சனி, 12 அக்டோபர், 2024

நவராத்திரியில் நான் பார்த்த கொலுக்கள் 6 - விஜய தசமி வாழ்த்துகள்!

 இந்த வருடம் பார்த்த கொலுக்களின் தொகுப்பு.. 

#1
‘பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு.’

தங்கை வீட்டுக் கொலுவிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒவ்வொரு வருட கொலுவிலும்  மைசூர் தசரா, மகாபாரதம், கிருஷ்ணாவதாரம் என ஏதேனும் ஒரு கருவை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றவாறு இருக்கிற பொம்மைகளை வைத்துக் காட்சிகள் அமைத்து வருவார். 

#2


இந்த வருடம்  ‘கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் பண்புகள்’ எனும் கருவையொட்டி காட்சிகளை அமைத்து குறிப்பிட்ட தலைப்புகளை ஒவ்வொரு காட்சிக்கு அருகிலும் வைத்திருந்தது வந்தவர்களைக் கவர்ந்தது.  கொலுவின் கருவை பெரிய அளவில் பிரின்ட் செய்து ஒரு பக்க சுவரில் மாட்டியிருந்தது வந்தவர்கள் கொலு அமைப்பைப் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது:

#3

*

*

கடந்த வருடங்களில் அனைத்துக் காட்சிகளையும் படமெடுத்து முந்தைய கொலுப் பதிவுகளில் பகிர்ந்து விட்டிருந்த படியால் இந்த முறைத் தனித்தனியாக அவற்றை எடுக்கவில்லை. காணொலியாக இங்கே பார்க்கலாம்:
[நான் இங்கே வலையேற்றிய காணொலி வேலை செய்யவில்லை. ஆகையால் ஃபேஸ்புக் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.]

#4

[பொம்மைகளை நன்கு ரசிக்க, படங்களை (Click)  சொடுக்கிப் பார்க்கவும் :).] 

#5 முழுக் காட்சி:

#6

ஏற்கனவே படம் எடுத்த பொம்மைகளாயினும் ஒவ்வொரு முறையும் வேறு கோணங்களில் வேறு ஒளி அமைப்பில் காணக் கிடைக்கையில் மீண்டும் ரசித்து ரசித்து எடுக்கவே தோன்றுகிறது:)! 

#7
நந்தி மேல் அமர்ந்து அருள் பாலிக்கும் சிவனும் சக்தியும்..

#8
நந்தி தேவரின் கம்பீரப் பார்வை:  

பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும் வகையில் அத்தனை அழகு.. பெரும்பாலான பொம்மைகள்..

#9

#10


சரஸ்வதி, லக்ஷ்மி பொம்மைகளுக்கு நடுவே, கருடாழ்வார் மேல் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர் சிலையானது ஓவியர் ரவிவர்மாவின் கீழ்வரும் புகழ்பெற்ற ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஒன்று:

#11
குழலூதும் கண்ணன்

#12
வேணுகானம்...


#13
கோபியருடன் கண்ணன்

**
வராத்திரியின் முதலாம் நாளே காணக் கிடைத்தது மகா கணபதி கோயிலில் முதல் கொலு தரிசனம்:

#14


**

குடியிருப்பில் திருமதி. திவ்யா வீட்டுக் கொலு:

#15


#16
#17

#18
#19


**

குடியிருப்பில் திருமதி. அருணா வீட்டுக் கொலு:

#20 


**

ண்ணன் (பெரியம்மா மகன்) வீட்டுக் கொலு:

#21  

#22

முதல் வரிசையில் வலப் பக்கம் இருக்கும் பிள்ளையார் பொம்மையும், மூன்றாவது வரிசையில் இடப்பக்கம் இருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் பொம்மையும் நூறு வயதைத் தாண்டியவை.

**

பெங்களூர் ஜெயநகரிலிருக்கும் கடை ஒன்றில் காணக் கிடைத்தக் கொலு:

#23


#24

#25

#26

#27


**

நேற்று எங்கள் இல்லத்தில் ஏடுகள் மேல் எழுந்தருளிய சரஸ்வதி:

#28


# 29
”மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி..”

அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துகள்! 

***














3 கருத்துகள்:

  1. நிறைய வித்தியாசமான பொம்மைகள்.  தனித்தனியே எடுத்திருப்பதும் சிறப்பு.  நடுவில் பெரிய கொலு ஒன்றும் காட்சிக்கு...  அருமை. 

    க்ளிக் செய்து பெரிதாக்கி எல்லாப் படங்களையும் அப்படியே பார்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. கொலு காட்சிகள் அனைத்தும் சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான கொலு படங்கள்.
    நானும் எல்லோர் வீட்டுக் கொலும் படங்களும் எடுத்தேன்.
    பதிவு போட வேண்டும்.

    ஒவ்வொரு ப்டங்களையும் ரசித்துப்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin