#1
"மகிழ்ச்சியாக இருக்க,
எத்தனையோ அழகான காரணங்கள் உள்ளன."
#2
"எழுந்து நிற்கப் போகிறீர்கள் எனில்,
உங்களால் பிரகாசிக்கவும் முடியும்."
#3
மற்றவர்கள் ஊக்கம் அளிக்கக் காத்திராதீர்கள்."
#4
"கற்றுக் கொடுப்பது என்பது
ஒருவர் தம் வாழ்க்கையில் கரையேற உதவுவது."
[5 செப் 2022 ஆசிரியர் தினத்தன்று
ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்த பொன்மொழி.]
#5
"மழையை விடவும் நமக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துவது
வேறு எதுவும் இல்லை."
#6
"பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் தாளகதி உள்ளது,
அனைத்தும் அதற்கேற்ப நடனம் ஆடுகின்றன."
_ Maya Angelou
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 152
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
படங்களும் பொன்மொழியும் நன்றாக இருக்கின்றன. ரசித்தேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குமகிழ்ச்சிகள் மனதில் நிற்பதில்லை. சோகங்கள் தோல்விகள் மட்டுமே மனதில் நின்று வாட்டுவது மனித பலவீனம்! படங்களும் வரிகளும் வழக்கம்போல் அருமை.
பதிலளிநீக்குஅதென்னவோ உண்மைதான். அத்தகு பலவீனம் மாற வேண்டுமென்பதற்காகவே சொல்லப்பட்ட பொன்மொழி. நன்றி ஸ்ரீராம்.
நீக்குவாசகங்களும் மலர்களும் மிக அழகு!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குபடங்களும் வரிகளும் அருமை.
பதிலளிநீக்குமகிழ்ச்சியாக இருக்க எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன// உண்மைதான் ஆனால் மனம் இருக்கே அது....பொல்லாது. நமக்கு நாமேதான் ஊக்கம் கொடுத்துக் கொள்ள வேண்டும்...
மிகவும் பிடித்த பொன்மொழி இது - பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் தாளகதி அதற்கேற்பத்தான் அனைத்தும் நடனம் ஆடுகின்றன....இதை நான் இதே வார்த்தைகளில் இல்லை என்றாலும் இதே பொருளில் அடிக்கடி சொல்வதுண்டு....அந்த தாளகதி தவறும் போதுதான் முரணாகும் போது
அனைத்தும் பிறழ்கிறது. Dancing in tune with the nature...
கீதா
கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்குnice
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்கு