775181859227666/posts/27696031563382754

போட்டி முடிவு அறிவிப்பு - பரிசு பெற்ற கவிதைகள். 

முதன்மை நடுவர் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் குறித்த அறிமுகம்: https://www.facebook.com/groups/9775181859227666/posts/27666075506378360

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபமாகக் கவிதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தப் பரிசு அதைத் தொடர ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது எனில் அது மிகையன்று. 

பரிசு பெற்றக் கவிதை பண்புடன் இதழில் வெளியான பிறகு இங்கே பகிர்ந்திடுவேன்.

நன்றி பண்புடன்!

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin