வெள்ளி, 18 அக்டோபர், 2024

கள்ளழகர் திருக்கோயில் - கோபுர தரிசனம்

 #1

ஏழு நிலை ராஜகோபுரம்

மதுரையில் இருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் அழகர்கோயில் கிராமத்தில் உள்ளது அழகர் மலை. அழகர் மலையிலிருந்து வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்று வணங்கப்படும் கள்ளழகர். 

#2

#3

இக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்று. சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது. துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.  

#4

கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்து ஒரு கோட்டையைப் போல் காட்சி அளிக்கிறது.

அதன் நுழைவாயில் ‘பெரிய வாச்சான் வாயில்’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.  

#5

அங்கு நுழையும் முன் ராஜகோபுரத்தின் பக்கவாட்டுத் தோற்ற அழகு மனதைக் கவர, ஒரு க்ளிக்:

#5


#7

#8 கள்ளழகர் திருக்கோயில்

இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் கள்ளழகர் என்றும், திருமகள் சுந்தரவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றனர். 

கோயிலின் சன்னதிக்குள் செல்ல மிகப் பெரிய வரிசை நின்றிருந்தாலும், உள்ளே நுழைந்ததும் பெருமாளை தொலைவிலிருந்தே நன்கு தரிசிக்கும் வகையில் கோயில் அமைப்பு உள்ளது. அன்று மதிய விமானத்தில் ஊர் திரும்பும் அவசரம் காரணமாக வரிசையில் செல்லாது, வெளியில் நின்றே நன்கு தரிசனம் செய்து கொண்டோம்.

#9

ஆண்டு தோறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சித்திரைத் திருவிழா என்பது அழகரின் சகோதரியான மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் கோயிலிலிருந்து மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக மதுரை நகருக்கு செல்லும் கள்ளழகருக்கு தல்லாகுளத்தில் எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வண்டியூர் கோயிலில் எழுந்தருளல், தசாவதார சேவை என பல முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவுக்கு இலட்சக் கணக்கான மக்கள் மதுரையில் கூடுவது வழக்கமாக உள்ளது.

#10  

ஏழு நிலைகளை கொண்ட, பிரமாண்டமாகக் காட்சி தரும் ராஜகோபுரம் மேற்கிலிருந்து..:

சமீபத்தில் வர்ணங்கள் பூசப்பட்டிருப்பதால் பொலிவுடன் காணப்படுகிறது. மேலே  7 கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

#11

வானுயர்ந்த கோபுரம்

காவல் தெய்வம்:

கோவிலின் காவல் தெய்வமாக ராஜகோபுர நுழைவாயில் கதவுகளில் அருள்பாலிக்கிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இக்கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 

#12


#

கோயில் வாசல் திறக்கவில்லை போலும் என எண்ணியபடி நாங்கள் செல்ல, பிறகு கதவே சன்னதி எனப் புரிய வந்தது. பிரமாண்டமான மஞ்சள் நிறக் கதவுகளில் அரிவாள்கள், சந்தனம் குங்குமம் இட்டு மாட்டப்பட்டிருக்க, மாலைகள் சாத்தப்பட்டு பூஜை, தீப ஆராதனை நடக்கிறது. [சன்னதி என்பதால் படம் எடுக்க அனுமதி கேட்கலாமா என்பதில் தயக்கம் இருந்தது.]

#13  

வேண்டுதல்கள்:

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

#14

ஓம் நமோ நாராயணா நம!

***








4 கருத்துகள்:

  1. நானும் இங்கு சஎன்றிருக்கிறேன்.  சென்று படங்கள் எடுத்திருக்கிறேன்.  உங்கள் கேமிராக் கண் வழிய படங்கள் மிக அழகாக மிளிர்கின்றன.  மறுபடி மறுபடி பார்த்து ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. அங்கேயே ஏறும் வழியில் இருக்கும் பழமுதிர்சோலை சென்று வந்தீர்களா?  தனிப்பதிவாக வருமோ?

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பதிவு. படங்கள் கண்ணை கவர்கிறது. 18 ம் படி கருப்பண்ண சாமியை தரிசனம் செய்ய விரைவு கட்டணம் முன்பு கிடையாது, அழகரை பார்க்க மட்டுமே 10 ரூபாய் கட்டணம் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு. படங்கள் அனைத்தும் கண்களைக் கவரும் விதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin