வெள்ளி, 27 செப்டம்பர், 2024

வளரொளி நாதர் திருக்கோயில் - வைரவன் பட்டி - பாகம்: 2

 பாகம் 1: இங்கே

#1 
நுழைவாயிலும் ஐந்து நிலை ராஜ கோபுரமும்

#2
கொடி மரம்

#3
கொடி மரம் இருக்கும் சுற்றுப் பிரகாரத்தின்
கூரை ஓவியங்கள்


ட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.

விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

#4
வளரொளி நாதரைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் மண்டபமும்..,
கூரை ஓவியங்கள், சிற்பத் தூண்களுடன்
அற்புதமாகக் காட்சியளிக்கும்
பிரதான மண்டபமும்..

#5
நந்தி தேவர்

#6
தாவரங்களிலிருந்து தயாராகும் 
இயற்கைச் சாயங்களைக் கொண்டுத் தீட்டப்பட்ட
புராதான ஓவியங்கள்
#7
தூண் சிற்பங்கள்
#8
கருப்பு வெள்ளையில்..

#9
பிரகாரத்திலிருந்து சன்னதி மண்டபம்
#10
வாருங்கள்.. நடக்கலாம்..
#11
அண்ணாந்து ரசிக்க..
#12
யாழி

வள்ளி, தெய்வயானையுடன் ஆறுமுகப் பெருமான், வடிவுடையம்மன், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, சரஸ்வதி, கஜலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் செய்து வைக்கப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. அதில் பெரிய சிற்பமாக எழுந்தருளிய தட்சிணாமூர்த்தி சன்னதியைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

#13

சுற்றுப் பிராகரத்தில்
கஜலக்ஷ்மி தாயார்
#14
பிரகாரத்திலிருந்து 
அழகிய வேலைப்பாட்டுடனான 
மற்றுமோர் சன்னதி மண்டபம்


#15
முதல் படத்திலிருக்கும் அதே நுழைவாயில்
உள்ளிருந்து.. வெளி நோக்கி..
வெளியில் தெரிவது கோயிலின் 
வெளிப்புற நுழைவு மண்டபம்

இக்கோயிலின் அழகான சிற்பங்களையும், ஓவியங்களையும், கலை வேலைப்பாடுகளையும் கண்டு ரசிக்க அதிக நேரம் அவசியம். திடீரெனத் திட்டமிட்டு சென்றதாலும் அடுத்து பிள்ளையார்பட்டி, ஆத்தங்குடி, காரைக்குடி செல்ல வேண்டியிருந்ததாலும் நிதானமாக நேரம் செலவழிக்க இயலவில்லை. வாய்ப்புக் கிடைக்கையில் மீண்டும் செல்ல வேண்டும்.

#16

ராஜ கோபுரமும்.. 
அழகிய கூரை ஓவியங்களைக் கொண்ட
வெளிப்புற நுழைவு மண்டபமும்..
அம்மன் வடிவில் உள்ளே செல்லும் சிறுமியும்..

***

1 கருத்து:

  1. கண்கவரும் அந்தக் கட்டிடக்கலையை அருமையாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin