நான் என் உடலின் வேகம், மொழி அல்ல
நான் நினைக்கிறேன் வாரத்தின் நாட்கள் யாவும்
அலை பாய்கின்றன பாறைகளின் வரிசையிலும்
சமுத்திரத்தின் தண்ணீரிலும்.
தண்ணீர் பேசுகின்றது அலைகளை வேகமாக அவற்றின் மேல் வீசி
பாறைகள் பதிலளிக்கின்றன தங்கள்
மொழியின் மேன்மையை நேரத்தின் தொன்மையில் அறிகிறோம்,
ஆயின் நான் என் உடலின் வேகம்
மொழி அல்ல
நான் நினைக்கிறேன் சிந்திப்பதற்குப் பல காலநிலைகள் உள்ளன
மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்
எப்பொழுதும் தட்டச்சுவது மட்டுமே என்பது எவ்வளவு கடினமானதென
எனது சந்தம் நீளமானது தொடர்ச்சியானது
என் தலைக்குள் இருக்கும் சப்தங்களை போன்றதன்று
ஊளையிடும் காற்றின் கொல்லும் தேவையுடன் இந்த சப்தங்கள்
பேச விரும்பும் தேவையுடன் இந்த சப்தங்கள்
ஆயின் அமைதியாக உடல் செல்வதை நோக்கி
நான் பாதையை உணருகிறேன் எப்போதும்
மொழியின் மேன்மையை நேரத்தின் தொன்மையில் அறிகிறோம்,
ஆயின் நான் என் உடலின் வேகம்
மொழி அல்ல
மற்றும் மீளுயரும் எல்லைக்கோட்டை என்னால் உணர இயலும்.
*
மூலம்: . “I Am the Pace of My Body and Not Language”
By Adam Wolfond
**
இருபது வயதான இளம் கவிஞர் ஆடம் உல்ஃபான்ட் ஆட்டிஸத்தின் பாதிப்பால் பேச இயலாதவர். தட்டச்சுவதன் மூலமும், நகருவதன் மூலமும் தன்னை வெளிப்படுத்துகிறவர். சிறந்த உரைநடை எழுத்தாளர், ஓவியர், பட்டதாரி மற்றும் பல்கலைக் கழக விரிவுரையாளர். நான்கு புத்தகங்கள் எழுதியவர். அமெரிக்கக் கவிஞர்கள் கலைக் கழகத்தின் ‘தினம் ஒரு கவிதை’ தொடரில் தோன்றிய மிக இளம் வயது எழுத்தாளர் என்ற பெருமையைக் கொண்டவர். இவரது படைப்புகள் பன்னூடகக் கண்காட்சிகள், ஆவணப்படங்கள் மற்றும் கல்வி ஆய்விதழ்களில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளன.
**
கவிதை மற்றும் கவிஞர் பற்றிய குறிப்பின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
**
அருமை நமது திறமையை எவ்வகையிலும் வெளிப்படுத்த இயலும்.
பதிலளிநீக்குகவிஞர் ஆடம் உல்ஃபான்ட் ஓர் உதாரணம் - கில்லர்ஜி
மிக்க நன்றி.
நீக்குஆடம்உல் ஃபான்ட் அவர்க்ளின் வாழ்க்கை வரலாறு, அவரின் கவிதை தமிழாக்கம் அருமை.
பதிலளிநீக்குசொல்வனத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குசிறப்பான பகிர்வு. திறமை மிகுந்த நபர் குறித்த தகவல் நன்று.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குகவிஞர் பற்றிய தகவல் நெகிழ்த்துகிறது. கவிதை அருமை,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குசிந்தனையைத் தூண்டிய அற்புதமான கவிதை வரிகள்.
பதிலளிநீக்குமனம்-பாறை/(எண்ணங்கள், மொழிகள், சப்தங்கள்)-கடல் அலைகள்: நல்ல உருவகம்.
உண்மை தான். தலைக்குள் நிகழ்கிறது ஓயாத கடல் அலைகளின் இரைச்சல்.
பேசும் நீரைத் தன் மீது உடையாகப் படரப் பாறை அனுமதிக்கிறது. ஆனாலும் அமைதியாக தன் மீது படர்ந்து வழியும் நீரைக் கவனிப்பதில் உடல் உறையும் போது செல்ல வேண்டிய பாதை புலப்படுகிறது.
"நான் பாதையை உணருகிறேன்" எனும் வரிகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது.
இந்த கவிதை விழிப்புணர்வில் திளைக்கும் மனதிலிருந்து பிறந்த வரிகளாக உணர்கிறேன்.
Adam Wolfond பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி. ''சந்தம், ஊளையிடும்'' போன்றவை ஆழ்ந்த பொருள் நிறைந்த வார்த்தைகள். நல்ல மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்.
தங்கள் விளக்கம் அருமை. மிக்க நன்றி.
பதிலளிநீக்கு